ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

4 posters

Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by krishnaamma Sun Jul 31, 2011 3:44 pm


ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீதடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்'

வேங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள சுலோகத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக "வைகுண்டம்கூட வேண்டாம்'' என்று முடிவு செய்த திருமால், திருமலையில் சுவாமி புஷ்கரணி என்கிற குளத்தின் கரையில் எழுந்தருளினார் என்பது இதன் பொருள். அதேபோல் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் தேவியான பூமிப்பிராட்டி, "வைகுண்ட வான்போகம்கூட வேண்டாம்' என்று பெரியாழ்வாரின் திருமகளாய், ஸ்ரீஆண்டாளாய், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள் என்பார் மணவாள மாமுனிகள்.



கலியுகாப்தம். நள வருடம், ஆடி மாதம், எட்டாம் தேதி, வளர்பிறை பஞ்சமி திதியில், செவ்வாய்க் கிழமையன்று, பூர நட்சத்திரத்தில், துலா லக்னத்தில் அவதரித்தாள் ஆண்டாள். தனது தந்தையாராகிய பெரியாழ்வாரையே குருவாகக்கொண்டு கண்ணபிரானிடம் பக்தி செலுத்தி, பரமனாகிய ஸ்ரீரங்கநாதனையே மணவாளனாக அடைந்தாள்.

வால்மீகி முனிவர் ஸ்ரீமத் ராமாயணத்திலே ""உயர்ந்த வேதமே ராமாயணமாகவும் அவ்வேதம் காட்டுகின்ற பரம்பொருள் ஸ்ரீராமனாகவும் அவதரித்தனர்'' என்கிறார். அவ்வகையில் பூமிப்பிராட்டியானவள் ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்தது போல, உபநிடதங்கள் எல்லாம் திருப்பாவையாக அவளால் சொல்லப்பட்டது. அதை இவ்வாறு குறிப்பிடுகிறார் வைணவ ஆசாரியர் சுவாமி பெரியவாச்சான் பிள்ளை... "பிராட்டி ஆண்டாளானாப் போல உபநிஸத்து தமிழானபடி' என்கிறார் அவர். ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையின் பெருமை அத்தகையது. ""திருப்பாவையில் உள்ள முப்பது பாடல்களையும் தினமும் பாடுகிறவர்கள் திருமாலின் அருளால் நீங்காத செல்வத்தைப் பெற்று இன்பமடைவார்கள்'' என்று ஸ்ரீஆண்டாளே திருப்பாவையின் முடிவில் குறிப்பிடுகிறாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள், அழகான புன்முறுவலோடு காட்சியளிக்கிறாள். சாயக் கொண்டை, மூன்று வளைவுகளோடு கூடிய திருமேனி, கையிலே அழகிய கிளி என்று அழகிய மணவாளனான ஸ்ரீரங்கமன்னாருடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் ஆண்டாளின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாளுக்காக ஸ்ரீரங்கநாதன், ரங்கமன்னாராக ராஜகோபாலனாக கண்ணனாக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீவைகானஸ ஆகம விதியின்படி ராஜகோபாலனுக்கு வலதுபுறம் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளியுள்ளதால் மஹாலட்சுமியின் அவதாரமான ஸ்ரீருக்மணி பிராட்டியின் அம்சமும் உடையவளாகிறாள். ஆக, கருணையே வடிவமான மஹாலட்சுமியின் அம்சத்துடனும், புராணத்தின்படி பொறுமையே வடிவமான பூமிப் பிராட்டியின் அம்சத்துடனும், தன்னையே கோபிகையாக ராதையாக எண்ணி பக்தி செய்ததால் அன்பே வடிவமான, நீளாதேவியான ராதையின் அம்சத்துடனும் ஸ்ரீஆண்டாள் இவ்வூரில் எழுந்தருளியுள்ளது மிகவும் சிறப்பானது.

ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மாலையை புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின்போது திருப்பதிப் பெருமாளும், சித்ரா பௌர்ணமியன்று மதுரையில் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஸ்ரீகள்ளழகரும், தினமும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீவடபத்ரசயனரும் அணிந்து அழகு கொள்கிறார்கள் என்பது ஆண்டாளின் மற்றொரு பெருமை.

ஸ்ரீஆண்டாளின் அவதார உற்ஸவமான ஆடிப்பூரப் பெருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் கடந்த 25ஆம் தேதி (ஆடி மாதம் 9ஆம் தேதி) கொடியேற்றம் தொடங்கியது. 02.08.2011ஆம் தேதி வரை மிகவும் சிறப்பாகத் திருவிழா நடக்கிறது. குறிப்பாக ஐந்தாம் திருநாள் காலை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாஸôசனமும், இரவு ஐந்து மணிக்கு கருட சேவையும், ஏழாம் திருநாளன்று மாலை ஸ்ரீஆண்டாளின் திருமடியிலே ஸ்ரீரங்கமன்னார் சயனித்திருக்கும் திருக்கோலமும், ஒன்பதாம் நாள் ஸ்ரீ ஆண்டாளின் பிறந்த தினமான ஆடிப்பூரத்திலே ஸ்ரீஆண்டாளும் ரங்கமன்னாரும் திருத்தேரில் பவனி வரும் உற்ஸவமும் மிகவும் சிறப்பானவை.

பக்தர்கள் இந்த ஆடிப் பெருவிழாவிலே ஸ்ரீஆண்டாள் - ரங்கமன்னார் திவ்ய தம்பதியை தரிசனம் செய்தல் மேன்மைக்கு வழிவகுக்கும். நல்லன நடந்தேறும். "திருஆடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே' என வாழ்த்தி ஆண்டாளம்மையை வணங்குவோம்.

- ஸ்ரீவில்லிபுத்தூர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty Re: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by krishnaamma Sun Jul 31, 2011 3:47 pm

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Andalfull


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty Re: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by krishnaamma Sun Jul 31, 2011 3:51 pm

இந்த வருடம் ஆடிப்பூரம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வருகிறது புன்னகை

அன்று திவ்யமாய் சக்கரை பொங்கல் செய்து ஆண்டாளை வழிபடுங்கள் :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty Re: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by சதாசிவம் Sun Jul 31, 2011 4:13 pm

மிக பயனுள்ள தகவல்
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! 677196 ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! 677196 ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! 677196


சதாசிவம்
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty Re: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by சதாசிவம் Sun Jul 31, 2011 4:58 pm

தமிழ் நாட்டின் அரசு சின்னத்தில் இருப்பது இந்த ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரம் தான் , அற்புதமான கலைப் படைப்பு. அங்கு உள்ள மன்மதன், ரதி சிலை மிக அருமையாக வடிக்கப்பட்டிருக்கும்

காணவேண்டிய அற்புதமான திவ்ய தேசம் இது.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்த ஆண்டாள் திருத்தலம் வந்து தரிசனம் செய்து, ஆண்டாள் திருக்கையில் உள்ள தழைகளால் செய்த கிளியை அர்ச்சனை செய்து பெற்றுக் கொண்டால் ஒரு சில மாதங்களில் அவர்களின் வேண்டுதல் நிறை வேறும் என்பது கண் கண்ட உண்மை.


சதாசிவம்
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty Re: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by மகா பிரபு Sun Jul 31, 2011 5:13 pm

நன்றி கிருஷ்ணம்மா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty Re: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 8:48 pm

krishnaamma wrote:இந்த வருடம் ஆடிப்பூரம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வருகிறது புன்னகை

அன்று திவ்யமாய் சக்கரை பொங்கல் செய்து ஆண்டாளை வழிபடுங்கள் :வணக்கம்:

இந்த டீலிங் எனக்கு பிடிக்கலை சுமதி... பைத்தியம்

சக்கரப்பொங்கல் செய்து குவைத்துக்கு பார்ஸல் அனுப்புங்கோ நான் வளையல் மாலை செய்து வெச்சு நீங்க அனுப்புற பொங்கல் வெச்சு ஸ்வாமி கும்பிடுறேன்....

நல்லவேளை தகவல் தந்துட்டீங்க சுமதி அம்மாக்கிட்ட இருந்து தப்பிச்சேன்.....எல்லா ஆடிப்பூரம் அன்றும் வினாயகருக்கு வளையல் மாலை சார்த்தி என்ன வேண்டிக்கிறோமோ அது நடக்கும் என்பது ஐதீகம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty Re: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by krishnaamma Tue Aug 02, 2011 9:02 am

சதாசிவம் wrote:தமிழ் நாட்டின் அரசு சின்னத்தில் இருப்பது இந்த ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரம் தான் , அற்புதமான கலைப் படைப்பு. அங்கு உள்ள மன்மதன், ரதி சிலை மிக அருமையாக வடிக்கப்பட்டிருக்கும்

காணவேண்டிய அற்புதமான திவ்ய தேசம் இது.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்த ஆண்டாள் திருத்தலம் வந்து தரிசனம் செய்து, ஆண்டாள் திருக்கையில் உள்ள தழைகளால் செய்த கிளியை அர்ச்சனை செய்து பெற்றுக் கொண்டால் ஒரு சில மாதங்களில் அவர்களின் வேண்டுதல் நிறை வேறும் என்பது கண் கண்ட உண்மை.

ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரம் இரண்டு புறமும் ஒரே போல் இருக்குமாம். நான் எப்பவோ சின்ன வயதில் பார்த்தது, சரியாக நினைவில் இல்லை புன்னகை ஒரு முறை போகணும். ஆனால் நீங்கள் சொன்ன பூஜை விவரம் எனக்கு தெரியாது. விவரத்துக்கு ரொம்ப நன்றி புன்னகை நன்றி நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty Re: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by krishnaamma Tue Aug 02, 2011 9:05 am

மஞ்சுபாஷிணி wrote:
krishnaamma wrote:இந்த வருடம் ஆடிப்பூரம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வருகிறது புன்னகை

அன்று திவ்யமாய் சக்கரை பொங்கல் செய்து ஆண்டாளை வழிபடுங்கள் :வணக்கம்:

இந்த டீலிங் எனக்கு பிடிக்கலை சுமதி... பைத்தியம்

சக்கரப்பொங்கல் செய்து குவைத்துக்கு பார்ஸல் அனுப்புங்கோ நான் வளையல் மாலை செய்து வெச்சு நீங்க அனுப்புற பொங்கல் வெச்சு ஸ்வாமி கும்பிடுறேன்....

நல்லவேளை தகவல் தந்துட்டீங்க சுமதி அம்மாக்கிட்ட இருந்து தப்பிச்சேன்.....எல்லா ஆடிப்பூரம் அன்றும் வினாயகருக்கு வளையல் மாலை சார்த்தி என்ன வேண்டிக்கிறோமோ அது நடக்கும் என்பது ஐதீகம்...

பொங்கல் தானே அனுப்பிட்ட போச்சுபுன்னகை அது என்ன வளையல் மாலை? எனக்கும் சொல்லுங்கோ. நாங்க சாதாரணமாய் ஆண்டாள் கோவில் அல்லது அம்மன் கோவில் களில் பணம் காட்டுவோம் அல்லது வளை வாங்கி தருவோம். அவ்வா அம்மாள் காலடி இல் வைத்து தருவா, நீங்க சொல்வது புதிதாய் இருக்கு.

விவரமாக சொல்லுங்கள் , மாலை வரை டைம் இருக்கு முடிந்தால் நானும் போடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! Empty Re: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum