ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!

5 posters

Go down

சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! Empty சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!

Post by thillalangadi Fri Oct 21, 2011 3:42 pm

டெல்லி: அரசு தரும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யும் கிரண்பேடி, தன்னை அழைப்பவர்களிடம் முழுக் கட்டணத்தையும் வசூலித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ஹஸாரே குழுவில் முக்கிய அங்கம் வகிப்பவர் கிரண் பேடி. ரமோன் மக்சாசே விருதுபெற்றவர். இந்திய அரசின் உயர்ந்த கேலன்டரி விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றவர். இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ள அரசு வகை செய்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி விருப்ப ஓய்வு பெற்று, டீம் அன்னா பெயரில் டிவிக்களில் குழாயடிச் சண்டை நடத்தி வருகிறார். ஹஸாரேவின் கூட்டங்களில் இவர்தான் பிரதான பேச்சாளர். ஊழலை எதிர்ப்பு என்ற பெயரில், இவரது பேச்சில் தெறிக்கும் அராஜகமும் சர்வாதிகார மனோபாவமும் பலரையும் முகம் சுழிக்க செய்து வரும் நிலையில், கிரண் பேடியின் அல்பத்தனத்தை தோலுரித்துக் காட்டியுள்ளன ஆங்கில நாளிதழ்கள்.

ஓய்வில் உள்ள கிரண் பேடியை, பல்வேறு என்ஜிஓக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பொரேட் நிறுவனங்கள் சொற்பொழிவாற்ற அழைக்கின்றன.

இந்த சொற்பொழிவுக்காக அவருக்கு பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட், ஐந்து நட்சத்திர தங்குமிடம் என சகல வசதிகளும் செய்து தருகிறார்கள். தனி அன்பளிப்புகளும் உண்டு.

ஆனால் கிரண்பேடியோ, இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தனக்கு அரசு வழங்கும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்துள்ளார். ஆனால், தனியார் அமைப்புகளிடமிருந்து முழுக் கட்டணத்தையும் வசூலித்துள்ளார். அதுமட்டுமல்ல, பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்துள்ளார்.

கிரண்பேடி கேலன்டரி விருது பெற்றவர். இவருக்கு அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் 75 சதவீத சலுகை வழங்கப்படும். இவரது கேலன்டரி விருது எண் 433. இந்த சலுகையை முழுதாக அனுபவிக்கும் கிரண்பேடி, பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தை முழுவதுமாகப் பெற்று வந்துள்ளார் பல ஆண்டுகளாக.

அவர் பயணம் செய்த எகானமி விமான டிக்கெட்டுகள், என்ஜிஓக்களிடம் பிஸினஸ் கிளாஸுக்காக பணம் வசூலித்ததற்கான ரசீதுகள் என 12-க்கும் மேற்பட்ட ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி, இதுபோல பயணம் செய்து அதிகப்படியாக கட்டணத்தை வசூலித்துள்ளார் கிரண் பேடி.

2006-ம் ஆண்டு இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் இருந்தபோதே இதுபோன்ற ஏமாற்று வேலையைச் செய்துள்ளார். அரசு அதிகாரியான இவர், இதுபோல செய்திருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். நேரடியாக லஞ்சம் பெற்றதற்கு சமமான இந்தக் குற்றச்சாட்டுக்கு பிசிஏ எனப்படும் அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சட்டப்படி தண்டனை உண்டு!

இந்த டிக்கெட்டுகள் மற்றும் பில்களுக்கான தொகையை கிரண் பேடி, தான் தலைவராக உள்ள இந்தியா விஷன் பவுண்டேஷன் பெயரில் காசோலைகளாகப் பெற்றுள்ளார். இவரது கணக்காயர் வியாஸ் இதுகுறித்துக் கூறுகையில், கிரண்பேடி தனது சொற்பொழிவுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வசூலித்த தொகையை விட மிகக் குறைவாகத்தான் செலவிட்டுள்ளார். இதனால் அவரது கணக்கு பொருந்தி வரவில்லை. ஆனால் இது ஒரு சேமிப்பாக காட்டப்பட்டுள்ளது, என்றார்.

கிரண்பேடியின் தில்லு முல்லு - சில ஆதாரங்கள்:

செப்டம்பர் 29, 2011: டெல்லி - ஹைதராபாத் பயணம் - ஏர் இந்தியா ஃப்ளைட் எண் ஏஐ 560- எகானமி க்ளாஸ். அடுத்த நாள் ஏஐ 539 விமானத்தில் டெல்லி திரும்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்ட தொகை ரூ 17134 மட்டுமே.

ஆனால் கிரண்பேடி கணக்கு காட்டியுள்ள தொகை ரூ 73,117!

டெல்லி - ஹைதராபாத் - சென்னை விமானத்தில் வந்த கிரண் பேடி, மீண்டும் டெல்லி - சென்னை - டெல்லி விமானத்தில் திரும்பியுள்ளார். சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்த அவர், பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான முழுத் தொகையை வசூலித்துள்ளார்.

மே 30, 2011: டெல்லி - புனே கிங்பிஷர் விமானத்தில் பயணம் செய்த அவர், ஜெட் ஏர்வேஸில் திரும்பியுள்ளார். இதற்கு மொத்த பயணக் கட்டணம் ரூ 12458. ஆனால் கிரண்பேடி வசூலித்துள்ளது ரூ 26386.

நவம்பர் 25, 2010: டெல்லி - மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற அவர் அடுத்த நாள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார். இதற்கான பயணக் கட்டணம் ரூ 14097. கிரண்பேடி வசூலித்த தொகை ரூ 42109.

2009, 2008, 2007 மற்றும் 2006-ம் ஆண்டுகளிலும் இதுபோல பல முறை சிக்கன வகுப்பில் பயணித்த கிரண்பேடி, தான் செலவழித்ததை விட 5 மடங்கு அதிக தொகையை வசூலித்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு பற்றி வாய்கிழிய பேசும் கிரண் பேடி, தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்த அளவு முறைகேடு செய்துள்ளது எந்த வகையில் சேரும் என கேள்வி எழுப்பியுள்ளனர் ஹஸாரே எதிர்ப்பாளர்கள்.
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! Empty Re: சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!

Post by கேசவன் Fri Oct 21, 2011 6:55 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! 1357389சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! 59010615சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! Images3ijfசலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! Empty Re: சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!

Post by பிரசன்னா Fri Oct 21, 2011 7:47 pm

இந்த செய்தி எந்த blogspot / website / பத்திரிகையில் வந்தது என்று தெரிவிக்கவும் நண்பரே...

அவர் யாரிடம் பணம் வாங்கினார் என்றும் பகிர்ந்து இருக்கலாம்... ஆனால் அப்படி அந்த வெப்சைட் பதியவில்லை என்று தெரிகிறது...

பிறர் மீது அவதூர் சொல்லும் போது அதன் முழு விபரமும் தெரிய வேண்டும் அல்லவா...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! Empty Re: சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 21, 2011 8:09 pm

நல்ல ஒரு செய்தி. இவரின் முகமூடியைக் கிழித்துள்ளீர். விருப்ப பொத்தானி பாவித்துள்ளேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! Empty Re: சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!

Post by 2009kr Fri Oct 21, 2011 9:18 pm

யாரைத்தான் நம்புவதோ!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! Empty Re: சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!

Post by thillalangadi Sat Oct 22, 2011 8:01 pm

பிரசன்னா wrote:இந்த செய்தி எந்த blogspot / website / பத்திரிகையில் வந்தது என்று தெரிவிக்கவும் நண்பரே...

அவர் யாரிடம் பணம் வாங்கினார் என்றும் பகிர்ந்து இருக்கலாம்... ஆனால் அப்படி அந்த வெப்சைட் பதியவில்லை என்று தெரிகிறது...

பிறர் மீது அவதூர் சொல்லும் போது அதன் முழு விபரமும் தெரிய வேண்டும் அல்லவா...

http://thatstamil.oneindia.in/news/2011/10/20/kiran-lokpal-bedi-buys-discount-tickets-gets-hosts-aid0136.html

http://www.thetop.in



thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்! Empty Re: சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்
» கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர்
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
» மாத வருமானம் ரூ.1,500 வரை உள்ளவர்கள் மாதம் ரூ.25 கட்டணத்தில் ரெயிலில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்
»  இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum