ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமரை தடாகம்

2 posters

Go down

தாமரை தடாகம்  Empty தாமரை தடாகம்

Post by ந.கார்த்தி Wed Sep 14, 2011 8:01 am

நேற்று பார்த்தது போல் இருந்தது அவனை பார்க்கும் பொழுது..ஆனால் வருடங்கள் ஊருண்டோடியது அவனின் காதோரம் நரைத்திருக்கும் நான்கு வெள்ளை முடிகளை பார்த்த பொழுது தான் எனக்கு உரைத்தது....

நரேன்...எங்கள் கிராமத்தின் கனவுக்கண்ணன். எங்கள் கிராமத்தில் டவுனுக்கெல்லாம் போய் அதிகம் படித்தவனும் அவன்தான். யாரிடமும் அதிகம் பேசமாட்டான்.அவனை படிக்கவைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பது அவனின் அம்மாவின் கனவு என்பதை விட தவமே என்று சொல்லலாம். அவன் படிக்கும் பொழுது ஊருக்கு வருகிறான் என்றால் அவனை பார்த்து நலம் விசாரிபதற்கே ஒரு கூட்டம் சேரும். அந்த கூட்டத்தில் நானும் ஒருத்தியாக நிற்பேன் கடைசியில், அவனை பார்பதற்காக அல்ல. தரிசிப்பதற்காக.

"ஏண்டி எத்தனை நாள் தான் இப்படி நீ பார்த்துகிட்டே இருப்ப ... உன்னால முடியலனா சொல்லு நாங்க போய் சொல்லுறோம்.." அந்த தாமரை தடாகத்தில் குளிக்கும் பொது கொஞ்சம் சத்தமாகவே கேட்டாள் நளாயினி என்னை பார்த்து....

"ஏய்.. அடுங்குடி எல்லாம் எனக்கு தெரியும்...நீ ஒன்னும் தூது போக வேண்டாம்... என்னைக்கு இருந்தாலும் நரேன் எனக்கு தான்..."

"ஆமா நீ இப்படியே சொல்லிக்கிட்டு இரு.... நீ நரேன் கிட்ட சொல்லுறதுக்குள்ள எவளாவுது கொத்திகிட்டு போகபோறா...அப்புறம் நீ காதல் படத்துல வர பரத் மாதிரி இந்த கிராமத்த சுத்திகிட்டு இருக்க போற...."

அந்த வார்த்தைகள் இன்னும் என் மூச்சில் கலந்த சுவாசகாற்றாக என்னை இதுநாள் வரையில் அவனிடம் என் காதலை சொல்ல வேண்டும் என்று நச்சரித்து கொண்டிருந்தது..

காட்டில் சுள்ளி பொறுக்கி கொண்டீருக்கும் பொது நளாயினி என்னிடம் தடம் புரளா ரயில் வண்டி வேகத்தில் ஓடி வந்தாள்.

"என்னடி நீ இங்க இருக்க...உன் ஆளு ஊருலேந்து வந்திருக்கான்..நீ போல அவன பாக்க..."

அந்த ரயில் வண்டியின் முச்சிரைப்பு நிற்பதற்குள், நரேன் வீட்டிடம் நின்றாள் அவனை தரிசிப்பதற்கு...

.....................ஆனால் வருடங்கள் ஊருண்டோடியது அவனின் காதோரம் நரைதிற்கும் நான்கு வெள்ளை முடிகளை பார்த்த பொழுது தான் எனக்கு உரைத்தது....

"ஏன்டா இந்த கிழவி இருக்கா இல்ல போயிடுச்சான்னு பார்க்க வந்தியா...இத்தனை வருசமா வராதவன் இப்ப எதுக்குடா வந்திருக்க..." அவன் அம்மாவின் தழுதழுத்த குரல் அந்த கிராமத்தின் முச்சந்தி வரை ஒலித்தது...

கையில் பெட்டியுடன் கண்ணில் கண்ணீருடன்..என்ன சொல்லுவதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.....

"ஏய் கிழவி இத்தன வருஷத்துக்கு அப்புறம் உன் புள்ள வந்துருக்கான்..அவன வீட்டு வாசல்ல நிக்க வச்சி கேள்வி கேட்டுகிட்டு இருக்க...உள்ள கூப்பிட்டு பேசு..." யாருக்கும் இல்லாத அக்கறை எனக்கு இருக்கு என்ற தைரியத்தில் கடைசியில் நிற்கும் நான் குரல் கொடுத்தேன்.....

எல்லோர் கண்ணும் என்மேல் பட, என்னவன் மட்டும் என்னை பார்க்காமல் தரையை பார்த்துகொண்டிருந்தான்.....

"எவடி அவ சோளிய விட்டுபுட்டு இங்க வந்து வக்காலத்து வாங்குறது...எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ கொஞ்சம் மூடு உன் வாய...இது எனக்கும் என் புள்ளைக்கும் உள்ள பிரச்னை...நீ உன் வேலையை என்னவோ அத மட்டும் பார்...." என்றாள் அந்த கிழவி சற்று அதிகார தோரணையில்....

"அம்மா...எனக்கு கொஞ்சம் பிரச்னை..அதான் வர முடியல என்றான் தலையை நிமிராமல்..."

கண்ணில் வந்த அழுகையை சற்று துடைத்து விட்டு...கொஞ்சம் மூச்சை உள்வாங்கி ..."அப்படி என்னடா உனக்கு தல போற பிரச்சனை ..." என்று சொல்லி முடிபதற்குள் உள் வாங்கிய மூச்சி அனைத்தும் காற்றில் கலக்க...உயிரை விட்டாள் கிழவி ....

சொல்ல வந்ததை சொல்வதற்குள்...தன் தாயின் உயிர் பிரிய... கண்ணீருடன் அணைத்து காரியங்களும் செய்தான்...எதற்காக கண்ணீர் அதிகம் வடிப்பது என்ற தெரியாமல்.....

" ரொம்ப தேங்க்ஸ் தாமரை ...நீ அன்னைக்கு எனக்கு பரிஞ்சு பேசியதற்கு...." தண்ணீர் மொள்ள குடத்துடன் குளத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த தாமரையை பார்த்து சொன்னான்....

இதுநாள் வரை எங்கள் கிராமத்தில் எந்த பெண்ணிடமும் பேசாத நரேன்...தன்னிடம் பேசியது மனதிற்குள் அத்தி பூ பூத்தது போல உணர்ந்தாள்....

வெட்கத்தால் வெட்கப்பட்டு..அவனை அருகே பார்பதற்கு மனம் துடித்தாலும் அதை கட்டுப்படுதிக்கொண்டு...பரவால என்றாள்.

"கொஞ்சம் உன்கிட்ட தனியா பேச முடியுமா தாமரை இப்போ..." என்றான்

"தன்னை தானே கில்லி கொண்டு....இப்போ வேணாம்...தண்ணி கொண்டு போகலான ..ஆத்தா வையும்...சாய்ந்தரம் வேனா தாமரை தடாகத்துள பேசுவோமா..." என்றாள்

அந்த கேள்விக்கு பதில் நரேனிடம் ஒன்று மட்டும் தான் இருந்தது...அது "சரி" என்பது....

இந்த கிராமத்துல ஏதுடா மயில் என்பவனின் வார்த்தைகள் பொய்ப்பது போல்....மனதில் உள்ள அத்தனை சந்தோஷத்தையும் தன் காலில் சலங்கையிட்டு ..மயில் போல் துள்ளி ஓடினாள்.

"இப்பவாது நீ சொல்லிடுவியா இல்ல இப்போவும் வாய முடிகிட்டு நிக்கபோறியா என்று கேட்ட நளாயினிக்கு...ஒரு செல்ல முத்தம் கொடுத்து விட்டு தாமரை தடாகத்தை நோக்கி ஓடினாள்..."

தான் வருவதற்கு முன்னால் நரேன் அங்கு இருப்பதை கவனித்த தாமரை...சற்று வெட்கம் கலந்த ஆச்சிரியத்துடன் அவன் முன்னால் நின்றாள்...

"எனக்கு எல்லாம் என் அம்மா தான்...அவுங்கள நான் தூக்கி எறிஞ்சிட்டு போனதற்கு ஆண்டவன் என்ன ரோம்பவே தண்டிச்சிட்டான்...." என்றான் நரேன்..

"என்ன சொல்கிறான் என்று விளங்காமல் முதல் முறை அவனை நோக்கி பார்த்தாள்..." அவன் கண்களில் நீர் ஊற்று எடுத்துகொண்டிருந்தது.

"என்ன ஆச்சிங்க...."

"இரண்டு வருசத்துக்கு முன்னாடி என் அம்மா எனக்கு ஒரு கடுதாசி போட்டுச்சி..அதுல எனக்கு பொண்ணு பார்த்து இருப்பதாகவும்...என் ஆத்தா பார்த்த பொண்ணு நீ தாணு எழுதிருந்துசி..."

"அந்த கடுதாசி வரத்துக்கு முன்னாடியே நான் எங்க ஆபீஸ்ல வேலை பாக்குற பரிமளானு ஒரு பொன்னை காதலிச்சு பதிவு திருமணம் செஞ்சிகிட்டோம்...அவுங்க வீட்டுக்கும் தெரியாம.."

"ஒரு வருசத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவ நடத்தை சரிஇல்லன்னு..பல தடவ நான் அவள கண்டிச்சிசும்..அப்போதைக்கு நீல கண்ணீர் வடிச்சி என்ன நம்ப வச்சி ஏமாத்திடா... வீட்டுக்கு வந்துபோகும் என் நண்பனூட இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஓடிபோயிட்டா..."

நான் வாழுறதா இல்ல சாவுறததாணு தெரியாம தான் ஊர் பக்கம் வந்தேன்....வார்த்தைகள் அவளை கணை தொடுக்க...தாமரை தடாகத்தில் தாமரையின் கண்ணீரும் நிரப்பி கொண்டிருந்தது...

நான் இப்ப உன்ன வரச்சொன்ன காரணம்...." என் அம்மாவோட ஆச படி உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசபடுறேன் ....உன்னோட சம்மதபடி....." என்ன மன்னிச்சி என்ன கல்யாணம் பன்னிப்பியா?

அவள் பதில் எதுவும் சொல்லாமல் கண்ணீரை மட்டும் பதிலாக விட்டு சென்றாள்......

காலை விடிந்தவுடன் தன் பெட்டிகளை தயார் செய்துகொண்டு ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடக்க தொடங்கினான்....

கவுன்ட்டர் பக்கம் சென்று..."சார், சென்னைக்கு ஒரு டிக்கெட் கொண்டுங்க சார்...." என்றான்

"ஒன்னு இல்ல இரண்டு......" பின்னால் இருந்து ஒரு குரல்..

திரும்பாமலேயே..."சார், இரண்டு டிக்கெட் கொண்டுங்க சார்...." என்றான் ...அவனக்கு தெரியும் அது தன்மேல் அக்கறை கொண்ட தாமரையின் குரல் என்று...


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தாமரை தடாகம்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தாமரை தடாகம்  Empty Re: தாமரை தடாகம்

Post by ந.கார்த்தி Sun Sep 18, 2011 4:18 pm



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தாமரை தடாகம்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தாமரை தடாகம்  Empty Re: தாமரை தடாகம்

Post by கே. பாலா Sun Sep 18, 2011 4:22 pm

நல்ல கதை ! யார் எழுதியது ?? நீங்களா கார்த்தி !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தாமரை தடாகம்  Empty Re: தாமரை தடாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum