ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

Top posting users this week
heezulia
சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Poll_c10சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Poll_m10சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Poll_c10 
cordiac
சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Poll_c10சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Poll_m10சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்

4 posters

Go down

சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Empty சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்

Post by மீனு Wed Sep 23, 2009 12:26 pm

சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்

டான்சில் குணமாக
டான்சில் என்னும் உள்நாக்கு வளர்ச்சி பொதுவாகவே சிறுவர்களுக்கு தான் அதிகமாக ஏற்படுவதுண்டு. அதற்கு புளியையும் உப்பையும் சமபங்கு சேர்த்து அரைத்து உள்நாக்கில் தடவி வர சிறிது சிறிதாக கரைந்து போகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு
குழந்தைகளுக்கு ஏற்படும் பலவித நோய்களிலிருந்து நிவாரணம் பெற சிறிது வேப்பங்கொழுந்துடன் கொஞ்சம் மிளகுடன் பூண்டின் ஒரு பல் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்கு சாப்பிட வைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி கொடுத்து வர எந்த வித நோயும் தொல்லை கொடுக்காது. அதுபோன்றே குழந்தைகள் பல்வேறு திண்பண்டங்களை உட்கொள்வதால் வயிற்றில் பூச்சித் தொல்லை, உப்புசம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே பூச்சித் தொல்லையையும் ஒழிக்க மருத்துவரை கலந்து உரிய சிகிச்சை பெறவும்.

ஹிஸ்டிரியா நோய் குணமாக
ஹிஸ்டிரியா எனும் மனபாதிப்பு அடைந்தவர்களுக்கு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது பெருங்காயத்தைச் சேர்த்து கலக்கி தினமும் மூன்று வேளை சாப்பிட நல்ல மாறுதல் காணலாம்.

கரு குழந்தை வளர்ச்சிக்கு
கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அடிக்கடி முருங்கையின் கீரை, பேரிக்காய், ஆப்பிள், மாதுளம் போன்ற பழ வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதோடு, மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு, இரத்த சோகை எனும் நோய் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்ததாகும்.

பருவம் அடையாத பெண்களுக்கு மருந்து
குங்கமப்பூ மிக உயர்ந்த மருத்துவ குணம் வாய்ந்தது. அதிக வயதாகியும் பருவமடையாமல் இருக்கும் பெண்களுக்கு குங்கமப் பூவை உள்ளுக்குள் கொடுத்து வர விரைவில் பருவமடைவார்கள். கருவுற்றிருக்கும் தாய்மார்களும் தினமும் இரவில் காய்ச்சிய சோயா பாலில் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வர சுகப்பிரசவம் ஏற்படும். அதுபோன்றே இரவில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிட செரிமானமும் எளிதாகும். சிறிது குங்குமப்பூவை தாய்ப்பாலில் இழைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி நீங்கும். இவ்வாறு இழைத்து வருவதில் இரண்டு சொட்டுகள் கண்களில் விட்டால் கண்நோய் குணமாகும்.

மாதவிடாய் கோளாறுகள் குணமாக
வெங்காயத்தைப் போல் வெங்காயப்பூவும் மருத்துவ குணம் உடையது. வெங்காயப் பூக்களை சிறிது நேரம் ஊற வைத்து அதைக் குடிநீராக அருந்தினால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

இரத்தப்போக்கு நீங்க
பெண்களுக்கு மாதவிடாயின் போது, அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. இதை கட்டுப்படுத்த வாழைக்காயை அடுப்பில் சுட்டு தோலை எடுத்து எறிந்துவிட்டு உள்காயை நன்றாக அரைத்து தயிரில் நன்கு கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.

காது குத்தல் நீங்க
காது குத்தல் இருந்தால் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிது பெருங்காயத்தைப் பொரித்து பின் அந்த எண்ணெய் மட்டும் லேசான சூட்டில் சில துளிகள் காதில் விட குணம் பெறலாம்.

காமாலை நோய்க்கு மருந்து
காமாலை நோயா? பூவரசு இலைக் கொழுந்துடன் ஐந்து மிளகைச் சேர்த்து கரைத்து ஒரு தேசிக்காய் பழ அளவு மோரில் கலந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் ஏழு அல்லது பத்து நாட்களில் குணமாகும். அந்த நாட்களில் உப்பு கலந்த உணவை அறவே நீக்க வேண்டும். மதுபானமும் அருந்தக்கூடாது.

கண் சதை வளர்ச்சி குணம் பெற
சிலருக்கு கண் சதை வளர்ச்சி ஏற்படுவதுண்டு இதற்கு சிக்கன வைத்தியமாக பேரிச்சம் பழத்தின் உட்புறம் இருக்கும் கொட்டையை எடுத்து அதை பன்னீரிலோ அல்லது தாய்ப்பாலிலோ இழைத்து கண்ணுக்கு மை இடுவதுபோல போட குணம் பெறலாம்.

முடி உதிர்வதை தடுக்க
சில பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்தல் இருக்கும். அவர்கள் நெல்லிக்கனிகளை அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சம் பழ சாற்றையும் கலந்து தலையில் ஊறும்படி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் நின்றுவிடும். தலையில் முடி உதிர்ந்து சொட்டையாதலுக்கு வெள்ளைப்பூண்டுப் பற்களைத் தேனில் உரைத்து சொட்டை விழுந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தேய்த்து வரவேண்டும். அவ்வாறு தொடர்ந்து இருபது நாட்கள் செய்ய முடி வளரும். தலை முடி வளர எலுமிச்சம் பழ விதைகளுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நீர் விட்டு அரைத்து முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வந்தால் சிறிது நாளில் முடி வளரும். உடல் சூட்டினால் சிலருக்கு முடி கொட்டிவிடுவதுண்டு. அதற்கு வெந்தயத்தை நீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். உஷ்ணம் கட்டுப்படுவதோடு, முடி கொட்டுவதும நிற்கும்.

இரத்த விருத்திக்கு
வாழைப்பூ பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களை குணமாக்கவல்லது. இரத்த விருத்திக்கும் வாழைப்பூ மிகவும் சிறந்த உணவுப் பொருளாகும். அதனால் வாழைப்பூவை அடிக்கடி சமைத்து உண்பது நல்லது.

நரம்பு தளர்ச்சிக்கு
நரம்புத் தளர்ச்சிக்கு வெங்காயம் சிறந்த நிவாரணி ஆகும். வெங்காயத்தை நன்றாக வதக்கி காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமடையும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த
ஆரஞ்சுப் பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்குண்டு. பித்தத்தைக் தணித்து ஜீரண சக்திகளை அதிகரிக்கும். இருமல், நீரிழிவு மற்றும் ஈரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது. ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் ஆகியவற்றை முதியோர் முதல் இளம் சிறார்கள் வரை அனைவரும் பருகலாம். சர்க்கரைக்குப் பதிலாக குளுகோஸ் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
இதய பலவீனத்திற்கு

இதய பலவீனம், இதயக் கோளாறு உள்ளவர்கள் சிறிய இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் தெளிய வைக்க வேண்டும். பின் தெளிந்த நீரை வடிகட்டி அத்துடன் ஒரு ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் தேசிக்காய்ச் சாறு கலந்து தினந்தோறும் காலையில் சாப்பிடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும். இதயக் கோளாறு மீண்டும் வராது.

கண் ஒளியை அதிகரிக்க
பப்பாளி பல நோய்களை குணமாக்கவல்ல பழங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது சிறந்த கிருமிநாசினியும் கூட. சீரண சக்தியை அதிகரிக்கும். கண் பார்வையை அதிகரிப்பதோடு கண்களுக்கு வலு தந்து பார்வை சம்பந்தமான கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

இடுப்புவலி நீங்க
இடுப்பு வலி, கை கால் குடைச்சல் போன்ற தொல்லைகளுக்கு சிக்கன வைத்தியமாக கொஞ்சம் கோதுமை மாவை பொன் வறுவலாக வறுத்தெடுத்து,அதில் சிறிது தேனைக் கலந்து பிசைந்து சாப்பிட்டு வர வலிகள் நீங்குவதோடு சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த
நீரிழிவு நோயாளிகள் விதை நீக்கிய பேரிச்சம் பழத்தை அரைத்து பாகு செய்து சாப்பிட இந்நோயை கட்டுப்படுத்தலாம்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Empty சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்

Post by kiyamath Wed Sep 23, 2009 12:48 pm

Nala thagavalgal mikavum arumaiyaka irunthathu
avatar
kiyamath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 17/08/2009

Back to top Go down

சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Empty Re: சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்

Post by சதீஷ்குமார் Wed Sep 23, 2009 2:02 pm

நண்பரே கீழே உள்ள ஐ பயன்படுத்தே நல்ல தமிழ் இல் பதியலாமே




http://www.google.com/transliterate/indic/TAMIL
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Empty Re: சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்

Post by தாமு Wed Sep 23, 2009 2:48 pm

சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் 678642 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் Empty Re: சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum