ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

+5
தாமு
அப்துல்லாஹ்
SK
ரஞ்சித்
krishnaamma
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by krishnaamma Tue Jul 19, 2011 8:25 am

இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம் புன்னகை எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் ZnMnyrE0Rpih5ax0UatI+img-20140802-wa0012பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் NrpWdOCpTKWmhX0qrY8L+IMG-20150104-WA0001

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:47 am; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty பிரட் ஹல்வா

Post by krishnaamma Tue Jul 19, 2011 8:31 am

முதலில் இனிப்புடன் ஆரம்பிப்போம் புன்னகை
பிரட் ஹல்வா - இது சமிப காலமாக பிரபலமாகும் சுலபமான இனிப்பு.செய்வதும் சுலபம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
பால் 1 கப்
சர்க்கரை 1 கப்
நெய் 1 - 2 டேபிள்  ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 - 12  

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பாலில் நனைத்து  வையுங்கள். அல்லது மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
வாணலி  இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
பிறகு அரைத்து வைத்ததை கொட்டி கிளறவும்.
1 நிமிடத்துக்கு பிறகு சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.

குறிப்பு: நீங்கள் இந்த ஹல்வா செய்ய ஃப்ரூட் பிரட் ம உபயோகிக்கலாம் . அப்பொழுது மிக்சி இல் அரைக்கவேண்டாம் . பாலில் ஒரு 10 நிமிஷம் நனைத்து வைத்து பின் ஹல்வா செய்யவும். இப்படி செய்வதால் அதில் உள்ள உயர் பழங்கள் உடயாமல் இருக்கும் மேலும் முந்திரி திராக்ஷை தேவை இல்லை . எனவே நெய்யும்  குறைவாக உபயோகமாகும்.

Last edited by krishnaamma on Fri Nov 22, 2019 1:39 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty பிரட் ஹல்வா 2

Post by krishnaamma Tue Jul 19, 2011 8:36 am

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
மில்க் மெய்டு 1/2 டின்
நெய் 1 - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 - 12

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பிரட் ஐ மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
பூந்துருவலாக வரும்.
வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
அடுப்பை சின்னதாக்கி விட்டு பிரட் துருவலை போடவும்.
ஒரு கிளறு கிளறி மில்க் மெய்டு செக்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.

குறிப்பு: மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரை மற்றும் பால் வேண்டாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty பிரட் குலோப் ஜாமூன்

Post by krishnaamma Tue Jul 19, 2011 8:52 am

தேவையானவை:

ஸ்வீட் பிரட்10 ஸ்லைஸ்
சர்க்கரை 1 கப்
பொறிக்க எண்ணை
ரோஸ் எசன்ஸ் சில துளிகள்

செய்முறை:
முதலில் பிரட் ஐ விரல் நீளத்துக்கு கட் பண்ணி வைக்கவும்
ஒரு வாணலி இல் 1 1/2 கப் தண்ணி விட்டு சர்க்கரையை போட்டு அடுப்பை சின்னதாக வைக்கவும்.
அது நன்கு கொதித்து ஒரு கம்பி பாகு வரும் போது இறக்கி துளி ரோஸ் எசன்ஸ் விட்டு வைக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் வாணலி வைத்து எண்ணை விட்டு கட் பண்ணி வைத்துள்ள பிரட் துண்டங்களை பொரிக்கவும்.
அவை 'கோல்டன் ' கலரில் பொரிந்ததும் பாகில் போடவும்.
அடுத்த ஈடு பொரியும் வரை அது பாகில் இருக்கட்டும்.
அடுத்த ஈடு பிரட் பொரிந்து பாகில் போடும் முன் , முன்பே போட்டு பாகில் ஊறிய பிரட் துண்டங்களை அதாவது 'பிரட் குலோப் ஜாமூன் களை' எடுத்து தனியாக வைக்கவும்.
இப்போது பொறித்த பிரட் துண்டங்களை மீதி பாகில் போடவும்.
இவ்வாறு அனைத்து பிரட் துண்டங்களையும் பொறித்து பாகில் போட்டு எடுத்து வைக்கவும்.
ரொம்ப சுவையான 'பிரட் குலோப் ஜாமூன்' தயார்.

குறிப்பு: நாம் தீபாவளி சமயம் குலோப் ஜாமூன் செய்த பின் அந்த பாகு மீந்து விடும் ; அந்த நேரத்தில் இந்த 'பிரட் குலோப் ஜாமூன்' தயார் செயல்லாம் . இந்த பொரிந்த பிரட் துண்டங்கள் எல்லா பாகையும் உறிந்துகொண்டு சுவையாக இருக்கும் . நமக்கு பாகும் வீணாகாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty பிரட் பஜ்ஜி

Post by krishnaamma Tue Jul 19, 2011 9:04 am

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
கடலை மாவு 1/4 கிலோ
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஓமம் 1/2 ஸ்பூன்
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் கடலை மாவு,மிளகாய் பொடி, ஓமம், பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
1/2 மணி அந்த மாவை ஊற விடுங்கள்.
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty பிரட் பஜ்ஜி 2

Post by krishnaamma Tue Jul 19, 2011 9:11 am

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
தோசை மாவு 2 கப்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
டொமெட்டோ கெட்ச் அப் அல்லது சாஸ் 2 ஸ்பூன்
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் தோசை மாவு, மிளகாய் பொடி, பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
தேவையானால் கொஞ்சமாக தண்ணீர் விடவும்
நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
பிரட் பஜ்ஜி தயார் புன்னகை
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .

குறிப்பு: மீந்து போகும் தோசைமாவில் இதை செயலாம். எண்ணை வேண்டாம் என நினைப்பவர்கள் தோசை கல்லில் போட்டு மட்டாக எண்ணை விட்டு பொறுமையாக , பஜ்ஜி நன்கு வெந்ததும் எடுக்கலாம் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty பிரட் பஜ்ஜி 3

Post by krishnaamma Tue Jul 19, 2011 9:27 am

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
கடலை மாவு 2 கப்
சோள மாவு 1/4 cup
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஓமம் 1/2 ஸ்பூன் (தேவையானால் )
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் கடலை மாவு, சோள மாவு,மிளகாய் பொடி, ஓமம், பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
சோள மாவு சேர்ப்பதால் இது ரொம்ப 'கிறிஸ்ப் 'ஆக இருக்கும் அதாவது ரொம்ப மொரு மொருப்பாக இருக்கும் புன்னகை
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .

குறிப்பு: உங்களுக்கு இந்த பஜ்ஜிகள் இன்னும் காரமாக வேண்டுமானால் , பிரட் துண்டங்கள் மேல் துளி மிளகாய் பொடி உப்பு கலவையை தடவி பின் மாவில் முக்கி பஜ்ஜி போடுங்கள் . சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty பிரட் இல் 'குர் குரே'

Post by krishnaamma Tue Jul 19, 2011 9:51 am

தேவையானவை:

எந்த பிரட் ஆனாலும் சரி 10 ஸ்லைஸ்
கொஞ்சம் நெய்
உப்பு
மிளகு பொடி

செய்முறை:

பிரட் ஐ சின்ன சின்ன துண்டங்களாக ( 1 சென்டி மீட்டர் அளவுக்கு சின்னதாக )
கட் செய்து வைக்கவும்.
அப்படியே விட்டால் 4 - 5 மணி நேரத்தில் அவை காய்ந்துவிடும் , இல்லாவிட்டால் மக்ரோவேவ் ஓவனிலோ, அடுப்பில் வாணலி வைத்தோ வறுக்கவும்.
காந்தாமல் வறுக்கணும்.
அவை நல்ல கர கர வென வரும் போது , நெய் விட்டு வறுக்கணும். ( இப்படி செய்வதால் நெய் குறைவாக செலவாகும் கண்ணடி )
வறுத்து எடுத்ததும் ஒரு பேசினில் போட்டு உப்பு மிளகு பொடி போட்டு குலுக்கவும்.
அவ்வளவுதான் , பிரட் குர் குரே தயார்.
டிரைன் ல போகும் போது , மதிய வேளைகளில் 'போர் ' அடிக்கும்போது இது ரொம்ப நல்லா இருக்கும்.
மாலை வேளை களிலும் டீ உடன் நல்ல இருக்கும்.
செய்து பாருங்கள் அப்புறம் மீந்த பிரட் களில் இதயே தான் செய்வீர்கள் ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by ரஞ்சித் Tue Jul 19, 2011 9:59 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty பிரட் குர் குரே - இனிப்பு

Post by krishnaamma Tue Jul 19, 2011 10:05 am

தேவையானவை:

எந்த பிரட் ஆனாலும் சரி 10 ஸ்லைஸ்
கொஞ்சம் நெய்
பொடித்த சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சின்ன சின்ன துண்டங்களாக ( 1 சென்டி மீட்டர் அளவுக்கு சின்னதாக )
கட் செய்து வைக்கவும்.
அப்படியே விட்டால் 4 - 5 மணி நேரத்தில் அவை காய்ந்துவிடும் , இல்லாவிட்டால் மக்ரோவேவ் ஓவனிலோ, அடுப்பில் வாணலி வைத்தோ வறுக்கவும்.
காந்தாமல் வறுக்கணும்.
அவை நல்ல கர கர வென வரும் போது , நெய் விட்டு வறுக்கணும். ( இப்படி செய்வதால் நெய் குறைவாக செலவாகும் கண்ணடி )
வறுத்து எடுத்ததும் ஒரு பேசினில் போட்டு பொடித்த சக்கரை போட்டு குலுக்கவும்.
அவ்வளவுதான் , பிரட் குர் குரே தயார்.
ரொம்ப நல்லா இருக்கும்.
மாலை வேளை களில் குழந்தைகளுக்கு தரலாம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் Empty Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum