ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

+8
ayyamperumal
aathma
ஜாஹீதாபானு
அருண்
பாலாஜி
பூஜிதா
ரேவதி
dsudhanandan
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by dsudhanandan Fri Oct 21, 2011 1:04 pm

"சதுரம், மணி ஒண்ணாச்சே? சாப்பிடப் போகலாமா?"

"வெங்கட் சார், நீங்க வெளியிலே சாப்பிடவே மாட்டீங்களே?" நான் வியப்புடன் கேட்டேன். "என்னாச்சு இன்னிக்கு?"

"நோக்கு விஷயமே தெரியாதா? இன்னிக்கு ஆண்கள் தினமோன்னோ?" என்று உற்சாகமாகக் கூறினார் வெங்கட். "அதுனாலே தான் இன்னிக்கு எல்லாமே ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு பார்க்கிறேன்."

"அப்படீன்னா இன்னிக்கு ஒருநாள் உங்க வீட்டுலே மாமி சமையலா?"

"என்ன கொழுப்பா? ஒரு நாள் அவ பண்ணற நூடுல்ஸை சாப்பிட்டுப் பாரு! அடுத்த சேரன் எக்ஸ்பிரஸ் புடிச்சு கோயமுத்தூருக்கு ஓடிப்போயிடுவே!"

"அதென்ன சார் நூடுல்ஸ் அவ்வளவு கொடுமையா இருக்குமா? கேள்விப்பட்டதேயில்லையே?"

அடப்போப்பா எப்பப்பார் ஒண்ணுமே சமைக்காமே ஒரு நிமிட நூடுல்ஸ், 2 நிமிட நூடில்ஸ்-ன்னு தினமும் போட்டு அனுப்பறாப்பா... வளவளன்னு பேசிண்டிருக்காம எந்துண்டுவா! நேக்கு கபகபன்னு பசிக்கறது."

இன்றைக்கு சரவண பவன் போய் சாப்பாடுதான் என்று மனதில் நினைத்துக் கொண்டு வெங்கட்டோடு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்.

"சதுரம் , இந்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம்னு ஒண்ணு இருக்காமே? நோக்குத் தெரியுமா?"

"கேள்விப்பட்டிருக்கேன் சார். என்ன விஷயம்?"

"அவா கிட்டே சொல்லி இந்த நூடில்ஸை தடை பண்ணறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா? நேக்கு நாக்கு செத்துப்போயிடுத்துடா!"

"சார், அவங்க எவ்வளவு பெரிய பெரிய விஷயங்களுக்காகவெல்லாம் போராடிட்டிருக்காங்க! போயும்போயும் உங்க நூடில்ஸ் மேட்டருக்கெல்லாம் அவங்களை இழுக்கறீங்களே?"

"அதுவும் சரிதான், அவாளெல்லாம் எங்கே நூடில்ஸ் சாப்பிட்டிருக்கப் போறா? கொடுத்து வச்சவா!"

"சார், அவங்கல்லாம் பெண்களாலே ரொம்ப பாதிக்கப்பட்டவங்க சார்!

"என்ன பாதிப்பாம்? கொஞ்சம் விபரமாத்தான் சொல்லேன். நானும் தெரிஞ்சுப்பேனோல்லியோ?"

"அதாவது சார், வரதட்சணைத் தடுப்புச் சட்டம் இருக்கில்லையா, அதுலே பொய் கேஸ் போட்டு, மாமனார், மாமியார் எல்லாரையும் கூண்டோட ஜெயிலுக்கு அனுப்பிடறாங்களாம்!"

"யாரு பொம்மனாட்டிகள் தானே? பண்ணுவா...பண்ணுவா! நோக்கு ஒரு விஷயம் தெரியுமோ? என் கல்யாணத்தப்போ ஜானவாசத்துக்கு கோட்டு தர்றேன்னு சொன்னா. நானும் ஜெமினி கணேசன் மாதிரி கோட்டெல்லாம் போட்டுண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுக்கலாம்னு ஆசையா காத்திண்டிருந்தா, நேக்கு ரெயின்-கோட்டை வாங்கிக் கொடுத்துட்டாடா!"

"அதுனாலேன்ன சார், அடுத்த நாள் காசியாத்திரைக்குக் குடையும் கொடுத்திருப்பாங்களே? மழைக்காலத்துலே உங்களுக்கும் ஒரு செலவு மிச்சம் தானே?"

"அதுபோனாப் போறதுன்னு நானும் விட்டுட்டேன்னு வையேன். ஆனா, இந்த நூடில்ஸ டாலரேட்டே பண்ணமுடியலேடாப்பா! அது போகட்டும், ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இன்னம் வேறே என்னென்னத்துக்குப் போராடறா?"

"இந்தக் குடும்ப வன்முறைச்சட்டம்னு ஒண்ணு இருக்கு சார்! புருசன் அடிச்சிட்டான்னு புகார் சொல்லி போலீஸ்லே புடிச்சுக் கொடுத்திடறாங்களாம்."

"நன்னாத்தானிருக்கு போ! இவா பண்ணற வயலென்ஸ் எதுலே சேர்த்தியாம்? போனமாசம் நான் ஆடி அசந்து ஆத்துக்குள்ளே போயி, ’அடியே பங்கஜம், ஒரு வாய் காப்பி போட்டுத்தாயேன்'-னு கேட்டதுக்குப் பிலுபிலுன்னு பிடிச்சுண்டுட்டா...!"

"அப்படியா?"

"ஆமா, அங்கே அகிலா கேன்சர்லே செத்துண்டிருக்கா. உங்களுக்கு காப்பி கேக்கறதான்னு சண்டைக்கு வந்துட்டான்னா பாரேன்!"

"அடடா, யாரு சார் அகிலா?"

"எல்லாம் டி.வி. சீரியல் ஹீரோயின் தான்! நேக்கென்னமோ அந்த அகிலா அடுத்த வைகுண்ட ஏகாதசி வரைக்கும் சாவாள்னு தோணலை. இப்போத்தான் டாக்டர் வந்து பார்த்துட்டு அம்பதாயிர ரூபாய் பணம் கேட்டிருக்கார். அவா பாத்திரம் பண்டத்தையெல்லாம் வித்துக் காசாக்கிண்டு வர்ற வரைக்கும் நான் காப்பி சாப்பிடாம இருக்க முடியுமோ?"

"அது சரி! கடைசியிலே காப்பி கொடுத்தாங்களா இல்லையா?"

"கொடுக்காம என்ன, ஒரு கப் காப்பியைக் கொடுத்துட்டு சீரியல் முடியுற வரைக்கும் வாயத் திறக்கப்படாதுன்னு வேறே சொல்லிட்டா...!"

"அட பாவமே, நீங்களும் வாயைத் திறக்காமலே இருந்தீங்களாக்கும்?"

"எப்படிடா திறப்பேன்? அவ காப்பியிலே சர்க்கரைக்குப் பதிலா ரவையைப் போட்டுக் கொடுத்திட்டாடா! இந்த லோகத்துலேயே தம்ளரிலே உப்புமா சாப்பிட்டவன் நான் ஒருத்தன் தான் தெரியுமோ?"

"அச்சச்சோ! உண்மையிலேயே இது ரொம்பக் கொடுமைதான்!"

"ஏதோ, தெனமும் நூடில்ஸ் சாப்பிட்டு சாப்பிட்டு நேக்கு எல்லாமே இம்யூன் ஆயிடுத்தோ தப்பிச்சேனோ!"

"நீங்க சொல்லுறதைப் பார்த்தா எனக்கே ஒருவாட்டி உங்கவீட்டு நூடில்ஸ் சாப்பிடணும் போலிருக்கு சார்!"

"நோக்கு ஏண்டா இந்த விபரீதமான ஆசையெல்லாம்? ஏதோ இது நைன்டீன் சிக்ஸ்டீஸ் பாடிங்கிறதுனாலே தாக்குப்பிடிச்சிண்டிருக்கு! அப்புறம் இன்னொரு விஷயம்! ஆத்துக்காரி தளிகை பண்றச்சே, நான்தான் காய்கறியெல்லாம் நறுக்கிக் கொடுப்பேன் தெரியுமா?"

"சார், இதெலென்ன சார் தப்பு? நம்மாலானத நாமும் செஞ்சா அவங்களுக்கு உதவியாத்தானே இருக்கும்?"

"முழுசாக்கேளுடா அபிஷ்டு! அதுலே வெண்டைக்காய், கத்திரிக்காயெல்லாம் ஈஸியா நறுக்கிடலாம். அதை அவ பண்ணிட்டு, முட்டக்கோசு, சேனைக்கிழங்கு மாதிரி கஷ்டமான காய்கறியெல்லாம் என்னைக் கொடுத்து நறுக்கச் சொல்லுறாடா!"

"என்ன சார் அழுகுண்ணியடிக்கிறீங்க? இதெல்லாம் ஒரு மேட்டரா?"

"அப்படிச்சொல்லாதே சதுரம் ! சேனைக்கிழங்கை வெட்டிப்பாரு தெரியும். அன்னிக்குப்பூரா உடம்பு அரிச்சிண்டே இருக்கும். சொறிஞ்சு சொறிஞ்சு இப்பல்லாம் எல்லாரும் என்னை வெங்கடாச்சொறின்னு தான் கூப்பிடறா தெரியுமோ?"

"கஷ்டம் தான் சார்! சரவண பவனுக்கே போயிடலாமா?"

"ஓ யெஸ்! அப்புறம் சதுரம், நீ எப்பவாச்சும் எங்காத்துக்கு வந்தேன்னா, நான் சொன்னதை மாமி கிட்டே சொல்லிடாதே! அவளுக்கு யாராவது என்னைப் பத்தித் தப்பாச் சொன்னாக் கூட கோபம் வராது; ஆனா, நூடில்ஸ் பத்தித் தப்பாச் சொன்னா துவம்சம் பண்ணிடுவா!"

"அடிப்பாங்களா சார்?"

"சேச்சே! அன்னிக்கு சாயங்காலம் பிரண்டை அல்வாய் பண்ணி சாப்பிட்டே ஆகணுமுன்னு அடம் பிடிப்பா! என் சம்பளத்துலே பாதி மல்லிகா பத்ரிநாத் புஸ்தகத்துக்கும், டாக்டருக்குமே போறதுடா!"

"கவலைப்படாதீங்க சார்! சொல்ல மாட்டேன்!"

"நீ சொல்ல மாட்டேன்னு தெரியும்! இருந்தாலும்.... ஹி ஹி!"

"நான் கூட ஆண்கள் பாதுகாப்பு சங்கத்துக்கு ஒரு மேட்டர் சொல்லணும் சார்! நடிகை சோனா அரசியலுக்கு வர்றாங்களாம். அவங்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாதுன்னு ஒரு தீர்மானம் நிறைவேற்றச் சொல்லணும்."

"நேக்கு சோனாவெல்லாம் தெரியாதப்பா! நான் கடைசியாப் பார்த்தபடம் குலேபகாவலி!"

"என்ன சார்? ரஜினியோட குசேலன் படத்துலே நடிச்சிருக்காங்க! பொறந்தநாளைக்கு அனாதைக்குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டிருக்காங்க! , அப்புறம் யாரோ கையை பிடிச்சு இழுத்தார், தப்பா நடந்துகிட்டார்-ன்னு எல்லாம் பேப்பருலே போட்டோ போட்டு நியூஸ் வந்திச்சே?"

"ஓ! அப்படியா? அப்படீன்னா, எலெக்ஷனிலே நின்னு ஜெயிச்சு சீஃப் மினிஸ்டராயிட வேண்டியதுதான். தப்பில்லை!"

"அப்படிச் சொல்லாதீங்க சார்! அவங்க கொள்கை என்ன தெரியுமா? "ஆண்களை நம்பாதே!" அவங்களுக்கு ஆம்பிளைங்க ஓட்டுப் போடலாமா சார்?"

"நான் போடுவேன். நூடில்ஸை தடை பண்ணினா, நான் கண்டிப்பாப் போடுவேன்!"

பேசிக்கொண்டே சரவணபவனுக்குள் நுழைந்து சாப்பாட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு அமர்ந்தோம்.

"நாராயணா... நாராயணா! ஹோட்டல்லே சாப்பிட்டு எவ்வளவு வருஷமாச்சு தெரியுமோ? இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கப்போறேன் பாரேன்!" வெங்கட் ஆர்வத்தோடு முழுக்கைச் சட்டையை மடக்கிவிட்டுக் கொண்டு உட்கார, ஹோட்டல் சிப்பந்திகள் பரிமாறத்தொடங்க, திடீரென்று வெங்கட்டின் முகம் மாறியது.

"சதுரம், என்னடா இது?"

"என்னாச்சு சார்?"

"இங்கேயும் நூடில்சா? பெருமாளே.....!"

"சாரி சார்... இப்பதான் ஈகரையிலேருந்து ஒரு க்ரூப் வந்து எல்லாத்தையும் காலி பண்ணிட்டு போனாங்க... இப்ப நூடில்ஸ் மட்டும்தான் இருக்கு... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்ற சிப்பந்தியின் மொழிகேட்டு
மயங்கி விழுந்தார் வெங்கட்

நான் என் மொபைலில் 108-க்கு டயல் பண்ணிக் கொண்டிருந்தேன்....

பி. கு. ஈகரை இளவரசியாரின் ஆணைக்கிணங்க இந்த பதிவு


Last edited by dsudhanandan on Thu Oct 27, 2011 12:51 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by ரேவதி Fri Oct 21, 2011 1:17 pm

உங்கள்நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Ouarf இருவரின் அனுபவத்தை படிச்சி சிரிச்சி நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 3dtmdr நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 168300நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Hahaநூடுல்ஸ்... நூடுல்ஸ்... 403484 சிரிச்சி வயிரே வலிக்குது முடியல இருங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Gros-lol நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Gros-lol


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by ரேவதி Fri Oct 21, 2011 1:20 pm

dsudhanandan wrote:என் கல்யாணத்தப்போ ஜானவாசத்துக்கு கோட்டு தர்றேன்னு சொன்னா. நானும் ஜெமினி கணேசன் மாதிரி கோட்டெல்லாம் போட்டுண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுக்கலாம்னு ஆசையா காத்திண்டிருந்தா, நேக்கு ரெயின்-கோட்டை வாங்கிக் கொடுத்துட்டாடா!"

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... 3d-totalmdrநூடுல்ஸ்... நூடுல்ஸ்... 3d-totalmdr


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by பூஜிதா Fri Oct 21, 2011 1:22 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by பாலாஜி Fri Oct 21, 2011 1:27 pm

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
இவன்
நூடுல்ஸல் பாதிப்பு அடைந்தோர் சங்கம்..







http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by ரேவதி Fri Oct 21, 2011 1:29 pm

dsudhanandan wrote:
பி. கு. ஈகரை இளவரசியாரின் ஆணைக்கிணங்க இந்த பதிவு
நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Thank-You-Glitters-22


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by அருண் Fri Oct 21, 2011 1:31 pm

அப்ப நூடுல்ஸ் சிக்கி முக்கி சின்ன பின்னமா ஆயிருக்கும்..! ஜாலி

சூப்பர் சுதா அண்ணா!புட்டு சாப்பிட்டாலும் குசும்பு இன்னும் போக மாட்டேங்குத..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by ஜாஹீதாபானு Fri Oct 21, 2011 2:24 pm

எனக்கு சிரிப்பு வரல சோகம் சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by ரேவதி Fri Oct 21, 2011 2:27 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு சிரிப்பு வரல சோகம் சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by ஜாஹீதாபானு Fri Oct 21, 2011 2:33 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு சிரிப்பு வரல சோகம் சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நூடுல்ஸ்... நூடுல்ஸ்... Empty Re: நூடுல்ஸ்... நூடுல்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum