ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

4 posters

Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by krishnaamma Tue Sep 27, 2011 11:49 am

சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.

ஆதித்தனாரின் தந்தையார் பெயர் சிவந்தி ஆதித்தர். தாயார் கனகம் அம்மையார். தந்தையார் ஒரு வழக்கறிஞர். மிகவும் வசதியான குடும்பம் அவர்களுடையது. தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றை எழுதிப் பணம் சம்பாதித்ததாக அவரே எழுதியுள்ளார். இலண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.

1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.

இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தந்தி என்னும் தினசரிப் பத்திரிகையையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலைமுரசு என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.

தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.


மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.


சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.

இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஸ்சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.

இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by Manik Tue Sep 27, 2011 11:52 am

அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகள் மறக்காமல் இருக்க வேண்டும்

அண்ணாருக்கு எனது வாழ்த்துகள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by உமா Tue Sep 27, 2011 11:52 am

பகிர்வுக்கு நன்றி...இப்படியும் பெயர் மறைந்து எத்தனை தியாகிகள் வாழ்ந்து இருக்கின்றனர்.... நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by krishnaamma Tue Sep 27, 2011 11:57 am

ஆமாம் உமா, இன்று காலண்டரில் தேதி கிழிக்கிம்போது பார்த்தேன், அது தான் தேடி போட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by krishnaamma Tue Sep 27, 2011 11:58 am

`தினத்தந்தி' நிறுவனர் `தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளையொட்டி ரூ.2 1/2 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. இதன்படி, மூத்த தமிழறிஞருக்கு ரூ.1 1/2 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டாக்டர் வா.செ.குழந்தைசாமிக்கு மூத்த தமிழறிஞர் விருதுக்கான ரூ.1 1/2 லட்சம் `பொற்கிழி' வழங்கப்பட்டது. `புதுக்கவிதை மன்னர்' மு.மேத்தா எழுதிய `மு.மேத்தா கவிதைகள்' என்ற கவிதை நூலுக்கு இலக்கியப் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் இந்த பரிசுகளை வழங்கினார்.

இந்த ஆண்டு பரிசு பெறுவோர் விவரங்களை, `தினத்தந்தி' இயக்குனர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அறிவித்து உள்ளார். `சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.1 1/2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் `இலக்கியச் செல்வர்' குமரி அனந்தன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்ச்
19-ந்தேதி பிறந்தார். பெற்றோர்: அரிகிருஷ்ணப் பெருமாள் - தங்கம்மை. "எம்.ஏ''., "பி.எச்.டி'' பட்டங்கள் பெற்றவர்.

எழுத்திலும் பேச்சிலும் வல்லவர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், மற்றும் பல முக்கிய பொறுப்புகளிலும் இருந்தவர். பெருந்தலைவர் காமராஜரின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றவர். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், இலக்கியத்திலும் புலமை பெற்றவர். "கலித்தொகை இன்பம்'', "படித்தேன், கொடுத்தேன்'', "நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ்'', "குமரி அனந்தனின் தமிழ் அமுது'', "சிந்தனைப் பண்ணையில் பாரதியார்'', "சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன்'' உள்பட 29 நூல்களின் ஆசிரியர். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமையைப் போராடிப் பெற்றவர். மணியார்டர் பாரம், அஞ்சலட்டை, தந்தி ஆகியவற்றில் தமிழ் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, அதில் வெற்றியும் பெற்றார். இலங்கை தமிழர்களின் துயரைத் துடைக்க வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடற்பயணம் மேற்கொண்டபோது கைது செய்யப்பட்டார். கிருபானந்தவாரியார் சுவாமிகளால் "தமிழ் செப்புக்குடம்'' என்று பாராட்டப் பெற்றவர். இவர் மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

தொழில் அதிபர் எச்.வசந்தகுமார், இவருடைய தம்பி ஆவார். இந்த ஆண்டுக்கான `சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசை', `தமிழ் வாகைச் செம்மல்' கவுதம நீலாம்பரன் பெறுகிறார். அவருடைய `புத்தபிரான்' என்ற நூலுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு (ரூ.1 லட்சம்) வழங்கப்படுகிறது. பத்திரிகைத் துறையில் 40 ஆண்டு கால அனுபவம் உள்ளவர், கவுதம நீலாம்பரன். இயற்பெயர் பி.கைலாசநாதன். "எம்.ஏ.'' பட்டம் பெற்றவர்.

விருதாசலம் அருகே உள்ள சாத்தக்கூடல் இவரது சொந்த ஊர். அங்கே 14.6.1948 அன்று பிறந்தார். பெற்றோர்: சி.பரமசிவம் - பவானி அம்மாள். தமிழ்நாட்டின் முன்னணி இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ள கவுதம நீலாம்பரன், "தீபம்'' நா.பார்த்தசாரதியின் மாணவர் என்று கூறலாம். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர். சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள் இரண்டிலும் எழுத்து வன்மை படைத்தவர். சேதுபந்தனம், வெற்றித்திலகம், விஜயநந்தினி, கலிங்க மோகினி, சுதந்திர வேங்கை, (பூலித்தேவன் வரலாறு), காவியமாய் ஒரு காதல், ஜென்மசக்கரம், இதயமின்னல் உள்பட 60-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

ஸ்ரீராம் டிரஸ்ட் - சுஜாதா பிலிம்ஸ் இணைந்து வழங்கிய பாரதி விருது, சேலம் தமிழ்ச்சங்கம் வழங்கிய "தமிழ் வாகைச் செம்மல்'' விருது உள்பட பல விருதுகளும், பரிசுகளும் பெற்றவர். இவர் மனைவி பெயர், அகிலா. இந்த தம்பதிகளின் ஒரே மகன், விஜயசங்கர். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனாரின் 107-வது பிறந்த நாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் க.திருவாசகம் விழாவுக்கு தலைமை தாங்கி விருது மற்றும் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார்.
நன்றி : மாலை மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by உமா Tue Sep 27, 2011 12:00 pm

krishnaamma wrote:ஆமாம் உமா, இன்று காலண்டரில் தேதி கிழிக்கிம்போது பார்த்தேன், அது தான் தேடி போட்டேன் புன்னகை

நான் எப்போதும் தேதி கிழிப்பதே இல்லை...அதனால் தான் தெரியவில்லை....
சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by krishnaamma Tue Sep 27, 2011 12:11 pm

நான் தினமும் தேதி யும் கிழிப்பேன், பஞ்சாங்கமும் பார்த்துவிடுவேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by krishnaamma Tue Sep 27, 2011 12:19 pm

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Founder

இது தான் அவரின் புகைபப்டம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by பிரசன்னா Tue Sep 27, 2011 12:25 pm

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா அம்மா.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று லட்சியத்தோடு வாழ்ந்து காட்டியவர்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by krishnaamma Wed Sep 28, 2011 8:48 am

அதனால் தான் அவ்ர் 'தமிழர் தந்தை' புன்னகை

நன்றி பிரசன்னா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் Empty Re: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981
» கப்பலோட்டிய தமிழர் – வ.உ.சி 150 வது பிறந்த நாள்
» 05 செப்டம்பர் - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் பிறந்த நாள். வணங்கலாம் வாருங்கள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum