ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

2 posters

Go down

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் Empty இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

Post by Ramya25 Sun Sep 13, 2009 12:45 am

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்
ஜடாயு

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் Dogma99

அண்மையில் ஒரு மடலாடற்குழு விவாதத்தில் வெளிநாட்டில் வாழ்ந்துவரும்
நண்பர் ஒருவர் எழுதினார் - “ நேற்றுதான் `Dogma’ எனும் படம் பார்த்தேன்.
அது கிறிஸ்தவ சமயத்தின் பின்நவீனத்துவ விமர்சனம் என்று காண்கிறேன். ஒரு
சமயம் உலக அளவிற்கு பரவுகிறது என்றால் அதன் அடிப்படை அசைக்க முடியாத
உண்மைகளைக் கொண்ட சத்யமதமாக இருக்க வேண்டும். இல்லை இழுபட்டு அழியும்.
இன்று கிறிஸ்தவத்திற்கு அந்த நிலைதான். அது `தத்துவங்களை` அடிப்படையாகக்
கொண்டு அமையாமல், யார்,யாரோ சொன்ன கதைகளை வைத்து, தேவாலயம் எனும் மையம்
செய்த நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாக நடக்கிறது. அங்கு `சிந்தி`
என்பதை விட `நம்பு` என்பதே பிரதானம். `அறிவு` என்பது கீழ் போய்
`மூடநம்பிக்கையே` முன்வைக்கப் படுகிறது. இந்த ஆங்கிலப் படம் இது பற்றிய பல
கேள்விகளை எழுப்புகிறது…
ஒரு சொற்பொழிவிற்கு நெதர்லாந்து போயிருந்தபோது,
கிறிஸ்துமஸ் கொண்டாட தேவாலயம் போனால், ஆள் வராமல் தேவாலயம் மூடியே
கிடந்தது. அங்கெல்லாம், கிறிஸ்தவத்தை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை.
அது பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கிறது. அவ்வளவுதான்… இந்த நிலையை
சரிகட்ட, தேவாலய நிறுவனம் புதிய சந்தையை எதிர்நோக்குகிறது.
.. இந்தியா
போன்ற நாடுகளில்தான் காசிற்காக சிறுநீரகத்தையே விற்கும் போது, காசிற்காக
கட்சி மாறும் போது, காசிற்காக `மதம்` மாறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லையே?
என்ற எதிர்பார்ப்பில் இச்சந்தை விரிவில் அது ஈடுபட்டிருக்கிறது. ஆனால்,
இது தோல்வியுறும்”.
அவருக்குப் பதிலளிக்கையில் நான் குறிப்பிட்டேன் - ”ஆமாம், நீங்கள்
கூறியது போல மேற்குலகில் கிறிஸ்தவம் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. அதை
ஒரு enlightened மார்க்கமாக சிந்திக்கும் மக்கள் யாருமே அங்கு
நினைப்பதில்லை. ஆனால், இந்தியாவில், தமிழகத்தில் இந்த விமர்சனங்களின்
துளிகள் கூட வந்து சேர்வதில்லை என்பது தானே நிதர்சனம்? இங்கு ஊடகங்கள்,
அரசியல் அதிகார சக்திகள் எல்லாம் கிறிஸ்தவ அமைப்புகள் கையில் இருக்கிறது.

ஒருபக்கம் அவை இந்த தேசத்தின் கலாசாரத்தின் மீதும், அதன் சமயங்கள்,
தத்துவங்கள் மீதும் அவதூறுகளையும், ஏளனத்தையும் பரப்பி வருகின்றன.
இன்னொரு புறம், இதே கலாசாரத்தின் கூறுகளைத் திருடி, அவற்றின் மீது
கிறிஸ்தவ முத்திரையைக் குத்த முயன்று கொண்டிருக்கின்றன. .. கிறிஸ்தவ
பொய்மை இங்கு அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. ஆனால் கிறிஸ்தவத்தைப்
பற்றிய நேர்மையான விமர்சனம், ஏன் பிரான்ஸ் போன்ற “கிறிஸ்தவ” நாடுகளிலேயே
தங்குதடையின்றி பொதுத்தளத்தில் கிட்டும் விமர்சனம் கூட இந்தியாவில்
கிட்டுவதில்லையே??”
சொல்லப் போனால், கிறிஸ்தவம் காலூன்ற முயன்ற ஆரம்ப காலங்களிலேயே, அது
இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருப்பது வரலாற்றைப் புரட்டிப்
பார்த்தால் தெரியும். 16ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு முதன்முதலில்
வந்த சீசன்பால்கு என்ற பாதிரியை தமிழறிஞர்கள் நேரடியாகவே எதிர்கொண்டு
கிறிஸதவ மதத்தின் அடிப்படைகள் என்று சொல்லப் படும் கருத்துக்கள் குறித்து
அறிவார்ந்த கேள்விகள் எழுப்பினர். நம் தரப்பில் அவற்றைப் பதிவு
செய்யாததால், காலனிய வரலாற்றின் ஒரு பகுதியாக “ஹிந்து அக்ஞானிகளின்
கேள்விகள்” என்ற முத்திரையுடன் அவை பாதிரியாரால் ஆவணப் படுத்தப்
பட்டுள்ளன. துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய “ஏசு மத நிராகரணம்”
என்ற நூலின் பிரதி இப்போது அச்சில் இல்லை, மறைந்தே விட்டது. 20ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்தர், சுவாமி
விவேகானந்தர் தொடங்கி “சைவதூஷண பரிகாரம்” எழுதிய ஆறுமுக நாவலர் வரை
இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்
தக்கது.
ஆனால் சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும்
இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது..
நண்பருக்கு எழுதிய பதிலில்,
”இதைப் பேசப் போனால், உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு
சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு
மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற
கருத்து இந்து மனதில் உள்ளது.
இதை, இதையே தான் கிறிஸ்தவ
ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப் பற்றிப்
பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே பரவலாக உள்ளது
அது
அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்.
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் Empty Re: இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

Post by Ramya25 Sun Sep 13, 2009 12:51 am

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் Expressions_book
இந்தச் சூழலில், “Expressions of Christianity, with a Focus on India” என்ற
தொகுப்பு நூலைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பிரசார நெடி
சிறிதும் இல்லாமல், அதே சமயம் கசப்பான உண்மைகள் எதையும் மறைக்காமல்
எழுதப் பட்ட பல அருமையான கட்டுரைகள் இதில் வாசிக்கக் கிடைக்கின்றன என்பது
மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
நூலின் அமைப்பும் சிறப்பாக உள்ளது.
கிறிஸ்தவத்தின் தொடக்கமும் ஆரம்பகால வரலாறும், மேற்குலகில்
கிறிஸ்தவத்தின் முகங்கள், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும்
கிறிஸ்தவத்தின் முகங்கள், கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள்,
மேற்குலகில் கிறிஸ்தவத்தின் தேய்வு
ஆகிய ஐந்து பகுதிகளின் கீழ்
சிறியதும், பெரியதுமாக பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் எழுதிய 40
கட்டுரைகள் உள்ளன.
”கிறிஸ்தவம் தான் பீற்றிக் கொள்வது போல அச்சு அசலான மதம்
கிடையாது. பழைய ஏற்பாடு ஏராளமான விஷயங்களை பழைய மெசபடோமிய, எகிப்திய
மூலங்களில் இருந்து பெற்றது என்பது இப்போது பரவலாக எல்லோராலும் ஏற்றுக்
கொள்ளப் படுகிறது. அதே போன்று புதிய ஏற்பாடு தனது மையமான படிமங்களையும்,
நம்பிக்கைகளையும் அக்காலத்திய பன்முகப் பட்ட கிரேக்க
கலாசாரத்திலிருந்தும் (Hellenistic - cosmopolitan culture), கிழக்கு
மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் அப்போது பரவியிருந்த இந்திய
மதங்களிடமிருந்துமே பெற்றது. .. குறிப்பாக, உபநிஷத- பௌத்த சிந்தனைகள்
கூறும் முக்தி பற்றிய *தத்துவக்* கோட்பாடு, மறுபிறவி மற்றும் பிறவிச்
சுழல் பற்றி ஏதும் அறியாத யூத பின்னணியில் நுழைந்து, ஒரு
இறையியல்-நம்பிக்கை சார்ந்த கோட்பாடாக உருமாறியது தான் கிறிஸ்தவத்தின்
கதிமோட்சம் (liberation) என்கிற கோட்பாடு. பண்டைக் காலத்திய பலதெய்வ
வழிபாட்டின் மறைமுக-சுவடுகள் தவிர்த்து இந்தக் கோட்பாடு தான்
கிறிஸ்தவத்தை இஸ்லாம், யூதம் ஆகிய “ஆபிரகாமிய” மதங்களிலிருந்து
வேறுபடுத்திக் காட்டுகிறது..”

- ”Christianity, a Man made Religion indebted to India” என்ற
தலைப்பில் பெல்ஜிய அறிஞர் கொய்ன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst)எழுதிய
கட்டுரையிலிருந்து
இந்த அரிய கட்டுரையில், எல்ஸ்ட் கிறிஸ்தவத்தின் சடங்குகள்,
பண்டிகைகள், சமயக் கருத்துக்கள் உருவான விதம் பற்றி சுவைபட
விளக்குகிறார்.
தன் இளமைப் பருவத்தில் ஏசு இந்தியாவிற்கு வந்தார்,
காஷ்மீரில் வாழ்ந்தார் என்றெல்லாம் இப்போது பிரசாரம் செய்யப் படும் “Jesus
in India” என்கிற கருதுகோள் உருவாகி வளர்ந்தது பற்றிய முழுமையான
சித்திரமும் இதில் உள்ளது.
கிறிஸ்தவத்தில் பெண்கள் (Women in Christianity) என்ற தலைப்பில்
வரலாற்று அறிஞர் மிஷேல் டானினோ (Michel Danino) வின் கட்டுரை இன்னொரு
முத்து.
பெண்மையைக் கீழானதாக சித்தரிக்கும் ஆதியாகமம், செயிண்ட் பாலின்
பெண்மை பற்றிய வசனங்கள், கத்தோலிக்க சர்ச் அதிகார பீடம் மதத்தின் பெயரால்
ஏராளமான பெண்களைக் கொன்று குவித்த “சூனியக்காரி வேட்டைகள்” (Witch
hunting), கிறிஸ்தவ இறையியலில் இன்று வரை தொடரும் பெண்மை மீதான அச்சம்
ஆகியவை பற்றியது இந்தக் கட்டுரை.

ஹிட்லர் இன்று உலகத்தின் மிகப் பெரிய தீய சக்தியாகவும், மகா
வில்லனாகவும், “கிறிஸ்துவுக்கு எதிரானவராகவும்” (anti Christ)
மேற்குலத்தால் சித்தரிக்கப் படுகிறார். ஆனால் நாசிசத்தின்
உருவாக்கத்திலும், யூத வெறுப்பிலும் கிறிஸ்தவத்தின் தாக்கம் மையமானது
மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய கிறிஸ்தவ அதிகார பீடங்கள் நாசிசத்தை
முழுமையாக ஆதரிக்கவும் செய்தன என்றும் சொன்னால் உங்களுக்கு வியப்பு
ஏற்படுகிறது இல்லையா??
மேற்குலகில் நன்கறியப் பட்ட இந்த விஷயங்கள்
இந்தியாவில் வெளிச்சத்துக்கு வரவே இல்லை. கலவை வெங்கட் எழுதியிருக்கும்
“From the Holy Cross to the Holocaust” (என்ன அட்டகாசமான தலைப்பு!) என்ற
இது பற்றிய கட்டுரை கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டியது.
பின்னர் காரைக்காலின் பாதிரி (Father
Coeurdoux) ஒரு பெரிய சுத்தியலை எடுத்துக் கொண்டு வந்தார். சிவலிங்கத்தை
எட்டி உதைத்தார். சுத்தியால் உடைத்தார். பின்னர் விஷ்ணு மற்றும் பிற
திருவுருவங்களையும் உடைக்குமாறு காப்பிரிகளுக்கும், மற்ற
ஐரோப்பியர்களுக்கும் ஆணையிட்டார். சீமாட்டி (கவர்னர் மனைவி) பின்னர்
பாதிரியிடம் சென்று அவர் இஷ்டப்பட்ட படி விக்கிரகங்களை உடைத்துக்
கொள்ளலாம் என்று சொன்னாள். ’ஐம்பது வருடங்களாக சாத்தியப் படாதிருந்த ஒரு
விஷயத்தை சீமாட்டி நடத்திக் காட்டியிருக்கிறாள்; பழங்காலத்தில்
கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த மகாத்மாக்களில் ஒருவர் தான் அவள் உருவில்
வந்திருக்க வேண்டும்’ என்று பாதிரி சொன்னார்.இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் Sitaramgoel1
சீதாராம் கோயல் (1921-2003)

பிறகு வர்லாம் (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்), தன்னையும்
மகாத்மா என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில்,
அவர்கள் முன்னிலையில், பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால்
சிவலிங்கத்தை எட்டி உதைத்தான். பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது
காறி உமிழ்ந்தான். பிறகு சீமாட்டியைப் பின் தொடர்ந்து சென்றான். பிறகு
அவர்கள் கோவிலுக்குள் செய்த அசிங்கங்களையும், வக்கிரச் செயல்களையும்
என்னால் எழுதவோ சித்தரிக்கவோ ஒண்ணாது… அவர்களுக்கு இதனால் என்ன
விளையுமோ எனக்குத் தெரியாது.. ஆனால் தமிழர்கள் பிரளயமே வந்து விட்டது
என்று எண்ணினார்கள். பாதிரிகளும், கிறிஸ்தவர்களாகி விட்ட தமிழர்களும்,
கவர்னரும், அவரது மனைவியும் அவர்கள் முன்பு எப்போதுமில்லாதது போல
சந்தோஷமடைந்தார்கள் … “
- சீதாராம் கோயல் எழுதிய ”பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம்” என்ற கட்டுரையிலிருந்து.
ஆனந்த ரங்கம்பிள்ளையின் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு, அனைத்து சாதி
மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம்
பிரெஞ்சு காலனிய அரசாட்சியாளர்களால் தகர்ப்பட்ட வரலாற்றை விரிவாக
எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் Empty Re: இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

Post by Ramya25 Sun Sep 13, 2009 12:54 am

தூய்மை, அன்பு, சேவை இவையே இந்தியாவில் கிறிஸ்தவத்தின் முகங்கள் என்று
தீவிர பிரசாரம் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.
பாதிரி, மிஷநரி, பிஷப்
எல்லாம் போய் இப்போது தமிழில் “அருட்பணியாளர்” என்று சொல்ல ஆரம்பித்து
விட்டார்கள். திரைப்படங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாகவும்,
மறைமுகமாவும் இத்தகைய சொல்லாட்சிகள் பரப்பப் பட்டு பிரசாரம் செய்யப்
படுகிறது. எப்பேர்ப் பட்ட கொடுஞ் செயல்களையும், பயங்கரவாதத்தையும்
பிரசாரம் மூலமாகவே வெள்ளைச் சுண்ணம் பூசி ம்றைத்து விடலாம் என்று காலனிய,
சர்வாதிகார சக்திகள் கருதுவது போலவே கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளும்
கருதுகின்றன.
சொல்லப் போனால் கிறிஸ்தவ மத மிஷநரி அமைப்பு முழுவதுமே காலனிய அதிகார
மயமாக்கலின் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் தெளிவாக
ஆவணப் படுத்தியுள்ளனர்.
ஆசிய காலனியாதிக்கத்தில் மிஷநரிகளின் அபரிமிதமான
பங்கு பற்றி கே.எம். பணிக்கர் எழுதிய Christian Missions in Asia என்ற
விரிவான கட்டுரையும் இந்த நூலில் உள்ளது. இந்தியாவின் கோவா கடற்கரை
தொடங்கி பர்மா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் என்று ஆசியா
முழுவதும் கிறிஸ்தவ மிஷன்கள் ஒவ்வொரு நாட்டிலும் நுழைந்து எப்படி அதன்
அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என்பது பற்றிய துல்லியமான சித்திரம்
அந்தக் கட்டுரையில் இருக்கிறது. (இதே பணிக்கரின் நூலின் அடிப்படையில்
திண்ணை இதழில் புருஷ் அவர்கள் ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும் எனகிற விரிவான கட்டுரையை முன்பு எழுதியிருக்கிறார்).
கோவாவின் புனித விசாரணைகள், அதன் பின்னணி, அங்கு இந்துக்களுக்கு
இழைக்கப் பட்ட கொடூரங்கள் பற்றிய இரு முக்கியமான கட்டுரைகள் இந்த நூலில்
உள்ளன. ஆல்ஃபிரடோ டிமெல்லோ (Alfredo De Mello) வின் “Pouncing on Goa”.
ராதா ராஜன் எழுதிய ”Antecedents of the Goa Inquisition”.
”கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள்” என்ற பகுதியில்
தொகுப்பாசிரியர்களின் அயராத உழைப்பும், பரந்த வாசிப்பும், கூரிய
பார்வையும் காணக் கிடைக்கிறது. ராபர்ட் இங்கர்சால் (Heretics and
Heresies), பெட்ரண்ட் ரஸ்ஸல் (Why I am not a Christian) ஆகிய
சிந்தனையாளர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதிய ”கிளாசிக்” கட்டுரைகளை
சேர்த்திருப்பது நல்ல ரசனை. கலிலியோ, மார்க் ட்வெய்ன் உள்ளிட்ட
மேற்குலகின் பல முக்கிய சிந்தனையார்களின் மேற்கோள்கள் களஞ்சியத்தை
அளித்திருப்பது அருமை.
கிறிஸ்தவம் உண்மையிலேயே உண்மையாக இருக்கவேண்டும் என்று
யாராவது விரும்புவார்களா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால்
அதன் புனிதநூல் மிக வெளிப்படையாகக் கூறுவதன் அடிப்படையில் விசுவாசிகளாக
இல்லாதவர்கள் நிரந்தர நரகத்தில் தண்டிக்கப் படுவார்கள்.. இந்தப்
பட்டியலில் என் அப்பா, என் சகோதரர் மற்றும் என் உற்ற நண்பர்கள் எல்லோருமே
வந்து விடுகிறார்கள்! இது முற்றிலும் கண்டனத்திற்குரிய கோட்பாடு இல்லாமல்
வேறென்ன? (.. and this is a damnable doctrine).
- சார்லஸ் டார்வின்

கங்கையும், காவிரியும், இமயமும், பொதிகையும் பெருங்காடுகளும் சூழ்ந்த
நிலப் பரப்பில் உருவாகியவை இந்து, பௌத்த, சமண மதங்கள். மாறாக அங்கங்கு
சில சுனைகள் மட்டுமே கொண்ட வறண்ட பாலை நிலத்தில் தோன்றியவை ஆபிரகாமிய
மதங்கள்.
இயற்கையின் இந்த விசித்திரமே இந்த இரு மத-கலாசாரங்களின்
உலகத்தைப் பற்றிய பார்வையில் பங்கு வகிக்கிறதோ? பாரத மதங்கள் பன்முகப்
பட்ட தன்மையும், இயற்கையின் கொடைகளைப் பற்றிய பிரக்ஞையும் கொண்டவையாக
இருக்க, செமித்திய மதங்கள் ஒற்றைப் பார்வையுடனும், இயற்கையின் வதைக்கும்
முகத்தையே அதிகம் கண்டவையாகவும் இருக்கின்றன. இத்தகைய சிந்தனை இழையில்
தொடரும் லோகேஷ் சந்திராவின் Theo Diversity and Human Values என்கிற
சுவாரஸ்யமான கட்டுரை மதங்களின் உருவாக்கத்தில் இயற்கை மற்றும் பூகோள
அமைப்புகள், வாழ்க்கை முறைகள் உருவாக்கும் பங்கு பற்றி ஆராய்கிறது.
இந்த அருமையான நூலை உருவாக்கியிருக்கும் பரமேஸ்வரன், அரவிந்தன்
நீலகண்டன் ஆகிய தொகுப்பாசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்தப்
புத்தகம் கிறிஸ்தவத்தின் கருத்தியலையும், வரலாற்றையும் பற்றிய முதல்
தொகுப்பு, இதைத் தொடர்ந்து ”Christianity: Proselytism and Conversion:
with a focus on India என்ற தலைப்பில், நடைமுறையில், சமகாலத்திய
கிறிஸ்தவத்தின் மதமாற்ற செயல்பாடுகள் பற்றிய இன்னொரு தொகுப்பும் வெளிவரப்
போகிறது என்று முன்னுரை கூறுகிறது. அதையும் உடனடியாக அவர்கள்
வெளியிடவேண்டும். இந்து அறிவியக்கத்தின் வளர்ச்சிக்கு இந்த இரு
தொகுப்புக்களும் சிறந்த துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் Empty Re: இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

Post by nandhtiha Sun Sep 13, 2009 1:39 am

சகோதரி ரம்யா
வணக்கம்
சகோதரி திரு ஜடாயு அவர்க்ளின் கட்டுரையைப் பதித்தமைக்கு நன்றி. எடுக்கப் பட்ட தளத்தையும் குறிப்பிடுவது நன்று.
ஆவரோ மன்ஹாட்டன் என்பவர் எழுதிய vatican holocaust என்ற புத்தகத்தையும் குறிப்பிட்டிருக்கலாம். அந்தப் புத்தகம் இணயத்தில் கிடைககிறது. சுட்டி :http://www.reformation.org/holocaust.html
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் Empty Re: இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum