ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடுகள் அறிவோம்: ஸ்வீடன்

2 posters

Go down

நாடுகள் அறிவோம்: ஸ்வீடன் Empty நாடுகள் அறிவோம்: ஸ்வீடன்

Post by சிவா Sat Sep 24, 2011 12:13 am

வடக்கு ஐரோப்பாவில் ஸ்காண்டிநேவியா என்றழைக்கப்படும் பூகோளப் பகுதிதான் ஸ்வீடன் நாடு. நாட்டின் பாதிப் பகுதியை அடர்ந்த காடுகளே ஆக்ரமித்துக் கொண்டிருக்கும். நாடு பூராவும் ஏரிகள்தான். ஏறக்குறைய ஒரு லட்சம் ஏரிகள் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நாட்டைச் சுற்றி 24,000 குட்டித் தீவுகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் யாரும் எப்போதும் போய்வரலாம்... அவ்வளவு சுதந்திரம் இந்த நாட்டில்!

இதன் மேற்குப் பகுதியில் நார்வே நாடு உள்ளது. கிழக்கில் பின்லாந்தும் உள்ளன. பிற திசைகளில் பெரும்பாலும் நீர்... நீர்....!

இரவில் சூரியன் உதிக்கும் நாடு என்றொரு பெயர் ஸ்வீடனுக்கு உண்டு. இதற்குக் காரணம் கோடை காலத்தில் பெரும்பாலும் சூரியன் மாலையில் அஸ்தமனமாவதேயில்லை. ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரத்தில்கூட கோடை இரவுகள் நான்கு மணி நேரத்துக்கு மேல் நீடிப்பதில்லை! குளிர் காலத்தில் நீண்ட இரவுகளும் மிகக் குறைந்த பகல்களும் இருக்கும்!

இலையுதிர் காலத்தில் இங்கு பிரம்மாண்டமான ஒளிக் காட்சிகள் நடைபெறும். இவை கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இதனால் "வட விளக்குகள்' என்ற பெயரும் ஸ்வீடனுக்கு உண்டு. இரவில் வானில் தோன்றும் பச்சை மற்றும் சிவப்பு நிற ஒளிப் புள்ளிகள் வானை வண்ணமயமாக்கி ஒரு மாயத் தோற்றத்தை உண்டு பண்ணும்.

காடுகள் நிறைந்த நிலப்பகுதியாக இருப்பதால் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. ஸ்வீடன் மக்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவர்கள். ஐரோப்பாவிலேயே முதன் முதலில் இங்குதான் தேசியப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இப்போது இங்கு 28 தேசியப் பூங்காக்களும் ஏராளமான வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன.

இங்குள்ள விலங்குகளில் மிகவும் புகழ்பெற்றது ஆர்க்டிக் நரி. இதன் தோலைக் கொண்டு செய்யப்படும் கம்பளி ஆடை மிகவும் பிரபலம். இந்த ஆடைக்காக ஏராளமாக நரிகள் கொல்லப்பட்டதால், இப்போது இது அரிய வகை விலங்கு வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற கார்ல் வான் லின் என்ற தாவரவியல் நிபுணர் 1700களில் இங்கு தோன்றினார். இவர்தான் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் விஞ்ஞானப் பெயர் மற்றும் காரணப் பெயர் சூட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். இவருடைய இந்தப் பெயர்சூட்டும் முறை இன்றுவரை உபயோகத்தில் உள்ளது.

10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இங்கு குடியேறத் தொடங்கினார்கள் என்று வரலாறு கூறுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வேட்டையாடுபவர்களாகவும் ஊர்சுற்றிகளாகவுமே இருந்தனர். கி.பி.முதல் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசுடன் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தனர். இங்குள்ள ஸ்வீயா என்ற பழங்குடியின மக்களின் பெயராலேயே இந்த நாடு ஸ்வீடன் என்ற அழைக்கப்படுகிறது.

1544 வரை இங்கு மன்னர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 1809-ல் அப்போது மன்னராக இருந்த 5-ம் கஸ்தாவ் அரசர் நெப்போலியனிடம் தோற்றதால் தனது அரச பதவியைத் துறந்தார்.

ஐரோப்பாவிலேயே மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட நாடு ஸ்வீடன். மொத்த மக்கள் தொகையே 90 லட்சம்தான். 1930களில் பொதுநலத் திட்டம் ஒன்று இங்கு நிறைவேற்றப்பட்டது. அதன்படி மக்கள் எல்லோருக்கும் இலவச மருத்துவ சேவை, வேலையில்லாதவர்களுக்கு உதவித் தொகை, குழந்தைகளைக் காக்க சிறப்புச் சலுகைகள், முதியவர்கள் நலம் பேணுதல் ஆகியவை முறைப்படுத்தப்பட்டது. எல்லா ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 5 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை உண்டு.

இங்கு இன்றும் மன்னர் இருக்கிறார். அவர்தான் அரசாங்கத்தின் முதல் தலைவர். ஆனால் ஆட்சி செய்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான். இந்த உறுப்பினர்களால் பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்தான் மற்ற அமைச்சர்களை நியமிக்கிறார். 349 உறுப்பினர்களைக் கொண்டது ஸ்வீடனின் பார்லிமெண்ட்.

ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருந்தாலும் ஸ்வீடன் யூரோ நாணயத்தைப் பயன்படுத்துவதில்லை. ஸ்வீடிஷ் க்ரோனா என்பதுதான் இந்நாட்டு நாணயத்துக்குப் பெயர். அரசியல்ரீதியாக அணிசேராத நாடு என்பதில் ஸ்வீடிஷ் மக்களுக்கு மிகவும் பெருமை உண்டு.

ராணுவத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யாத, பிற நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதில் முன்னணியிலிருக்கும் நாடு என்ற சிறப்பும் உண்டு.

டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவரும் நோபல் பரிசை நிறுவியருமான ஆல்பிரட் நோபலைத் தந்த நாடு.

தினமணி


நாடுகள் அறிவோம்: ஸ்வீடன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடுகள் அறிவோம்: ஸ்வீடன் Empty Re: நாடுகள் அறிவோம்: ஸ்வீடன்

Post by கேசவன் Sat Sep 24, 2011 7:46 am

புன்னகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாடுகள் அறிவோம்: ஸ்வீடன் 1357389நாடுகள் அறிவோம்: ஸ்வீடன் 59010615நாடுகள் அறிவோம்: ஸ்வீடன் Images3ijfநாடுகள் அறிவோம்: ஸ்வீடன் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum