ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வால் ஸ்ட்ரீட்' போராட்டம் துவங்கி ஒரு மாதம் நிறைவு: நிதியுதவி குவிகிறது : லண்டனில் மூன்றாவது நாளாக

Go down

"வால் ஸ்ட்ரீட்' போராட்டம் துவங்கி ஒரு மாதம் நிறைவு: நிதியுதவி குவிகிறது : லண்டனில் மூன்றாவது நாளாக Empty "வால் ஸ்ட்ரீட்' போராட்டம் துவங்கி ஒரு மாதம் நிறைவு: நிதியுதவி குவிகிறது : லண்டனில் மூன்றாவது நாளாக

Post by இளமாறன் Tue Oct 18, 2011 12:47 am

நியூயார்க்: அமெரிக்காவின் "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு' போராட்டம் துவங்கி நேற்றோடு ஒரு மாதம் நிறைவாகியுள்ளது. போராட்டத்திற்கான நிதியுதவி தற்போது மூன்று லட்சம் டாலராக அதிகரித்துள்ளது. இந்நிலையில், லண்டனில் "லண்டன் ஆக்கிரமிப்பு' போராட்டம் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த செப்டம்பர் 17ம் தேதி மன்ஹாட்டன் பகுதியில், வால் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடந்த, 1,000 பேர் மட்டும் பங்கேற்ற சிறு போராட்டம், இன்று உலகளவில் தீப்பிடித்தது போல பரவி வருகிறது.

மூன்று லட்சம் டாலர்: வால் ஸ்ட்ரீட் போராட்டம் நேற்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கான நிதியுதவி மற்றும் பொருளுதவிகள் குவிந்து கொண்டே வருகின்றன. இதுவரை "ஆக்குபை வால் ஸ்ட்ரீட்' அமைப்பிற்கு மூன்று லட்சம் டாலர் நிதியுதவி வந்துள்ளது. இந்தப் பணம் அனைத்தும், அமெரிக்காவின் மிகப் பழமையான வங்கியான "அமல்கமேட்டட் வங்கியில்' போடப்பட்டுள்ளது. இந்த வங்கி, அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பால் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

பொருளுதவி குவிகிறது: நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் தற்போது நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உணவு, படுக்கைகள், மருந்துப் பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள், உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும், தினசரி பெட்டி பெட்டியாக வந்து குவிகின்றன.
இந்தப் பொருட்கள் அனைத்தையும் வைப்பதற்கு வசதியாக, பூங்கா அருகில் உள்ள ஐக்கிய ஆசிரியர்கள் சங்கம் என்ற அமைப்பு, தங்கள் கட்டடத்தின் கீழ் தளத்தை அளித்துள்ளது. இந்தப் பொருட்கள் அனைத்தும், போராட்டம் நீண்ட நாட்கள் நடப்பதற்கு உதவும் என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ட்டின் லூதர் கிங் இருந்திருந்தால்...: இதற்கிடையில், வாஷிங்டனில் நடந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் பராக் ஒபாமா பேசுகையில், "இன்று மார்ட்டின் லூதர் கிங் இருந்திருப்பாரானால், வால் ஸ்ட்ரீட்டின் செயல்பாடுகளுக்கு குந்தகம் நேராமல், வேலையில்லாதோர் அதன் வரம்பு மீறல் போக்கை எதிர்கொள்ள வேண்டும் என கூறியிருப்பார்' என்று தெரிவித்தார்.

லண்டனில் மூன்றாவது நாளாக... : இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புனித பால் கதீட்ரல் முன்பு நேற்று மூன்றாவது நாளாக "லண்டன் ஆக்கிரமிப்பு' இயக்கத்தினர் தங்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தனர்.
கடந்த 15ம் தேதி இதே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பின், 200க்கும் அதிகமானோர் அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கிவிட்டனர். அவர்களின் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடப்பதாலும், கதீட்ரலின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அவர்கள் இடையூறு செய்யாததாலும், கதீட்ரல் நிர்வாகம் இதை அனுமதித்துள்ளது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"வால் ஸ்ட்ரீட்' போராட்டம் துவங்கி ஒரு மாதம் நிறைவு: நிதியுதவி குவிகிறது : லண்டனில் மூன்றாவது நாளாக Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம்
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» லேடிஸ் ஸ்பெஷல்' துவங்கி 26 ஆண்டு நிறைவு
» பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
» இரண்டாம் நாளாக தொடரும் சிட்னி இளைஞர்களின் நடை பாத போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum