ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?

2 posters

Go down

ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே? Empty ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?

Post by கேசவன் Mon Aug 01, 2011 9:49 am

2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பங்களாதேஷைச் சேர்ந்த கிராமின் வங்கியின் நிறுவனர் முகமது யூனுஸ் அப்போது ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார் – “நான் உலகமயமாக்கலை ஆதரிக்கிறேன். இது தான் ஏழைகளுக்கான சரியான வாய்ப்பை வழங்குகிறது என்று கருதுகிறேன். எமது வங்கியின் குறுங்கடன்களின் மூலம் ஏழ்மையை அறவே ஒழித்து விட முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். ஏழ்மை ஒழிப்பு ஒன்று தான் தீவிரவாதப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று கருதுகிறேன்”

குறுங்கடன்களின் முன்னோடி என்று கருதப்படுபவர் யுனூஸ். அவரது கிராமின் வங்கி வழங்கிய குறுங்கடன்கள் மூலம் பங்களாதேஷில் பலரை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தியிருக்கிறார் என்றும், ஏழ்மை ஒழிப்புக்கு இது தான் மிகச் சிறந்த வழியென்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ ஊடகங்கள் இவரை போற்றிப் புகழ்ந்து வந்தன. கிராமின் வங்கியின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளால் கவரப்பட்டு, இப்போது சர்வதேச அளவில் பல்வேறு வங்கிகளும் ‘வறுமை ஒழிப்பில்’ குதித்துள்ளன. நமது மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரிஷி மூலமும் இதுதான்.

பன்னாட்டு வங்கிகளுக்கு உலக ஏழைகள் மேல் ஏற்பட்ட இந்த திடீர் பாசத்தின் மதிப்பு மட்டும் சுமார் 270 லட்சம் கோடிகள் (60 billion USD) என்று டெக்கான் க்ரானிக்கலில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இவர்கள் ஆப்ரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் வறுமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டு ஏழைகளை கடைத்தேற்றுவதில் மும்முரமாக இருப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் சொல்கின்றன.

தனிநபர்களுக்கோ அல்லது சுய-உதவிக் குழுக்களுக்கோ சிறிய அளவிலான தொகையைக் கடனாகக் கொடுத்து, அவர்களை சுயதொழில் செய்ய ஊக்குவிப்பதன் மூலம், அவர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவது தான் குறுங்கடன்களின் நோக்கம் என்றும், ஏற்கனவே இதை பங்களாதேஷில் சாதித்துக் காட்டியது தான் கிராமின் வங்கியின் சாதனை என்றும் ஊடகங்கள் சொல்கின்றன. இந்த வகையில் வறுமையை ஒழித்த சாதனைக்காகத் தான் மொஹம்மத் யுனூஸுக்கு நோபல் பரிசு வழங்கபட்டது.

ஆனால் எதார்த்தத்தில் நிலவரங்கள் முற்றிலும் வேறு கதையைச் சொல்கின்றன.

மே மாத மத்தியில் பங்களாதேஷில் இருந்து வெளியாகும் ‘ஷப்தஹிக் 2000′ என்கிற ஏடு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. குறுங்கடன் எனும் பெயரில் சுமார் 30 – 40 சதவீதம் வரை அநியாய வட்டி விதிக்கும் கிராமின் வங்கி, தவணையைத் திருப்பிச் செலுத்த இயலாத ஏழைகளை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் அப்படியும் தவணை தரமுடியாமல் தவிப்பவர்களின் கால்நடைகளைக் கவர்ந்து வருவதையும் பல ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. மேலும், ஹிலாரி கிளின்டனின் பெயரில் ஹிலாரி ஆதர்ஷா என்கிற திட்டத்தைத் துவங்கிய கிராமின் வங்கி, ரிஷி பால்லி எனும் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கேயுள்ளவர்களுக்கு குறுங்கடன்கள் வழங்கி அவர்கள் வாழ்நிலைமைகளை முன்னேற்றி அந்தக் கிராமத்தையே ஒரு முன்னுதாரணமான கிராமமாகத் தாங்கள் மாற்றி விட்டதாக கிராமின் வங்கி பீற்றிக் கொண்டிருந்தது.

ஆனால் உண்மையில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த வழியில்லாமல் அக்கிராமத்தை விட்டே பலரும் ஓடியிருக்கிறார்கள் என்றும் எஞ்சியவர்கள் பசியாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் விபச்சாரத்தில் இறங்க வேண்டிய நிர்பந்தத்தையும் கிராமின் வங்கியின் கந்து வட்டிக்கடன்கள் உண்டாக்கியதையும் ஷப்தஹிக் அம்பலப்படுத்தியது.

இது கிராமின் வங்கியின் கதை மட்டுமல்ல. நைஜீரியாவில் கிராமின் வங்கியைப் போன்றே குறுங்கடன் வழங்கும் LAPO (Lift above poverty organization) என்கிற வங்கி 100 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. மெக்சிகோவின் கம்பார்டமோஸ் என்கிற குறுங்கடன் வங்கியோ 70 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. தமது முதலீடுகளை ‘சமூக முதலீடு’ என்று கூறிக் கொள்ளும் இவ்வங்கிகள், எதார்த்தத்தில் கார்பொரேட் கந்து வட்டி கும்பலாகத் தான் செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவின் கிராமப்புரங்களில் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு வலுவான வலைப் பின்னலை ஏற்படுத்தி ஆழ ஊடுருவியிருக்கும் என்.ஜி.ஓக்கள் மூலம் கோடிக்கணக்கானோருக்கு இது போன்ற குறுங்கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட சுயதொழில் துவங்க இந்தக் கடன்கள் பயன்படும் என்று சொல்லப்பட்டாலும், உலகமயமாக்கலின் விளைவாய் கைவினைப் பொருட்களுக்கென்று சந்தையே இல்லாத ஒரு எதார்த்த நிலையில், இது அவசர ஆத்திரத்திற்கும் அத்தியாவசிய மருத்துவச் செலவுகளுக்குமே பயன்படுகிறது. திருப்பிச் செலுத்த இயலாத அநியாய வட்டிக்குத் தரப்படும் இக்கடன்களை வசூலிக்க குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் அடியாட்களையே பயன்படுத்துகிறார்கள்.

இரக்கமற்ற இந்த கார்பொரேட் கந்து வட்டி கும்பலின் கொடுமைகளையும் அதனால் விளைந்த அவமானங்களையும் தாங்க முடியாமல் ஆந்திர மாநிலத்தில் மட்டுமே 54 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இது அரசு காட்டும் கணக்கு தான் – எனவே உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தவணை கட்டமுடியாத ஒருவரின் 16 வயதே நிரம்பிய பெண்ணை விபச்சாரம் செய்தாவது பெற்றோர் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தியிருக்கிறார்கள். அவமானம் தாளாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏழைகளைக் கசக்கிப் பிழிவதன் மூலம் ஏற்பட்ட குறுங்கடன் சந்தையின் அபரிமித வளர்ச்சியைக் கண்டு நாவில் எச்சில் ஊறிய சர்வதேச நிதிமூலதன கும்பலும் இப்போது இத்துறையில் வலுவாகக் காலூன்றியிருக்கிறது. LAPO அமைப்பின் பங்குதாரராக டச்சு வங்கி, கால்வர்ட் பவுன்டேஷன் போன்ற நிதிமூலதன முதலைகளே இருக்கிறார்கள். இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் உலகைக் கவ்விய சர்வதேசப் பெருமந்தத்தை அடுத்து, தாம் சூதாடிய களங்களையெல்லாம் சூரையாடி நாசப்படுத்திய நிதிமூலதனச் சூதாடிகள் இப்போது ஏழை நாடுகள் மீதும் வறியவர்கள் மீதும் கண்பதித்திருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, விவசாயப் பொருட்களின் ஊகபேர வர்த்தகம், கனிமச் சந்தையின் ஊகபேர வர்த்தகம் என்று ஒவ்வொரு துறையையும் பெரும் வெட்டுக்கிளி கூட்டம் போல் தாக்கும் நிதிமூலதன சூதாடிகள், ஒவ்வொன்றாக நிர்மூலமாக்கி விட்டிருக்கிறார்கள். இந்தக் கும்பலின் லாபவெறியினால் நிர்மூலமாகி விட்ட ரியல் எஸ்டேட் பங்குச்சந்தை மற்றும் பிற ஊகபேர வர்த்தகச் சந்தைகள் அதிலிருந்து மீண்டெழும் வழி தெரியாமல் தவிக்கின்றன. இப்போது அனைத்தையும் கடந்து தமது நேரடி இலக்காக மூன்றாம் உலக நாடுகளையும் ஏழைகளையும் மாற்றியிருக்கிறார்கள். சர்வதேச நிதிமூலதனம் ஒரு சுருக்குக் கயிறு போல மொத்த உலகையும் இறுக்கி கொத்துக் கொத்தாய் அப்பாவி ஏழை மக்களைக் கொன்று குவித்து வருவதைத் தான் முதலாளித்துவ ஊடகங்கள் ஏழ்மை ஒழிப்பு என்று அலங்காரமான வார்த்தைகள் மூலம் நம்மிடம் பசப்புகின்றன.

குறுங்கடன்கள் மூலம் ஏழ்மையை ஒழிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்கள் எதார்த்தத்தில் ஏழைகளையே ஒழித்துக் கட்டுகிறார்கள் என்பது இப்போது பட்டவர்த்தனமாக அம்பலமாகியிருக்கிறது. மூலதனத்திற்கு எல்லைகள் இல்லை என்பது தான் உலகமயமாக்கலின் அடிப்படை என்கிறார்கள் முதலாளித்துவதாசர்கள்; அதனால்தான் அதற்கு இதயமும் இல்லை என்பதை இச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

நண்பர்களே இந்த யூனூஸ் நோபல் பரிசு வாங்கிய போது வறுமை ஒழிப்பு புரட்சி என்று பிரம்மாண்டமான விளம்பரத்தை உலக ஊடகங்கள் கொடுத்திருந்தன. இந்தியாவிலும் அதே மாதிரி புரட்சியை கொண்டு வரவேண்டுமென்று அப்துல் கலாம் முதல் அண்ணா ஹசாரே வரை பலரும் பிதற்றியிருக்கக் கூடும். ஆனால் இறுதியில் இந்த அமைதியான ஏழ்மை ஒழிப்பு புரட்சியின் முகம் அம்பலமாகியிருக்கிறது. இனி நோபல் பரிசு என்றால் உடனே வாய் பிளக்காமல் இருக்கவாவது அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கம் முயலுமா?
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே? Empty Re: ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?

Post by சோழன் Mon Aug 01, 2011 11:02 am

சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!


என்றும் ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே? 599303 அன்புடன்,
சோழவேந்தன் ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே? 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum