ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்திகள் ............

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றைய  செய்திகள் ............ Empty இன்றைய செய்திகள் ............

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:50 pm

எதிர்பார்ப்பு கூடாது: சந்தோஷ் ஹெக்டே கருத்து
பெங்களூரு: லோக்பால் மசோதா தொடர்பாக அதிசயம் ஏதும் நடந்து விடும் என பொது மக்கள் எதிர்பார்க்கக்கூடாது என கர்நாடக மாநில முன்னாள் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். போராட்டம் வாபஸ் பெற்றது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அன்னா குழுவில் இடம் பெற்றிருந்தவரும், கர்நாடக மாநில முன்னாள் லோக் ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது, லோக்பால் மசோதா தொடர்பாக முக்கிய 3 விஷயங்களை ஏற்றுக்கொண்ட பார்லிமென்ட்டை வணங்குவதாகவும், சட்டத்தை நிறைவேற்ற தேவையான காலம் எடுத்துக்கொள்ளப்படும். லோக்பால் மசோதாவில் அதிசயம் ஏதும் நடக்கும் என பொது மக்கள் எதிர்பார்க்க வேண்டாம். லோக்பால் விவகாரத்தில் பார்லிமென்டிற்கு நிறைய அழுத்தம் கொடுத்திருக்கக்கூடாது. லோக்பால்மசோதாவை விரைவில் நிறைவேற்றுவதன் அவசியத்தை பார்லிமென்ட் புரிந்து கொள்ள வேண்டும். இதனை செயல்படுத்துவதன் மூலம் பார்லிமென்டிற்கு பெருமை கிடைக்கும் என கூறினார். மேலும் அவர், வலுவான லோக்பால் மசோதாவை அடைவதற்கு முதல் மைல் கல்லை மட்டுமே கடந்துள்ளோம். மசோதா நிறைவேற இன்னும் காலமாகும். நீங்கள் எதிர்பார்ப்பது போல் இன்றோ, நாளையோ அல்லது அடுத்த மாதமோ நிறைவேறாது. லோக்பால் மசோதாவுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty பிள்ளையார்பட்டியில் ஆக.,31ல் தேரோட்டம்

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:51 pm

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வரும் 31ல் தேரோட்டமும், சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இக்கோயிலில் சதுர்த்தி விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் விநாயகர் வலம் வருவார். இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

தேரோட்டம்: நேற்று, மாலை 5 மணிக்கு யானை முகம் கொண்ட சூரனை விநாயகர் வதம் செய்யும், கஜமுகாசூரசம்ஹாரம் நடந்தது. இன்று மாலை 3 மணிக்கு, தேரோட்டத்திற்கான முகூர்த்தக்கால் ஊண்டப்படும்.

வரும் 31 அன்று காலை 9.20 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், கற்பகவிநாயகர் எழுந்தருள்வார். மாலை 4 மணிக்கு தேரோட்டம்நடக்கும். அதைதொடர்ந்து மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் மூலவர் சன்னதியில் உள்ள கற்பகவிநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty தீயணைப்பு வண்டியை சிறைபிடித்து போராட்டம்

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:51 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் நிறுவனம் தீப்பிடித்தது. இதனையடுத்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். 2 மணி நேர தாமதமாக தீயணைப்பு வாகனம் வந்ததாக புகார் கூறி பொது மக்கள் தீயணைப்பு வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty அரசு தவறு செய்யவில்லை: சல்மான் குர்ஷித்

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:52 pm

புதுடில்லி: அன்னா விவகாரத்தில் தவறு செய்யவில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு சல்மான் குர்ஷித் அளித்துள்ள பேட்டியில், முடிவெடுப்பதில் தவறு நிகழலாம். கடினமாக சூழ்நிலையை சந்திக்கும் போது முடிவெடுப்பதில் தவறு ஏற்படலாம். ஆனால் முடிவெடுப்பதில் தவறாவது தவறானதல்ல என்றார், மேலும், அன்னா விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்யவில்லை எனவும், அன்னா விவகாரம் மிகவும் சிக்கலானது, உணர்ச்சிமயமானது. இதில் நல்ல தீர்வு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty ஐரீன் சூறாவளிக்கு 7 பேர் பலி

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:53 pm

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஐரீன் சூறாவளிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க்கில் வீடு மீது மரம் விழுந்ததில் 11 வயது சிறுவன் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. விர்ஜீனியா மாகாணத்தில் ஒருவரும், வடக்கு கரோலினாவில் 4 பேரும் பலியானார்கள். ஐரீன் சூறாவளி காரணமாக வாஷிங்டன், நியூயார்க், போஸ்டன் ஆகிய நகரங்களில் 65 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி சென்றுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty தடையை மீறிய மீனவர்களுக்கு டீசல் ரத்து

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:53 pm

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்ட ஏழு படகுகளுக்கு டீசல் டோக்கன் ரத்து செய்யப்பட்டது. ராமேஸ்வரம் கடலில் மீன்பாடு குறைந்து வரும் நிலையில் சட்டத்திற்கு புறம்பான மீன்வளத்தை அழிக்கும் இரட்டைமடி மீன்பிடிப்பில் சில மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் புகார் செய்ததை தொடர்ந்து, ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய் உத்தரவின்படி, அதிகாலை மரைன் போலீஸ் ரோந்து படகில் எஸ்.ஐ.,கணேசன், மீன்துறை உதவி இயக்குனர் வீரன், மீன்துறை இன்ஸ்பெக்டர் இளங்கோ ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே கடல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரட்டைமடி வலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் தங்கச்சிமடம் ஹரினாத், ஆல்வின், வேர்கோடு கணேசன், ராமேஸ்வரம் ஆனந்தன், முத்துராமலிங்க தேவர் நகர் கணேசன் உட்பட ஏழு மீனவர்களின் படகுகளை வளைத்துப்பிடித்தனர். படகில் இருந்த வலைகளை பறிமுதல் செய்த மீன்துறை அதிகாரிகள், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் படகுகளுக்கு டீசல் டோக்கன் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty உண்ணாவிரதம் முடிந்தது: காங்கிரஸ் வரவேற்பு

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:55 pm

புதுடில்லி: உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட அன்னாவுக்கு காங்கிரஸ் வரவேற்று தெரிவித்தது. இது அனைவருக்கும் வெற்றி எனவும் கூறியுள்ளது. 12 நாள் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்து கொண்டார். இது குறித்து டில்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஜனநாயகத்திற்கும், அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும் என கூறினார். சமூக ஆர்வலர்களில் வற்புறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்து விட்டதா என்ற கேள்விக்கு, யாருக்கு வெற்றி தோல்வி என்பதை எண்ணிப்பார்க்க கூடாது எனவும் கூறினார்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty காஞ்சியில் இளம்பெண் தீக்குளிப்பு

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:56 pm

காஞ்சிபுரம்: 20 வயது இளம்பெண் தீக்குளிப்பு. காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு இன்று மாலை வந்த 20 வயது இளம்பெண் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவரை உடனே காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அங்க பரபரப்பு நிலவுகிறது.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty அன்னாவுக்கு ஆதரவாக சென்னையில் பேரணி

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:56 pm

சென்னை: வலுவான லோக்பால் மசோதா கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திய அன்னாவின் கோரிக்கை தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அன்னா தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். இதனையடுத்து அன்னாவுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் பேரணி நடைபெறுகிறது. ஆயிரகணக்கானோர் கலந்து கொண்ட இந்த பேரணி மெரீனா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை நடைபெறுகிறது.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty முஷாரப் சொத்துக்கள் பறிமுதல் செய்ய உத்தரவு

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:57 pm

இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் முஷாரப் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து முஷாரப் தலைமறைவானவர் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்குகளையும் முடக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்றைய  செய்திகள் ............ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய  செய்திகள் ............ Empty Re: இன்றைய செய்திகள் ............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum