ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

+3
ayyamperumal
aathma
கோபி சதீஷ்
7 posters

Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by கோபி சதீஷ் Sun Aug 21, 2011 5:27 pm

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… 5551

எத்தனையோ உண்ணாவிரதங்களை இந்த நாடு பார்த்துவிட்டது.

ஒருமணிநேர உண்ணாவிரதங்களிலிருந்து…. உயிர் பிரியும்வரை இருந்த உண்ணாவிரதங்கள் வரை, படித்தும் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்டாகிவிட்டது.

சில உண்ணாவிரதங்கள் இருப்பவர்களை வைத்தே பிரபலமாகிவிடும். ஒரு நடிகரோ அல்லது நடிகையோ ஒண்ணுக்கு ஒழுங்காக வரவில்லை என்று உண்ணாவிரதம் இருந்தால் கூட…. அதற்கும் பத்தாயிரம் பேர் உட்காருவதற்கு இங்கே தயாராகத்தான் இருக்கிறார்கள். கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் அரசியல் தலைவரும் உடனே அங்கு ஓடிவந்துவிடுவார். இதுதான் நாட்டு நடப்பு.

ஆனால்… கடந்த பத்துவருட காலமாக, மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரம் ஷர்மிளா என்பவரது போராட்டம் மட்டும் இன்னும் வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கிறது.

எதற்காக அந்த உண்ணாவிரதம்? கண்ணீரை வரவழைக்கும் அந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… 4441

நவம்பர் 2000….. அசாம் ரைபிள்ஸ் என்ற இந்திய ராணுவப் பிரிவு, இம்பாலில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அனைவரையும் (ஒரு வயதான கிழவி உட்பட) தீவிரவாதிகள் என்கிற பெயரால் காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டுக் கொன்றது. இந்த்க் கோரப்படுகொலையைக் கண்டித்தும், மணிப்பூரில் அமலில் இருக்கும் ராணுவச் சட்டத்தை விலக்கக் கோரியும் 38 வயதான ஷர்மிளா உண்ணாவிரதம் தொடங்கினார். தற்கொலை முயற்சி என்று அவரைக் கைது செய்தது போலீஸ்.ஆனாலும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா நிறுத்த மறுத்ததால், மூக்குக்குழாய் வழியே கட்டாய உணவு செலுத்தி வருகிறது அரசு. தற்கொலை முயற்சிக் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையே ஒரு வருடம்தான் என்பதால், ஒவ்வொரு வருடம் முடிவதற்கும் சில நாட்கள் முன்பாகவே ஷர்மிளாவை விடுதலை செய்வது மாதிரி செய்துவிட்டு, மீண்டும் கைது செய்துகொள்ளும் சடங்கைக் கடந்த 10 வருடகாலமாக அரசு தவறாமல் செய்துவருகிறது.

மீண்டும் 2004 ல் ராணுவத்தால் ஷர்மிளாவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய மனோரமா என்ற பெண் கற்பழிக்கப்பட்டுக் கொடூரமாக கொல்லப்பட்டதும் நூற்றுக்கணக்கான மணிப்பூர் பெண்கள் ராணுவ அலுவலகம் முன்பு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரையிலான 40 பேர் முழு நிர்வாணமாக ராணுவ அலுவலகம் முன்பு நின்று ‘எங்களையும் பாலியல் வன்முறை செய்து கொல்’ என்று முழக்கமிட்டுக் கதறினர்.

ஆனால்… அந்தக் கதறல்களில் எந்தக் கதறலும், அரசின் காதிலும் விழவில்லை. சமூகப்போராளி என்று சொல்லிக்கொண்டு வருகிற அன்னா ஹசாரேக்களின் காதிலும் விழவில்லை.

‘மணிப்பூரின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது?….. ‘அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வோம்?’ என்பதைவிட, ‘அடுத்த நொடி உயிருடன் இருப்போமா? மகள் கற்பு காக்கப்படுமா? மனைவி வீட்டில்தான் இருப்பாளா?’ என்ற தவிப்புகளை மணிப்பூரில் ஒவ்வொரு தகப்பனின் முகத்திலும், கணவனின் முகத்திலும் காணலாம்! பள்ளிக்கூடங்கள் இல்லை, பேருந்து நிலையங்கள் இல்லை, ரயில் நிலையங்கள் இல்லை என்று ஏகப்பட்டவை இல்லை என்றாலும் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கிறது ராணுவம். ‘இவர்கள் நம்மைப் பாதுகாப்​பதற்கு அல்ல… படுகொலை செய்யவே நிற்கிறார்கள்!’ என்றுதான் ஒவ்வொரு மணிப்பூர்வாசியும் நினைக்கிறார்கள்.

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… 3331

மணிப்பூரும் இந்தியாவுக்குள்தான் இருக்கிறது. ஷர்மிளாவும் மணிப்பூருக்குள்தான் இருக்கிறார். ஆனால், ஒரு சட்ட மசோதாவை எழுதப் போகிற கமிட்டி பற்றிக் கொதித்துப்போய்க் குதிக்கும் அறிவுஜீவிகளுக்கு, சொந்த நாட்டிலேயே நடக்கும் ராணுவக் கொடுமைகளோ, கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பானவை என்பது பற்றியோ இரத்தம் கொதிப்பதே இல்லை.

லஞ்சம் ஊழல் என்று திட்டுவதுதான் இருப்பதிலேயே மிக எளிமையானது; அரசியல்வாதிகளைத் திட்டுவது அதைவிட எளிமையானது. உண்மையில் பார்க்கப்போனால், ஏற்கெனவே ஊழலைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் இருக்கும் சட்டங்களே போதுமானவைதான். சட்டம் போதவில்லை என்பதல்ல பிரச்சினை, அவை நடைமுறைப் படுத்தப்படாமல் இருப்பதுதான் காரணம். ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே போதும், நம்மிடம் உள்ள சட்டங்கள் எல்லாம் எவ்வளவு சிறப்பானவை என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும். தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளே இதற்கெல்லாம் சாட்சி. தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் எதுவுமே புதுச்சட்டங்கள் அல்ல. ஏற்கனவே இருக்கிற சட்டங்கள்தான். செயல்படுத்துவோரும் பழைய அதிகாரிகளேதான்.

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… 2221

ஏன் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் கவனிக்கப்படுவதில்லை? ஏன் அன்னாவின் போராட்டம் கவனம் பெறுகிறது? முழுக்க முழுக்க மீடியாக்கள்தான் காரணம். உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்து ஐ.பி.எல். தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செய்யாமல் இருந்திருந்தால், அவரையும் மீடியா கவனித்திருக்காது. ஒரு பரபரப்பு முடிந்ததும் அடுத்த பரபரப்புக்காகத் தயார் செய்யும் ஆங்கிலச் சேனல்களே செயற்கையாக அன்னாவின் போராட்டத்தை ஊதிப் பெரிதாக்கிக் காட்டின. அன்னாவை தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் ஆதரிக்கிறார்கள் என்று முழங்கின. அவர்கள்தான் கறுப்புப் பணத்தை உற்பத்தி செய்வதில் ஒண்ணாவது நம்பராக இருக்காகூடியவர்கள். அடிமைகளாக இருக்கும் நடுத்தர வர்க்கத்துக்கு ஊழலுக்கு எதிராக மெழுகு வர்த்தி ஊர்வலம் போவது மட்டும்தான் சாத்தியம். லஞ்சம் கேட்கும் ரிஜிஸ்திரார், தாசில்தார், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் எதிர்க்கவும், போராடவும் அவர்களுக்கு முதுகெலும்பு கிடையாது.

ஊழல் எதிர்ப்பைத் திருவிழாவாக, கூட்டு பஜனையாகக் கொண்டாடிவிட்டால் ஆபத்தில்லை பாருங்கள்…. அதுதான் நடக்கிறது.

உயிர் வாழும் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஷர்மிளாவின் போராட்டத்தைவிட…. ஊழல் ஒழிப்புப் போராட்டம் ஒன்றும் பெரிய விஷயமல்ல. உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நாட்டில்…. ஊழல் இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?

நன்றி : http://pusuriyan.wordpress.com
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by aathma Sun Aug 21, 2011 5:35 pm

தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறார் ஷர்மிளா

ஆனால் அவருக்கான நியாயம் கிடக்குமா ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by ayyamperumal Sun Aug 21, 2011 5:39 pm

உயிர் வாழும் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஷர்மிளாவின் போராட்டத்தைவிட…. ஊழல் ஒழிப்புப் போராட்டம் ஒன்றும் பெரிய விஷயமல்ல. உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நாட்டில்…. ஊழல் இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?

இவருக்கு இளைக்க படும் அநீதிக்கும் ஊழல் தான் காரணம் கோபி !

இந்த கட்டுரையாளர் இந்தியர் தானே , இல்லாவிட்டாலும் மனிதர் தானே, இவர் இதை கலை வதற்க்கு வழி ஏதும் கூறியிருக்கிறாரா ?

இவருக்கு சர்மி யின் பிரச்சனை பெரிது. அன்ன விற்க்கு ஊழல் விஷயம் பெரிது. எல்லோரும் ஒரே விசயத்திர்க்காகத்தான் போராடுகிறார்கள். நாமும் அதே விசயத்திற்க்கு தான் அங்கலாய்த்து கொள்கிறோம் .

அது "சுதந்திரத்தின் நோக்கம் தான் "

மற்றபடி அந்த உண்ணாவிரதத்தை கவினிக்காததற்க்கு நாம் அனைவரும் நாண வேண்டும் !

குமரியில் ஒருவன் இருமினால்
இமயத்தில் இருந்து மருந்து கொண்டோடுவோம் ! என்கிற எண்ணம் இன்னும் வரவே இல்லை !
உங்களுக்கு என் சல்யூட் ஒரு நல்ல பதிவிற்காக !


ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by அருண் Sun Aug 21, 2011 7:11 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்து ஐ.பி.எல். தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செய்யாமல் இருந்திருந்தால், அவரையும் மீடியா கவனித்திருக்காது. ஒரு பரபரப்பு முடிந்ததும் அடுத்த பரபரப்புக்காகத் தயார் செய்யும் ஆங்கிலச் சேனல்களே செயற்கையாக அன்னாவின் போராட்டத்தை ஊதிப் பெரிதாக்கிக் காட்டின. அன்னாவை தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் ஆதரிக்கிறார்கள்

கொஞ்சம் யோசிக்க வைக்கிறது பண முதலைகளின் மத்தியில் தான் இன்று மீடியாக்களும் இயங்குகிறது இதை மற்ற வேண்டும் ஷர்மிளா தேவிக்கும் இவர்கள் ஆதரவு கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும் கண்டிப்பாக நீதி கிடைக்கும்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by கோபி சதீஷ் Sun Aug 21, 2011 8:45 pm

அய்யம் பெருமாள் .நா wrote:உயிர் வாழும் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஷர்மிளாவின் போராட்டத்தைவிட…. ஊழல் ஒழிப்புப் போராட்டம் ஒன்றும் பெரிய விஷயமல்ல. உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நாட்டில்…. ஊழல் இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?

இவருக்கு இளைக்க படும் அநீதிக்கும் ஊழல் தான் காரணம் கோபி !

இந்த கட்டுரையாளர் இந்தியர் தானே , இல்லாவிட்டாலும் மனிதர் தானே, இவர் இதை கலை வதற்க்கு வழி ஏதும் கூறியிருக்கிறாரா ?

இவருக்கு சர்மி யின் பிரச்சனை பெரிது. அன்ன விற்க்கு ஊழல் விஷயம் பெரிது. எல்லோரும் ஒரே விசயத்திர்க்காகத்தான் போராடுகிறார்கள். நாமும் அதே விசயத்திற்க்கு தான் அங்கலாய்த்து கொள்கிறோம் .

அது "சுதந்திரத்தின் நோக்கம் தான் "

மற்றபடி அந்த உண்ணாவிரதத்தை கவினிக்காததற்க்கு நாம் அனைவரும் நாண வேண்டும் !

குமரியில் ஒருவன் இருமினால்
இமயத்தில் இருந்து மருந்து கொண்டோடுவோம் ! என்கிற எண்ணம் இன்னும் வரவே இல்லை !
உங்களுக்கு என் சல்யூட் ஒரு நல்ல பதிவிற்காக !

நாட்டில் இது போன்ற பெரிய பிரச்சனைகள் நிறைய இருக்குது. மக்கள் எல்லோரும் நமக்கென்ன என்று ஒதுங்குவதால் இன்னும் பெருகி கொண்டே செல்கிறது. மக்களிடத்தில் தட்டி கேட்க்கும் உரிமை இருக்கிறது. மற்றவர்கள் சொல்லும் சொல்லை சரி என்று கேட்க்கும் மனோபாவம் தான் உள்ளது. இதற்க்கு காரணம் பெற்றோர்கள், கல்வி போன்றவைகளே. தற்போது கல்வி சிறந்த ஊழியனை உருவாக்குகிறது.
"அடிமைகள் ஒருபோது அரசர்கள் ஆக முடியாது. படை வீரர்கள் மட்டுமே அரசர் ஆக முடியும்."
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by rameshnaga Mon Aug 22, 2011 9:39 am

நானும் படித்திருக்கிறேன் ஐரம் ஷர்மிளாவின் போராட்டக் கதையை.
எனக்கு ஒரு வார்த்தையின் பொருள் மட்டும் விளங்கவே இல்லை.
அது "ஜன நாயகம்"... "ஜன நாயகம்" என்றால் எல்லோருக்கும்..எல்லாம்
கிடைக்க வழி செய்வதா? இல்லை...அத்தியாவசியப் பொருள்களில் துவங்கி..,
குறைந்த பட்ச நாகரீகத்துடன் வாழ்வது வரை ...(ஊழலற்று...கட்டைப் பஞ்சாயத்து ...இத்யாதிகள் அற்று ...)எல்லாவற்றிற்கும் ஏதாகிலும்
சுரணை உள்ள (இந்த வார்த்தைக்கு மன்னிக்கவும்..என்னையும் சேர்த்துத்தான்)ஒரு தனி மனிதன் முன்னெடுத்துச் சென்று போராடிப்
பெற்றுத் தருவதுதான் "ஜன நாயகமா"?.
நமது சமூக அமைப்பின் எல்லா சிக்கல்களையும் மீறி எப்பொழுதாவது
சில நக்ஷத்திரங்கள் நமது வானில் உதிக்கின்றன. அவற்றை நாம் கொண்டாடி...சூரியனாக்க வேண்டாம் . நமது சமூக அக்கறையின்மையால்
அவர்களை..நாம் எரி நக்ஷத்திரங்களாக்கி விடுகிறோம்..என்பதுதான் வேதனை. இருபது நாள் ஓடும் ஒரு சினிமாவில் நடிப்பவருக்குக் கிடைக்கக்
கூடிய கவன ஈர்ப்பு..பல வருடங்களாகத் தன் மக்களுக்காகப் போராடி
வரும் ஐரம் ஷர்மிளாவுக்குக் கிடைக்கவில்லை என்பது இந்தியா
வெட்கப் பட வேண்டிய விஷயம். எல்லாமே...வியாபாரமும்..விளம்பரமும்
ஆகி விட்ட உலகில்...ஒரு தனி மனுஷி எதையும் பொருட்படுத்தாமல்
தனது கொள்கையோடு ...அரசை எதிர்த்துப் போராடுவது...என்பது...
"கடவுள் எப்போதாவது பிறக்கிறார்...அவருக்கு இந்த ஜன்மத்தில்
"ஐரம் ஷர்மிளா" என்று பெயர்" என்று சொல்லத் தோன்றுகிறது.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by கோபி சதீஷ் Mon Aug 22, 2011 9:55 am

நமது சமூக அமைப்பின் எல்லா சிக்கல்களையும் மீறி எப்பொழுதாவது
சில நக்ஷத்திரங்கள் நமது வானில் உதிக்கின்றன. அவற்றை நாம் கொண்டாடி...சூரியனாக்க வேண்டாம் . நமது சமூக அக்கறையின்மையால்
அவர்களை..நாம் எரி நக்ஷத்திரங்களாக்கி விடுகிறோம்..என்பதுதான் வேதனை
எல்லோரும் ஒன்றுபட்டால் எல்லாம் முடியும்...
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by Aathira Mon Aug 22, 2011 10:09 am

//அந்த உண்ணாவிரதத்தை கவினிக்காததற்க்கு நாம் அனைவரும் நாண வேண்டும் ! //

அய்யம் பெருமாள் கூறிவது போல நாம் நாணத்தான் வேண்டும். அரிய பதிவை இட்ட உங்களுக்கு ம்னமார்ந்த நன்றி..


ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Aஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Aஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Tஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Hஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Iஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Rஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Aஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by ராஜா Mon Aug 22, 2011 10:46 am

பகிர்வுக்கு நன்றி கோபி சுரேஷ் ,

அய்யம்பெருமாள் , rameshnaga கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன் ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by ayyamperumal Mon Aug 22, 2011 5:17 pm

கோபி சதீஷ் wrote:

நாட்டில் இது போன்ற பெரிய பிரச்சனைகள் நிறைய இருக்குது. மக்கள் எல்லோரும் நமக்கென்ன என்று ஒதுங்குவதால் இன்னும் பெருகி கொண்டே செல்கிறது. மக்களிடத்தில் தட்டி கேட்க்கும் உரிமை இருக்கிறது. மற்றவர்கள் சொல்லும் சொல்லை சரி என்று கேட்க்கும் மனோபாவம் தான் உள்ளது. இதற்க்கு காரணம் பெற்றோர்கள், கல்வி போன்றவைகளே. தற்போது கல்வி சிறந்த ஊழியனை உருவாக்குகிறது.
"அடிமைகள் ஒருபோது அரசர்கள் ஆக முடியாது. படை வீரர்கள் மட்டுமே அரசர் ஆக முடியும்."

இதை ஏற்று கொள்கிறேன் கோபி!

எல்லோரும் சுதந்திர போரில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருந்த நேரத்தில் தான் பங்கெடுத்து கொள்ளாமல் ....."நீங்கள் சில நூறு வருடங்களாய் உள்ள அடிமை தனத்தை ஒழிப்பதற்க்கு போராடுகிறீர்கள். நான் ஆண்டாண்டு காலமாய் உள்ள அடிமை தனத்தை ஒழிக்க போராடுகிறேன் "என்று ஒரு தேசிய தலைவர் கூறியிருக்கிறார்.
இவரை போலத்தான் ஹசாரே , சர்மி, என்று எல்லோரும் போராடத்தான் செய்கிறார்கள். அவர்களின் பார்வைக்கு பிடிக்காத ஒன்றிற்காக .....


இந்திய எல்லை கடந்து என் ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் செய்கிறார்கள். இந்தியா நாட்டின் பிற பகுதி மக்கள் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்களா ? இல்லை ......
ஏனென்றால் அவர்கள் பார்வையில் இந்திய அரசாங்கம் செய்வது சரி !

அப்படித்தான் சர்மி பிரச்சனையும் பார்க்கபடுகிறது.

இன்னும் எழுத்தாளர் அருந்ததி ராய், மருத்துவர் பினாயக்சேன் போன்றவர்கள் எல்லாம் இது போன்று சிறை தண்டனை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இங்கு இருக்கும் தமிழன்
ஈழத்தமிழனை பார்ப்பது போல
வேடிக்கை பார்த்து சோகப்படத்தான் முடிகிறது !


ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!… Empty Re: ஷர்மிளாவுக்கு ஒரு சல்யூட்!…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum