ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை

3 posters

Go down

இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Empty இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை

Post by இளமாறன் Tue Aug 30, 2011 3:22 pm

இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை: விரைவில் அமலுக்கு வருகிறது திருத்தச் சட்டம்

First Published : 30 Aug 2011 02:14:26 AM IST


கருத்தரங்கில் மூளைச் சாவு மற்றும் உறுப்பு தானம் தொடர்பான பயிற்சி கையேட்டை வெளியிட்ட புதுச்சேரி சுகாதார இயக்குநர் டாக்டர் திலிப்குமார் பாலிகா (வலமிருந
புதுச்சேரி, ஆக. 29: சிறுநீரகங்கள் உள்பட முக்கிய உறுப்புகள் தானத்தில் வர்த்தகத்தைத் தடுக்கும் வகையில் இந்தியர்களின் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறவும், வெளிநாட்டினரின் உறுப்புகளை இந்தியர்கள் பெறுவதற்குமான தடை விரைவில் அமலுக்கு வருகிறது.

இதற்காக உடல் உறுப்பு தானத்தில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேறி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் என்.கே. மொகந்தி கூறினார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பு, மத்திய அரசின் சுகாதாரத்துறை, ஜிப்மர் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த "மோகன் பவுண்டேஷன்' (உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பு அமைப்பு) ஆகியவை இணைந்து மனித உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை திங்கள்கிழமை நடத்தின. இதில் டாக்டர் மொகந்தி பேசியது:-

"இப்போது உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான அனுமதி வழங்கும் குழுவின் ஒப்புதலுடன் இந்தியரின் உறுப்புகளை வெளிநாட்டினர் பெற்று மாற்று சிகிச்சை செய்து கொள்ளும் நிலை உள்ளது. திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இதற்கு தடை ஏற்படும்.

இந்தியாவில் மனித உறுப்புகள் தானம் தேவைப்படுவோருக்கும், அதைக் கொடுப்போருக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தியாவில் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறுநீரகங்கள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.5 லட்சமாக இருக்கிறது. ஆனால், ஆண்டுக்கு 4,500 முதல் 5,500 சிறுநீரகங்கள் மட்டுமே உறவினர்கள் மூலமும் தானமாகவும் கிடைத்து சிறுநீரக மாற்று சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இதே போன்று ஆண்டுக்கு 50 ஆயிரம் பேருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 400 பேருக்கு மட்டுமே கல்லீரல் மாற்று சிகிச்சை நடைபெறுகிறது. பொது மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவுக்கு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த மூன்றரை ஆண்டுக்கால விரிவான விவாதத்துக்குப் பிறகு திசுக்கள் தானத்தையும் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கி உடல் உறுப்பு தான சட்டம் திருத்தப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, உறுப்புகள் தானம் செய்வோரை எப்படி அணுக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க உறுப்பு தானம் செய்வோருக்கான ஒருங்கிணைப்பாளர்கள், நரம்பியல் வல்லுநர்கள், சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருக்கு திருத்தப்பட்ட சட்டம் அமலுக்கு வந்தவுடன் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது' என்றார் டாக்டர் மொகந்தி.

இந்த நிகழ்ச்சியில் மோகன் பவுண்டேஷனின் தலைவர் டாக்டர் சுனில் ஷெராஃப் பேசியது:- "உறுப்புகள் தானம் தென்னிந்தியாவில்தான் அதிகம். வட இந்தியாவில் குறைவு. அதிலும் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் இதில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது.

இப்போது மக்களிடம் பொருளாதார வசதி ஏற்பட்டுள்ளது. நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. மேலும் சுகாதார காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு வசதிகள் இருக்கின்றன. இதனால் இந்தச் சிகிச்சை முறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் உறுப்புகளைத் தானமாகப் பெறுவது சவாலாகத்தான் இருக்கிறது. இருப்பினும் முயற்சி செய்தால் பெற முடியும். உறுப்புகள் தானம் செய்வோருக்கான ஒருங்கிணைப்பாளருக்குப் பயிற்சி அளிக்கப் போவதாக இங்கு பேசிய டாக்டர் மொகந்தி கூறினார். "மோகன் பவுண்டேஷன்' சார்பில் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளருக்காக ஓராண்டு டிப்ளமோ படிப்பை இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.

ஆசியாவிலேயே இது போன்ற பயிற்சியை நாங்கள்தான் முதலில் தொடங்கியுள்ளோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறிப்பிட்ட மனிதர்கள் தரமான, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் பவுண்டேஷனின் நோக்கம். அப்படி உறுப்புகள் மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டியையும் எங்கள் பவுண்டேஷன் நடத்திக் காட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 2,000-த்துக்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சைகள் நடைபெறுவதற்கு "மோகன் பவுண்டேஷன்' ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்பட்டுள்ளது' என்றார் டாக்டர் சுனீல் ஷெராஃப்.

சென்னையைச் சேர்ந்த மத்திய சுகாதாரத்துறையின் தமிழ்நாடு- புதுச்சேரிக்கான முதுநிலை மண்டல இயக்குநர் டாக்டர் எஸ்.பழனிவேலு வரவேற்றார். ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கே.எஸ்.வி.கே. சுப்பாராவ், புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் திலிப்குமார் பாலிகா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மூளைச் சாவு அடந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவோரை அடையாளம் கண்டறிதல் மற்றும் பராமரிப்பு என்னும் தலைப்பில் டாக்டர் மேத்யூ ஜோசப், மனித உறுப்புகள் மாற்று சிகிச்சை சட்டம் தொடர்பாக டாக்டர் ஜார்ஜ் குரியன் ஆகியோர் பேசினர். டாக்டர் நிர்மல் ஜாய் நன்றி கூறினார்.
தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Empty Re: இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை

Post by krishnaamma Tue Aug 30, 2011 3:28 pm

தானம் என்கிறபோது யாருக்கு தந்தால் என்ன மாறன்? எனக்குபுரியவில்லைபுன்னகை இப்ப எவ்வளவோ பேர் அமெரிக்கன் சிடிசன் ஆக மாறுகிறார்கள், அவரிகளின் உறவுகள் இங்க இருக்கோம். அப்ப அவளுக்கு ஒரு ப்ராப்ளம் என்றால் நாம உதவக்கூடாதா ? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Empty Re: இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை

Post by இளமாறன் Tue Aug 30, 2011 3:35 pm

புதிய சட்ட திருத்தம் வந்தால் முடியாது என்றே நினைக்கிறேன்
1.உறவினருக்கு கொடுக்கலாம்
2.விற்பனைக்கு மட்டுமே இல்லை
இரத்த தானம் கொடுப்பதும் தவறு ஆகும் என்றே நினைக்கிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Empty Re: இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை

Post by krishnaamma Tue Aug 30, 2011 3:42 pm

இளமாறன் wrote:புதிய சட்ட திருத்தம் வந்தால் முடியாது என்றே நினைக்கிறேன்
1.உறவினருக்கு கொடுக்கலாம்
2.விற்பனைக்கு மட்டுமே இல்லை
இரத்த தானம் கொடுப்பதும் தவறு ஆகும் என்றே நினைக்கிறேன்

அட கிருஷ்ணா, நாள் ஆக ஆக , மனம் விசாலமாகனும், நம்க்கு குறுகுகிறதோ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ஃபோன் வடிவத்தில் உலகமே நம் கைகளில் ஆனால் கைகளை கட்டுகிறார்கள் பாருங்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Empty Re: இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை

Post by இளமாறன் Tue Aug 30, 2011 3:47 pm

//சிறுநீரகங்கள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.5 லட்சமாக இருக்கிறது. ஆனால், ஆண்டுக்கு 4,500 முதல் 5,500 சிறுநீரகங்கள் மட்டுமே உறவினர்கள் மூலமும் தானமாகவும் கிடைத்து சிறுநீரக மாற்று சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இதே போன்று ஆண்டுக்கு 50 ஆயிரம் பேருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 400 பேருக்கு மட்டுமே கல்லீரல் மாற்று சிகிச்சை நடைபெறுகிறது//

இந்தியாவில் இந்தியருக்கே இல்லாத பொது எப்படி வெளி நாட்டு காரருக்கு விற்பது என்பதே இவர்களின் நோக்கம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Empty Re: இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை

Post by Bobshan Tue Aug 30, 2011 3:50 pm

நல்ல நோக்கம்...
Bobshan
Bobshan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

Back to top Go down

இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை Empty Re: இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உடல் உறுப்புகளை தூண்டும் பூர்ண தனுராசனம்
» சீனாவில் ஐபோனுக்காக உடல் உறுப்புகளை விற்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
» உடல் உறுப்புகளை பாதுகாக்க புதிய திரவம் கண்டுபிடிப்பு : இந்திய டாக்டர் சாதனை !
» இறந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை அகற்ற முயன்றபோது கண் திறந்தார்!
»  இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum