ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ராணுவத் தளபதி, பிறக்கும்போதே அதிரடி!

Go down

இந்திய ராணுவத் தளபதி, பிறக்கும்போதே அதிரடி! Empty இந்திய ராணுவத் தளபதி, பிறக்கும்போதே அதிரடி!

Post by realvampire Fri Jul 01, 2011 1:16 pm

இந்திய ராணுவத் தளபதி, பிறக்கும்போதே அதிரடி! 20110630-TOD-3
நீதித்துறையின் பரிந்துரை ஒன்று, இந்திய பாதுகாப்பு அமைச்சை சங்கடமான
நிலைமைக்குத் தள்ளியுள்ளது. அப்படியென்ன விசித்திரமான பரிந்துரை? இந்திய
ராணுவத் தளபதி வி.கே. சிங்கின் நிஜமான பிறந்த தேதி, மே 10, 1950 என்று
உறுதி செய்திருக்கின்றது இந்திய நீதித்துறை.
ராணுவத் தளபதியோ, தான் அதைவிட 1 வயது இளமையானவர் என்று கூறிக்கொள்கிறார்.
இந்திய ராணுவத்தின் ரெக்கார்டுகளில் தற்போதைய ராணுவத் தளபதியின் பிறந்த
தேதியென்று இரு வெவ்வேறு பதிவுகள் உள்ளன. ஒரு பதிவின்படி ராணுவத் தளபதி,தற்போது நீதித்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள 1950ம் ஆண்டில் பிறந்தவர்.
மற்றொரு பதிவின்படி அவரது பிறந்த தேதி, சரியாக 1 வருடம் தாமதமாக,
மே 10, 1951! இந்த இரண்டாவது (இளமையான) பிறந்த தேதிதான் தன்னுடையது என்கிறார் ராணுவத்தளபதி. அதன்படி அவரது பதவிக் காலம், 2013ம் ஆண்டுவரை நீடிக்கும். ஆனால், நீதியமைச்சு உறுதிப்படுத்தியுள்ள முதலாவது பிறந்த தேதியின்படி தளபதி, மே 31, 2012ல் ஓய்வுபெற வேண்டியிருக்கும்.
பாதுகாப்பு அமைச்சுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பெரிய தலைவலி, இவரை எந்த வருடத்தில் வீட்டுக்கு அனுப்புவது என்பதே!
ராணுவத் தளபதி சிங், 1970ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் பணியில்
சேர்ந்திருந்தார். இந்திய ராணுவத்தில் வேலைக்காக அவர் விண்ணப்பித்த
விண்ணப்பப் படிவத்தில் பிறந்த தேதி கேட்கப்பட்டிருந்தது. அதில் பதிவு
செய்யப்பட்டுள்ளது 1950ம் ஆண்டு பிறந்த தேதி.அதன்பின் சிங் இடையில் கொண்டுவந்து இணைத்துக்கொண்டது, 1951ம் ஆண்டு பிறந்த தேதி.
ராணுவத்தின் பதிவுகளில் இவருக்கு இரண்டு பிறந்த தேதிகள் இருப்பது, 2006ம் ஆண்டுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கிடையே மற்றொரு விவகாரமும் நடந்துள்ளது.
தளபதி சிங்குக்கு 3 தடவைகள் ராணுவத்தில் பதவி உயர்வுகள்
கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் பதவியுயர்வுகளுக்கு, சர்விஸ்
வருடங்களும், அத்துடன் வயதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி
இவருக்குக் கொடுக்கப்பட்ட 3 பதவி உயர்வுகளும் இவர் 1950ல் பிறந்தவர் என்ற
அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டவை.
அப்போதெல்லாம் எதுவும் பேசாமல் பதவியுயர்வை பெற்றுக்கொண்ட தளபதி சிங், இப்போது ஓய்வுபெறும் காலம் நெருங்கிய நிலையில் தான் 1950ல் பிறந்தவரல்ல என்கிறார்.
இவர் தற்போது கூறுவதுபோல 1951ல் பிறந்திருந்தால், அவருக்குக் கிடைத்த 3
பதவியுயர்வுகளும் கிடைத்திருக்காது. இவரும் ராணுவத் தளபதியாக வந்திருக்க
முடியாது.இந்த பிறந்த தேதி குழப்பம் பற்றிய விசாரணை ஒன்று ராணுவ மட்டத்தில் நடைபெற்றது. அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்வி – “உங்களுடைய நிஜமான பிறந்த தேதி 1951ல் என்றால், ராணுவத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்தபோது, அப்ளிகேஷன் பார்மில் ஏன் 1950ம் ஆண்டு என்று எழுதினீர்கள்?”
நியாயமான கேள்விதான். இல்லையா?
இந்தக் கேள்விக்கு தளபதி சிங் கூறிய பதில்தான் தமாஷானது. “அப்ளிகேஷன்
பார்மை நான் நிரப்பவில்லை. எனது பள்ளி ஆசிரியர்தான் எனக்காக
விண்ணப்பித்தார். நான் சும்மா கையொப்பம் மாத்திரம் இட்டேன்” என்பதே அவரது
பதில்.
உலகின் 4வது பெரிய ராணுவம், இந்திய ராணுவம். அதன் பிரதம தளபதி, தனது
விண்ணப்பப் படிவத்தை பள்ளி ஆசிரியர் நிரப்பிக் கொடுத்தார் என்று கூறுவதை
ஏற்றுக்கொள்ள, நீதித்துறை தயாராக இல்லை.
தளபதியின் பள்ளி ஆசிரியர் கதையை நிராகரித்து குறிப்பு எழுதியிருக்கிறது, நீதித்துறை.
நீதித்துறையின் சொல்லைக் கேட்பதா, தளபதியின் பேச்சை நம்புவதா என்று தலையை உடைத்துக் கொண்டிருக்கிறது பாதுகாப்பு அமைச்சு.

சினிமாவில், கிட்டத்தட்ட இவரது வயதிலுள்ள ஆட்கள் கல்லூரி மாணவர்களாக
நடிக்கும் ஒரு நாட்டில், பாவம், இந்தத் தளபதியை இளமையாக வாழ விடுகிறார்கள் இல்லையே!

நன்றி:விறுவிறுப்பு
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum