ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைப்பேசி பேசினால்..........!!

+3
கோவிந்தராஜ்
இளமாறன்
kalamkadir
7 posters

Go down

கைப்பேசி பேசினால்..........!!  Empty கைப்பேசி பேசினால்..........!!

Post by kalamkadir Tue Nov 29, 2011 11:33 pm

கைப்பேசி பேசினால்..........!!
நான் செய்த புரட்சிகள்:

தத்திச் சென்ற
தந்தியை வென்றேன்

குறுஞ்செய்தியால்
குவலயம் ஆள்கின்றேன்

ஆறாம் விரலாய்
ஆட்கொண்டே
ஆட்டுவிக்கின்றேன்

கைக்குள் அடக்கமாய்
ஹைக்கூ கவிதையாய்
“நச்”சென்று பேச வைத்தேன்

ஏபிசிடி தெரியாமலே
ஏடேதும் படிக்காமலே
மிஸ்டு கால்
மெஸேஜ் எல்லாம்
புரிய வைத்தேன்

ஆடம்பரமாய்
ஆரம்பமானேன்
தேவைக்குரியோனாய்த்
தேர்ந்தெடுக்கப்பட்டேன்

உயர்ந்த விலையில்
உடலாம் எனக்கு
குறைந்த விலையில்
உயிராம் “சிம்” அதற்கு

பல்லுப் போனால்
சொல்லுப் போச்சு
சில்லு(சிம்)ப் போனால்
செல்லுப் போச்சு

கையில் வைத்தேன்
உலகை
கைவிரல் பட்டதும்
திறந்து காட்டுவேன்
உலகை

மின்னஞ்சல் கணிப்பொறி
என்னெஞ்சில் அடக்கம்
கணிதப்பொறியின்
வணிகம் எல்லாம்
என்னால் முடக்கம்

நாட்காட்டி கூட
ஆட்காட்டி விரலில்

கைக்கடிகாரம் வாங்காமல்
கைப்பேசியேக் கடிகாரமாய்க்
கைக்குள் அட்க்கினேன்

வானொலியின்
தேனோலியாய்
நானொலிப்பதையே
நானிலமும் நாடும்

இசைகேட்டு
அசைய வைத்தேன்
திசையெட்டும் என்றன்
விசைக்குள்ளே

நான் செய்த வீழ்ச்சிகள்:

புரட்சிகள் வெடிக்கும் அன்று
வெடிக்கும் புரட்சிகள் இன்று
வெடிகுண்டுத் தீவிரவாதிகளின்
மடிகொண்டுத் தங்கினேன்

படிக்கும் மாணவர்களை
பாழாக்கினேன்

இறைதரிசன தளங்களில்
இடையூறு செய்ப்வனானேன்

குறுஞ்செய்திகளால்
குடும்பங்களைப் பிரித்தேன்

அருவருக்கத்தக்க
அனாச்சாரங்களை
விதைத்தேன்
விபச்சாரத்தை
அறுவடை செய்தேன்

மணவிலக்கும் என்னால்
மண்டி விட்டது தன்னால்

மன்னிப்பே இல்லாத
மகா பாவியானேன்

அலைக்கற்றை ஊழல்மீனுக்கு
வலைவீசி ஆசையை நாட்டினேன்
நிலைப்பெற்ற ஆட்சியை ஓட்டினேன்
நிலைகுலைய வைத்துக் காட்டினேன்

காதலர்கட்கு நண்பனானேன்
பெற்றோர்கட்கு எதிரியானேன்
ஆதலினால் என்னை
ஆதரிப்போரும் உண்டு;
ஆத்திரம் கொள்வோரும் உண்டு










--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com


அலை பேசி: 00971-50-8351499
kalamkadir
kalamkadir
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Back to top Go down

கைப்பேசி பேசினால்..........!!  Empty Re: கைப்பேசி பேசினால்..........!!

Post by இளமாறன் Wed Nov 30, 2011 2:57 am

கைபேசியின் பயன்களும் தொல்லைகளும் கவிதையாய் அழகாய் இருக்கிறது சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கைப்பேசி பேசினால்..........!!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கைப்பேசி பேசினால்..........!!  Empty Re: கைப்பேசி பேசினால்..........!!

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:33 am

kalamkadir wrote:
அருவருக்கத்தக்க
அனாச்சாரங்களை
விதைத்தேன்
விபச்சாரத்தை
அறுவடை செய்தேன்
யோசித்து புரிந்துகொள்ள வேண்டிய வரிகள் !
மொத்தத்தில் அருமை அருமையிருக்கு


கைப்பேசி பேசினால்..........!!  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கைப்பேசி பேசினால்..........!!  599303
கைப்பேசி பேசினால்..........!!  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கைப்பேசி பேசினால்..........!!  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கைப்பேசி பேசினால்..........!!  Empty Re: கைப்பேசி பேசினால்..........!!

Post by ஜாஹீதாபானு Wed Nov 30, 2011 3:13 pm

நல்லது இருந்தால் கெட்டதும் இருக்கும் அருமை கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கைப்பேசி பேசினால்..........!!  Empty Re: கைப்பேசி பேசினால்..........!!

Post by சார்லஸ் mc Wed Nov 30, 2011 6:08 pm

நன்றாக உள்ளது சூப்பருங்க


கைப்பேசி பேசினால்..........!!  154550கைப்பேசி பேசினால்..........!!  154550கைப்பேசி பேசினால்..........!!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கைப்பேசி பேசினால்..........!!  154550கைப்பேசி பேசினால்..........!!  154550கைப்பேசி பேசினால்..........!!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கைப்பேசி பேசினால்..........!!  Empty Re: கைப்பேசி பேசினால்..........!!

Post by வசீகரப்ரியன் Thu Dec 01, 2011 9:29 am

அருமை ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

கைப்பேசி பேசினால்..........!!  Empty Re: கைப்பேசி பேசினால்..........!!

Post by ரேவதி Thu Dec 01, 2011 2:05 pm

kalamkadir wrote:


புரட்சிகள் வெடிக்கும் அன்று
வெடிக்கும் புரட்சிகள் இன்று
வெடிகுண்டுத் தீவிரவாதிகளின்
மடிகொண்டுத் தங்கினேன்

படிக்கும் மாணவர்களை
பாழாக்கினேன்

இறைதரிசன தளங்களில்
இடையூறு செய்ப்வனானேன்

குறுஞ்செய்திகளால்
குடும்பங்களைப் பிரித்தேன்

அருவருக்கத்தக்க
அனாச்சாரங்களை
விதைத்தேன்
விபச்சாரத்தை
அறுவடை செய்தேன்

மணவிலக்கும் என்னால்
மண்டி விட்டது தன்னால்

மன்னிப்பே இல்லாத
மகா பாவியானேன்

சிந்திக்க வேண்டிய வரிகள் கைப்பேசி பேசினால்..........!!  224747944 கைப்பேசி பேசினால்..........!!  224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கைப்பேசி பேசினால்..........!!  Empty Re: கைப்பேசி பேசினால்..........!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum