ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

+3
தாமு
ரேவதி
spselvam
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by spselvam Thu Jul 07, 2011 3:14 pm

Print | E-mail
வியாழக்கிழமை, 7, ஜூலை 2011 (14:37 IST)




மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளதை அடுத்து எதிர்கட்சிகள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் வீட்டில் 07.07.2011 அன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் கலந்து கொண்டார்.


பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து அவர் பிரதமர் இல்லத்தில் மன்மோகன்சிங்கை சந்தித்து பதவியை ராஜினாமா செய்தார்.


டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்த தயாநிதி மாறன் தனது கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.
நன்றி : நக்கீரன்


இனியொரு விதி செய்வோம்
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Sமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Emptyமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Pமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Emptyமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Sமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Eமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Lமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Vமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Aமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by ரேவதி Thu Jul 07, 2011 3:15 pm

ரொம்ப லேட்டு ஜாலி ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty ஸ்பெக்ட்ரம் ஊழல்: தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் .

Post by தாமு Thu Jul 07, 2011 3:22 pm

மத்திய மந்திரி தயாநிதி மாறன் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த தாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.

சன் டி.வி. குழும நிறுவனங்கள் ஆதாயம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது தயாநிதிமாறன் சுமார் 2 ஆண்டுகளாக உரிமம் கொடுக்காமல் இழுத்தடித் தார். இதையடுத்து சிவசங்கரன் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்றார். தயாநிதிமாறன் மிரட்டியதால் தனது நிறுவன பங்குகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக சமீபத்தில் சி.பி.ஐ.யிடம் சிவசங்கரன் வாக்குமூலம் அளித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை தயாநிதி மாறன் மறுத்தார். ஆனால் தயாநிதிமாறன் முறைகேடாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் சிக்கியது. அந்த ஆதாரங்களை பொது நலன் வழக்குகளுக்கான பொது மையம் (சி.பி.ஐ.எல்.) என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு கைமாறிய சில தினங்களில், அந்த நிறுவனத்துக்கு 14 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை தயாநிதிமாறன் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அதற்கு பிரதிபலனாக ரூ.599.01 கோடியை சன் டி.வி. குழும நிறுவனங்களில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இந்த தகவல்களை ஏற்கனவே பொது நல வழக்குகளுக்கான பொது மையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சி.பி.ஐ.யும் தனது 71 பக்க அறிக்கையில் இந்த தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தயாநிதிமாறன் செய்த முறைகேடுகளை சி.பி.ஐ. மிகத் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணை வளையத்துக்குள் தயாநிதி மாறன் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் சி.பி.ஐ. மூத்த அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அடுத்தக் கட்டமாக 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கைமாறி இருக்கலாம் என்ற கணக்கெடுப்பு நடந்து வருவதாக சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை அடிப்படை யாக வைத்து அடுத்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன் பெயர் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

சி.பி.ஐ.யின் இத்தகைய நடவடிக்கைகளால் தயாநிதி மாறனை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பா.ஜ.க., இடதுசாரி கட்சிகள் வற்புறுத்தி வருகின்ற போதிலும் தயாநிதி மாறன் பதவி விலகவில்லை.

சி.பி.ஐ. விசாரணை தீவிரமாகும் பட்சத்தில் தயாநிதி மாறன் மத்திய மந்திரியாக இருந்தால், நேர்மையான, முழுமையான விசாரணை நடைபெற முடியாமல் போகலாம். எனவே தயாநிதிமாறன் தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை விட்டு விலக முன்வரவேண்டும். அவர் பதவி விலகாவிட்டால் பிரதமர் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்கி ஜனநாயக மாண்பை காக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர்கள் கூறினார்கள்.

தயாநிதி மாறன் விஷயத்தில் தொடர்ந்து மவுனத்தை கடைபிடித்தால் பெரிய அளவில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

எந்த ஒரு பிரச்சினைக்கும் வாயைத் திறந்து பதில் சொல்லாத பிரதமர் மன்மோகன்சிங் சி.பி.ஐ.யின் சரமாரி குற்றச்சாட்டுக்களால் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார். நேற்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவை கூட்டி விவாதித்தார். தயாநிதி மாறன் செய்துள்ள முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் வரும் தகவல்கள் குறித்து சோனியாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரத்தில் விரைவில் உரிய முடிவு எடுக்குமாறு தி.மு.க.வை கேட்டுக் கொள்வது என காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர். அதன்படி தி.மு.க.விடம் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.

இதற்கிடையே இன்று பகல் 11 மணிக்கு மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தயாநிதிமாறனும் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மன் மோகன்சிங்கிடம் கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாநிதிமாறன் ராஜினாமா கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் அவர் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இன்று மதியம் 1.30 மணி அளவில் தயாநிதி மாறன் திடீரென மீண்டும் பிரதமரை சந்திக்க ரேஸ் கோர்ஸ் இல்லத்துக்கு சென்றார். 1.45 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 5 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தயாநிதி மாறன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி பதவியை இழக்கும் 2-வது நபர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மத்திய மந்திரி சபையில் இருந்து தயாநிதி மாறனை நீக்க சம்மதம் தெரிவித்து சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் பயோனீர் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று (வியாழன்) சோனியாவிடம் ஒப்படைப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜாங்க நிதி மந்திரி பழனி மாணிக்கத்தையும் பதவியில் இருந்து நீக்கி விட்டு, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரை மந்திரிகள் ஆக்க கருணாநிதி அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளது.

மந்திரிகளுக்கு என்ன இலாகா வேண்டும் என்று கருணாநிதி குறிப்பிடவில்லை என்றும், ஆனால் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இலாகா தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் அந்த பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சோனியா காந்திக்கு, கருணாநிதி கடிதம் எழுதி அனுப்பி இருப்பதாக வெளியான தகவலை தி.மு.க. அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் தயாநிதி மாறன் தனது வீட்டில் இருந்து சன் டி.வி. (பழைய அலுவலகம்), வரை அனுமதி பெறாமல் தரையைத் தோண்டி கண்ணாடி இழை கேபிள் போட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. மத்திய மந்திரி பதவிக்காக கொடுக்கப்பட்ட அந்த வசதியை தயாநிதி மாறன் சன் டி.வி.க்கு பயன்படும் வகையில் தவறாக பயன்படுத்தியதாக அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.





அருள்மொழி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by தாமு Thu Jul 07, 2011 3:23 pm

கழுத்தை இறுக்கும் ஊழல் புகார்கள்… ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்!

டெல்லி: அடுக்கடுக்கான ஊழல் புகார்கள், நெருங்கி வரும் சிபிஐ போன்ற நெருக்கடிகளைத் தொடர்ந்து தனது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்.

பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசிய தயாநிதி, தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். அதனை பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.

இந்த ராஜினாமாவுக்கு நேற்று மாலையே கருணாநிதி ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஏர்செல் மூலம் வந்த நெருக்கடி….

ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமம் வழங்கியதில் பெரும் முறைகேடுகளைச் செய்தார் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. சிவசங்கரன் தலைவராக இருந்தவரை ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்காமல் வேண்டும் என்றே தாமதப்படுத்தினார். ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்க நிர்ப்பந்தம் செய்தார். விற்றவுடன் உடனடியாக ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமங்களை வாரி வழங்கினார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இன்னொரு பக்கம் 2 ஜி விவகாரத்தில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வந்தது சிபிஐ.

இதனால் தயாநிதி மாறனின் பதவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. இருப்பினும் காங்கிரஸும், பிரதமரும் தயாநிதி மாறன் தொடர்பாக நீண்ட அமைதி காத்து வந்தனர்.

நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா, தயாநிதியை பதவி நீக்கம் செய்ய இதுவே சரியான தருணம் என்று பிரதமரிடம் வலியுறுத்திக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். இருப்பினும் கூட்டத்தின் பாதியிலேயே அவர் வெளியேறினார்.

கருணாநிதி வீட்டில் நடந்த ஆலோசனை

இதற்கிடையே, சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பல தலைவர்களும், தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதை திமுக தடுக்கக் கூடாது என்று கருணாநிதியை வலியுறுத்தியதாக தெரிகிறது.

அவர்களது கருத்துக்களை கருணாநிதியும் மறுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து திமுகவின் கருத்து பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள டி.ஆர்.பாலு இன்று மாலையில் பிரதமரை சந்திக்கவுள்ளார்.

பிரதமரை வீட்டில் சந்தித்தார்

இந்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலை 3 மணியளவில் பிரமதரை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் பிற்பகல் ஒன்றரை மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்திற்கு வந்தார் தயாநிதி மாறன். கால் மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரிடம் கொடுத்தார்.

பிரதமர் வீட்டை விட்டு வெளியே வந்த தயாநிதி மாறன் வெளியே காத்திருந்த பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார்.

இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

“எல்லாம் முடிந்து விட்டது”

முன்னதாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்த தயாநிதி மாறன் தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம், எல்லாம் முடிந்து விட்டது என்று கூறிவிட்டே, பிரதமரை பார்க்கச் சென்றாராம்.

டிஆர் பாலு அமைச்சர்?

ஊழல் புகார் காரணமாக மத்திய கூட்டணி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட / விலகியுள்ள இரண்டாவது திமுக அமைச்சர் தயாநிதி மாறன்.

நாட்டையே உலுக்கியுள்ள 2 ஜி ஊழல் விவகாரத்தில் ஏற்கெனவே ஆ ராசா மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

தயாநிதி மாறனுக்குப் பதில் டிஆர் பாலுவை அந்தத் துறைக்கு அமைச்சராக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.



http://www.envazhi.com/?p=26745



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by உமா Thu Jul 07, 2011 3:26 pm

அப்பாடா நான் கும்பிட்ட தெய்வம் எல்லாம் கை கொடுதுச்சு...
இன்னும் இருக்கு உங்களுக்கு...இதெல்லாம் ஆரம்பம் தான்....
ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by dsudhanandan Thu Jul 07, 2011 3:29 pm

// டிஆர் பாலு அமைச்சர்? // என்ன கொடுமை சார் இது

எப்ப திகாருக்கு போவார் ?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by தாமு Thu Jul 07, 2011 3:32 pm

அவருக்கும் ஒரு ரூம் இருக்காம் கவலை வேண்டாம் நண்பா ஆறுதல்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by உமா Thu Jul 07, 2011 3:42 pm

தாமு wrote:அவருக்கும் ஒரு ரூம் இருக்காம் கவலை வேண்டாம் நண்பா ஆறுதல்

அந்த குடும்பம் சென்றால் திகாரும் திவால் ஆகிவிடும்....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by பது Thu Jul 07, 2011 4:06 pm

ரிலாக்ஸ்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by spselvam Thu Jul 07, 2011 4:34 pm

கருணாநிதியின் குடும்பத்தார், ஆட்சி என்ற பெயரில் அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தி எல்லா வழியிலும் நேர்மையற்ற வழியில் நடந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.அண்ணா ஆரம்பித்த இயக்கத்தை தன் குடும்ப சொத்தாக மாற்றி நாட்டை கொள்ளையடித்து இன்னமும் திமுக தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றி கொண்டிருகின்றனர். இவர்கள் கொள்ளையடிததோடு இல்லாமல் மக்களுக்கும் இலவசம் என்ற பெயரில் லஞ்சமாக கொடுத்துள்ளனர்.ஒரு காலத்தில் பீகாரைதான் இழிவாக பேசிகொண்டிருந்தோம் ஆனால் இன்று நம் தமிழகத்தை இழிவாக மற்றவர்கள் பேசும்படி செய்துவிட்டனர்.இவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும். ஏமாற்றியவர்கள் நிச்சயம் ஏம்மாற்றபடுவார்கள்.மனசாட்சியை விற்று பணம் சம்பாதித்து இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள் நிச்சயம் நாளைய வரலாறு உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பழிக்கும்.


இனியொரு விதி செய்வோம்
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Sமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Emptyமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Pமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Emptyமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Sமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Eமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Lமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Vமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Aமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum