ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி

Go down

துளசி Empty துளசி

Post by கோவைசிவா Thu Sep 24, 2009 11:57 pm

""பாபு... பாபு...'' என்று கூப்பிட்டார் கோபாலன். பாவம், பாபு... எப்பொழுது தன்னையும் மறந்து தூங்க ஆரம் பித்தானோ, தெரியவில்லை. வெகுநேரம், கண் திறவாமல், இப்பொழுதோ, அப்பொழுதோ என்று கடைசி மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் தன் அப்பாவை கண்களில் கண்ணீர் வழிய எவ் வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருந்தானோ...



படுக்கையில் படுத்திருக்கும் நண்பர் பத்ரியைப் பார்த்தார் கோபாலன். அவர் கண்களிலும் கண்ணீர் திரண்டது. கொஞ்ச நாட் களாகவே பத்ரி உடல் நிலையும், மன நிலையும் சரியில்லாமலே இருந்தன. அவர் தன் மனதில் எதையோ வைத்து, அதை வெளியே சொல்ல முடியாமல் தனக் குள்ளேயே தவித்துக் கொண் டிருப்பது போலிருந்தது.




கடந்த நான்கு நாட்களாக பத்ரி யின் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. அன்ன ஆகாரம் உட்கொள்ளவில்லை அவர். கிழித்து போடப்பட்ட நாராக கிடந்தார். மார்பு ஏறி, ஏறி இறங் கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து அவர் சுவாசம் விட்டுக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிந் தது.




அப்பாவுடைய பால்ய நண் பரல்ல கோபால்; சமீபத்தில் தான் பரிச்சயமானவர். தினசரி சாயங்காலம், பார்க் சிமென்ட் பெஞ்சில் இருவரும் உட்கார்ந்து பேசுகிற பழக்கம் தான் தொடக் கத்தில். அதுவே நாளடைவில் கெட்டிப்பட்டு விட்டது.




கோபாலன் தனிக்கட்டை; திருமணமாகாதவர். பல ஊர் களில் தொழில் நிமித்தமாகச் சென்று தங்கி வந்தவர். கையில் ஓரளவு பணம் சேரவும், உடல் தளர்ச்சியடையவும் சரியாக இருந்தது. இனி, ஓடியாடி பாடுபட முடியாதென்பது தெரிந்தது.




பெரிய நகரமுமாக இல்லாமலும், சிறிய கிராமமுமாக இல் லாமல் அமைதியாக இருந்த சிக்க நரசய்யன் கிராமம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. கிராமத்தை வலமாக தொட்டு ஓடும் தாமிரபரணி ஆறும், அதன் நடுவேயுள்ள குறுக் குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலும், மிகவும் பிடித்துப் போய் விட்டது கோபாலுக்கு.




காலையில் காபி போட்டு குடிப்பது; ஆற் றுக்குச் சென்று ஹாயாக குளிப் பது; கோவிலுக்குப் போவது; வீட்டிற்கு வந்து சாதம் வடித்து, ஒரு ரசமோ, குழம்போ வைத்து, ஒரு காயை பொரியல் செய்து அல்லது ஒரு கீரையை மசித்து, ஊறுகாயுடன் சாப்பிடுவது; பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடுவது...




நான்கு மணிக்கு எலிமெண்ட்ரி ஸ்கூல், ரீடிங் ரூமில் பேப்பர் படிப்பது; அப்புறம், பார்க் போவது; அங்கு வரும் தன் வயது ஒத்தவர்களோடு உலக விஷயங்கள், ஆன்மிகம், அரசியல் பேசுவது; குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது; கதை சொல்வதென்று ஒரு நியதிக்குட்பட்டதாக தன் எளிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் கோபால்.




அப்படி, பார்க்கில் அறிமுகமானவர் தான் பத்ரி. முழுப் பெயர் பத்ரி நாராயணன். டவுனில் ஒரு ஹைஸ்கூலில் ஹெட் மாஸ் டராக இருந்து ரிட்டயரானவர். அவருக்கு திருமணமாகி மனைவி யும், தலைக்குயர்ந்த பாபு என்று ஒரு பிள்ளையுமிருந்தான்.




அவர் மனைவி துளசி, தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பாள். திருமணமாகி, 40 வருடங்களாகின்றன. இதுவரை கணவனிடம் ஒன்றை வேண்டுமென்று கேட்டதில்லை அவள். பத்ரியே அவள் என்ன விரும்புகிறாள் என்பதை புரிந்து, அதை வாங்கிக் கொடுத்து விடுவார். அதை பெற்றுக் கொள் ளும் போது, தன் மனைவி பூரண சந்தோஷமடைவதில்லை என் பது மட்டும் தெரிந்தது.




அந்த ஒன்று என்ன என்பதை கண்டுபிடித்து, அதை வாங்கி அவளுக்கு அளித்துவிட வேண்டு மென்று விரும்பினார் பத்ரி.




"துளசி... நீ என்னிடம், பாபுவிடமெல்லாம் ரொம்பவும் அன் பாக இருக்கிறாய். எங்களை கண்களை காப்பது போல் காக் கிறாய். வாய்க்கு ருசியாக சமைத்து போடுகிறாய். மிகவும் பிரியமாக இருக்கிறாய். ஆனால், உன் மனதில் சந்தோஷமில்லாமல் எதுவோ அரித்துக் கொண் டிருப்பது போல் இருக்கிறதே துளசி...' என்பார் பத்ரி.




"அதெல்லாம் ஒன்றுமில் லையே... அன்பான கணவர், அருமையான பிள்ளை. அவனும் நல்ல வேலை பார்க்கிறான். இன்னும் கொஞ்ச நாளில் அவனுக்கு கல்யாணம் செய்து வைக் கப் போகிறோம். சொந்த வீடு, நகைகள், பணம் எல்லாமிருக் கிறது. நிறைவான வாழ்க்கைத் தானே வாழ்கிறேன்!' என்பாள் துளசி.




"உன்னை சில சமயம் பார்க் கிறபொழுது எனக்கு அப்படி எல்லாம் தோன்றவில்லையே துளசி... ஏதோ ஒரு சோகம் உன்னை, உன் மனதை ஆட் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறதே!'




"எனக்கு அடிக்கடி, என் அப் பாவின் ஞாபகம் வந்துவிடும். எனக்கு கல்யாணமாகி, குழந்தை பெற்று, கணவருடன் நான் சந்தோஷமாக வாழ்வதை, கண்டு மகிழ வேண்டுமென்று என் அப்பா மிகவும் விரும் பினார்; ஆனால், அது என் அப்பா வுக்கு கொடுத்து வைக்கவில்லை.




"அவர் ஞாபகம் எனக்கு அவ் வப்போது வந்துவிடுகிறது. அப் பொழுதெல்லாம் மனதுக்குள் அழுகிறேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா... என் முகம் என்னை காட்டிக் கொடுத்து விடுகிறது போலும்...' என்றாள் துளசி.




ஒரு நாள் துளசியிடம், "துளசி... தினம் நான் சாயங் காலம் பார்க்குக்குப் போய் சில நண்பர்களோடு பேசிவிட்டு வரு வேனல்லவா?' என்றார் பத்ரி.




"ஆமாம்...' என்றாள் துளசி.




"அவர்கள்ல ஒரு நண்பர் பெயர் கோபால். என் வயதிருக்கும். கல்யாணமே செய்துக் கொள்ளவில்லையாம். சம்பாத்தியத்தை பேங்கில் போட்டு வருகிற வட் டிப் பணத்தில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாராம்!'




"பாவம்!' என்றாள் துளசி.




"அவரை ஒரு நாள் நம் வீட்டில் சாப்பிட கூப்பிடட்டுமா துளசி?'




"ஒரு நாளைக்குத் தானே?'




"ஆமாம், துளசி... மனிதர் பேச்சிலிருந்து வாய்க்கு ருசியாக அவர் சாப்பிட்டு ரொம்ப நாளா கிறது போல இருக்கிறது...'




"வரச் சொல்லுங்களேன். வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசைப்படுகிறவருக்கு ஒரு நாள் சமைத்துப் போட்டால் ஒன்றும் குடிமுழுகி போய் விடாது...' என்றாள் துளசி.




சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர் பச்சடி, அப் பளம், வடாம் என்று சமையல் செய்தாள். சாப்பிட உட்கார்ந்த தன் கணவருக்கும், கோபாலுக்கும் உணவுகளை பரிமாறினாள். வாய்க்கு வாய், "இது மாதிரி சாப்பிட்டு வருஷமாச்சு. சமையல் பிரமாதம்... இது மாதிரி மறுபடி




யும் என்னைக்கு சாப்பிடப் போறேனோ...' என்று சொல் லிக் கொண்டே சாப்பிட்டார் கோபால்.




"அதுக்கென்ன, அடிக்கடி சாப் பிட்டா போச்சு. என்ன துளசி...' என்றார் பத்ரி.




அந்த சாப்பாட்டுக்குப் பிறகு, பத்ரிக்கும், கோபாலுக் கும் நெருக்கம் அதிகமானது. தினம் வந்து ஒரு மணி நேரமாவது பத்ரியுடன் உலக விஷயங் களை பேசிவிட்டுப் போவார். சிலசமயம், மோர், காபி, டிபன் என்று சாப்பிட்டு விட்டுப் போவார்.




"உங்க பிரண்ட்ஷிப்பை வெளி யிலே வைச்சுக்கக் கூடாதா? உங்க பிரண்ட் வந்துட்டா, என் னாலே வீட்டிலே, "ப்ரீ'யா இருக்க முடியலே. சின்ன வீடாச்சா... ஒரே இடத்திலே அடைஞ்சுக் கிடந்தா தலை எல்லாம் வலிக்கிறது...' என் பாள் துளசி.




கோபால் ஒரு வாரம், பத்து நாள் வராதிருந்து விட்டால், "எங்கே உங்க பிரண்டை காணோம்? வேற இடத்திலே சாப்பாடு, காபி, டிபனெல்லாம் கிடைக்கிறதோ?' என்பாள் துளசி.




ஒரு நாள் முதுகில் வலிக்கிறது என்று படுத்தார் பத்ரி. படுத்தது படுத்தது தான்; எழுந்திருக்கவே முடியவில்லை. அப்பொழுது செய்த டெஸ்டுகளிலிருந்து தான், பத்ரிக்கு ஷ�கர், பிளட் பிரஷர், யூரினல் பிராப்ளம், ஹார்ட்டில் பிளாக் எல்லாம் இருப்பது தெரிய வந்தது. ஆஸ்பத்திரியில் கொஞ்ச நாள் ட்ரீட்மெண்ட் கொடுத்து விட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தார் கோபால். பத்ரியின் பிள்ளை பாபு, "எங்களுக்கு துணையா நீங்க இருங்கோ மாமா...' என்று கோபாலை கேட்டுக் கொண்டான்.




பத்ரியின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருந்தது.




""பாபு... பாபு!'' என்று கண்ணயர்ந்து விட்ட பாபுவை குலுக்கி எழுப்பினார் கோபால்.




""என்ன மாமா?'' என்று கேட்டு பதறியடித்து எழுந்தான் பாபு.




""உங்கப்பா கண் திறந்து பார்க்கிறார்டா பாபு. உங்கம் மாவை அவர் பார்வை தேடறது. கடைசி நிமிடத்திலே உங்கம் மாவை பார்க்கவும், அவக் கிட்டே ஏதோ பேசவும் ஆசைப் படற மாதிரி இருக்கு உங்கப்பாவுக்கு!'' என்றார்.




""இதோ அம்மாவை அழைச் சுண்டு வரேன்,'' என்ற பாபு, ""அம்மா... அம்மா,'' என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டினுள் ஓடினான். அம்மா துளசி, சுவாமி படத் தின் பூஜையறையில் உட்கார்ந் திருந்தாள். சுவாமி விளக்கு ஏற்றபட்டிருந்தது. அவள் கண்கள் மூடியிருந்தன; கைகளை கூப்பி இருந்தாள்.




"மருந்தால் காப்பாற்ற முடியாத என் கணவனை, தெய்வமே நீ தான் காப்பாற்ற வேண்டும்...' என்று அவள் மனமுருக வேண்டிக் கொண்டிருப்பது போலிருந்தது.




""அப்பா கண் திறந்து பார்த்து உன்னை தேடறாரம்மா. உன் கிட்டே என்னமோ சொல்ல ஆசைப்படுறாரம்மா... வாம்மா வா,'' என்றான் பாபு அழுதபடி.




அதைக் கேட்டு, அலறியடித்து எழுந்து, கணவர் படுத்திருக்கும் அறைக்கு ஓடவில்லை துளசி; ஆடாமல், அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.




""அம்மா... இன்னும் கொஞ்ச நேரம் தானம்மா அப்பா உயிரோடிருப்பார்... வாம்மா... வா...'' பாபு அலறினான்.




அப்பொழுதும் நிஷ்டைக் கலையாதவள் போலிருந்தாள் துளசி. கண் திறந்து கூட பார்க்கவில்லை. அவள் உடலில் ஒரு அசைவு கூட ஏற்படவில்லை.




""பாபு... உன் அப்பா போயிட்டார்டா,'' என்று கோபாலின் குரல் கேட்டது.




""அம்மா... அம்மா...''




மறுபடியும், ""உன் அப்பா போயிட்டார்டா பாபு,'' என்ற குரல் கேட்டது; கோபாலின் குரல்.




கண் திறந்த துளசி எழுந்து, பத்ரி படுத்திருந்த அறையை நோக்கி ஓடினாள்.




ஆகி விட்டது; எல்லாம் ஆகி விட்டது. பத்ரி பிறந்து வாழ்ந்து, மறைந்து போய் எல்லா காரியமும் ஆகிவிட்டது.




ஒருமுறை கூட வரவில்லை கோபால்.




""எங்கே பாபு உங்கப்பாவோட பிரெண்டு?'' என்று கேட்டாள் துளசி.




""கோபால் மாமாவா அம்மா?''




""ஆமாம்!''




""அப்பா போன பிறகு இந்த ஊர்லேயே இருக்கப் பிடிக்காம, வேற எந்த ஊருக்கோ போயிட் டாரம்மா,'' என்றான் பாபு.




"பாபு... நானும், கோபாலும் பழைய காதலர்கள். குடும்ப சூழ் நிலைகள் காரணமாக எங்கள் கல்யாணம் நடக்க முடியாமப் போயிடுத்து. நான் உங்கப் பாவை கல்யாணம் பண்ணிண் டேன். நீ பிறந்ததும், நான் முழுமையா சந்தோஷமாயில்லை என்கிறதை தெரிஞ்சுண்ட உங் கப்பா அதற்கான காரணத்தை தேடினார். அது கோபால் மூலமா கிடைச்சுடுத்து. "அவர் தான் என் பழைய காதலர்ன்னு தெரிஞ்சு போயி, இனி நாங்கள் உடல் பூர்வமா சேர்ந்து வாழ முடியாவிட்டாலும், உள் ளப்பூர்வமாவது சேரட்டும்ன்னு, அதை என்கிட்ட சொல்ல, மரண வேண்டுகோளாக என்கிட்டே கேட்டுக்கத்தான் உயிர் பிரிகிற நேரத்திலே, என்னை தேடியிருக்கிறார்.




"அதுக்கு நான் இடம் கொடுக்காம, அவர் உயிர் பிரியற நேரத்திலே மனசை கல்லாக் கிண்டு, அவரை பார்க்காம இருந்தேன். இனிமே இங்கிருந்தா மனசு சஞ்சலப் படும்ன்னு ஊரை விட்டே கோபாலும் போயிட்டார் பாபு... இதை எல் லாம் உன்கிட்டே எப்படி சொல் வேன் பாபு...' என்று மனதுக் குள்ளேயே சொல்லி அழுதாள் துளசி.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum