ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீர் கற்கள்

2 posters

Go down

சிறுநீர் கற்கள் Empty சிறுநீர் கற்கள்

Post by சிவா Thu Sep 17, 2009 2:18 pm

சிலருக்கு அடிவயிற்றில் வலப்புறத்தில் வலி தோன்றும். வேறு சிலருக்கு முதுகுவலி ஏற்படும். நடக்கும்போது இந்த வலி அதிகமாகும். சுற்றுப்புறத்தில் பரவும்.

இந்த அடையாளம் இருந்தால், சிறுநீர்க்கல் தோன்றியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இது முற்றினால், சிறுநீர் கழிக்கச் சிரமம் ஏற்படும். சிறுநீர் கழிப்பது தடைபடைவும் கூடும். எனவே இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு நோய்.

முதலிலேயே கண்டுபிடித்து மருந்து சாப்பிட்டால் செலவு இல்லாமல் குணமாகிவிடும்.

சிறுநீர்க் கல் என்பது என்ன?

நமது உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றுவது சிறுநீரகம். இது அவரை விதை வடிவத்தில் இருக்கும். நமது உடலில் சேரும் கழிவுகளை நீரில் கலந்து வெளியேற்றுவது இதன் வேலை.

இந்த சிறுநீரகத்தில் சிறுசிறு கற்கள் தோன்றக்கூடும். இதையே சிறுநீர்க் கற்கள் என்று சொல்கிறோம்.

பொதுவாக இந்த கற்கள் வெள்ளையாக இருக்கும். நவமணிகள் போல் சில கற்கள் வண்ண வண்ணமாக இருக்கும். பஞ்சு போன்ற மென்மையான கற்கள் உண்டு. சில கற்கள் கடினமாக இருக்கும். இந்தக் கடினக் கற்றகள் சிறுநீரகத்தையும், சிறுநீர்ப் பாதையையும் கிழித்துப் புண்ணாக்கிவிடும். அப்போது சிறுநீருடன் கலந்து, இரத்தம் வரும்.

ஏன் தோன்றுகிறது?

சிறுநீர்க் கற்கள் எப்படித் தோன்றுகின்றன?


இவை சுண்ணாம்புக் கற்கள். நமது உடலில் அளவுக்கு அதிகமாகச் சேரும் சுண்ணாம்புச்சத்து, முழுமையாக வெளியேற்றப்படாமல், சிறுநீரகத்தில் தங்கிவிடுகிறது. அதுவே கல்லாக மாறுகிறது.

சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதே இதற்கு முதல் காரணம். பாலில் சுண்ணாம்புச் சத்து அதிகம். கீரைகளில் சுண்ணாம்புச்சத்து மிகுதி. இவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே?

வேலை பார்க்கும் சிலர் சிறுநீரை அடக்கிக் கொண்டிருப்பார்கள். இதனாலும் சிறுநீர்க்கல் தோன்றும்.

சிறுநீர் தாராளமாகப் போகும்படி நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால், கழிவுப் பொருட்கள் சிறுநீரகத்தில் தங்கி, கல்லாக இறுகிவிடும்.

சில மருந்துகளின் பக்கவிளைவாகவும் சிறுநீர்க் கல் தோன்றும்.

மது குடிப்பதும் ஒரு காரணம். அடிக்கடி இறைச்சி சாப்பிடுவது, நிறைய மசாலா சேர்த்துக்கொள்ளுவது ஆகியவையும் காரணம்.

அறிகுறி

சிறுநீர்க் கல் என்பது சிறுநீரகத்தில் தோன்றக்கூடியது. வெளியில் தெரியாது. எனவே, நமக்குத் தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கும்.

முதுகில் வலி தோன்றும். இது இடுப்புக்கு வந்து, அடிவயிற்றில் வலிக்கும். நடக்கும்போது, மாடி ஏறும்போது வலி அதிகமாகும்.

சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். சொட்டுச் சொட்டாக விழும். சிலருக்கு அடியோடு அடைத்துக் கொள்ளும். சிலவேளை சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்.

இந்த அடையாளங்களைக் கொண்டு, சிறுநீர்க் கல் தோன்றியிருக்குமோ என்று சந்தோகப்படலாம். எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் எடுத்து, உறுதி செய்துகொள்ள முடியும்.

கரைக்க முடியும்

தொடக்க நிலையில் சிறுநீர்க் கற்களைக் கரைப்பது எளிது.

மாத்திரைகள் கொடுத்தே மருத்துவர்கள் கரைத்துவிடுவார்கள்.

வீட்டு வைத்தியமும் உண்டு. நாள்தோறும் காலையில் வாழைத்தண்டு அல்லது முள்ளங்கிச் சாறு எடுத்து, அரை தம்ளர் குடிக்க வேண்டும்.

வாழைத் தண்டு அல்லது முள்ளங்கி சாம்பார் வைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இளநீர் குடிக்கலாம். வெள்ளரிக்காய் தின்னலாம். நன்னாரி சர்பத் அல்லது கசாயம் குடிக்கலாம் எல்லாவற்றையும்விட, நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். கற்கள் கரைத்து, சிறுநீரில் வெளியேறிவிடும்.

கற்கள் நன்கு வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையில், உடைக்க வேண்டியிருக்கும். அல்லது, அறுவை செய்து எடுக்க வேண்டியிருக்கும். இதை மருத்துவர் பார்த்துக்கொள்ளுவார்.

நிறையத் தண்ணீர் குடியுங்கள். சிறுநீரை அடக்காமல் கழியுங்கள். சிறுநீர்க் கல் தோன்றாது.


சிறுநீர் கற்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறுநீர் கற்கள் Empty Re: சிறுநீர் கற்கள்

Post by பிரகாஸ் Thu Sep 17, 2009 3:42 pm

நல்ல தகவல் நன்றி சிவா

சுகஜீனத்தில் இது பெரிய கொடுமையானது என்னது மாமாவுக்கு இருக்கிறது அவரின் கஷ்டம் பார்க்கிறேன்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum