ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாரி ஸ்டிரைக் வாபஸ்

Go down

லாரி ஸ்டிரைக் வாபஸ் Empty லாரி ஸ்டிரைக் வாபஸ்

Post by Admin Wed Aug 24, 2011 9:21 am

லாரி ஸ்டிரைக் வாபஸ் First24

டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 5 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

5-வது நாளாக வேலை நிறுத்தம்

டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்க கட்டணத்தை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 18-ந் தேதி நள்ளிரவு தொடங்கி, காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்த நிலையில் லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் லாரி உரிமையாளர்களை மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அன்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இணை மற்றும் துணை செயலாளர்களுடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. எனவே மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரி ஜோஷி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் மற்றும் லாரி அதிபர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் மத்திய மந்திரி பங்கேற்காததால், நேற்று டெல்லியில் உள்ள மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சக அலுவலகத்தில் அதன் செயலாளர் உபாத்தியா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் லாரி அதிபர்கள் சார்பில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை மாலை வரை நீடித்தது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

வேலைநிறுத்தம் வாபஸ்

இதைத்தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-

வேலைநிறுத்தம் தொடர்பாக மத்திய தரைவழி போக்குவரத்து துறை செயலாளர் உபாத்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா முழுவதும் மத்திய அரசால் நடத்தப்படும் 94 சுங்க சாவடிகளிலும் அந்தந்த மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் சுங்க கட்டணத்தை குறைக்க அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.

இதேபோல் இன்சூரன்சு பிரிமிய கட்டணம் மற்றும் டயர் விலையை குறைக்கவும் தக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நாங்கள், கடந்த 5 நாட்களாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

லாரி போக்குவரத்து தொடங்கியது

லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று மாலையில் வாபஸ் பெறப்பட்டதால், கடந்த 5 நாட்களாக வெளிமாநிலங்களுக்கு லோடு ஏற்றி ஆங்காங்கே பெட்ரோல் பங்க் மற்றும் தாபா ஓட்டல்களில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிகள் இரவு முதல் இயங்க தொடங்கின.

தினதந்தி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum