ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனே!...

+2
ஹிஷாலீ
அனந்தம் ஜீவ்னி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழனே!... Empty தமிழனே!...

Post by அனந்தம் ஜீவ்னி Thu Nov 03, 2011 12:25 pm


ஆயிரம் அறைகூவல்களை
சந்தித்துவிட்டது
உன் அறியாமை


துளிர்க்கும் சிறகுகளை
வெட்டி விடுகிறது
உன் நீடிய சுயநலம்


நீ எழுதிய தீர்ப்பின்
திராவக நெடி
சூழ்கிறது
கருவறையிலும்


தந்திர நரிகள்
உன்னைச் சுற்றி
நீயோ
மலைச்சுற்றலில்.

வீரப்பரம்பரையென
சிரம் நிமிரும்
உன் முகத்தில்
இன்றைய அசிங்கங்கள்


கூச்செறியும்
உன் பிடறியில்
தொங்குகிறது
பூஜைமணி


வாள் பிடித்த
உனது கை
கணக்கு சொல்கிறது
பாதரேகைகளை


எவரெவரோ ஆரோகணிக்க
இன்று நீ
அவரோகணமாக


அரியின் கர்ஜனை
எதிரொலித்த
உன் சுவர்களில்
நரியின் ஊளை


விருந்தோம்பலுக்கு
பெயர் பெற்ற
உன் வாயிலில்தான்
எதிர்ப்படுகின்றன
ராஜபாளையத்தின் கோரப்பற்கள்


கண்ணகிக்கு சிலையெடுத்த
உன் தெருமுனை மறைவில்தான்
அதிபக்த சிரத்தையோடு நடந்தபடி உள்ளன
விபச்சாரிணி தேவிக்கு
ராக்கால பூஜைகள்


திரையோடு தோலும்
கிழிக்கப் பட்ட ரணக் கஸிவில்
நனைகிறது உன் பக்கங்கள்


உனக்காகவே ஏற்றப்பட்ட சுடர்கள்
அணைந்துவிட்டன காலக் காற்றில்
இன்னும் நீ இருளில்


கதிரவனை திரைமூடிவிட்டு
எரிகல்லின் வெளிச்சத்தில்
எழுதபடுகிறது
உன் இருண்ட சரித்திரம்




அர்த்தம் தெரியாமல் நீ பாடும்
தமிழ்த்தாய் வாழ்த்தை
மிஞ்சியொலிக்கின்றன
முள்ளிவாய்க்காலின் மரண ஓலங்கள்


நீ நீரூற்ற தவறிய
வேர்களின் பிம்பங்கள்
உன் தொண்டையில் நிகழ்த்தும்
துக்க முடிச்சுகளை உதாசீனப்படுத்தி விட்டுத்தான்
நீ விழுங்கும் உணவின் கவளங்கள் நகர்கின்றன


கதறி ஓலித்த அழுகுரல்களை ஏந்தியக் காற்று
வாசல் முன் வந்து நிற்கும் போது
ரிங்டோன்களை மாற்றுவது குறித்து
பேசிக் கொண்டிருக்கிறோம் நாம்


வெற்றியின் மமதையில்
இருளின் தேவதைகள் நிகழ்த்திய
கோர வெறியாட்டங்கள்
திரையிடப் படுகின்றன நம் முன்
ஐயோ ..சீக்கிரம் பார்த்து முடி
முடிந்து விடப் போகின்றன
முடியாமல் நீளும் தொலைக்காட்சி சீரியல்கள்.




-அனந்தம் ஜீவ்நி


Last edited by anandham jiivni on Thu Nov 03, 2011 4:35 pm; edited 1 time in total
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by ஹிஷாலீ Thu Nov 03, 2011 12:32 pm

எல்லாம் சுப்பார். சூப்பருங்க அருமையிருக்கு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by அனந்தம் ஜீவ்னி Thu Nov 03, 2011 12:47 pm

நன்றி...ஹிஷாலீ...
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by dsudhanandan Thu Nov 03, 2011 12:58 pm

அருமையான கவிதைகள் anandham jiivni


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by அனந்தம் ஜீவ்னி Thu Nov 03, 2011 1:15 pm

மகிழ்வூட்டும் தங்களின் எதிர்வினைக்காக மிக்க நன்றி
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by சிவா Thu Nov 03, 2011 1:25 pm

இன்றைய தமிழனின் நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி


தமிழனே!... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by அனந்தம் ஜீவ்னி Thu Nov 03, 2011 4:38 pm

சிவா wrote:இன்றைய தமிழனின் நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி



மிக்க நன்றி
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by உமா Mon Nov 07, 2011 3:38 pm

சிறந்த வரிகள்....தங்களை பற்றிய அறிமுகம் தாருங்களேன். முகப்பில் உள்ள அறிமுக பகுதியில் சென்று. தமிழனே!... 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by அனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 4:08 pm

உமா wrote:சிறந்த வரிகள்....தங்களை பற்றிய அறிமுகம் தாருங்களேன். முகப்பில் உள்ள அறிமுக பகுதியில் சென்று. தமிழனே!... 677196
நன்றி உமா !என்னைப் பற்றிய சுய அறிமுகத்தை தளத்தில் இணைந்த அன்றே செய்திருக்க வேண்டும் .சொல்லப்போனால் இது போன்ற தளங்கள் அவற்றின் வழமைகள் இவற்றின் உடனான எனது பரிச்சியம் மிகக் குறைவே. பொதுவில் என்னை வெளிப்படுதிக்கொள்வதில் கூச்சமுறுபவனும் கூட ... அதனாலேயே அவ்வாறான அறிமுகத்தில் விருப்பம் இல்லாதிருந்தேன் .இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டதால் என்னைப் பற்றி சொல்லிக்கொள்ளும் படியான வரிகள் ஏதேனும் இருக்கிறதா என தேடிக்கொண்டிருக்கிறேன் ....
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by உமா Mon Nov 07, 2011 4:13 pm

மிக்க நன்றிகள் அனந்தம்...நீங்கள் கூச்சம் கொள்ள தேவையே அல்ல. இங்கே உள்ள அனைவருமே தங்களின் நண்பர்கள் மற்றும் உடன் பிறப்புக்கள் தான். அறிமுகம் என்பது தங்களை பற்றி தெரிந்து கொள்ளவே... அதன் மூலம் நமக்குள் எந்த இடைவெளிகளும் இல்லாமல் சகஜமாக பழகலாம்....இங்கே நீங்கள் பயம் கொள்ள தேவையே அல்ல..

தங்களை எப்படி அழைப்பது அனந்தம் (அ) ஜீவ்நி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழனே!... Empty Re: தமிழனே!...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum