ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதல், பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

2 posters

Go down

தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதல், பாராளுமன்றம் ஒத்தி வைப்பு Empty தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதல், பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

Post by சிவா Thu Dec 08, 2011 3:19 pm

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதிக்கொண்டனர். இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எம்.பி.க்கள் மோதல்

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

கேரளா மாநிலம், இடுக்கி எம்.பி. பி.டி. தாமஸ் (காங்கிரஸ்), ஜோஸ் கே.மணி (கே.சி.-எம்) ஆகியோர் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை கிளப்பினார்கள்.

தாமஸ் பேசுகையில், ``116 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஜுலை 26-ந் தேதி முதல் 26 தடவை நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் நிற்கிறார்கள். அணை எப்போதும் உடைந்து விடும் என்று 4 மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்'' என்று தெரிவித்தார்.

35 லட்சம் மக்களுக்கு பாதிப்பு


``ரூர்க்கி ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 5 முதல் 6.5 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் உண்டாகும். இதனால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் இடுக்கி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் 35 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு ஆபத்து ஏற்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

ஜோஸ் கே.மணி பேசுகையில், ``1885-ம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை இப்போது எப்படி இருக்கிறது என்ற உண்மையான நிலவரத்தைக் காண, அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு

கேரளா எம்.பி.க்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் வாதாடினார்கள்.

இதனால் சபையில் ஒரே கூச்சலும், அமளியாக இருந்தது. அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் மீரா குமார் பலமுறை கேட்டுக் கொண்டும் பலன் ஏற்பட வில்லை. இதனால் சபையை நடத்த முடியாமல் நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக மீரா குமார் அறிவித்தார்.

எம்.பி.க்கள் மோதல்


டெல்லி மேல்-சபையிலும் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழக, கேரள எம்.பி.க்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மோதிக்கொண்டனர்.

அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் முதலில் எழுந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசு தலையிட வேண்டும்

முல்லைப் பெரியாறு அணை பற்றி கேரளா அரசு அந்த மாநில மக்களிடையே அச்சத்தையும், பீதியையும், வதந்திகளையும் கிளப்பி வருகிறது. கடந்த 2 மாதங்களில் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கேரளா சொல்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடந்த ஒரு வருடத்தில் 4 முறை மட்டுமே லேசான, ஆபத்தில்லாத நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் இருக்கும்போது இப்படி தேவையில்லாமல் பதற்றத்தை உண்டாக்கியதால், கேரளாவுக்கு செல்லும் தமிழக வாகனங்கள் அங்கு தாக்கப்படுகின்றன.

போதிய தண்ணீர் கிடைக்காமல் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே முல்லைப் பெரியாறு அணையில் தற்போதைய நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

திருச்சி சிவா

அவரைத் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா (தி.மு.க.), ``முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக, பாதுகாப்பாக உள்ளது என்று பல முறை ஆய்வு செய்து, நிபுணர்கள் சான்று அளித்துள்ளனர். நில நடுக்கப் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது, அதனால் அணைக்கு ஆபத்து என்று சொல்வதில் எந்த ஆதாரமும் இல்லை. சில சமூக விரோதிகள் அந்த அணையை உடைக்க முயற்சித்து உள்ளனர். அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதற்கு ஏற்பாடு செய்வதுடன், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ்-கம்யூனிஸ்டு

இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) பேசுகையில், ``முல்லைப் பெரியாறு அணையால் தமிழக விவசாயமும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. அணையில் 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை அதிகரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. அந்த மாநில மக்கள் மீது இரக்கம் கொள்ளும்போது, தமிழக விவசாயிகளின் நலனையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இதை மத்திய அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்குள்ள மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு உள்ள அச்சம், பீதி காரணமாக சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு தலையிட்டு இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். யாருக்காவது அணை குறித்த சந்தேகம் இருந்தால் அவர்கள் மூவர் குழுவிடம் சென்று முறையிடலாம்'' என்று வற்புறுத்தினார்.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) பேசுகையில், ``நான் ஏற்கனவே பிரதமரை சந்தித்து, இது விஷயமாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த பிரச்சினையில் அர்த்தமுள்ள, பலனுள்ள தீர்வு ஏற்பட வேண்டுமானால், பிரதமர் உடனடியாக இரு மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து பேச்சு நடத்துவதுதான் இப்போது சரியாக இருக்கும். இரு மாநிலங்களின் உறவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தினார்.

சாகுபடி பாதிப்பு

டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறுகையில், ``முல்லைப் பெரியாறில் இருந்து குறைந்த அளவு தண்ணீரே திறந்து விடப்பட்டதால், தமிழ் நாட்டில் இரு போக சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எங்கள் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அணையை உடைக்க வேண்டும் என்ற கேரளாவின் பிடிவாதம் நிறுத்தப்பட வேண்டும். அங்கு சட்டம்-ஒழுங்கு நிலை நிறுத்தப்பட வேண்டும். அதற்கேற்ப மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

கேரளா எதிர்ப்பு

கேரளாவின் காங்கிரஸ் எம்.பி. பி.ஜே.குரியன் எழுந்து அவர்களின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து பேசினார்.

``ரூர்கேலா ஐ.ஐ.டி. பேராசிரியர், முல்லைப் பெரியாறு அணை 5 ரிக்டர் அளவுடைய நில நடுக்கம் ஏற்பட்டால் தாங்காது என்று சொல்லி அறிக்கை கொடுத்து இருக்கிறார். ஆகவே பலமில்லாத அணைக்கு பதிலாக புதிய அணை கட்டியாக வேண்டும். அப்படி கட்டினால், தமிழகத்துக்கு வழங்கும் தண்ணீரின் அளவை குறைக்க மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். 116 ஆண்டு பழமையான அணை கேரளாவில் ஓடும் நதியின் மீது கட்டப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களுக்கான பொது நதியின் மேல் அது கட்டப்படவில்லை. அந்த அணை உடைந்து விடும் என்ற மக்களின் அச்சத்தை நாங்கள் போக்கியாக வேண்டும்'' என்று கூறினார்.

அச்சத்துடன் வாழ முடியாது

கேரளாவின் மார்க்சிஸ்ட் கட்சி பெண் எம்.பி. சீமா பேசுகையில், ``30 லட்சம் மக்களின் வாழ்வா? சாவா? பிரச்சினை இது. ஆகவே இதற்கு உடனடியாக தீர்வு கண்டாக வேண்டும். அங்கு பெரிய ஆபத்து நிலவுகிறது. நாங்கள் தினம், தினம் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது'' என்று பேசினார்.

தினதந்தி


தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதல், பாராளுமன்றம் ஒத்தி வைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதல், பாராளுமன்றம் ஒத்தி வைப்பு Empty Re: தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதல், பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

Post by ayyamperumal Thu Dec 08, 2011 3:31 pm


கேரளா எதிர்ப்பு

கேரளாவின் காங்கிரஸ் எம்.பி. பி.ஜே.குரியன் எழுந்து அவர்களின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து பேசினார்.

``ரூர்கேலா
ஐ.ஐ.டி. பேராசிரியர், முல்லைப் பெரியாறு அணை 5 ரிக்டர் அளவுடைய நில
நடுக்கம் ஏற்பட்டால் தாங்காது என்று சொல்லி அறிக்கை கொடுத்து இருக்கிறார்.
ஆகவே பலமில்லாத அணைக்கு பதிலாக புதிய அணை கட்டியாக வேண்டும். அப்படி
கட்டினால், தமிழகத்துக்கு வழங்கும் தண்ணீரின் அளவை குறைக்க மாட்டோம் என்று
ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். 116 ஆண்டு பழமையான அணை கேரளாவில் ஓடும்
நதியின் மீது கட்டப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களுக்கான பொது நதியின் மேல்
அது கட்டப்படவில்லை. அந்த அணை உடைந்து விடும் என்ற மக்களின் அச்சத்தை
நாங்கள் போக்கியாக வேண்டும்'' என்று கூறினார்.



சில வருடங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் புதிய அணியின் திட்ட அறிக்கையினை தாக்கல் செய்த கேரளா அரசு அதில் ,, புதிய அணை கட்டுவதன் நோக்கத்தை தெரிவித்துள்ளது.

முதல் பக்கத்தில்
1.அணை உடைந்து , மக்களை அழிக்கும் அபாயத்தை தடுப்பது
2. தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் தருவது என்று கூறியுள்ளது

21 ஆம் பக்கத்தில் Mullai periyaru river is an inter state river . there is no any rights to Tamil Nadu . என்றும் water supply is subject matter என்றும் கூறியுள்ளார்கள்

இந்த லட்சணத்தில் அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்கிற வாக்குறுதியினை எப்படி நம்ப முடியும் ?



தமிழக-கேரளா எம்.பி.க்கள் மோதல், பாராளுமன்றம் ஒத்தி வைப்பு Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum