ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்

4 posters

Go down

ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  Empty ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Post by உமா Sat Oct 01, 2011 12:21 pm

மன்னார்குடி நகர சபை தலைவர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அனிதாரமேஷ் மற்றும் 33 வார்டு உறுப்பினர்கள், 3 மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மன்னார்குடி தேரடியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மன்னார்குடிக்கு வந்து கோவில் முன்பு நிற்கிறேன். நான் தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்றேன். தெய்வத்தை எல்லோரும் எல்லா நேரத்திலும் பார்க்க முடியாது. அந்த தெய்வம் மக்கள் வடிவில் தான் வரும். அதனால் தான் தெய்வத்துடனும், மக்களுடனும் கூட்டணி என்றேன். மக்களிடம் கேட்டேன். மக்கள் ஆசைப்படி தான் கூட்டணி அமைத்தேன். அதே மக்களின் விருப்பப்படி தான் உங்களை பார்க்க வந்து இருக்கிறேன்.

உள்ளாட்சி தேர்தல் என்பது உங்கள் ஆட்சிக்கான தேர்தல். அதாவது மக்களாட்சி தேர்தல். உள்ளாட்சி என்றதும் பயந்துவிடக்கூடாது. சாலை பிரச்சினை, கழிவறை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, பள்ளிக்கூட பிரச்சினை, மருத்துவமனையில் டாக்டர் இல்லாத பிரச்சினை ஆகிய பிரச்சினைகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீர்க்க முடியும். மாணவர்கள் கணினி பயில வேண்டும் என்று மாவட்டம் தோறும் கணினி பயிற்சி மையம் தொடங்கினேன். பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் பிறந்த பெண் குழந்தைகள் பெயரில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்தேன்.

முதியோர் இல்லத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 32 மாவட்டங்களில் உள்ள முதியோர் இல்லத்திற்கு ரூ.32 லட்சம் கொடுத்தேன். இந்த பணம் எல்லாம் என் சொந்த பணமாகும். சொந்த பணத்தில் இவ்வளவு செய்யும் போது ஆட்சிக்கு வந்தால் நல்ல ஆட்சி செய்ய மாட்டேனா? எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன். ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன். அதனால் ஒரு முறை வாக்குகளை மாத்தி கொட்டும் முரசு சின்னத்தில் குத்தி பாருங்கள்.

நான் நிரந்தரமாக கேட்கவில்லை. 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்து பாருங்கள். ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள் என்று தான் கேட்கிறேன். நான் பணம் சம்பாதிப்பதற்காக வரவில்லை. எவ்வளவோ எனக்கு நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். உங்களுக்கு நல்லது செய்வதற்காக வந்து இருக்கிறேன். நான் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன். என்னால் முடியாத போது நான் பெற்ற 2 பிள்ளைகள் உழைத்தோ அல்லது நடித்தோ உங்களுக்கு கொடுப்பார்கள். நான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நானும் போலீஸ் பாதுகாப்புடன் வர முடியும். ஆனால் வரவில்லை. ஏனென்றால் நான் மக்களுடன் இருக்கிறேன்.

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் வரும். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன் என்று 2006-ம் ஆண்டு தேர்தலில் கூறினேன். எப்போது கொடுப்பேன். தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கொடுப்பேன். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். மக்களின் தேவையை பூர்த்தி செய்வது தான் அரசின் கடமை. சுதந்திரம் அடைந்து சுமார் 63 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் 33 ஆண்டுகளை கழித்துவிட்டு மீதமுள்ள 30 ஆண்டுகள் பார்த்தால் சாலை குண்டும், குழியுமாக தான் இருக்கிறது.

வாய்க்கால்கள், வடிகால்கள் சரிசெய்யப்படவில்லை. நாங்கள் எப்படி ஆட்சி செய்கிறோம் என ஒரு வாய்ப்பு கொடுங்கள். வேட்பாளர்களிடம் தொண்டர்கள் காசு பணம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு 3 தடவையும் சாப்பாடு கொடுத்தால் போதும். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய ஏழைகளுக்கு உதவ கொட்டு முரசு, கதிர்அரிவாள், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி
மாலை மலர்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  Empty Re: ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Post by அருண் Sat Oct 01, 2011 12:25 pm

சரி இவ்வளவு நாள எங்க இருந்தீங்க இல்ல இப்ப தான் மப்பு தெளிஞ்சு வந்தீங்களா..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  Empty Re: ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Post by உமா Sat Oct 01, 2011 12:31 pm

சூப்பர் அருண்... ஆமோதித்தல்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  Empty Re: ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Post by balakarthik Sat Oct 01, 2011 12:41 pm

நான் நிரந்தரமாக கேட்கவில்லை. 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்து பாருங்கள். ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள் என்று தான் கேட்கிறேன். நான் பணம் சம்பாதிப்பதற்காக வரவில்லை. எவ்வளவோ எனக்கு நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். உங்களுக்கு நல்லது செய்வதற்காக வந்து இருக்கிறேன்.
நீங்க நடிக்குரத விட்டதே நாடுமக்களுக்கு செஞ்ச பெரும் உதவி அதவிடவா இப்போ அதிகமா செயபோரிங்க தலைவரே சூப்பருங்க அருமையிருக்கு

நான் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன். என்னால் முடியாத போது நான் பெற்ற 2 பிள்ளைகள் உழைத்தோ அல்லது நடித்தோ உங்களுக்கு கொடுப்பார்கள்.

ஐயோ தலைவரே நாங்க முரசு சின்னத்துலயே வாகு போடுறோம் அதுக்காக இப்படி எல்லாம் எங்களை மிரட்ட கூடாது ஜனங்க பாவம் :வணக்கம்: :வணக்கம்: அழுகை அழுகை அழுகை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  Empty Re: ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Post by இளமாறன் Sat Oct 01, 2011 12:43 pm

ஒவ்வொரு தேர்தலிலும் இதை தானே சொல்கிறார்கள் அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  Empty Re: ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Post by balakarthik Sat Oct 01, 2011 12:50 pm

இளமாறன் wrote:ஒவ்வொரு தேர்தலிலும் இதை தானே சொல்கிறார்கள் அதிர்ச்சி

கூட்டணியத்தான் மாத்தி மாத்தி அமைக்கிறாங்க இதயாவது மாத்தாம சொள்ளுறாங்களே அதுவே பெரியவிஷயம்த்தானே அதுவும் பொறுக்கலயா உங்களுக்கு சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்  Empty Re: ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம்
» தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
» தி.மு.க.வுக்கு ஓட்டுபோட்டால் ஊரையை காலி செய்து விடுவார்கள்; விஜயகாந்த் பிரசாரம்
» சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர்
» சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum