ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கிறார் இயேசு

Go down

எச்சரிக்கிறார் இயேசு Empty எச்சரிக்கிறார் இயேசு

Post by சிவா Mon Dec 22, 2008 3:15 am

மழலைப் பூக்களை வருடி ரசித்த மென்பொருளே இயேசுவின் மனசு. பசிக் கிறக்கத்தில் துவண்டு போன மக்கள் கூட்டத்துக்கு உடனடியாகச் சோறு போடத் துடித்த தாயுள்ளம் அது. கை கால் சுருங்கி காய்ச்சலினால் வறண்டு செத்துக்கொண்டிருக்கும் ஒவ்வோர் உயிரும் அவர் நெஞ்சில் பாசக் கசிவை ஏற்படுத்தியது. இறந்துபோன நண்பர் பற்றிய சேதி வந்ததுமே கல்லறை மேடு வரை ஓடிச் சென்று தேம்பித் தேம்பி அழுதன இயேசுவின் கண்கள்.

இந்த அமைதியான ஆசாமிதான் அக்கினி வார்த்தைப் பிரயோகத்துடன் குரலை உயர்த்தி ஒரு சிறு கூட்டத்தைப் பார்த்து மூச்சுவிடாமல் சாடுகிறார்: ""குருட்டு வழிகாட்டிகளே! வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே! கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கும் "அருள் வாக்கு' வித்தகர்களே! உங்களுக்கெல்லாம் ஐயோ கேடு!''

கருணாமூர்த்தியான இயேசு, கந்தக வார்த்தைகளைக் கோபத்துடன் கொட்டுவதற்கான காரணம் என்ன?

இயேசு வாழ்ந்த முதல் நூற்றாண்டு எபிரேயக் கலாசாரத்தில் ஒரு சிறுபான்மை ஆதிக்கக் கூட்டம், பெரும்பான்மையான உழைக்கும் மக்களைத் தீட்டு என ஒதுக்கி வைத்திருந்தது. வேறோர் இனத்தின் ரத்தக் கலப்பில்லாமல் இருப்பதாக இறுமாந்திருந்தவர்கள் ~ கட்டுக்கடங்காத சொத்து சுகங்களை அனுபவித்தவர்கள் ~ "தோரா' என்னும் வேதத்தை மனப்பாடமாகப் படிப்பதால் உழைப்பாளிகளை ஒதுக்கியவர்கள் ~ போன்றோர் தம்மைத் தாமே ஆளும் வர்க்கமாக உயர்த்திக்கொண்டனர்.

இவர்களே ஊர்கள்தோறும் மூப்பர்களாகவும் நாட்டாண்மைகளாகவும் வலம் வந்து, ஏழைகளின் வயிற்றில் அடித்தவர்கள். பளபளப்பு ஆடைகளுடன், அவைகளில் முன்னிருக்கையையும் முதல் மரியாதையையும் தேடும் இவர்கள், "தோரா' வேதத்தின் பகுதிகளைச் சீட்டுகளில் எழுதித் தம் தலைப்பாகைக் குஞ்சங்களில் முடிந்துகொண்டு தெருவில் திரிந்தவர்கள். வசதி வாய்ப்பில்லா ஏழைகளையும் வாழ்வைப் பறிகொடுத்துக்கொண்டிருக்கிற நோயாளிகளையும் பார்த்து "மானம் கெட்ட பாவிகள்' என்று நா கூசாமல் தீர்ப்பிட்டவர்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எச்சரிக்கிறார் இயேசு Empty Re: எச்சரிக்கிறார் இயேசு

Post by சிவா Mon Dec 22, 2008 3:15 am

இப்படியெல்லாம் அடித்தட்டு மக்களை அவமானத்தின் சின்னங்களாகக் கருதுவதையே தமக்குரிய கெüரவமாகவும் அந்தஸ்தாகவும் நினைத்துக் கொண்டிருந்தார்கள், அந்தச் சிறுபான்மை ஆளும் வர்க்கத்து மேட்டுக்குடியினர்.
எதுதான் அவமானம்? எது அந்தஸ்து? எது கெüரவம்? இம் மாதிரியான அடிப்படைக் கேள்விகளை இயேசுவின் அறச்சினம் எழுப்பியது.

வெளிவேடம் போட்டுப் படம் காட்டுவதும், பிறப்பினால் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் குலப் பெருமையும், செல்வச் செருக்கினால் ஏற்படும் நல்ல பிள்ளை "இமேஜு'ம் இயேசுவின் கணிப்பில் அந்தஸ்துக்கான அளவுகோல் அல்ல. உடல் தளத்திலும் உள்ளத்து அளவிலும் சமூக அரங்கிலும் ஊனமாக்கப்பட்டு, துன்பத்துக்கு இலக்காகும் எளிய மக்களை "முன்னேறவே முடியாத பாவிகள்' என்று கருதுவது இயேசுவின் பார்வையில் அவமானச் சின்னமாகத் தென்பட்டது.

""போதகரே, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?''

~இந்தக் கேள்வியின் பின்னணியில் மேட்டுக்குடியினரின் ஆதிக்கப் பயங்கரவாதம் ஒளிந்திருந்தது.
"ஐயோ கேடு!'

அவலமாக்கப்பட்டோரின் துன்பத்துக்கு அவர்களே காரணம் என்று பழிசுமத்தும் பயங்கரவாதமே இது. அவர்களை நிரந்தரப் பாவிகளாகவும் தீட்டாளர்களாகவும் புறந்தள்ளி, தம்மைத் தாமே தெய்வீகப் பிறவிகளாக முடி சூட்டிக்கொள்ளும் சூழ்ச்சி இதில் அடங்கியிருக்கிறது. இது ஆதிக்க வர்க்கத்தினருக்கு வெற்றி வாகைக் கொள்கையாகவும் (Triumphalism), அடித்தள மக்களுக்குத் தோல்விக் கொள்கையாகவும் (Defeatism) மாறிவிடக் கூடாதே என்ற அறச்சினம் இயேசுவின் மனசாட்சியாக இயங்கியது. எனவேதான் அவர், ""ஐயோ கேடு!'' என்னும் எச்சரிக்கை வார்த்தைகளை ஆக்ரோஷமாக எடுத்தாள்கிறார். இயேசுவின் இந்தத் தலையீடு, பாதிக்கப்பட்ட ஏழை எளியோரின் மனித கெüரவத்தைப் பூஜிப்பதால் ஏற்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எச்சரிக்கிறார் இயேசு Empty Re: எச்சரிக்கிறார் இயேசு

Post by சிவா Mon Dec 22, 2008 3:15 am

வருவோர் போவோரையெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்க்கும் பொறுப்பற்ற போதகராக இயேசு எச்சரிக்கவில்லை. வாழ்வைப் பறிகொடுத்தோருக்கு வாழ்வை மீட்டுத் தர வேண்டிய குடிமைச் சமூகத்தின் ஒரு பொறுப்புள்ள அங்கத்தினராக அவர் தீமையைச் சாடுகின்றார். சமூக அவலங்களின் வேர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு குறிவைத்துச் சுட்டுப் பொசுக்க முற்படுகின்றார்.

"ஆண்டவரே ஆண்டவரே' என்று விடிய விடிய பஜனை பாடுவதாலும் ஆடு, மாடு, தவசு தானியங்களை நெருப்பில் பலியாக்குவதாலும் கடவுளை ஏமாற்ற முடியாது என எச்சரிக்கை விடுக்கிறார்.

பாசத்தையும் பகிர்வையும் அனைவருக்கும் ஜனநாயகப்படுத்த விரும்பும் கடவுளின் இதயத் துடிப்பைச் செயலாக்குவதுதான் செபமும் தவமும் என்று வலியுறுத்துகிறார். ""பலியை அன்று; பாசத்தையே விரும்புகிறேன்'' என்னும் இறைவனின் ஆசை விண்ணுலகிலும் மண்ணுலகிலும் நிறைவேற வேண்டுமென்பதே இயேசுவின் விருப்பம்.

யாரையுமே தீட்டு எனப் புறந்தள்ள விரும்பாத கடவுளின் அரவணைப்பே நற்செய்தி. இதை முழுமையாக நம்புவோர் அனைவரையுமே "நம்மாளுதான்' என அரவணைப்பார். இப்படி அனைவரையும் அரவணைக்காமல் புறந்தள்ளும் மனப்பான்மையுடன் சமூகப் பிளவுகளை ஏற்படுத்துவோர் மனம் திருந்தத்தான் வேண்டும். இப்படி மனம் திருந்தாவிடில் "ஐயோ கேடு!' என்னும் சாபத்துக்கு கடவுளின் சந்நிதானத்தில் ஆளாவார்கள் என்பது இயேசுவின் அறநெறிப் போக்கு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எச்சரிக்கிறார் இயேசு Empty Re: எச்சரிக்கிறார் இயேசு

Post by சிவா Mon Dec 22, 2008 3:16 am

பழிப்பதும் ஒழிப்பதும்:

இளகிய நெஞ்சத்து இயேசுவின் வாயிலிருந்து இடி மின்னலாக இறங்கிவரும் அறச்சினத்தின் கோப வார்த்தைகள் ஆளும் வர்க்கத்தாரை இடித்துரைத்தன. அடித்தட்டு மக்களை "பேறு பெற்றோரே நீங்கள்' என வாழ்த்தின. இந்த அறச்சினம் கோப வார்த்தைகளைக் கொட்டுவதில் மாத்திரம் திருப்தியடையவில்லை. ஆக்கபூர்வமான வழிமுறைகளையும் எடுத்துச் சொன்னது. ""மேட்டுக்குடி ஆளும் வர்க்கம் என்னென்ன செய்யும்படிக் கூறுகிறதோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்'' என்கிறார். ஆளும் வர்க்கம் அடாவடியில் ஈடுபடும்போது அடித்தட்டு மக்களும் அடாவடியில் ஈடுபடுவது நியாயமே என்று இயேசு விதண்டாவாதம் செய்யவில்லை.

ஆளும் வர்க்கத்தாரை "ஐயோ கேடு!' என அர்ச்சனை செய்யும்போது, அவர்கள் மனம் மாறி அனைவரையும் அரவணைக்கும் ஏக்கம் இயேசுவிடம் இருந்தது. அடித்தட்டு மக்களைப் ""பேறு பெற்றோர்'' என வாழ்த்தும் போதும், அவர்கள் மனம் மாறி எழுச்சி கொண்டு தலைநிமிர மாட்டார்களா என்னும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது.

ஏழை - செல்வந்தர், தீட்டாளர் - தூய்மையாளர், பாவிகள் - தெய்வீகப் பிறவிகள் எனக் கூறு போடப்பட்ட மனித இனத்தைத் தன் கருணையாலும் காட்டமான வார்த்தையாலும் ஒரே மனித சாதியாக மாற்றத்தான் விழைந்தார்.
""பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதையே பிறருக்கு நீ செய்ய முடியுமா?''

~இந்த அறநெறிச் சவால் வழியாக அனைவரையும் ஒருங்கிணைக்கும் அணுகுமுறை இயேசுவின் சிறப்புப் பாணியாக அமைகிறது. இதை மறந்து பிறரைப் பழிப்பதையும் ஒழிப்பதையுமே தம் முழுநேரத் தொழிலாக்கிக் கொண்டிருப்போரை இயேசுவின் கருணை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? "ஐயோ கேடு!' என்னும் எரிமலைச் சாபத்தின் வழியாக. அவர்களை இடித்துரைக்க இயேசு எப்போதும் தயங்கியதில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எச்சரிக்கிறார் இயேசு Empty Re: எச்சரிக்கிறார் இயேசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum