ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் ........

Page 1 of 2 1, 2  Next

Go down

சினிமா செய்திகள் ........ Empty சினிமா செய்திகள் ........

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 12:56 pm

தீபாவளி அன்று வெடிக்க இருக்கும் விஷால் வெடி

வரும் அக்டோபர் 26-ம் ஆம் தேதி தீபாவளித் திருநாள் வருகிறது. ஒவ்வொரு தீபாவளித் திருநாள் அன்று பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் திரைக்கு வரும். அந்த வரிசையில் இந்த வருடமும் பல படங்கள் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கின்றன.

பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி இணைந்து நடிதுத வரும் ‘வெடி’ திரைப்படமும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறதாம். ஏற்கனவே இதே தினத்தில் சூர்யாவின் ‘7ஆம் அறிவு’, விஜயின் ‘வேலாயுதம்’, சிம்புவின் ‘ஒஸ்தி’, தனுஷின் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty அதிக விலைக்கு டிக்கெட்…..மங்காத்தா தியேட்டர்களில் சோதனை?

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 12:56 pm

மறுபடியும் ஒரு மங்காத்தா நியூஸ். ஆனால் இது சந்தோஷப்படுத்துகிற செய்தியல்ல…

மங்காத்தா படம் வெளிவருவதற்குள் ஆயிரம் பேர் மடியில் புரண்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை. கடைசியாக படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி, ராதிகாவின் ராடர்ன் டி.வி நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டிருக்கிறது.

எப்படியோ படம் திரைக்கு வந்துவிட்டது என்பதில் ரசிகர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் படத்தை வாங்கியிருக்கும் தியேட்டர்காரர்களுக்கு கொசுக்கடி ஆரம்பம் ஆகிவிட்டதாம். மாவட்டம், வட்டம் தோறும் உள்ள வட்டாட்சியர்கள் தியேட்டர் தியேட்டராக வந்து செக் பண்ண ஆரம்பித்திருக்கிறார்களாம் கடந்த இரண்டு நாட்களாக.

அவர்கள் விடுக்கும் எச்சரிக்கை டிக்கெட் விலையை ஏற்றக் கூடாது என்பதுதான். மங்காத்தாவை அடக்க விலைக்கு சற்று அதிகமாக வாங்கினால் கூட பிரச்சனையில்லை. அடங்கவே அடங்காத ஒரு விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இந்த நேரத்தில் டிக்கெட் விலையில் சூடு வைக்காதே என்று திடீர் மிரட்டல் விடும் அதிகாரிகளால் அதிர்ந்து போயிருக்கிறார்களாம் தியேட்டர்காரர்கள்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty விஸ்வரூபத்தில் அனுஷ்கா இல்லை…தடைவிதித்த நாயகன் யார்?

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 12:57 pm

விஸ்வரூபம் படத்தில் அனுஷ்கா நடிக்கிறார் என்று முதலில் வந்த செய்திகள் கமல் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும். மெலடி கண்களும், மேற்கத்திய குரலுமாக அனுஷ்கா வரும்போதெல்லாம் அவ்வ்வ்வ்வ்… என்கிறது ரசிகனின் மனசு. அதுவும் கமலும் அனுஷ்காவும் இணைந்தால் ஒரு கட்டாய முத்தத்திற்கு கியாரண்டியும் உண்டல்லவா?

ஆனால் இந்த சந்தோஷத்தின் சாவியில் துருபிடித்திருக்கிறது இப்போது. ஆந்திரா கிங் நாகார்ஜுனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் அனுஷ்கா. கமல் படத்தில் இவர் நடிக்கப் போகிறார் என்றதுமே, வேண்டாம் போகாதே… என்று கூறிவிட்டாராம் நாகார்ஜுனா.

அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்திகள் கசிந்ததே தவிர இன்னும் அக்ரிமென்ட் எதிலும் சைன் பண்ணவில்லையாம் அனுஷ்கா. இவர் சொதப்பினால் என்னாவது என்று படத்தில் மேலும் இரு நாயகிகளை புக் பண்ணியிருக்கிறார்கள். அதில் ஒருவர் எமி ஜாக்சன்.




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty கமலின் 2-வது வாரிசு அக்ஷராவும் நடிக்க வந்தார்

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 12:58 pm

கார்த்திக் நடித்திருக்கிற புலி வேஷம் படத்தை பார்த்தவர்கள், அட… இந்த மனுஷனுக்கு வயசே ஆகாதா என்று யோசித்திருப்பார்கள். அப்படி ஒரு இளமை. மனசு வைத்தால் இப்பவும் அவர் ஹீரோவாக நடிக்கலாம். (பஞ்ச்சுவாலிடி விஷயத்திலும் தொரை மாறாமலிந்தால்தான் ஐயகோ…)

இவரே ஹீரோவாக நடிக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவரது மகன் கௌதம் நடிக்க வந்துவிட்டார் இப்போது. முதல் குட்டே மோதிரக்குட்டு! மணிரத்னம் இயக்குகிறார் இவரை வைத்து. இதெல்லாம் வாசகர்களுக்கு ஓரளவுக்கு தெரிந்த செய்திதான். இப்போது நாம் சொல்லப் போகும் செய்தி அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

கௌதமுடன் ஜோடி சேரப்போவது கமலின் மகள் அக்ஷரா. நடிப்பு அக்காவோடு இருக்கட்டும். நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கிப் போனவரை வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்தாராம் ஸ்ருதி கமல். மும்பையில் அம்மாவுடன் தங்கி உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அக்ஷராவை கன்னியாக்குமரி கடல் பகுதியில் விட்டு படமெடுக்கப் போகிறார்கள்.

பிறக்கும் போதே சென்ட் மணத்தோடு திரிந்த இவ்விரு வாரிசுகளும், கன்னியாக்குமரியின் மீன் வாசம் அடித்து என்னவாகப் போகிறார்களோ?


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty ஸ்ருதியின் எக்ஸ்ட்ரா செலவு…ஆடிப்போகும் தயாரிப்பாளர்கள்

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 12:59 pm

தங்கையின் வருகையை இப்போதுதான் சந்தோஷத்தோடு அறிவித்தோம். அக்காவின் பெருமை எப்படியிருக்கிறது தமிழ்சினிமாவை பொறுத்தவரை?

சந்தேகமென்ன, ரிப்பேர்தான். ஸ்ருதிஹாசன் நடிக்கும் பட வட்டாரங்களில் விசாரித்தால், மூக்கை சிந்தி முன்புற சட்டையில் துடைத்துக் கொள்கிறார்கள்.

தினந்தோறும் அறுபதாயிரம் செலவாகிறதாம் இவரது அடிப்பொடிகளுக்கு மட்டும். மும்பையிலிருந்து வருகிற காஸ்ட்யூமர், டச்சப், மேக்கப் மேன், கார் டிரைவர் என்று அத்தனை பேருக்கும் தனித்தனியே கறந்துவிடுகிறாராம்.

ஏதோ இவர் மட்டும்தான் இப்படி வாங்குகிறாரா என்று கோபப்படுகிறவர்களுக்கு ஒரு ஸ்மால் இன்ஃபர்மேஷன், மற்ற நடிகைகள் இவ்வளவு வாங்குவதில்லை. பொதுவாக பல நடிகைகளுக்கு இந்த டச்சப் மேக்கப் குழுவினரின் பேட்டாவையும் சேர்த்து சம்பளத்தோடு கொடுத்துவிடுகிறார்கள்.

ஆனால் சம்பளத்தையும் தனியாக பெற்றுக் கொள்கிற ஸ்ருதி, இந்த செலவுகளை தயாரிப்பாளர் தலையில் தனியாக கட்டிவிடுவதால், ஒரு படத்திற்கு இதற்கான செலவு மட்டும் அறுபது லட்சம் ஆகிவிடுகிறதாம்.

இளநிக்கு ஆசைப்பட்டவங்க ஏணிக்கு அஞ்சுனா எப்படி?

*



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty இந்தியன் இரண்டாம் பாகம்!

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 12:59 pm

தமிழ்சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்றால், எல்லோரும் கைகாட்டுவது ஷங்கரை. ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது தனது அடுத்த படத்தைப் பற்றி எபோதுமே பேசமாட்டார் ஷங்கர்! இயக்கிக்கொண்டிருக்கும் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, முதல் பிரதியை பார்த்தவுடன்தான் தனது அடுத்த பட வேலைகள் பற்றி சிந்திக்க துவங்குவார்.

ஆனால் தற்போது நண்பன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தைப் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறார் ஷங்கர். அது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்!

தற்போது அன்னா ஹசாரே தலைமையில் நடந்த போராட்டம், கிட்டத்திட்ட இந்தியன் தாத்தாவையே நினைவூட்டியது. ஷங்கரின் நண்பர்கள் அவரிடம் ‘இந்தியன் -இரண்டாம் பாகத்தை’ எடுக்க சொல்லி வற்புறுத்தி வருகிறார்களாம். இதை ஏற்றுக்கொண்டிருக்கும் ஷங்கர், ‘நண்பன்’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து முதல் பிரதி பார்த்தவுடன் இது பற்றி சிந்திக்க இருக்கிறேன் என்று சொல்லி ஆச்சர்யபடுத்தியிருகிறார்.

ஏற்கனவே ‘இந்தியன்’ படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் கமல். கமல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நாயகன் -இரண்டாம் பாகம் படத்தில் நடிப்பீர்களா? ” என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ” நாயகன்-இரண்டாம் பாகம் வருமா என்று தெரியாது.. ஆனால் இந்தியன் – இரண்டாம் பாகம் வர வாய்ப்பிருக்கிறது ” என்று கூறி அசத்தியிருகிறார். இந்தியன் இரண்டாம் பாகம் சாத்தியமானல், இம்முறை கமலின் கெட்-அப் அன்னா ஹசாரே சாயலில் கூட இருக்கலாம்!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty விஷால் இல்லாட்டி விமல்..!

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 1:00 pm

விஷால் நடித்த ‘மலைக்கோட்டை’ படத்தை இயக்கியவர் பூபதி பாண்டியன். அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இருவரும் நட்பு பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் இருவரும் விரிசல் என்று கோடம்பாக்கத்தில் பேச்சுகள் நிலவி வருகிறது. ஏன் என்று விசாரித்ததில் கிடைத்த தகவலகள்:

‘மலைக்கோட்டை’ படத்தின் மூலம் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் கதையை விஷாலுக்காக தயார் செய்தார் பூபதி பாண்டியன்.

தேதிகள் தருகிறேன் என்று கூறிவிட்டு தரமால் வேறு இயக்குனர்களுக்கு தேதிகளை ஒதுக்கி வந்தார் விஷால். இதனால் ஆர்யாவிடம் கதையை கூறவே, ஆர்யா நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் ஆர்யா – விஷால் இருவருமே நண்பர்கள் என்பதால், ஆர்யா விலகிக் கொண்டு விஷாலே நடிக்கட்டும் என்றாராம். எனவே படத்தில் விஷால் நடிப்பார் என்று செய்திகள் வலம் வந்தன. விஷால் ‘வெடி’ படத்தினை முடித்தவுடன் தனக்கு தேதிகள் கொடுப்பார் என்று நம்பினார் பூபதி பாண்டியன்.

ஆனால் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ இயக்குனர் திருவிற்கு தேதிகளை ஒதுக்கி கொடுத்து இருக்கிறார் விஷால். இதனால் கோபமடைந்த பூபதி பாண்டியன் இப்போது அப்படத்திற்கு விமலை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பூபதி பாண்டியனுக்கு போன் செய்தாராம் விஷால். ‘திரு இயக்கும் படத்தை முடித்தவுடன் தேதிகள் தருகிறேன் என்று விஷால் கூற ‘இனிமேல் உங்களை வைத்து எந்த காலத்திலும் படத்தை இயக்க மாட்டேன்’ என்று கூறி போனை துண்டித்து விட்டாராம் பூபதி பாண்டியன்.

இதனால் நல்ல கூட்டணி தேவையில்லாமல் பிரிந்துவிட்டதே என இருவரின் நண்பர்களும் வருந்துகிறார்களாம்.




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty சசியோட நேர்மை பிடிச்சிருக்கு!

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 1:00 pm

”என்னோட படத்தில் வர்ற பத்திரிகையாளன் நேர்மையானவன்; உண்மையானவன்! அந்த கேரக்டருக்கு உண்மையிலேயே நேர்மையான ஒரு ஆள் எனக்குத் தேவைப்பட்டார். அப்படி ஒருத்தரைப் பிடிக்குறதுக்காக ரெண்டு வருஷம் காத்திருந்தேன்.

அந்தக் காத்திருப்பில் கிடைச்சவர்தான் சசி!” – படத்தின் ஸ்டில்களை லேப்-டாப்பில் ஸ்க்ரோல் செய்தபடி பேசுகிறார் ஜான் ஆண்டனி. ‘மாஸ்டர்ஸ்’ படத்தில் பத்திரிகையாளராக சசிகுமாரையும் போலீஸ் அதிகாரியாக பிருத்விராஜையும் நடிக்கவைத்திருக்கும் மலையாள இயக்குநர்.

” ‘மதுர’ சசியை ரிப்போர்ட்டர் கேரக்டர்ல எப்படிப் பொருத்திப் பார்த்தீங்க?”

‘சசி நடிச்ச படங்களைப் பார்த்திருக்கேன். ஆனா, அவரை நடிக்கவைக்கணும்னு ஐடியா வந்ததே இல்லை. ‘மாஸ்டர்ஸ்’ கதையை ஜின்னு ஆபிரகாம்கிறவர் என்கிட்ட சொன்னார். அதுல வர்ற ரிப்போர்ட்டர் கேரக்டர் என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணுச்சு. ஒரு ரிப்போர்ட்டர் எப்படி இருக்கணும்கிறதுக்கு இந்த கேரக்டர் ஒரு இலக்கணம். ‘நாடோடிகள்’ படத்துல ‘உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு’னு சசி சொல்வார். ‘மிக நேர்மையான கலைஞன் சசி’ன்னு நிறையப் பேர் சொன்னாங்க. சசிகிட்ட கதை சொன்னேன்.

உடனே, ‘ஓ.கே.’ சொல்லிட்டார். ஒரு ஸீன்ல டீக்கடை செட் போட்டு, அங்கே சசி நிக்கிற மாதிரி ஷூட் பண்ணினோம். சசி கழுத்தில் ஐ.டி. கார்டு தொங்கவிட்டேன். ‘ரிப்போர்ட்டர்ஸ்லாம் இப்படி இருக்க மாட்டாங்க சார். ஆனந்த விகடன் ஆபீஸ் வாசல்ல உள்ள டீக்கடையில நான் பார்த்திருக்கேன். அவங்களே சொன்னால் தவிர, அவங்கதான் ரிப்போர்ட்டர்னு நாம கண்டுபிடிக்க முடியாது’னு சொல்லி ரொம்ப கேஷ§வலா வந்து நின்னார். அதான் சசி!”

”இரண்டு ஹீரோக்களை வெச்சுப் படம் பண்ணினா ஈகோ பிரச்னைகள் வருமே?”

”சசி, பிருத்வி ரெண்டு பேருக்கும் ஈகோன்னா என்னன்னே தெரியாது. அவங்க ரெண்டு பேருமே நல்ல கிரியேட்டர்கள். அதனால, அவங்கவங்க கேரக்டரை எப்படி பெர்ஃபெக்ட்டா பண்ணணும்னு அவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. ஸோ… யாருக்கு முக்கியத்துவம்கிற பிரச்னை இங்க வரவே இல்லை!”

”அனன்யா, பியா, மித்ரா குரியன், பார்வதி, நஸ்ரின்னு படத்தில் ஐந்து ஹீரோயின் இருந்தும் சசிக்கு யாரையும் ஜோடியா போடலையே நீங்க?”

”என்னங்க இது… இப்படிலாம் கேள்வி கேட்குறீங்க. சசிக்கு மட்டும் இல்லை. பிருத்விக்கும் இந்தப் படத்தில் ஜோடி இல்லை. நட்பையும் நாட்டு நடப்பையும் ஒருசேர சொல்லப் போறேன். அதனால காதலுக்கு இந்தப் படத்தில் இடம் இல்லை. படத்தில் ஒரே ஒரு பாட்டுதான் இருக்கு.

அதுவும் நட்பைப் பற்றின பாட்டுதான். காதலைத் தவிரவும் சொல்றதுக்கு நிறைய விஷயம் இருக்கு சார். என் படங்களைப் பார்த்துட்டு ஒருத்தனாவது தூங்காம யோசிக்கணும்னு நினைப்பேன். இந்தப் படத்துல அந்த உறுதி இன்னும் அதிகமா இருக்கு!


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty சின்னத்திரை நிகழ்ச்சிக்கு பார்த்திபன் கேட்ட ஒரு கோடி!

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 1:02 pm

சின்னத்திரை டாக் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் பார்த்திபன் ரூ. 1 கோடி சம்பளம் கேட்டதாக வெளியாகியிருக்கும் செய்திதான் இன்றைய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையின் ஹாட் நியூஸ். தினம் தினம் புதிது புதிதாக முளைத்து வரும் சின்னத்திரைகளில் புதுமையான நிகழ்ச்சிகளை புகுத்துவதில் போட்டிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

எப்படியாவது தங்கள் நிறுவனத்தை முன்னணிக்கு கொண்டு வர வேண்டும்; ரசிகர்களை பார்க்க வைத்து விட வேண்டும் என்று டிவி நிறுவனங்கள் போட்டி போட்டி நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன.

அப்படி புதுமையான டாக் ஷோவை நடத்த முடிவு செய்த சில நிறுவனங்கள், அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் பார்த்திபனை அனுகியிருக்கிறது. ஆனால் பார்த்திபன்…. இனிமேல் நம்மை யாரும் தேடி வந்து அழைக்கக் கூடாது என்பதால் கேட்டாரா, அல்லது நிஜமாகவே தேவைப்பட்டதா தெரியவில்லை. ஒரு எபிசோடுக்கு இரண்டு லட்சம் கொடுங்க என்றாராம். ஐம்பது வாரங்களுக்கு தர வேண்டிய பணத்தையும் மொத்தமாக கொடுங்கள் என்று கேட்டது அதைவிட கொடுமை.

பார்த்திபனுக்கு மொத்தமாக ரூ.1 கோடியை கொடுக்க யார்தான் முன்வருவார்கள்? சைலண்ட்டாக இடத்தை காலி செய்து விட்டார்களாம். பார்த்திபன் கேட்ட சம்பளத்தை பார்த்து வாய் பிளந்து நிற்கும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் சிலர், குறைந்த சம்பளத்தில் நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க தயார் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அணுகிக் கொண்டிருக்கிறார்களாம்.





தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால் சூட்டிங் ரத்து!

Post by ந.கார்த்தி Wed Aug 31, 2011 1:02 pm

புதிய படமொன்றில் பணியாற்றும் சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், அப்படத்தின் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடிகர் – நடிகைகள் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சென்னை திரும்பினார்கள்.

சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் ஸெல்வன் நடித்து வரும் புதிய படம் மாயவரம். டைரக்டர் ராம்தேவ் இயக்கும் இப்படத்தின் நாயகியாக இன்பநிலா நடிக்கிறார். வயலார் ராஜேந்திரன் தயாரிக்கிறார்.

மாயவரம் படத்தின் சூட்டிங், மாயவரம், சீர்காழி பகுதிகளில் நடைபெற்று வந்தது. சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். `எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம் என்று தொழிலாளர்கள் கூறினார்கள்.

அவர்களுடன் படஅதிபரும், டைரக்டரும் எவ்வளவோ பேசியும் சமரசம் ஆகவில்லை. இதையடுத்து சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர் – நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்டனர்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் ........ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சினிமா செய்திகள் ........ Empty Re: சினிமா செய்திகள் ........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum