Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் மணிவண்ணன்
4 posters
Page 1 of 1
என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் மணிவண்ணன்
![](https://2img.net/r/ihimizer/img651/4148/manivannantigreflag0eu1.png)
இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்துவிடுங்கள். புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம் என்றார் இயக்குநரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணன்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் மணிவண்ணன் பேசுகையில், "நாம் தமிழர் கட்சிக்காரர்களும் சீமானும் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து விட்டதாகக் கூறி சிலர் கிண்டலடிக்கிறார்கள்.
மூன்றுபேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றுப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் எல்லாம் துடித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நிமிடமும் உயிர் போகும் வலி. அந்த நேரம் பார்த்து, தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் எனக்கில்லை என முதல்வரும் சொல்லிவிட்டார்.
ஒரு பக்கம் சட்டப் போராட்டம் ஆரம்பித்து, நீதிமன்ற வளாகத்தில் அத்தனை பேரும் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தோம். நீதிபதி 8 வாரங்கள் தூக்கு தண்டனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட அடுத்த கணம், சட்டமன்றத்தில் தண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேற்றினார் போன உயிரை திரும்ப அவர் தந்தது போல உணர்ந்தோம்... இப்போது சொல்லுங்கள். இந்த அம்மாவுக்கு நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நன்றி சொல்வது?
முந்தைய தினம் சட்டமன்றத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற கூறிவிட்டாலும் தமிழ் மக்களின் உணர்வை மதித்த அம்மா, இரவெல்லாம் தூங்காமல், சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து, அடுத்த நாளே தண்டனையை நிறுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றினாரே... அந்த மனசு யாருக்கு வரும்! கருணாநிதியாக இருந்தால் தான் சொன்னதே சரி என்று பிடிவாதமாக இருந்து மூவரின் உயிரையும் போக வைத்திருப்பார்.
ஜெயலலிதாவின் இந்தத் தாயுள்ளம், பெரும் கருணைக்கு நாம் காலமெல்லாம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி கேட்பதையெல்லாம், எதற்காக போராடுகிறார்களோ அந்தக் கோரிக்கையை எல்லாம் அந்த அம்மா நிறைவேற்றித் தருகிறார். இதற்கு நன்றி செலுத்தாமல் விட்டால் காலம் மன்னிக்காது.
திருக்குறளை சரியாகப் படித்திருந்தால் திமுகவினருக்கு செய்நன்றியின் அர்த்தம் விளங்கும். அவர்கள் கடலில் திருவள்ளுவருக்கு சிலை வைத்ததோடு சரி. அவர் சொன்னதை மறந்துவிட்டார்கள்.
இன்று தூக்கு தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் முழுமையாக நம்புவது நாம் தமிழர் கட்சியையும் தம்பி சீமானையும்தான். தான் இறந்த பிறகு தன் உடலை குடும்பத்திடம் ஒப்படைக்கச் சொன்னார் பேரறிவாளன். முருகனும் சாந்தனும் தங்கள் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு எழுதி வைத்துவிட்டனர்.
நண்பர்களே, நான் மிஞ்சிப் போனால் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். எனக்கு அரசியல், பதவி என எந்த ஆசையும் இல்லை. இந்தப் பிள்ளைகள் மூவரும் உயிரோடு திரும்ப வேண்டும். சீமானைப் போன்றவர்களால் இந்தத் தமிழினம் உயர்ந்த நிலையில் இருப்பதைப் பார்த்துவிட்டு இறந்து போக வேண்டும். நான் இறந்தால், என் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் உடம்பில் புலிக்கொடியைப் போர்த்தி எடுத்துச் செல்லுங்கள், அது போதும்," என்றார்.
மணிவண்ணனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றுவிட்டனர். கீழே கூடியிருந்தவர்கள் உணர்ச்சி மிகுதியால் கண்கலங்கி நின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் மணிவண்ணன் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் மணிவண்ணன் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் மணிவண்ணன் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் மணிவண்ணன்
அடடா என்னப்பா எல்லாரும் இப்படி ஆரம்பிச்சுட்டீங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் மணிவண்ணன்
அட இவரு செவ் தே டைகர் அமைப்பை தவறாக புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடல் நலத்தின் மீது அக்கறையால் சைக்கிள் விற்பனை சூடுபிடிக்கிறது !
» கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்
» பாசம் -எஸ்.மணிவண்ணன்
» அறிமுகம் மணிவண்ணன்
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
» கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்
» பாசம் -எஸ்.மணிவண்ணன்
» அறிமுகம் மணிவண்ணன்
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|