ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

+4
ஆளுங்க
நட்புடன்
கே. பாலா
ந.கார்த்தி
8 posters

Go down

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by ந.கார்த்தி Sat Oct 01, 2011 8:57 pm

காக்கைகள் பற்றிய ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் நிறையவே உண்டு. சனிபகவானின் வாகனமாக (!?) துதிக்கப்படும் இப்பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம் வைக்கிறார்கள். எனவே இந்துக்கள் எவரும் இப்பறவையைக் கொல்வதில்லை; பயமும் கூட! எங்கே, சனி பகவான் சப்போர்ட்டுக்கு வந்துவிடுவாரோ என்று!! ஆனால் அமெரிக்காவிலும், கனடாவிலும் 'குரோ ஹன்டிங்' என்பது ஒரு 'பாபுலர் ஸ்போர்ட்'. காக்கைகளுக்குக் பிடிக்காத டம்மி ஆந்தையை செட் பண்ணி, அவைகள் ஈர்த்து ஜாலியாக சுட்டுத் தள்ளுகிறார்கள்.

கோர்விடே என்னும் குடும்பத்தைச் சார்ந்த காக்கைகளில், மூன்று இந்திய இனங்கள் இங்கு பிரபலம்! அதில் முழுக் கருப்பில் இருக்கும் பெருங்காக்கை, மலைப்பிரதேசங்களோடு சரி. இவைகளுக்கு ஆயுசு கெட்டி 70 வருட ரெக்கார்டு கூட இருக்கிறது. அண்டங்காக்கைகள் கிராமபுறத்திலும் அதை ஒட்டிய வனப்பிரதேசங்களிலும் பிரசித்தம்! இங்கு பிற விலங்குகளால் கொல்லப்பட்டு கிடக்கும் பிரேதத்தின் இருப்பிடத்தை இலை பறக்கும் திசையை வைத்துக் கண்டறிகிறார்கள்! நாம் எங்கும் எப்போதும் பார்க்கும் வீட்டுக் காக்கைகளுக்கு கழுத்து மட்டும் கிரே நிறம்!

மேலை நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காக்கை இனங்கள் இருக்கின்றனவாம். வடஅமெரிக்க வகை, மீன் காக்கை, புளோரிடா வகை, இங்கிலீஷ் பிளாக் என்று பற்பல
வெரைட்டிகள்! இதில் ஹூடட் காக்கை, சத்தியமாக வெள்ளை நிறத்தில் தான் இருக்கிறது!

ஈகோ இல்லாமல் ஒற்றுமையாய் வாழ்வதில் இரையைப் பகிர்ந்து உண்பதிலும் காக்கைகளுக்கு நற்பெயருண்டு. எங்கேனும் சிதறிக் கிடக்கும் இரையைப் பார்த்துவிட்டால், தன் சகாக்களை அழைத்த பிறகே உட்கொள்ளும். மனிதர்களை, எவ்வளவு ஆசையாக சனிகிழைமையில் உணவு வைத்தாலும், கூட - நம்புவதில்லை. மனிதன் தாக்கி விடுவானோ என்ற அவநம்பிக்கையோடு, கள்ளப்பார்வையுடன், இரை பொறுக்கும்.

காக்கைகளின் டைனிங் ஐயிட்டங்கள் இன்னதென்றில்லை; எச்சில் சாதத்திலிருந்து மனிதன் கழித்தொதுக்கும் அனைத்து கிச்சன் வேஸ்டேஜ் வரை எதையும் உட்கொள்ளும். தவிர எலி, பல்லி, ஒணான், தவளை, வெட்டுக்கிளி போன்ற சிறுபிராணிகள் எல்லாவற்றையும் நாள் கிழமை பார்க்காமல் வெளுத்துக்கட்டும். பிற இனத்து முட்டைகளை திருடி சாப்பிடுவதில் கில்லாடிகள்! இறந்து கிடக்கும் பிணங்களைக் கூட இவை விட்டுவைப்பதில்லை. ஸ்கேவெஞ்ஜர்!

ஏதேனுமொரு மின் கம்பத்திலோ அல்லது முற்றத்திலோ காக்கைகள், தன் ‘லாலிபாப்புடன்’ சினேகமாய் அமர்ந்திருக்கும்போது கூட, இவைகளின் கண்கள் மட்டும் கீழே உற்று நோக்கிக் கொண்டிருக்கும். பார்வை படா ஷார்ப். சின்னஞ்சிறு ஜீவன்களின்
இயக்கத்தைக்கூட எளிதில் கிரகித்து டூமில் கேட்ச் பிடித்து விடும்!

இவை தம் இருப்பிடத்திலிருந்து அதிகாலையில் திரவியப் பயணம் மேற்கொள்ளும்போது, கோடு போட்டாற்போல நேர்கோட்டில்தான் பயணிக்கும்! மாலையில் ரிட்டர்ன் ஜர்னியும் இப்படியே. இடையில் இடவலம் திரும்புதல் கிடையாது. இதனால் தான் ஆகாய தூரத்தை அளப்பதற்கு அளவு கோலாக ‘க்ரோ ஃபிளைஸை’ வைத்திருக்கிறார்கள்.

பொதுவாக காக்கைகள், பகற்பொழுதில் இரைதேடும் யாத்திரையை, தம் இணையுடனோ அல்லது மற்றும் சில உறவுக் காக்கைகளுடனோ, ஒரு பிக்னிக் மாதிரி, கழிக்கின்றன. இப்படி இவை எத்தனை தூரம் வந்துவிட்டாலும், இரவுப் பொழுதைக் கழிக்க, தம் இருப்பிடத்திற்கே மீண்டு விடுகின்றன. இந்த இருப்பிடம் என்பது பெரும்பாலும் ஒரு மரங்கள் அடர்ந்த பகுதியாகவே இருக்கும். இங்கேவந்து சேர்ந்தவுடன் பெரும் ஆரவாரத்துடன் ஒன்றுக்கொன்று தம்மை அறிவித்துக் கொண்டு ஓய்வெடுக்கத் துவங்கும்.

காக்கைகளின் காதல்களில் நிறைய சுவாராஸ்யங்கள் உண்டு! டீன் ஏஜ் காக்கைகள், கல்லூரி திறக்கும் ஜூன், ஜூலை மாதங்களில்தான் ஜோடி சேர்கின்றன. கொட்டை போட்ட பழஞ்ஜோடிகளும், தம் காதலை இப்பருவத்தில்தான் புதுப்பித்துக் கொள்கின்றன.

இப்படி இவை ஒரு முறை ஜோடி சேர்ந்துவிட்டால், ஆயுளுக்கு அதே ஜோடிதான்! காதல் சீசனில் ஆண் காக்கை தன் மனைவியிடம், மேலும் புதிய காதலைத் துவங்கும். இத்தருணத்தில் ஆண் காக்கைக்கு கிடைக்கின்ற சுவையான இரையை விழுங்காமல் கொண்டுவந்து, மனைவிக்கு முத்தமிட்டவாறே ஊட்டி விடும். சட்சட்டென்று சிறகு கோதலும், சிறு துழாவலுமாய் மனைவியைச் சிலிர்ப்பூட்டும். கணவன் காதலை புரிந்து கொண்ட மனைவி, தன் முரட்டுக் குரலை வெவ்வேறு பிட்சிலும், வெவ்வேறு ரிதத்திலும் கரைந்து காட்ட கணவன் காக்கை புளகாங்கித்துப் போகும்.

அபரிமித சந்தோசத்தில் காக்கை அலை அலையாய் ரெக்கை வீசி சட்டென்று மேலே பறக்கும். திடீர் திசைமாற்றி அம்புபோல் கீழே பாயும். பின் ஸ்லோமோஷனில் மனைவி
அமர்ந்திருக்கும் கிளையை அடையும். இந்த ஏரோபாட் வித்தைகளை கண்ணுற்று திகைத்துப் போயிருக்கும் மனைவியை, இரவுப் போர்வைக்குள், இறகின் நிறமும், கதகதப்பும் காட்டிக்கொடுக்காமல் ஒத்துழைக்க ஆண் காக்கை யாருக்கும் தெரியாமல் அந்தரங்க இல்லற வாழ்வில் ஈடுபடும்.

அடுத்து நிலமட்டத்திலிருந்து 20-30 அடி உயரத்தில் டிரைபாட் ஸ்டாண்ட் மாதிரி இருக்கும் கிளைப் பிரிவுகளில் சிறு சிறு குச்சி, நார், பஞ்சு போன்றவற்றைக் கொண்டு ஒரு அவசரக்கூட்டை அமைக்கும். இக் கூட்டின் குழிவில் 3-6 முட்டைகளையிட்டு
பெட்டை அடைகாக்க, ஆண் இரை கொணர்ந்து உதவும்! முட்டைகள், நீல அல்லது
பச்சைப் பின்னணியில் மண்ணிறப் புள்ளிகளைக் கொண்டவைகள்! முட்டையிலிருந்து
வெளிவந்து ஆறு வாரகாலத்துள், குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறக்கத்
தயாராகிவிடுகின்றன.




இந்த இன்டெலிஜண்ட் காக்கைகளை பெட் பேர்டாக, பல மேலை நாட்டினர் வளர்க்கிறார்கள். இக்காக்கைகள் தம் முரட்டுக் குரலை மறந்து விட்டு, மனிதர்களைப் போல மென்மையாக மிமிக்ரி கூட செய்கிறதாம்!

– டாக்டர். ஆர். கோவிந்தராஜ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by கே. பாலா Sat Oct 01, 2011 9:21 pm

பல புதிய தகவல்களை தந்தது கட்டுரை ! காக்கைதானே என்ற அலட்சியம் வேண்டாம் செய்திகளை தெரிந்து கொள்வோம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by நட்புடன் Sat Oct 01, 2011 9:32 pm

கை கைய பிடிப்பேன், கால் கால பிடிப்பேன், கா கா காக்கா பிடிப்பேன்
எனும் அவப் பெயரை காகத்திற்கு தந்த நமக்கு இது விழிப்புணர்வுக் கட்டுரை...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by ஆளுங்க Sat Oct 01, 2011 9:45 pm

"காக்கை சிறகினிலே நந்தலாலா" என்று பாடினான் பாரதி..
அப்படிப்பட்ட காகத்தை இன்று நகரங்களில் பார்ப்பது அரிதாகி வருகிறது..

காகத்தைப் பற்றி ஒரு கட்டுரை கொடுத்து அதன் இருப்பின்மையை உணர்த்தியமைக்கு நன்றி!


காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by சிவா Wed Feb 29, 2012 3:42 pm

காக்கை குறித்த தகவல்கள் அனைத்தும் புதுமை.


காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by உதயசுதா Wed Feb 29, 2012 4:34 pm

அட காக்காவ பத்தி தெரிஞ்சுக்க இத்தனை விஷயம் இருக்கா
நன்றி கார்த்தி


காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Uகாக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Dகாக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Aகாக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Yகாக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Aகாக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Sகாக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Uகாக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Dகாக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Hகாக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by இரா.பகவதி Wed Feb 29, 2012 6:19 pm

கார்த்தி காக்கவுக்கும் உனக்கும் என்ன தொடர்பு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by முஹைதீன் Wed Feb 29, 2012 6:33 pm

காகத்தின் புது தகவல்களுக்கு நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum