ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:54 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது தீபாவளி கொண்டாட்டம்

+4
Manik
கார்த்திக்
அதி
balakarthik
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by balakarthik Sat Oct 01, 2011 8:43 pm

பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். தமிழ்நாட்டின் தலைவிதிக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? பிழைக்க வந்த இடத்தில் என்ன கொண்டாட்டம் இருக்கப் போகிறது? கால ஓட்டத்தில் காணாமல் போகும் பட்டியலில் இந்த தீபாவளியும் சேர்ந்துக் கொள்ளும் நாள் இதோ…. பட்டாசு என்ற ஒரு வஸ்து மட்டுமே இன்னமும் தீபாவளியை உயிரோடு வைத்திருக்கிறது. இல்லையேல் இந்திய தொலைக்காட்சிகளிலே….. போய் விடும் தீபாவளி. இத்தனை வருடம் கழித்தும் தீபாவளி என்றதும் எனக்கு எங்கள் தெரு, பக்கத்து வீடு காரர்களின் திட்டு இவைதான் நினைவுக்கு வருகிறது. இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் தீபாவளியை விட அந்த தீபாவளியை நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியாயிருக்கிறது.

எல்லாத் தெருவிலும் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். ரஜினி கமல் என்றோ, அந்த முக்கு இந்த முக்கு என்றோ, பெரிய பசங்க சின்ன பசங்க என்றோ… சரியாக இரண்டு கோஷ்டிகள்தான் இருக்கும். தீபாவளிக்கு பல நாட்கள் முன்பே ஊசிவெடியும், நாட்டு வெடியும் நாச வேலை செய்து கொண்டிருக்கும். தனியாக வரும் அந்த டீம்காரனின் மீது மாடியிலிருந்து வெடியை கொளுத்தி போடுவது, பதிலுக்கு நாம் அந்த பக்கம் போனா மாட்டுசாணத்தின் அடியில் வெடியை வைத்து அவர்கள் நம்மை வடிவேலாக்குவது... தீபாவளியன்று யார் வீட்டுக்கு முன் நிறைய பேப்பர் என்பது வரை நீடிக்கும் அந்தப் போர்… போரடிக்காத போர். இதற்காகவே லட்சுமி வெடியும், யானை வெடியும் நிறைய இருக்கும். பேப்பர் அதிகம் சுற்றப்பட்டிருக்கும் காரணத்தால்.

அப்பா வாங்கி வரும் 100வாலாவை ஒவ்வொன்றாக பிரித்துப் போட, அதில் பாதிக்கு மேல் திரி பிடுங்கி வர, மீதியில் பாதி புஸ்ஸாகிவிட, மிச்சமிருக்கும் 20 வெடிகளை ஒரு மணி நேரமாக வெடிப்பதுண்டு. இப்போதெல்லாம் ஒத்தை வெடியை நாலு வயது சிறுவன் கூட ஒரே நேரத்தில் அஞ்சு வெடியின் திரியை சேர்த்துதான் வெடிக்கிறான். ஒற்றுமையின் பலம் வெடிப்பதில் மட்டுமே தெரிகிறது அவனுக்கு.

தெருவில் எந்த வீட்டு வராந்தா பெரியதாக இருக்கிறது அங்கே கூடும் எங்கள் பட்டாசு மேசை மாநாடு. அனைவரது பட்டாசுகளையும் ஒன்றாக்கி வெடிக்க தொடங்கிய உடனே.. அதுவரை அமைதியாக இருக்கும் கிழவி.. ”டேய் அந்தப் பக்கம் போய் வெடிங்கடா” என்று வெடிச்சத்தத்தை விட அதிகமாக கத்தும். யார் கேட்பது? எவனாவது கையால் வெடிக்கிறேன் என்று கொளுத்திப் போட, அது சரியாய் கிழவியின் அருகில்தான் விழும்.அது ஊசி வெடிதான் என்றாலும் பாம் விழுந்தது போல் அலறும் கிழவி. கைகளில் சிக்கும் பட்டாசை எடுத்துக் கொண்டு அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பமாகும். இருக்கும் எல்லா பட்டாசும் டுமீல் ஆனவுடன் தொடங்கும் அடுத்த புராஜெக்ட்.புஸ்ஸாகிப் போன வெடிகளை சேகரித்து, மருந்தை மட்டும் பெரிய பேப்பரில் கொட்டி, ஒரு திரியை வைத்து கொளுத்தினால் ஜகஜ்ஜோதி.

இன்னும் கொஞ்சம் பெரிய பசங்க வேறு வேலையில் பிசியாக இருப்பார்கள். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு ஒரு குண்டு பல்பு வெளிச்சத்தில் நடந்துக் கொண்டிருக்கும் பேனர் தயாரிப்பு. ரஜினியின் படம் ஒரு வழியாக அடையாளம் காணும் அளவுக்கு வந்ததும், கீழே பெயர்கள் எழுதும் படலம் தொடங்கும். ரஜினியின் படத்திகு வெகு அருகில் இருக்க வேண்டும் என்பதே அனைவரது ஏக்கமும். “இந்த திரைப்படத்தை காண வந்த கண்களுக்கு நன்றி- KILLER BOYS” என்று முடித்து, கண்களை வரைவதற்குள் விடிந்து விடும். அந்த முக்கில் கையில் லட்டுடன் அபிராமியை தேடும் கமலை வரைய மனமில்லாமல் சோர்ந்து போயிருப்பார்கள். அதிலே பாதி வெற்றி பெற்றுவிட்டு, காலை ஆறு மணிக்கு ஆட்டம் பாம் அலறும் இந்த முக்கில்.

இன்னும் புதிய டிரெஸ், எதிர்த்த வீட்டுக்கு தீபாவளிக்காக வந்திருந்த சிட்டு, நாலு வீட்டுக்காரர்களும் சேர்ந்து செய்யும் முறுக்கு, ஜாமுன், பாதுஷா என பல மேட்டர் இருக்கு அந்த தீபாவளியைப் பற்றி அசை போட. ம்ம். இந்த தீபாவளிக்கு காலையில் அலுவலகமும் மாலையில் இந்திய தொலைகாட்சியும் மட்டும்தான் இருக்கு. மத்ததெல்லாம் டமால்………….

மொத்தத்தில் இந்த தீபாவளி எனக்கு வெறும் புஸ்ஸாகி போனது அழுகை அழுகை


ஈகரை தமிழ் களஞ்சியம் எனது தீபாவளி கொண்டாட்டம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by அதி Sat Oct 01, 2011 8:51 pm

இப்போ எல்லாருக்குமே அப்படித்தான? பலகாரம் செய்யவேஒரு வாரம் கொண்டாட்டம் நடக்கும். அது ஒரு அழகிய கனாக்காலம் அழுகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by கார்த்திக் Sat Oct 01, 2011 9:10 pm

சரி விடு நண்பா இந்த தீபாவளி புஸ்ஸாகி போன என்ன......
புத்தாண்டு கொண்டாடுவோம் .
பொங்கல் கொண்டாடுவோம் .....
சூப்பருங்க


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by Manik Sat Oct 01, 2011 9:22 pm

அடடா இவ்ளோதானா நண்பா எனக்கும் இந்த தீபாவளி இப்படித்தான் இருக்கு நான் இங்க இருந்தே உங்களோட நானும் எஞ்சாய் பன்றேன் இந்த தீபாவளிய



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by ந.கார்த்தி Sat Oct 01, 2011 9:51 pm

Manik wrote:அடடா இவ்ளோதானா நண்பா எனக்கும் இந்த தீபாவளி இப்படித்தான் இருக்கு நான் இங்க இருந்தே உங்களோட நானும் எஞ்சாய் பன்றேன் இந்த தீபாவளிய
ஆமோதித்தல் ஆமோதித்தல்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எனது தீபாவளி கொண்டாட்டம்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by விஸ்வாஜீ Sat Oct 01, 2011 10:08 pm

வேறு நாட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் உள்ள ஏக்கத்தை
உங்கள் எழுத்தில் பார்க்கிறேன். கூடவே அருமையான மெசேஜ்.
ஒற்றுமையின் பலம் வெடிப்பதில் மட்டுமே தெரிகிறது அவனுக்கு.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by balakarthik Mon Oct 03, 2011 2:53 pm

அனைவரது கருத்திர்க்கும் நன்றி :வணக்கம்: நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் எனது தீபாவளி கொண்டாட்டம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by Manik Mon Oct 03, 2011 3:49 pm

என்ன நண்பா நன்றி மட்டும் சொன்னா போதுமா கொஞ்சம் நன்னாரி சர்பத்தும் சேத்து சொல்லு ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by balakarthik Mon Oct 03, 2011 3:56 pm

பண்ணாரி பக்கமா போனா நன்னாரி என்ன எல்லாமே கிடைக்கும் நீயே காசு கொடுத்து எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்துடு பாக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் எனது தீபாவளி கொண்டாட்டம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by Manik Mon Oct 03, 2011 4:00 pm

இதுக்கு நான் கேக்காமலே இருக்கலாம் பைத்தியம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எனது தீபாவளி கொண்டாட்டம்  Empty Re: எனது தீபாவளி கொண்டாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum