ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி

3 posters

Go down

ஈகரை கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி

Post by அன்பு தளபதி Fri Jul 01, 2011 1:21 pm

குமுதம் ரிப்போர்ட்டர் 30-6-11


கவர் ஸ்டோரி


கோயில் தங்கமும் கோவிந்தா


வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி






எப்போதும் இல்லாத அளவுக்கு தி மு க ஆட்சியில்
கோயில்கள் அதிக அளவில் சீரமைக்கப் பட்டது, தங்கக் கோபுரம், தங்கக் கலசம் என பல
கோயில்களின் மாற்றங்களைப் பக்தர்களே ஆச்சரியத்தோடு கவனித்தார்கள். மாற்றத்திற்குப்
பின்னால் இருந்தது பக்தி அல்ல.. பணம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.






இந்து அற நிலையத் துறையின் கீழ் வரும் கோயில்கள்
தங்க விக்கிரகம், தங்கக் கலசம், தங்கக் கோபுரம் என எல்லாமே தங்கத்தால் மின்ன
ஆரம்பித்தது, பொதுவாகவே பக்தர்களின் நன்கொடி, காணிக்கைப் பணத்தை வைத்து அறநிலையத்
துறை இந்தப் பணிகளை நிறைவேற்றுவது வழக்கம், இந்த வேலைகளில் தான் பெருமளவு முறைகேடு
நடந்துள்ளது.. இது தொடர்பாக அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.






கோயிலில் தங்கத்தாலான பணிகள் எது செய்வதாக
இருந்தாலும் அறநிலையத் துறை தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் மூலம் நிறைவேற்றுவது
தான் வழக்கம், எந்த வேலைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை வரையறுத்து தரும்
பூம்புகார். அவர்களே அந்தப் பணிகளை தனியார் காண்ட்ராக்டர்கள் மூலம் நிறைவேற்றிக்
கொடுப்பார்கள், ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நடைமுறையில் பெரிய மாற்றம்
வந்தது, அறநிலையத்துறை அதிகாரிகள் நேரிடையாக காண்ட்ராக்டர்கள் மூலம் வேலைகளைச்
செய்துள்ளனர். இங்கு தான் முறைகேடு தொடங்கியிருக்கிறது,






இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசிய
போது “கோயில்களுக்கு தங்க முலாம் பூசும் வேலைகளில் முறைகேடு நடந்துள்ளது, பொதுவாக
கோபுர வேலைகளுக்கு கோபுரத்தின் அடிப்பாகத்தை அளந்து விட்டு அதன் மேல் நுனியில்
இருந்து பக்க வாட்டில் சரிந்து அளப்பது தான் வழக்கம். கூடவே இடைவெளிகள் சிலைகள்
ஆகியவற்றைக் கணக்கிட்டு தனியாகப் பணம் கொடுக்கப் படும்.



ஆனால் அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் வரும்
காண்ட்ராக்டர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தையும் பக்க வாட்டையும் அப்படியே அளந்து
மதிப்பிடுகிறார்கள். அதாவது கோபுரம் கீழிருந்து மேல்வரை பக்க வாட்டில் ஒரே அளவில்
(செவ்வக வடிவில்) இருப்பதாகக் காண்பித்து அதற்கும் தங்கம் வாங்கிக் கொள்கிறார்கள்,
சிலைகள் இடைவெளிகள் ஆகியவற்றிற்கான தங்கத்தைத் தனியாக வாங்கிக் கொள்கிறார்கள்.






1000 சதுர அடியில் வேலை செய்வதற்கு 1500 சதுர அடி என
கணக்கிடுவார்கள், இதனால் பத்து கிலோ தங்கத்தில் முடிய வேண்டிய வேலைக்கு 15 கிலோ
தங்கத்தை வாங்கிக் கொள்கிறார்கள். இதற்காக பெருமளவில் லஞ்சம் கொடுக்கப் படுகிறது
கூடுதலாக வாங்கப் படும் ஒவ்வொரு கிலோ தங்கத்துக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் என
அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் கொடுப்பார்களாம். இந்தப்
பணம் முந்தைய ஆட்சியில் அமைச்சர்கள் வரையில் கொடுக்கப் பட்டதாகச் சொல்கிறார்கள்,






இதையெல்லாம் விட இன்னொரு விஷயமும் இப்போது
வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எந்தக் கோயிலாக இருந்தாலும் தங்கத் தேர் ஒரு
குறிப்பிட்ட உயரம் தான் இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது, ஆனால் உயரமோ
எடையோ அதிகமாகாத நிலையில் தங்கத்தின் அளவு மட்டும் உயர்த்திக் கொடுக்கப்
பட்டுள்ளது, அதாவது தங்கத் தேர் செய்ய இதுவரை 9 கிலோ தங்கம் கொடுக்கப் பட்டு
வந்தது. அது கடந்த மூன்று ஆண்டுகளாக 12 கிலோவாக உயர்த்திக் கொடுக்கப் பட்டுள்ளது.
இது ஏன் என்பது பற்றி இப்போது விசாரணை நடந்து வருகிறது என்று சொல்லி அதிர்ச்சி
அளித்தார்.






பூம்புகார் அதிகாரிகளிடம் பேசியபோது “கோயில் வேலைகள்
எங்கள் மூலமாக காண்ட்ராக்ட் கொடுக்கப் பட்டபோது நேர்மையாகத் தான் நடந்தது,
கோபுரங்கள் சிலைகளுக்குத் தங்கம் பூசும்போது ஒன்பது லேயர்கள் பூச வேண்டும் என்பது
தான் விதி, ஆனால் இப்போது இரண்டு அல்லது மூன்று லேயர்கள்தான் பூசப் படுகிறது, இதன்
மூலம் மிச்சமாகும் தங்கத்தை காண்ட்ராக்டர்க எடுத்துச் சென்று விடுகிறார்கள். கடந்த
மூன்றாண்டுகளில் இது போல சுமார் 200 கிலோ தங்கம் வரையில் சுரண்டப் பட்டிருக்கலாம்
என்று தெரிய வந்துள்ளது” என்றார்.






எப்படி இந்தத் தங்கத்தை எடுத்துச் செல்கிறார்கள்?
என்று கேட்ட போது அவர் சொன்னது அத்தனையும்
அதிர்ச்சி ரகம்.






“கோயில்களில் பயன்படுத்துவது அனைத்தும் 24 காரட்
தங்கம். தங்கக் கட்டிகளை வாங்கிய பின்னர் சின்னச் சின்ன தகடுகளாக ஆக்குவார்கள்,
குறிப்பிட்ட வடிவத்தில் செப்புத் தகடுகளுடன் அவற்றைச் சேர்ப்பார்கள். இதற்காக
பாதரசத்துடன் சேர்த்து செப்புத் தகடையும் தங்கத் தகடையும் அடிப்பார்கள். பின்னர்
அதைத் தீயில் வைத்துப் பாதரசத்தைப் பிரிப்பார்கள், இதற்கு “ரசப்புட்டு” என்று
பெயர். இதில் பாதரசத்தோடு தங்கமும் சேர்ந்து இருக்கும், அதைத் தனியாக எடுத்துச்
சென்று தங்கத்தைப் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இப்படித் தங்கம் பூசுவதற்கு
முன் ஒவ்வொரு நிலையிலும் காண்ட்ராக்டர்கள் லாபம் பார்த்து விடுகிறார்கள்.






இதேபோல தங்கக் கட்டிகளைத் தகடுகளாக்கும் போது சின்ன
சின்ன துண்டுகளாக தங்கம் கீழே விழும், அதை நகக் கண்களில் வைத்து எடுத்துக்
கொள்வார்கள். இப்படிப் பல வழிகளில் காண்ட்ராக்டர்கள் தங்கத்தைச்
சுரண்டியிருக்கிறார்கள்” என்றார்,






இந்த வேலைகள் அனைத்துமே வெளிப்படையாக நடக்குமாம்.
ஆனால் இது குறித்துப் போதிய அறிவு அதிகாரிகளுக்கு இல்லாததால் அவர்கள் கண் முன்பே
இது நடந்துள்ளது, அதே போல அளவு எடுப்பது, எஸ்டிமேட் போடுவது என்ற பணிக்காக
கோயில்களில் தனியாக சிலரை நியமித்துள்ளார்கள். அவர்களும் காண்ட்ராக்டர்களுக்கு
துணை போயிருக்கிறார்கள்.






சமீபத்தில் ஒரு கோயிலில் 90 கிலோ தங்கத்தில் விமானம்
செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். கோயில் அதிகாரி கண்டிப்பாக இருந்து
காண்ட்ராக்டரின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துள்ளார், தங்க விமானம் செய்து முடித்த
போது 62 கிலோ தங்கம் தான் செலவாகி யிருந்ததாம். இப்படித்தானே மற்ற கோயில்களிலும்
தங்கம் கொள்ளை போயிருக்கும்.






அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் கோயில்களில்
நடந்த இந்த முறைகேடுகள் வெளியே வரத் தொடங்கி இருக்கிறது, திருச்சி அருகிலுள்ள
அம்மன் கோயிலில் ஆறு கிலோ தங்கத்தில் தங்கத் தேர் செய்ய ஒரு செயல் அலுவலர்
எஸ்டிமேட் தயாரித்துள்ளார். அவர் மாறியதும் புதிதாக வந்த இன்னொரு அதிகாரி தங்கத்
தேர் செய்வதற்கு 11 கிலோ தங்கம் தேவைப் படும் என்று எஸ்டிமேட்டையே மாற்றி
இருக்கிறார். இதையெல்லாம் தீவிரமாக விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சிகள் வெளியே
வரு” என்கிறார்கள் கோயில் ஊழியர்கள்.






இந்த விவரங்களைக் கொஞ்சம் தோண்டிய போது தான் தமிழகம்
முழுவதும் கோயில்களில் இது போல பெருமளவு பணம் முறைகேடு நடந்திருப்பது தெரிய
வந்துள்ளதாம்.






இது தொடர்பாகப் பேசிய அற நிலையத் துறை அதிகாரி
ஒருவர் “ கடந்த ஆட்சியில் நடந்த கோயில் புனரமைப்புப் பணிகள் அனைத்தையும் விசாரணை
செய்வார்கள் எனத் தெரிகிறது, வேலைகள் நடந்துள்ள கோயில்களில் வாங்கிய செப்புத்
தகடுகளையும் பயன் படுத்திய செப்புத் தகடுகளையும் கணக்கெடுத்து வருகிறார்கள்,
இந்தச் செப்புத் தகடுகளுக்கு எவ்வளவு தங்கம் தேவைப் படும் என்பதைத் தோராயமாக
கணக்கிட்டுப் பார்த்த போது 200 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்யப் பட்டு
இருப்பது தெரிய வந்துள்ளது, இன்றைக்கு ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ 22 லட்சம்,
அப்படியானால் எத்தனை கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிந்து
அதிர்ந்து போய் விட்டோம்” என்றார் ஆச்சரியம் விலகாமல்.






மேலும் “ ஒரு கிராமுக்கு 7 ரூபாய் என்கிற அளவில்
காண்ட்ராக்டர்களுக்கு அற நிலையத் துறை பணம் தருகிறது, ஆனால் வெளியில் அவர்கள் 14
முதல் 15 ரூபாய் வரை வாங்குகிறார்கள். பெருமளவு லாபம் இல்லையெனில் இப்படிக்
குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக் கொள்வார்களா?” என்றும் கேள்வி எழுப்புகிறார்.






கோபுரம் கலசம் ஆகியவற்றிற்கு தங்க முலாம் பூசுவது
தங்க விக்கிரகங்கள் செய்வது, தங்கத் தேர் செய்வது ஆகிய பணிகளுக்காகப் பயன்படுத்தப்
படும் இந்தத் தங்கம் முழுவதும் பக்தர்களுடையது, உண்டியல் பணம் தவிர பக்தர்கள்
காணிக்கையாகத் தரும் நகைகளை உருக்கித்தான் இந்த வேலைகள் செய்யப் படுகிறது, இதிலும்
ஊழல் நடந்துள்ளது, பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது,






இது குறித்து பக்தை ஒருவரிடம் கேட்ட போது “ என்
கணவரது உடல் நலம் சரியானால் தாலியை காணிக்கையாகத் தருவதாக வேண்டியிருந்தேன். அதன்
படி தாலியை உண்டியலில் போட்டேன். என்னைப் போல் பலரும் தாலி, மோதிரம் குழந்தைகளின்
நகைகள் என வேண்டுதலுக்காக கோயிலுக்குச் செலுத்துகிறார்கள். அந்த நகை சாமி
காரியத்துக்குச் செலவாகிறது என நினைத்தோம். அதையும் விட்டு வைக்காமல் கொள்ளை
அடிக்கிறார்கள் என்றால் எங்கே சென்று முறையிடுவது? அப்படிப் பட்டவர்களை கடவுளே
தண்டிப்பார்” என்றார் வேதனையுடன்.






இந்த ஊழல் தொடர்பாக இந்து அற நிலையத் துறை
அதிகாரிகள் நான்குபேர் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது, அவர்களுக்கு இதுவரையில்
எந்தப் பொறுப்பும் வழங்கப் படவில்லை. ஒரு அதிகாரியைப் பற்றி விசாரித்த போது மூன்று
கோடி வரையில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளதாம், விசாரணை தீவிரமாகும்போது
யாரெல்லாம் மாட்டிக் கொள்ளப் போகிறோமோ என பயத்தில் உறைந்து போயுள்ளனர் அற நிலையத்
துறை அதிகாரிகள்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரை Re: கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி

Post by krishnaamma Fri Jul 01, 2011 1:41 pm

மணி உங்களை எல்லோரும் தேடிண்டு இருக்கா புன்னகை எப்படி இருக்கீங்க என்ன ரொம்ப நாளாக காணும் ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி

Post by krishnaamma Fri Jul 01, 2011 1:50 pm

அந்த அதிகாரிகள் பயத்தில் உறைந்து போயுள்ளார்கள் என்றால் இதை படித்ததும் நான் அதிர்ச்சி இல் உறைந்து போய்விட்டேன் மணி சோகம்

சுவாமி என்கிற பயம் கூட இல்ல பாருங்க ளேன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி

Post by positivekarthick Fri Jul 01, 2011 2:00 pm

கோவிந்தா ! கோவிந்தா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஆமோதித்தல்


கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Pகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Oகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Sகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Iகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Tகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Iகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Vகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Eகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Emptyகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Kகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Aகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Rகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Tகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Hகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Iகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி Cகோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை Re: கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» கோவிந்தா, கோவிந்தா... திருமலைக்கு படையெடுக்கும் திமுக தலைவர்கள்
» கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு !
» கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum