ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
பசியா... ருசியா... Poll_c10பசியா... ருசியா... Poll_m10பசியா... ருசியா... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியா... ருசியா...

Go down

பசியா... ருசியா... Empty பசியா... ருசியா...

Post by முஹைதீன் Wed Oct 05, 2011 6:37 pm

பசியா... ருசியா...


நீங்கள் பசிக்கு சாப்பிடும் ரகமா... ருசிக்கு சாப்பிடும் ரகமா... நீங்கள்
சாப்பிடுவதற்காக வாழுகிறீர்களா... வாழுவதற்காக சாப்பிடுகிறீர்களா...
எல்லாவற்றிலும் இரண்டு ரகம் உள்ளது போல - இதிலும் இரண்டு ரகம் உள்ளது.இதையும் கூட ஒரு பட்டிமன்ற விவாதப் பொருளாக ஆக்கலாம்.
பசிக்காக சாப்பிடுபவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் மிக குறைந்த அளவே, சாப்பாட்டிற்காக ஒதுக்குகிறார்கள். ருசிக்காக சாப்பிடுபவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில், பெருமளவை சாப்பாட்டிற்கென்றே ஒதுக்குகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், கையில் காசில்லை என்றாலும், கடன் வாங்கியாவது சாப்பிட்டு விடுவார்கள். ருசியாக சாப்பிடுபவர்கள் தான் எப்படியெல்லாம் விளிக்கப்படுகிறார்கள். சாப்பாட்டு ராமன், தின்னி பண்டாரம் என்றெல்லாம்... பணமிருந்தும், சரியாக சாப்பிடாதவனை அல்லது அளவாக சாப்பிடுபவனை கஞ்ச பிசினாறி என்றும் சொல்கிறோம்.

ஒரு முறை கவியரசு கண்ணதாசனுக்கு, பல நாள் பட்டினிக்கு பிறகு, ஒரு நாள் சாப்பிட வாய்ப்பு கிடைத்ததாம். ஏழு தோசைக்கு ஆர்டர் கொடுத்தாராம். சர்வர் மேலும், கீழும் பார்த்தாராம்.சாப்பாட்டிற்கும், நம்
குணநலன்களுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளதாகவே கருதுகிறேன். பசி என்கிற உணர்வு, பல நேரங்களில் பல அவலங்களுக்கு காரணமாகிறது. பசியால் துடிப்பவனிடமிருந்து புரட்சி வெடிக்கிறது. வர்க்க வித்தியாசம்
உணரப்படுகிறது. ருசி மனிதனை உணவுக்கு அடிமைப்படுத்துகிறது. பல நேரங்களில் அவனது சிந்தனைகள் , சாப்பிடுவது குறித்தே நினைக்கிறது.

பசிக்கு சாப்பிடுபவன், ஒரு நாளைக்கு மூணே மூணு முறை தான் உணவு பற்றி சிந்திக்கிறான். பசி வருகின்ற மூணு வேளையும், சாப்பிட்டு உணவை மறந்து விடுகிறான். ருசிக்காக சாப்பிடுபவர்கள் எதிலும் ஒரு நேர்த்தியை விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள். கூர்ந்து கவனித்தால் அதை உணர முடியும. அதே சமயம் கோபக் காரர்களாகவும் இருப்பார்கள். சாப்பாடு மட்டும் சரியாக இல்லை என்றால், சாப்பிடுவது ஒட்டலாக இருந்தாலும், பில்லுக்கு பணம் தரும் போது- முதலாளிக்கு பூஜையும் கிடைக்கும்.

சில தினங்களுக்கு முன், ஒரு ஒட்டலில் இந்த காட்சியை காண நேர்ந்தது. மிகப் பெரிய அர்ச்சனை முதலாளிக்கு,"என்னய்யா ஒட்டல் நடத்தறிங்க" என்று. ஹோட்டலுக்கே இந்த கதியென்றால், வீடு என்றால்- சமையல் சரியில்லையென்றால் தட்டு பறக்கும். அவர்களின் மனைவிகள்- தினம், தினம் செத்து செத்து தான் பிழைக்க வேண்டி வரும்.


வறுமையுள்ளவரை பசிக்காக உணவு கிடைத்தால் போதும் என்று நினைக்கிறோம். வசதி வர, வர ருசிக்காக சாப்பிட துவங்குகிறோம். ருசியாக சாப்பிடுபவர்க்கு, ருசியாக சமைக்கத் தெரியாத மனைவியும்,
ருசியை விரும்பாதவர்க்கு, ருசியாய் சமைக்கும் மனைவி கிடைத்தால்,
என்னவென்று சொல்வது.

முன்பு நானொரு இடத்தில் வேலை செய்தேன். அங்கு ஒரு சிறுவனும் வேலை செய்தான். மதியம் எல்லோரும் சாப்பிட வீட்டுக்கு போய்
விடுவோம். அந்த சிறுவன் மட்டும் கையோடு சாப்பாடு கொண்டு வருவான். என்றாவது சாப்பாடு கொண்டு வரவில்லை என்றால், அந்த சிறுவனுக்கு மதிய சாப்பாடு- முதலாளி வீட்டில். எப்போதாவது மதியச் சாப்பாடு கொண்டு வராத பையன், பிறகு அடிக்கடி கொண்டு வராமல் இருந்தான். ஒரு நாள் அவன் அப்பா வந்தார், "பையன் சாப்பாடு கொடுத்தா கொண்டு வர மாட்டேங்கிறான். முதலாளி வீட்டுல சாப்பிடுக்கிறேன். முதலாளி வீட்டுல சாப்பிடுக்கிறேன்னே சொல்றான்" என்றவர்,

அடுத்து சொன்ன விஷயம் மனதை வெகுவாக பாதித்தது. "முதலாளி வீட்டுல சோறு பொடி பொடியா சாப்பிட நல்லா இருக்கு. நம்ம வீட்டுல சோறு பெரிசு,பெரிசா சாப்பிடவே பிடிக்கலங்கறான். நம்ம வசதிக்கு தகுந்து தானப்பா நாம திங்க முடியும்" என்றார். அவர் மிக வயதானவர். அவரின் கடைசி காலத்தில் பிறந்தவன். பேரன் போல் இருப்பான். பசி என்று சொல்கிற பிள்ளைக்கு, சோறு போட முடியாதது மிக பெரும் கொடுமை.

ஒரு பையன் எப்போது பார்த்தாலும்- பசி, பசி என்பானாம். "இவனுக்கு தீனி போட நம்மால் முடியாது" என்று சலித்து கொள்வாராம் அப்பா. அதற்கு அம்மா சொல்வாளாம்,"இவன் மகனா இருக்கிற வரை சாப்பிடுவான். அப்பாவாயிட்டா சாப்பிடுவானா"... எவ்வளவு அழகான வார்த்தைகள். ஆம் அந்த குழந்தை, நாளை வளர்ந்து அப்பாவாகிவிட்டால் விரும்பியதை சாப்பிட முடியுமா, தன் குழந்தைகளுக்கு வேண்டுமே என்று தன்
வயிற்றை காயப் போடுமே. குழந்தையாய் இருக்கிறவரை தான் நினைத்ததை சாப்பிட முடியும். அளவாக சம்பாதிப்பவர்கள் வீட்டில் எல்லாமே அளவு தான்.

குழந்தை பாடல் ஒன்று உண்டே. "தோசையம்மா தோசை. அம்மா சுட்ட தோசை, அப்பாவுக்கு நாலு.. அம்மாவுக்கு மூணு.. அண்ணாவுக்கு ரெண்டு.. பாப்பாவுக்கு ஒண்ணு..தின்ன தின்ன ஆசை. திருப்பி கேட்டா பூசை." பாடல் வரிகளில் வருவது போல் அளவாக தான் சாப்பிட முடியும். குடும்பம் என்றான பின் பெரியவர்கள், பல தியாகங்கள் செய்ய வேண்டி வரும். குழந்தைகளுக்காக தங்கள் உணவை தியாகம் செய்ய வேண்டி வரும்.

ஒரு சாண் வயிற்றுக்காக தான் எல்லாமே. மனிதனால் வலியை தாங்கி கொள்ளமுடியும்- பல்லை கடித்து கொண்டாவது. அவமானத்தை கூட தாங்கி கொள்பவர்கள் இருக்கிறார்கள். பசியை... தாங்கி கொள்ளவே முடியாது.

மனிதர்கள் பிச்சை எடுக்க துவங்கியது- எதனால்? பசியினால். வலிக்கக் கூடிய உண்மை அது.

பசியின் கொடுமையை தாங்க மாட்டாது, யாரோ ஒரு புண்ணியவான்
மனசில் உதித்தது தான் அன்னதானம் போன்ற நற்பணி... மெச்சக் கூடிய செயல் அது.



ஒரு நண்பர் ஒயாமல் புலம்புவார், "ஒரு கிலோ அரிசி வாங்குனா ரெண்டு நாளைக்கு கூட வர மாட்டேங்குது. காசெல்லாம் செலவாகுது".என்று. நான் கேட்டேன்"உங்க ஒய்ப் நல்லா சமைப்பாங்களா" என்று. "ம் நல்லா சமைக்கும்" என்றார். "இனிமே நல்லா சமைக்க கூடாதுன்னு சொல்லுங்க. நல்லா ருசியா இருந்தா அதிகமா உள்ள இறங்கும். சுமாரா சமைச்சா நிறைய சாப்பிடமுடியாது. அரிசியும் செலவாகுது" என்றேன். சிரித்தார்.

காசு செலவாகுதே என்று வயிற்றை காய போடுபவர்களும் இருக்கிறார்கள்... எவ்வளவு செலவானா என்ன. நல்லா சாப்பிடுவோம்.
சம்பாதிக்கிறதே சாப்பிடத்தானே என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். எது சரியானது என்று பார்த்தால், "உணவே மருந்து. மருந்தே உணவு" என்கிற மனநிலையில் இருப்பவர்களே சரியான நபர்கள்.

சில உணவு பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனக்கும் ஒவ்வாமை உண்டு... என்னால் அரிசி சாப்பாட்டை தவிர வேறு எதையும் உண்ணமுடியாது... நினைத்து கூட பார்க்க முடியாது. கோதுமை, மைதா, ரவை மூன்றுமே என் உடம்புக்கு எமன். யாராலும் நம்ப முடியாது. பூரி, சப்பாத்தி, புரோட்டா, உப்புமா, கேசரி, அல்வா கேக் மற்றும் சுவீட் வகைகள்,என்று நாக்கில் எச்சில் ஊற வைக்கும் எதையுமே என்னால் உட்கொள்ள முடியாது.

இந்த வகையில் உள்ள எதை சாப்பிட்டாலும், சாப்பிட்ட முக்கால் மணி நேரத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் கொசு கடித்தால் வரும் சிறு தடிப்புகள் போல் அரும்பும், கொஞ்ச நேரத்தில் அந்த அரும்புகள் பெரிய வீக்கங்கள் போல் உருமாறி, தலை முதல் பாதம் வரை ஒரு இடம் பாக்கி இல்லாமல் ஆக்ரமிக்கும், தோல் இறுகி விடும். உடம்பெங்கும் பயங்கரமாய் அரிக்கும். மூச்சு விடுவதும் சிரமமாகும். நான் எனது மொத்த ஆடைகளையும் களைந்து விட்டு சொறிந்து கொண்டே அரை மயக்கத்தில் கிடப்பேன்.

ஒரு மணி நேரத்தில் அரிப்பு குறைய துவங்கும். பிறகு மெல்ல மெல்ல வீக்கங்கள் மறைய ஆரம்பிக்கும். அந்த ஒரு மணி நேரம் மரண வேதனை தான். அந்த நேரம் எனது முகம் அருவருக்க தக்க அளவு இருக்கும். என் எதிரிக்கு கூட இந்த வேதனை வந்து விடக்கூடாது என்று நினைப்பேன். மனிதன் உயிர் வாழத் தான் சாப்பிடுகிறோம். மனிதனின் உயிரை குடிக்கும் அளவுக்கு சாப்பாடு ஒவ்வாமையை தருகிறது என்றால்... நிறைய தடவை மருத்துவரை பார்த்தும் தீர்க்க முடியாத வியாதியாகவே இருக்க, வாயைக்கட்ட பழகி கொண்டேன். மருத்துவ செலவும் நிறைய ஆகிறது. அரிசி வகைகளை தவிர வேறு எதையும் தொடுவதில்லை. சாப்பிடுவானேன். அவதிப்படுவானேன்.

"எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது" என்று மருத்துவர் சொன்னால் தான் எடுத்து கொள்கிறோம். இன்றைய உணவு வகைகளே, பல சிக்கல்களுக்கு காரணம் என்று படிக்கிறோம். டிபன் பாக்ஸில் உணவு எடுத்து கொண்டு போகும் பழக்கத்தை தவிர்க்கிறோம். டிபன் பாக்ஸை சுமக்க கூச்சப்பட்டு, ஒவ்வாத பொருட்களை ருசிக்கிறோம். கூடிய
மட்டும் வீட்டு உணவுக்கு முன்னுரிமை தருவோம்.

கூடிய மட்டும் வீட்டு உணவுக்கு முன்னுரிமை தருவோம். எல்லா விஷயத்திலும் "அளவு " என்கிற வார்த்தையை பயன் படுக்கிறோம். முக்கியமாய் பயன் படுத்த வேண்டியது சாப்பாட்டு மேஜையில். அளவாய் சாப்பிட்டு நலமாய் வாழுவோம்.

உலகின் முதல் திருடனும், உலகின் முதல் பிச்சைக்காரனும் பசியில் உண்டானவர்களாகவே இருப்பார்கள்.

http://tamiluthayam.blogspot.com/2010/02/blog-post_08.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum