ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_c10 
VENKUSADAS
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_c10 
VENKUSADAS
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
6 posters

Go down

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Empty கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்

Post by சிவா Mon Nov 07, 2011 9:40 am

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Ms03

`கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்று அங்கு நேற்று நேரில் ஆய்வு நடத்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.

அப்துல் கலாம் ஆய்வு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூடங்குளத்துக்கு நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு வந்தார். பிறகு அங்கு அணு விஜய் நகரியத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்று அதிகாலை 4 மணி வரை அணு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். காலை 9 மணிக்கு அணு விஜய் நகரியத்தில் இருந்து அப்துல் கலாம் புறப்பட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குள் சென்றார். அங்கு நிறுவப்பட்டு உள்ள அணு உலைகளை பார்வையிட்டார். மேலும் அணு உலையின் பாதுகாப்பு அம்சங்களையும் சுற்றிப்பார்த்தார். கடலுக்குள் அமைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு தடுப்பு சுவர், கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், தானியங்கி ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வு பகல் 12.30 மணி வரை 31/2 மணி நேரம் நடைபெற்றது. அதன் பிறகு அவர் மீண்டும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பிறகு 1 மணிக்கு அங்குள்ள கூட்ட அரங்கில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாதுகாப்பு திருப்தி அளிக்கிறது

கூடங்குளத்துக்கு நான் 2-வது முறையாக தற்போது வந்து உள்ளேன். இங்கு வந்ததற்கு காரணம் அணு விஞ்ஞானி என்பதாலும், நாட்டின் அறிவியல் வளர்ச்சி மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான். நான் இங்கு போராட்டக்காரர்களுடன் பேசி சமரசம் செய்வதற்காக வரவில்லை. அணு உலையை பார்வையிட்டு, அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தவே வந்து உள்ளேன்.

கூடங்குளம் அணு உலைகள் 3-வது தலைமுறை பாதுகாப்பு அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளன. அதை பார்க்கத்தான் வந்தேன். இதில் 3 முக்கியமான பாதுகாப்பு விஷயங்களை கூற வேண்டும். அணு உலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தடைபட்டால் எரி பொருளை சுற்றி குளிர்ந்த தண்ணீர் தானாக செல்லும் வகையில் தானியங்கி குளிர்விப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதே போல் அதிக வெப்பத்தால் எரி பொருள் உருகினால் அதனுடன் மற்றொரு பொருள் வினைபுரிந்து தானாகவே கதிர்வீச்சு தடுக்கப்பட்டு விடும். அணு உலை சுவர்கள் ஈரடுக்கு சுவர்களாக கட்டப்பட்டு உள்ளன. இது அணு கதிர் வீச்சை தடுக்கும், மேலும் இயற்கை பேரிடர் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளால் ஏற்படும் விபத்துகளாலும் சேதம் அடையாது. இந்த பாதுகாப்பு அம்சங்களை பார்த்து எனக்கு முழு திருப்தி ஏற்பட்டு உள்ளது. நம்பிக்கையும் அடைந்து உள்ளேன். அதனை அனைவரிடமும் எடுத்துக்கூறுவேன்.

எந்த பாதிப்பும் ஏற்படாது

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தவிர அணு உலை வளாகத்துக்குள் வேலை செய்பவர்களுக்கும், வெளியே வேலை செய்பவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் தேவையற்றது. இப்போதையை காலகட்டத்தில் மின்சாரம் அவசியமானது. இந்த பகுதி மக்கள் அணு உலைகளை பற்றி பயப்பட வேண்டாம். போராட்டக்காரர்கள் வெளிநாட்டிடம் பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு என்னுடைய பதில், எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் யாரையும் சந்தேகப்படக்கூடாது என்பது தான். அது தான் இதற்கு பதில். கூடங்குளத்தில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதில் 50 சதவீதம் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கும்.

வதந்தியை நம்பவேண்டாம்

அணு கதிர்வீச்சு, அணு கழிவு எந்த விதத்திலும் வெளியே வராது. அணு கழிவு மிகவும் குறைந்த அளவு தான் கிடைக்கும். அதையும் அப்புறப்படுத்த இங்கு ஏற்கனவே திட்டம் உள்ளது. அணு மூலப்பொருளில் 75 சதவீதம் பயன்படுத்தப்பட்டு விடும். மீதம் 25 சதவீதம் கழிவு கிடைக்கும். அதை மறுசுழற்சி செய்து கதிர்வீச்சு இல்லாத வகையில் அகற்றப்படும். அணு கழிவை கடலில் கொட்டிவிட மாட்டார்கள்.

சோதனை ஓட்டத்தின் போது யுரேனியம் அணு மூலப்பொருள் வைக்கவில்லை. அதே போன்ற மாதிரி பொருளைத்தான் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி உள்ளனர். அப்போது அதிக சத்தம் ஏற்பட்டதாகவும், விபத்து நடந்ததாகவும் கூறுவது வெறும் வதந்தி, அதை யாரும் நம்ப வேண்டாம்.

பாதுகாப்பான இடம் தேர்வு

ஜப்பான் நாட்டில் புகுஷிமா அணு உலைகள் பூகம்பம், சுனாமியால் பாதிக்கப்பட்டது. உலகில் இதுவரை 6 விபத்துகள் மட்டுமே நடந்துள்ளன. இந்தியாவில் விபத்து நடந்தது கிடையாது. எத்தகைய விபத்துகள் நடந்தாலும் பாதிக்காத வகையில் கூடங்குளம் அணு உலைகள் நிறுவப்பட்டு உள்ளன.

அதாவது கடல் மட்டத்தில் இருந்து 13.5 மீட்டர் உயரத்தில் அணு உலைகள் உள்ளன. இது இதுவரை வந்த சுனாமி அலைகளின் உயரத்தை விட அதிகமானது ஆகும். பூகோள வரைபடத்தில் கூடங்குளம் 2-வது வகைப்பாட்டில் உள்ளது. அதாவது பூகம்பமே ஏற்படாத பகுதி தான் கூடங்குளம் பகுதி. அதே போல் கூடங்குளத்தில் இருந்து 1,300 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எந்த ஒரு அணு உலையும் நிறுவுவதற்கு முன்பு புவியியல் வல்லுனர்கள், வேளாண்மை, கட்டுமானம், அணு இயற்பியல் உள்பட பல்வேறு துறை வல்லுனர்கள் 100 ஆண்டு வரலாற்றை ஆய்வு செய்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு தான் கூடங்குளமும் அணு உலைகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. விஞ்ஞானிகள் ஒரு போதும் பொய் சொல்ல மாட்டார்கள். நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களுடைய கண்டுபிடிப்பை அர்ப்பணித்து செயல்படுவார்கள்.

மின்சாரம் மிக முக்கியமானது

நெல்லையில் நெல்லையப்பர் கோவில் உள்ளது. அது 1,000 ஆண்டுகள் பழமையானது. ராஜராஜ சோழன் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலை கட்டி உள்ளார். அவை இன்னும் உறுதியாக நிற்கவில்லையா? கரிகாலன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லணையை கட்டினான். காவிரி தண்ணீர் அரித்துச் சென்று விடும் என்று நினைத்து இருந்தால் அணையை கட்டி இருப்பானா? அதே போல் தான் இங்கு உள்ள பிரச்சினையும்.

இன்று 17 கிராமங்களைச் சேர்ந்த 30, 40 பேரை சந்தித்தேன். அவர்கள் மின்சாரம் மிக முக்கியமானது, அதனால் அணுமின் நிலையத்தை செயல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டனர். இந்த பகுதி மக்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து உள்ளது.

1979-ம் ஆண்டு நான் ரோகிணி செயற்கைகோள் ராக்கெட் திட்ட இயக்குனராக இருந்தேன். அப்போது ஆசிட் தீ விபத்து ஏற்பட்டு 8 பேர் கடுமையாக காயம் அடைந்தனர். அவர்களில் ஒரு வாலிபர் அடுத்த ஆண்டு ரோகிணி செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என்று கூறினார். கடுமையான வலியையும் பொறுத்துக்கொண்டு அவர் அப்படி கூறினார். எனவே கூடங்குளம் பகுதி மக்களுக்கு நம்பிக்கை வேண்டும். அவர்கள் விரும்பினால் என்னை நேரில் சந்திக்கலாம். இது பற்றி உரிய விளக்கம் அளிப்பேன்.

அணுசக்தி மையமாக உருவெடுக்கும்

என்னை யாரும் கூடங்குளத்துக்கு வரச் சொல்லவில்லை. அணு சக்தியும், விஞ்ஞான தொழில் நுட்பமும் மக்களுக்கு பயன்படவேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்து உள்ளேன். மின்சாரம் அதிகமாக தேவைப்படுவதால் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்துகிறேன். அது தவிர மாசு இல்லாத அணுசக்தி தான் அதிகமான மின்சாரத்தை நமக்கு தரும் என்பதால் அதையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் தோரியம் அதிகமாக கிடைக்கிறது. எனவே யுரேனியம் அணு மூலப்பொருளுக்கு பதிலாக தோரியத்தை பயன்படுத்த 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். அதற்கான ஆய்வுகளை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.

கூடங்குளம் வருங்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அணுசக்தி மையமாக உருவெடுக்கும். இந்த ஆண்டு இறுதியில் முதல் அணு உலை செயல்படத் தொடங்கினால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அடுத்த 6 மாதங்களில் மேலும் ஒரு அணு உலை மூலம் 1,000 மெகாவாட் மின்சாரமும், அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும். இவ்வாறு மொத்தம் 6 அணு உலைகள் மூலம் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.

வருங்கால சந்ததிக்கு வாய்ப்பு

வருங்கால சந்ததியை பாதுகாக்க போராட்டம் நடத்தப்படுவதாக கூறி உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் வருங்கால சந்ததியினர் மேலும் வளம் பெறுவார்கள். இந்த பகுதி மக்களின் பொருளாதாரம் வளரும். 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும். கூடங்குளம் இந்தியாவின் மிகப்பெரிய அணுசக்தி மையமாக வளர வேண்டும்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.

இந்த ஆய்வு மற்றும் பேட்டியின் போது இந்திய அணுமின் சக்தி கழக தலைவர் எஸ்.கே.ஜெயின், கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினதந்தி


கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Empty கூடங்குளம் அணுமின் நிலையத்தால் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு ஆபத்து இல்லை

Post by சிவா Mon Nov 07, 2011 9:42 am

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் கடலில் உள்ள மீன்வளத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று அப்துல் கலாம் உறுதி அளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நேற்று கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகளுடன் ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மீன்வளம் பாதிக்கப்படாது


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கடல் நீரின் வெப்பத்தை விட 5 டிகிரி சென்டிகிரேடு கூடுதலாக இருக்கும். ஆனால், இது 7 டிகிரி வரை இருக்கலாம். இதனால், மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படாது. இந்த சோதனையை 7 பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்து கடலில் கலக்கும் அணுஉலையின் நீரால் எந்த வித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்துள்ளன.

தாராப்பூர், கல்பாக்கம் அணுஉலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. அதனால், மீன்வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுநீரினால் மீன்வளத்திற்கு பாதிப்பு ஏற்படாது. மீன்வளம் குறையாமல் இருக்க பாதாள சாக்கடை கழிவுநீரினை சுத்தப்படுத்தித்தான் கலக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம்.

சிறப்பு திட்டம்


கூடங்குளத்திற்கு ஒரு தொலைநோக்கு திட்டமும் உடனடியாக தேவைப்படுகிறது. 2015-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அந்த பகுதி கடற்கரையோரம் உள்ள கிராமப்புறங்கள் அடங்கிய அதாவது, 50, 60 கிராமங்களை ஒருங்கிணைத்த, குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு `புரா' திட்டத்தை (கிராமப்பகுதிகளில், நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தித்தரும் திட்டம்) ரூ.200 கோடி செலவில் அமல்படுத்த வேண்டும்.

இந்த சிறப்பு திட்டத்தில் அமல்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் வருமாறு:-

சாலை வசதி

* கூடங்குளத்தில் இருந்தும் மற்றும் 30 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிராமங்களில் இருந்தும் திருநெல்வேலிக்கும், கன்னியாகுமரிக்கும், மதுரைக்கும் செல்லும் நான்குவழி சாலைக்கு செல்ல 4 வழித்தடம் கொண்ட சாலைகள் அமைக்க வேண்டும்.

* 10 ஆயிரம் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் 30 முதல் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு வங்கிக்கடன் வசதி ஏற்பாடு செய்து 25 சதவீத மானியத்துடன் சுயதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கூடங்குளம் பகுதி கடற்கரையோர மக்களுக்கு தேவையான பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக கூடங்கள், விளையாட்டு திடல்கள் மற்றும் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மீனவ மக்களுக்கு தேவையான விசைப்படகுகள், படகு குழாம்கள், மீன்களை பதப்படுத்தும் மையங்கள், குளிர்பதன கிடங்குகள் ஆகியவற்றை அமைத்து கொடுக்க வேண்டும்.

குடிநீர், ஆஸ்பத்திரி

* தினமும் கடல் நீரில் இருந்து 10 லட்சம் லிட்டர் குடிநீரை சுத்திகரித்து அங்கு வாழும் மக்களுக்கு வழங்க வேண்டும்.

* விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பேச்சுப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* 500 படுக்கைகள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். அதில் அனைத்து கிராமங்களுக்கும் டெலிமெடிசின் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பேரிடர் மேலாண்மை மையம்

* தமிழக அரசின் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட 5 பள்ளிகளை அமைத்து தரமான கல்வியை கொடுக்க வேண்டும்.

* எல்லா கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி, பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்த வேண்டும்.

* உடனடியாக பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை நிலையம் ஒன்றை அமைத்து, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

உடனடியாக நிவாரணம்

* மக்களுக்கும், அணுமின் நிலையத்திற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி மக்கள் குழுக்களை அமைத்து ஒரு சமூக நல்லிணக்கத்தையும், பொருளாதார மேம்பாட்டை அடையவும், பேரிடர் காலங்களில் செயல்படும் வழிமுறைகளை செய்யவும், பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு கிராமத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து மேற்படிப்பு படிக்கவைத்து நிரந்தர வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 07, 2011 10:49 am

நன்று புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்

Post by பூஜிதா Mon Nov 07, 2011 12:05 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  678642


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்

Post by கேசவன் Mon Nov 07, 2011 1:58 pm

சிறப்பு திட்டம்

கூடங்குளத்திற்கு ஒரு தொலைநோக்கு
திட்டமும் உடனடியாக தேவைப்படுகிறது. 2015-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு
கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அந்த பகுதி
கடற்கரையோரம் உள்ள கிராமப்புறங்கள் அடங்கிய அதாவது, 50, 60 கிராமங்களை
ஒருங்கிணைத்த, குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு
`புரா' திட்டத்தை (கிராமப்பகுதிகளில், நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை
ஏற்படுத்தித்தரும் திட்டம்) ரூ.200 கோடி செலவில் அமல்படுத்த வேண்டும்.
இந்த திட்டதை அமல் படுத்தினால் கதிர்வீச்சு தாக்காதா???
அழுகும் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளது .ஒரே ஒரு சந்தேகம் எப்பொழுதும் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது என்றாள் அணுஉளையை டெல்லி , மும்பை போன்றநகர்புரகளில் அமைக்கவேண்டியதுதானே .


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  1357389கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  59010615கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Images3ijfகூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்

Post by பிஜிராமன் Mon Nov 07, 2011 2:17 pm

பிரச்சினைக்கு சிறிது தீர்வு கிடைதார்போன்று உள்ளது, பகிர்விற்கு நன்றிகள் அண்ணா....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்

Post by nhchola Thu Nov 17, 2011 9:22 am

கனவு காணச் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் கனவு அமைதியான இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்க்கை. உங்கள் கனவில் என்ன வருமோ எனக்குத் தெரியாது. ஒரு கோரமான அணு விபத்தை இந்தியாவில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்க்கும் கொடுமை உங்களுக்குக் கனவிலும் நேராமல் இருக்கட்டும்.
இரவு படுக்கச் செல்லும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள். அணுஉலைகள் குண்டு தயாரித்தாலும் மின்சாரம் தயாரித்தாலும் அவை மக்கள் நலனுக்கு எதிரானவை என்பது உங்கள் மனசாட்சிக்கு நிச்சயம் நன்றாகத் தெரியும். அணு மின்சாரம் ஆயுத திட்டத்தின் ஒரு முகமூடி மட்டும்தான்.
-ஞாநி
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» அப்துல்கலாம் கூடங்குளம் வந்தார், அணுமின் நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கூடங்குளம் அணுமின் உலை : முப்படையும் மும்முரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum