ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

+10
ரா.ரமேஷ்குமார்
செய்தாலி
ரபீக்
தே.மு.தி.க
sadiqaasha
தாமு
அதி
ரஞ்சித்
balakarthik
dsudhanandan
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by dsudhanandan Mon Jul 25, 2011 2:30 pm

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! - தாமுவின் பதிவைப் படித்தேன்... இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...


பெண்னை ஏமாற்றுவதும், பெண் ஆணை ஏமாற்றுவதும் இந்த உலகில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மொத்தத்தில் மனிதம் செத்துக்கொண்டு இருக்கிறது..

அவன் பெயர் பரத், இருப்பது மதுரை. **** தனது பிளாக்கில் கதை, கவிதை, ஜோக்ஸ், கட்டுரை என கலந்து கட்டி பதிவுகள் போடுவார்.. தனது ஃபோட்டோவை பப்ளிக்காக புரோஃபைல்லில் போட்டிருக்கிறார். ஃபேஸ் புக்கிலும் தன் ஃபோட்டோ,மெயில் ஐ டி எல்லாம் ஓப்பனாக பகிர்ந்திருக்கிறார்.

பரத் இவரது பிளாக்கில் ஆரம்பத்தில் எல்லா பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு சாதாரண வாசகனாக அறிமுகம் ஆகி இருக்கிறான்..

**** திருமணம் ஆனவர், வயது 34 . பரத் திருமணம் ஆகாதவன், வயது 29. படைப்புகளை பற்றி பாராட்டி ஆரம்பத்தில் தனி மெயிலில் பகிர்ந்திருக்கிறான்.

பாராட்டுக்கு மயங்காத படைப்பாளியும், ஊதிய உயர்வு கேட்காத உழைப்பாளியும் உலகில் இல்லை என்ற தத்துவத்திற்கு ஏற்ப **** நல்ல ஒரு தோழியாக பழகி இருக்கிறார். பரத் ஆரம்பத்தில் அக்கா என்றே அழைத்து வந்திருக்கிறான்..

பரஸ்பரம் இருவரும் செல் ஃபோன் நெம்பர், ஃபோட்டோக்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.4 மாதங்கள் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் சாதாரணமாக இவர்கள் நட்பு வளர்ந்திருக்கிறது..

4வது மாத முடிவில் “ அக்கா, உங்களை நேரில் சந்திக்க ஆசையாக இருக்கு, எங்கே ,எப்போ பார்க்கலாம்? என கேட்டிருக்கிறான்.

**** தனது வீட்டு அட்ரஸ் கொடுத்து குறிப்பிட்ட தேதியில் மாலை 6 மணிக்கு வரச்சொல்லி இருக்கிறார். தனது கணவரிடமும் இப்படி ஒரு நண்பர் இருப்பதாகவும் வரப்போவதாகவும் சொல்லி விட்டார்.

இங்கே தான் பரத் தன் குயுக்தி மூளையை பயன் படுத்தி இருக்கிறான். **** சொன்ன அட்ரஸ்க்கு காலையில் 9 மணிக்கே போய்ட்டான்.. வீட்டுக்கு போகாமல் தெருவோரம் நின்று வேவு பார்த்திருக்கிறான். **** கணவர் 9.30 க்கு வீட்டை விட்டு ஆஃபீஸ் கிளம்பியதை பார்த்து விட்டு எதேச்சையாகப்போவது போல் 10 மணிக்கு வீட்டுக்கு போய் இருக்கிறான்..

ஏன் இவன் மாலையில் வராமல் காலையில் வந்தான்? என்ற சந்தேகக்கேள்வி மனதில் தொக்கி நின்றாலும் **** அவனை வரவேற்று ஹாலில் உட்கார வைத்தார். கிச்சன் ரூமில் போய் காபி போட்டு வருவதற்கு அவர் உள்ளே போனதும் பரத் பட பட என்று ஹால், பெட்ரூம், கிச்சன் ரூம் என ஃபோட்டோக்களாக எடுத்து தள்ளி விட்டான். (இந்த மேட்டர் பின் போலீஸ் விசாரணையில் அவனே ஒப்புக்கொண்டு சொன்ன வாக்குமூலம்)

**** கிச்சனில் காபி போடுவதை பின்னால் இருந்து அவருக்கே தெரியாமல் ஃபோட்டோ எடுத்துக்கொண்டான் பரத். பின் ஏதும் தெரியாதவன் போல் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான். **** ஹாலுக்கு வந்து காபி குடுத்ததும் காபி குடித்துக்கொண்டே 30 நிமிடம் பேசி இருக்கிறார்கள்.

பின் பாத்ரூம் போகனும் என்று அவரிடம் சொல்லி பாத்ரூம் போய் அங்கேயும் சில ஸ்நேப்ஸ் எடுத்துக்கொண்டான் பரத். பின் **** யிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டான்.. வேறு எந்த தவறான முயற்சியோ, மோசமான பார்வையோ காட்டாமல் நல்லவனாகவே நடந்து கொண்டான்....

பிறகு 10 நாட்கள் கழித்து பரத் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தான்..

அக்கா என அழைப்பதை கட் பண்ணி பெயர் சொல்லி அழைத்திருக்கிறான்.. அவரது உடல் அழகை ஆபாசமாக வர்ணித்து மெயிலில் கடிதம் அனுப்பி இருக்கிறான்..

டேய். என்னடா இது? நல்லாதானே இருந்தே? உனக்கு என்னாச்சு? நான் கல்யாணம் ஆனவ, உன்னை விட 5 வயது சீனியர், உனக்கு அக்கா முறை.. ஆகுது. இனியும் இது போல் பேசுவதாக இருந்தால் நம் ஃபிரண்ட்ஷிப் கட் பண்ணிக்கலாம்”

என்று வார்னிங்க் பண்ணி இருக்கிறார் **** ...

ஆனால் அவன் அதை சட்டை செய்யவில்லை.. தொடர்ந்து பாலியல் ரீதியில் மெயில் அனுப்பி இருக்கிறான்.. (ஒன் சைடு மட்டும்.. **** நோ ரிப்ளை)

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த **** தன் மெயிலை மெயில் ஐ டி யை மாற்றி விட்டார். தன் செல் ஃபோன் நெம்பரையும் லாக் பண்ணி புது நெம்பர் வாங்கிக்கொண்டார்.

தனது இரு வழிகளும் தடை பட்டதும் பரத்துக்கு செம டென்ஷன் ஆகி விட்டது.

**** யின் பிளாக்கில் போய் **** யும், பரத்தும் தாம்பத்ய உறவு கொண்ட மாதிரி மிக ஆபாசமான நடையில் கதை போல ஒரு பெரிய கமெண்ட்டை அவரது 217 போஸ்ட்களிலும் ஒரே நேரத்தில் போட்டு விட்டான்.. கமெண்ட் மாடரேஷன் வைக்காத தளம் அது.

**** செம ஷாக்.. உடனே அவனை ஃபோனில் கூப்பிட்டு நியாயம் கேட்டிருக்கிறார்.. அவன் சினிமாப்பட வில்லன் போல அவரையே மிரட்ட ஆரம்பித்திருக்கிறான்.

இது ஆரம்பம் தான்.. நீ என் ஆசைக்கு இணங்கலைன்னா இன்னும் பல தாக்குதல்கள் வித்தியாசமா வரும்..

எந்த பதிலும் சொல்லாமல் கோபமாக கட் பண்ணி விட்டார் **** ..

அடுத்த நாள் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது...

அவரது ஃபேஸ் புக்கில் அவரது மேலாடை இல்லாமல் அமர்ந்திருக்கும் படம் வெளியானது.. ( ஒரிஜினல் அல்ல) அதுவும் அவரது பெட்ரூமில், பாத்ரூமில் இருப்பது போல..

****க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அது மார்ஃபிங்க் செய்யப்பட்டது என்று சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?

சாதாரணமாக அந்த ஃபோட்டோ வந்திருந்தால் பிரச்சனை இல்லை, அனைத்துப்படங்களும் அவரது வீட்டில் இருப்பது போல வந்ததால் பிரச்சனை.

கணவரிடம் சொல்லவும் வழி இல்லை, யாரிடம் பகிர்வது என்ற குழப்பத்தில் 2 நாட்கள் ஆஃபீசுக்கே போக வில்லை. ஆனால் அதற்குள் அவரது ஃபோனுக்கு ஏகப்பட்ட கால்கள்? அது நீங்களா? என கேட்டு..

நொந்து போன **** அந்த ஆஃபீஸ்க்கு போவதையே தவிர்த்தார்.. வேறு ஒரு ஆஃபீஸில் ஜாயின் பண்ணிக்கொண்டார்.

உருப்படியாக அவர் செய்த ஒரே காரியம் ஒரு எஸ் ஐ அவர்களிடம் புகார் செய்ததுதான். தான் காலேஜ் டைமில் தன்னுடன் படித்த ஒரு நண்பன் போலீஸில் பணி புரிகிறார் சென்னையில் . அவரிடம் எல்லா விஷயங்களையும் சொன்னார்..

பரத் கொடுத்த முகவரி போலி. செல் ஃபோன் நெம்பர் ஸ்விட்ஸ் ஆஃப்.. அந்த செல் எண்ணில் ஒரு ஃபோர்ஜரி அட்ரஸ். மெயில் ஐ டி வைத்து அவன் அட்ரஸை ட்ரேஸ் அவுட் பண்ணினார்கள்.

அவனை நையப்புடைத்ததில் அவன் பல உண்மைகளை வெளியிட்டான்.

அவனுக்குத்தொழிலே இதுதான்.. பெண்களிடம் செட் செய்வது.. இன்பம் அனுபவிப்பது, பின் பணம் கேட்டு மிரட்டுவது..

அவன் மேல் கேஸ் போடப்பட்டது. வழக்கு நடந்து வருகிறது.

நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

1. பெண் பதிவர்கள் கண்டிப்பாக கமெண்ட் மாடரெஷன் வைத்துக்கொள்ள வேண்டும்..

2. புரோஃபைலில் அவர்கள் படம் போடுவதை தவிர்க்கலாம், மீறிப்போட்டால் அதை காப்பி பண்ண முடியாதபடி லாக் சிஸ்டம் வைக்கலாம்.

3. சேட் செய்யும் ஆண்களிடம் பர்சனல் தகவல்கள் சொல்லாமல் இருக்கலாம். கணவர் ஆஃபீஸ் போகும் டைம், தன் வீட்டு முகவரி இப்படி.

4. சேட்டிங்க்கில் பழக்கமான நண்பர்களை தனிமையில் சந்திப்பதை தவிர்க்கலாம். தன் தோழிகளோடோ, ஆஃபீஸ் கொலீக்கோடோ சந்திக்கலாம்.

5. முதல் முறை சந்திக்கும்போது எடுத்தவுடன் தன் வீட்டுக்கு வர சொல்லாமல் பொது இடத்தில் பப்ளிக் நடமாடும் இடத்தில் சந்திக்கலாம்.

6. வீட்டுக்கு அழைக்கும் பட்சத்தில் அவர் எந்த ஃபோட்டோவும் எடுக்காமல் கண்காணிக்கலாம்..

7. சேட்டிங்க் செய்யும் நபர் சந்திக்க ஆசைப்படும்போது தன் வீட்டுக்கு வர சொல்லாமல் அவர்கள் வீட்டுக்கு போய் பார்க்கலாம். ஒரு க்ளான்ஸ் பார்த்தால் அவர்கள் குடும்ப சூழல் தெரியும்.

8. எல்லாவற்றையும் விட பெஸ்ட் வழி ஒன்று உள்ளது. அது நோ சேட்டிங்க்.. நோ பர்சனல் சந்திப்புகள்.. இது தான் நிம்மதியான வாழ்வை தரும்.. படைப்பு நல்லாருக்கா? பப்ளிக்கா கமெண்ட் போடு. போய்ட்டே இரு.. தேவை இல்லாமல் தனி மெயிலில் நோ கடலை..

9. மீறி சேட்டிங்க் பண்ணி இது போன்ற பிரச்சனைகள் வந்தால் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்கிக்கொண்டிராமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள்.போலீஸ்க்கோ, சைபர் க்ரைம்க்கோ உடனே புகார் கொடுங்கள்.

உங்கள் பெயர் வெளியே வராமல் குற்றவாளிகளை பிடிக்க சட்டத்தில் இடம் உள்ளது, நோ பயம். அதை விடுத்து தற்கொலை எண்ணத்திற்கோ , வேறு விபரீத முடிவுகளுக்கோ போய் விட வேண்டாம்.

10. பதிவர் தன் கணவரிடம் எல்லா விபரங்களையும் சொல்லி விட்டார். இனி சேட்டிங்க் செய்யும்போது கவனமாக இருக்கவும் என கணவராலும் ,நண்பர்களாலும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

11. ஃபேஸ்புக்கில் பர்சனல் விபரங்கள் போடும்போது கவனமாக பகிரவும்..

-- நன்றி சிபி




Last edited by dsudhanandan on Tue Jul 26, 2011 10:16 am; edited 2 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by balakarthik Mon Jul 25, 2011 2:33 pm

மிக்க நன்றி சிபிக்கும் சுதானந்தனுக்கும் நல்ல பகிர்வு நல்ல படிப்பினை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு


Last edited by balakarthik on Mon Jul 25, 2011 5:46 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by ரஞ்சித் Mon Jul 25, 2011 2:51 pm

அறிவியல் வளர்ச்சியினால நாமெல்லாம் மதில் மேல் பூனை மாதிரிதான் கவனமா இருக்கணும் அதிர்ச்சி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by அதி Mon Jul 25, 2011 2:58 pm

மிக பயனுள்ள பாடம்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by தாமு Mon Jul 25, 2011 3:15 pm

மிக பயனுள்ள பாடம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by sadiqaasha Mon Jul 25, 2011 5:12 pm

கணீணீ உலகத்தில் ரொம்ப முக்கியமான அட்வைஸ்
sadiqaasha
sadiqaasha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 06/09/2010

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by தே.மு.தி.க Mon Jul 25, 2011 5:28 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

பயனுள்ள பதிவு
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by ரபீக் Mon Jul 25, 2011 5:30 pm

பயனுள்ள பகிர்வு ,,,,பெண்கள் இதை பார்த்து ஜாக்கிரதையாக இருப்பது நல்லது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by செய்தாலி Mon Jul 25, 2011 6:39 pm

ஒருவர் எழுதும் படைப்பைக் கொண்டோ
அவர் இடும் பின்நூட்டங்களைக்கொண்டோ
உரையாடல் இடங்களில் நல்லமுறையில் உரையாடுதல்கொண்டும்
அவன் ,அவள் நல்லவர்கள் என்று நாம் தீர்மானம் செய்தல் தவறு

ஆன்லைனைப் பொறுத்தவரை எவ்வளவு நல்லமுறையில் பழகினாலும்
நம் சார்ந்த அந்தரங்களை வெளியிடுதல் (பரிமாற்றம் ) மிக தவறான ஓன்று
அதற்க்ற்கு ஒரு பெரிய உதாரணம் தோழர் பதிந்த இந்த பதிவு

ஆலனை உலகம் முழுவதும் பறந்து விரிந்து கிடக்கு
அதை உபயோகிக்கும் மனிதர்களில் குண, மன, நிறங்களை நாம் அறிதல் என்பது அரிது

என்னைப் பொறுத்தவரை இந்த பதிவு எல்லாரையும் சென்றடையவேண்டும்
நல்ல பதிவு தோழரே இதை எழுதிவருக்கும் இங்கு பதிந்த உங்களுக்கும் நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 25, 2011 7:17 pm

அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு... நன்றி நன்றி நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்) Empty Re: ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் - உண்மை சம்பவம் (அனைவரிடமும் பகிருங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum