ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ விருந்து - நட்புடன்...

+11
அசுரன்
பிரசன்னா
ஜாஹீதாபானு
ரேவதி
ayyamperumal
இளமாறன்
ரிபாஸ்
கே. பாலா
ராஜா
பிஜிராமன்
நட்புடன்
15 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty ராஜ விருந்து - நட்புடன்...

Post by நட்புடன் Sat Oct 22, 2011 9:30 pm

ராஜ விருந்து - நட்புடன்...

ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.

என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.

இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.

என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.

சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.

அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.

இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.

நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.

அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.

வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?

அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.

ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.

ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.

சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?

ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...

என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by பிஜிராமன் Sat Oct 22, 2011 9:45 pm

இதையே சாக்கா வச்சிக்கிட்டு வீக்லி ட்ரிப் அடிக்க பிளான் போடாதீங்க நட்ஸ்........

ராஜ விருந்திருக்கு அற்தம் உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது........அது நம்ம ராஜா அவர்கள் வைத்த விருந்து என்று..........

அருமை அருமை...................ஒரு போட்டோ கூடவா எடுக்கல அங்க போயி.......எடுத்திருந்தா போடுங்களேன்.............அதையும் பார்த்து சந்தோஷப் பாடுவோம்..........

நன்றி நட்ஸ்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by நட்புடன் Sun Oct 23, 2011 10:55 am

பிஜிராமன் wrote:இதையே சாக்கா வச்சிக்கிட்டு வீக்லி ட்ரிப் அடிக்க பிளான் போடாதீங்க நட்ஸ்........

ராஜ விருந்திருக்கு அற்தம் உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது........அது நம்ம ராஜா அவர்கள் வைத்த விருந்து என்று..........

அருமை அருமை...................ஒரு போட்டோ கூடவா எடுக்கல அங்க போயி.......எடுத்திருந்தா போடுங்களேன்.............அதையும் பார்த்து சந்தோஷப் பாடுவோம்..........

நன்றி நட்ஸ்......
நன்றி ராம் படித்து ரசித்து ருசித்ததற்கு.
வாரா வாரம் போற ப்ளான் எல்லாம் இல்லை.
அப்புறம் வேற யாரையும் கூப்பிடுவதையே நிறுத்திடுவாங்களே
படங்கள் எதுவும் எடுக்கவில்லை ராம்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ராஜா Sun Oct 23, 2011 11:01 am

நான் ரொம்ப சீரியஸ்சா படிச்சுட்டு வந்தேன் ஏதோ
நகைச்சுவை கட்டுரை எழுதியிருக்கிறார் போலன்னு.
பாதியில தான் தெரிஞ்சுது நம்ம கதைய தான் அண்ணாத்த சொல்லிட்டு இருக்கிறார்ன்னு.

எண்ணன்னா ரொம்ப பில்ட்அப் கொடுக்குரிங்க எனக்கு கூச்சமா இருக்கு , ராஜ விருந்து - நட்புடன்...  942


எங்கள் அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு வந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா. ராஜ விருந்து - நட்புடன்...  678642

குழந்தைக்கு வாங்கி வந்த பொம்மைகள் மிக அழகு. ராஜ விருந்து - நட்புடன்...  678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by கே. பாலா Sun Oct 23, 2011 11:08 am

(ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !

ராஜா நாங்களும் ரெடி !

இப்படிக்கு
சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ராஜா Sun Oct 23, 2011 11:20 am

கே. பாலா wrote:(ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !
ராஜா நாங்களும் ரெடி !இப்படிக்கு சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்
அதனால் என்ன , எல்லோரும் கிளம்பி தோஹா வாங்க பாலா. டிக்கெட் செலவு "நட்புடன் வெங்கட்" அவர்கள் ஏற்று கொள்வார்கள். சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by ரிபாஸ் Sun Oct 23, 2011 11:22 am

[quote="கே. பாலா"](ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் பாலா அண்ணா நாங்க எதுனா ராஜ விருந்து முடிச்சிட்டோம் அண்ணா நீங்களும் வாங்க இங்க நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ராஜ விருந்து - நட்புடன்...  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by நட்புடன் Sun Oct 23, 2011 11:32 am

ராஜா wrote:நான் ரொம்ப சீரியஸ்சா படிச்சுட்டு வந்தேன் ஏதோ
நகைச்சுவை கட்டுரை எழுதியிருக்கிறார் போலன்னு.
பாதியில தான் தெரிஞ்சுது நம்ம கதைய தான் அண்ணாத்த சொல்லிட்டு இருக்கிறார்ன்னு.

எண்ணன்னா ரொம்ப பில்ட்அப் கொடுக்குரிங்க எனக்கு கூச்சமா இருக்கு , ராஜ விருந்து - நட்புடன்...  942


எங்கள் அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு வந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா. ராஜ விருந்து - நட்புடன்...  678642

குழந்தைக்கு வாங்கி வந்த பொம்மைகள் மிக அழகு. ராஜ விருந்து - நட்புடன்...  678642
ராஜா - இந்த சாப்பாடு அயிட்டத்தில காமடி பண்றது நம்ம சதுரம் சுதா தான்.
சூப்பர் விருந்து குடுத்திட்டு நீங்க ஏன் கூச்சப் படறீங்க?
வந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி தான்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by இளமாறன் Sun Oct 23, 2011 11:34 am

அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது. சிரி சிரி

அது ena உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராஜ விருந்து - நட்புடன்...  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by நட்புடன் Sun Oct 23, 2011 11:38 am

கே. பாலா wrote:(ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !

ராஜா நாங்களும் ரெடி !

இப்படிக்கு
சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்
பாலா சார் சீக்கிரம் கிளம்பி வாங்க இங்க.
எவ்ளோ நாள் தான் பிரம்பும் கையுமா அலைவீங்க
பெருமாளைத் தேடி - அடிக்கறதுக்கு...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ராஜ விருந்து - நட்புடன்...  Empty Re: ராஜ விருந்து - நட்புடன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum