ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 10:22

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 9:55

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கும் மீசை

2 posters

Go down

பெண்களுக்கும் மீசை Empty பெண்களுக்கும் மீசை

Post by சிவா Sun 13 Sep 2009 - 12:12

பெண்களுக்கும் மீசை Hirsutism


பெரும்பாலான பெண்களுக்கு மீசை, தாடி வளரும் பிரச்சினை இருக்கிறது. சுமார் பத்து சதவீதம் பெண்கள் இந்தப்பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் முடி முளைக்கும் இந்த நோய்க்கு Hirsutism என்று பெயர்.

ஆண் பால்வினை ஹார்மோன் Androgen அதிகம் சுரந்தால் பூனை முடியாக இருக்கும் முடிகள் கருப்பாக, தடினமாக மாற ஆரம்பித்து விடும். ஆண்களுக்கு மீசை, தாடி வளர்வது போல முகத்தில் முடி தோன்றுவது மட்டுமல்லாது, கை, கால்கள், மார்பு வயிறு என ரோமங்களை தடிமனாக்கி விடும்.

ஆண் பால்வினை ஹார்மோன் Androgen கரு முட்டைப்பை அல்லது அட்ரினல் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும். எனவே கருமுட்டைப் பையில் மாற்றங்களோ அல்லது அட்ரினல் சுரப்பியில் கோளாறுகளோ வந்தால் சுரப்பி நீரை அதிகளவில் சுரக்க வைத்து விடும்.

கரு முட்டைப்பையில் தோன்றும் நீர்க்கட்டிகள்தான் பெரும்பாலான பெண்களுக்கு முடி வளர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. இதில் இளம் பெண்கள் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

தீட்டு சரியாக வராமல் இருக்கலாம். உடல்பருமன் கூடியிருக்கலாம். குழந்தைப் பேரின்மை இருக்கலாம். பெரும்பாலும் முன்தலையில் வழுக்கை கூட விழலாம். எதேச்சையாக வயிற்றுப் பகுதியை வேறு ஏதாவது கோளாறுக்காக ஸ்கேன் செய்யும்போதோ அல்லது மாஸ்டர் செக்கப் செய்யும் போதோ நீர்க்கட்டிகள் தெரியவரும்.

கரு முட்டைப்பையில் ஏராளமாக இருக்கும் சினை முட்டைகள் நன்கு வளர்ச்சி பெற முடியாமல் நீர் கோர்த்துக் கொண்டு நீர்க்கட்டிகளை இரண்டு கரு முட்டைப் பைகளிலும் உருவாக்கி விடும். முட்டை வளர்ச்சி தடைபடுவதால் பெண்மைக்குத் தேவைப்படும் இயக்குநீரான Estrogen அதிகமாகச் சுரக்க கரு முட்டைப்பையில் உள்ள இணைப்புத் திசுக்களில் இருந்து Androgen ஹார்மோன் அதிகமாகிவிடும். எனவே மயிர்ககல்கள் தூண்டப்பட்டு வளர் பருவத்தைக் கூட்டி விடுவதால் முடி வளர ஆரம்பித்து விடுகிறது. தொடர்ந்து இந்நிலை நீடிக்க நீடிக்க புதிய முடிகளும் உருவாக ஆரம்பித்து விடுகிறது.

இந்த நீர்க்கட்டிகள் தோன்றக் காரணம் பரம்பரை ஒரு பக்கம் இருந்தாலும், சர்க்கரை வியாதி உள்ள குடும்பங்களில் அதிகம் காணப்படுகிறது. தைராய்டு சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பிக் கோளாறுகள்கூட இதற்கு வழிவகை செய்யலாம்.

அட்ரினல் சுரப்பியில் கட்டிகள் தோன்றினால்கூட Androgen அளவு அதிகமாகிவிடும். சில ஆங்கில மருந்துகள் முடி வளர்ச்சியைக் கூட்டலாம். வலிப்பு நோய் மனநலப் பிரச்சினைகளுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் கருத்தடை மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு முடி வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும்போது ஏற்படும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் முடி வளர்ச்சியைக் கொடுக்கலாம்.

சிலருக்கு எந்தக் காரணத்தையும் அறிய முடியாத நிலையில் சர்க்கரை வியாதி குடும்பப் பாரம்பரியத்தில் இருப்பது தெரியவரும். இந்த வகைக்குரியவர்கள் பெரும்பாலும் குண்டாக இருப்பார்கள். இன்சுலின் அளவு தேவைக்கு அதிகமாக சுரந்து மாவுச்சத்தை கிரகிக்க எடையைக் கூட்டி விடும். சர்க்கரை வியாதி இருக்குமோ, என்று பயந்துவிடாதீர்கள். பரிசோதனை செய்து பார்த்தால் சிறுநீர் ரத்தம் இரண்டிலும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் பரிசோதனையில் இன்சுலின் அளவு கூடியிருக்கும்.

அதிகப்படியாக இன்சுலின் Androgen ஹார்மோனை அதிகமாக சுரக்க வைத்து மீசை, தாடியை வளரச்செய்துவிடும். இந்த insulin resistance பல நோயாளிகளுக்கு உள்ளது.

ஹோமியோபதி மருத்துவம் மூலம் முடி வளர்ச்சிப் பிரச்சனைகளை உள்ளுக்கு சாப்பிடும் மருந்துகளால் தீர்க்க முடியும். அதோடு மட்டுமின்றி இதன் அடிப்படை காரணங்கள் எதுவாக இருந்தாலும் வேறுக்க முடியும். தலை முடி கொட்டுவதற்கொரு சிகிச்சை, தீட்டுக் கோளாறுக்கு ஒரு மருந்து, உடல் பருமனைக் குறைக்க ஒரு வைத்தியம், கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை என்று தனித்தனியாக சிகிச்சை தேவையில்லை. அனைத்தையும் ஒரு தொகுப்பாக குணமாக்க முடியும். குழந்தைப் பேறுகூட உண்டாகி இருக்கிறது.

தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி பெண்களுக்கு மிக தர்ம சங்கடமான விஷயம். வெளியில் தலைகாட்ட முடியாமல் கஷடப்படுவார்கள். முதல் முறையாக வளரும் முடியை நகங்கள் மூலமோ, அல்லது பிளக்கர் மூலம் கிள்ளி எடுப்பது என்று முயற்சி செய்வார்கள். முடிகளைப் பிடுங்குவதால் மயிர்க்கால் வேரோடு பிடுங்கப்படும் போது ஏற்படும் ரத்தக்கசிவு சிறு தழும்புகளை ஏற்படுத்தலாம். அருகில் உள்ள முடிகள் மயிர்க்கால்களுக்கு அதிகப்படியான ரத்த ஓட்டத்தைக் கொடுத்து அவற்றின் வளர்ச்சியைக் கூட்டலாம்.

ஹேர் ரிமூவர்கள் கொண்டு முடியை நீக்க பலர் முயற்சி செய்வார்கள். சலித்தவர்கள் பிளீச்சிங், எலக்ரோலைசிஸ் செய்ய அழகு நிலையங்களை நாடுவதும் உண்டு. சிலர் தற்போதைய புதிய கண்டுபிடிப்பான லேசர் சிகிச்சையை நாடுவார்கள். ஒரு சிலர் சேவிங் செய்து கொள்வார்கள்.

எல்லாவற்றையும்விட சிறந்தது முகச்சவரம்தான். ஏனென்றால் வளர்ந்த முடியை வெட்டியெடுக்குமே தவிர, மயிர்க்கால்களுக்கு எந்தவித தீங்கும் செய்யாது. மற்ற முறைகள் அனைத்திலும் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு சிறு தழும்புகள் ஏற்படும். சொரசொரவென்று மாறி, நாளடைவில் முடிவளர்ச்சியிருந்த இடத்தில் கருப்பாக பளிச்சென்று தெரிய ஆரம்பித்து விடும். அதோடு மட்டுமல்லாமல் நோய்க் கிருமிகள் மயிர்க்கால்களைத் தாக்கி இன்பெக்ஷன் எற்படவும் ஏதுவாகும்.

சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா? என்று பலர் நினைக்கிறார்கள். நிச்சயமாக வளராது. ஏனெனில் முடி வளர்ச்சி Androgen அளவை வைத்துதான் இருக்குமே தவிர, சவரத்தை வைத்து நிச்சயமாக இருக்காது. முதலில் குறைவாக இருக்கும் முடிகள் சிகிச்சை பெற்றதால் தடிமனாக மாறி விடுவதும், புதிய முடிகள் தோன்றுவதும் ஷேவிங் செய்வதால் இருக்கும் என்ற மாயையை தோற்றுவிக்கும்.

பெரும்பான்மையான நோயாளிகள் சிகிச்சை எடுத்தவுடன் முடிவளர்ச்சிக் கட்டுப்பட்டு உதிர்ந்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். உடனடி நிவாரணம் கிடைக்காமல் மருந்துகள் முதலில் Androgen அளவைக் குறைக்கும். எனவே புதிய முடிகள் வளர்வது நிற்கும். ஏற்கனவே தூண்டப்பட்ட முடிகள் அதன் வளர் பருவம் முடிந்தவுடன் உதிர்ந்துவிடும். இதன் முன்னேற்றத்தை ரத்தத்தில் உள்ள Testosterone அளவைப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளவும்.

அதோடு மட்டுமல்லாது ஸ்கேன் பரிசோதனை மூலம் கட்டிகள் குணமாவதை உறுதி செய்து கொள்ளலாம்.

மற்ற நோய்க்குறிகளின் முன்னேற்றத்தை வைத்தும் அறிந்துகொள்ள முடியும்.

பெண்களுக்கு முடி முளைக்கும் பிரச்சினைகளைப் போக்குவதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல தீர்வு உண்டு.


பெண்களுக்கும் மீசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களுக்கும் மீசை Empty Re: பெண்களுக்கும் மீசை

Post by மீனு Sun 13 Sep 2009 - 13:07

மிக மிக பயனுள்ள தகவல்கள் அண்ணா ..குண்டுக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு இருக்கா..ம்ம்ம்ம்ம் ..அருமையான தகவல்கள்..

சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா? என்று பலர் நினைக்கிறார்கள். நிச்சயமாக வளராது. ஏனெனில் முடி வளர்ச்சி Androgen அளவை வைத்துதான் இருக்குமே தவிர, சவரத்தை வைத்து நிச்சயமாக இருக்காது. முதலில் குறைவாக இருக்கும் முடிகள் சிகிச்சை பெற்றதால் தடிமனாக மாறி விடுவதும், புதிய முடிகள் தோன்றுவதும் ஷேவிங் செய்வதால் இருக்கும் என்ற மாயையை தோற்றுவிக்கும்((எனக்கு இந்த டவுட் இருந்தது ..இப்போ தெளிவாய் புரயுது..தேங்க்ஸ் ஷிவா அண்ணா ..))


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum