ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

''கர்நாடகத் தண்ணீரும் வேண்டும்!'' டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

Go down

''கர்நாடகத் தண்ணீரும் வேண்டும்!''  டெல்டா விவசாயிகள் கோரிக்கை! Empty ''கர்நாடகத் தண்ணீரும் வேண்டும்!'' டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 1:21 pm

இதோ, அடுத்த சூதாட்டத்துக்குத் தயாராகி விட்டார்கள், தமிழக டெல்டா விவசாயி கள்! ஆம், வேளாண்மையே ஒரு சூதாட்டம் என்கிற நிலையில்தானே தமிழக விவசாயம் இப்போது இருக்கிறது!

ஒன்று, தண்ணீர் இல்லாமல் காய்ந்து கெடுக்கும்; இல்லையென்றால், அதிகப்படியான மழையில் எல்லாம் பாழாகும். எது நடந்தாலும், தைரியமாக அடுத்த போகத் துக்குக் களத்தில் இறங்குவான், தமிழக விவசாயி!

''இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதன் முறையாக இப்போதுதான் ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டது!'' என்பது புதிய தமிழக அரசுக்குப் பெருமைதான். ஆனால், ''ஆறு நாட்கள் முன்னே திறப்பதால் மட்டும், பெரிய பலன்கள் ஏதும் கிடைக்காது. இப்போது திறக்கப்படும் 12,000 கன அடி தண்ணீரை வைத்துக்கொண்டு நாற்றங்கால் மட்டுமே விடலாம், நடவு செய்ய முடியாது. அதற்கு 24,000 கன அடி வேண்டும்!'' என்று சொன்னார், விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த சேரன்.

முன்கூட்டியே தண்ணீர் கிடைப்பதால், சில வருடங் களாகக் கைவிட்ட குறுவைச் சாகுபடியை இந்த ஆண்டு செய்ய முனைப்போடு இறங்கி இருக்கிறார்கள் விவசாயிகள். நாகை, திருவாரூர், தஞ்சை மூன்று மாவட்டங்களிலும் 1.25 லட்சம் ஹெக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி நடக்குமாம். ''ஜூனில் தண்ணீர் திறந்தால்தான் அக்டோபர் முதல் வாரத்துக்குள் அறுவடை முடியும். பொதுவாக அக்டோபர் இரண்டாம் வாரத்துக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்கும். அதற்குள் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு கரையேறி விடுவோம். மழைக் காலத்தில் நிலத்தை சும்மா போட்டுவைத்துவிட்டு, தை பட்டத்தில் உளுந்து பயிர் சாகுபடி செய்து நல்ல லாபம் பார்க்கலாம். மேடான பகுதி விவசாயிகள், குறுவைக்குப் பிறகு உடனே தாளடிப்பட்டம் சாகுபடி செய்வார்கள். இந்த ஆண்டு நெல் உற்பத்தி நிச்சயம் அதிகரிக்கும்!'' என்று சந்தோஷமாகக் கூறினர் சிலர்.

இந்த சந்தோஷம் முழு சாத்தியமாக, அரசு உடனடியாகச் சில கட்டாய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று சொன்ன சுவாமிமலை சுந்தரவிமலநாதன், ''தண்ணீர் வந்துவிட்டது. ஆனால், போதிய விதை நெல் எந்த அரசு டெப்போவிலும் கையிருப்பு இல்லை. தனியார் கடைகளில் 'போதும் போதும்’ என்று சொல்கிற அளவுக்கு விதைநெல் விற்பனை செய்கிறார்கள். ஆனால், அவர்களிடம் எந்த உத்தரவாதத்தோடு விதைநெல் வாங்க முடியும்? ஏனென்றால், கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அப்படி. தனியார் கடைகளை உற்றுப் பார்த்தால், வேளாண்மைத் துறையில் ஓய்வு பெற்றவர்கள், அல்லது வேலை பார்ப்பவர்களின் பினாமிகள் பெயரில்தான் உள்ளன. அவர்கள் கொள்ளை லாபம் பார்க்கவே இப்படி விவசாயிகளை அலையவிடுகிறார்கள். அதைக் கட்டுப்படுத்தி, போதிய விதை நெல்லை அரசு மானிய விலையில் கொடுக்கவேண்டும்.

அடுத்ததாக, கடன் வசதி. உண்மையான விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகள் நிறையவே கண்டிப்பு காட்டுகின்றன. இப்போது கூட்டுறவு வங்கிகளில் கூட்டுப் பொறுப்புக்குழு என்ற ஒன்றை அமைத்து அதில் 10 நபர்களைச் சேர்த்து கடன் வழங்குகிறார்கள். யாராவது ஒருவர் கடனைத் திரும்பக் கட்டவில்லை என்றாலும் மீதம் ஒன்பது பேருக்கும் கடன் கிடைக்காது. கூட்டுப் பொறுப்புக் குழுக்களை கலைத்துவிட்டுத் தனிநபருக்கு கடன் வழங்க வேண்டும்...'' என்று முடித்தார்.

இப்போதைய நிலையில் மேட்டூரில் போதிய தண்ணீர் இருப்பு இருக்கிறது என்பதால் கர்நாடகம் நமக்கு மாதாந்திர அளவுப்படி கொடுக்கவேண்டிய தண்ணீரைக் கேட்டு வாங்காமல் இருக்கிறோம் என்றும் வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.

''ஜனவரி மாதம் 2.51, பிப்ரவரியில் 2.17, மார்ச்சில் 2.40, ஏப்ரலில் 2.32, மே மாதத்தில் 2.01 டி.எம்.சி நீரை கர்நாடகம் நமக்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அப்படி வழங்கியதாகத் தெரியவில்லை. ஆனால், ஐந்து மாத காலமாக நாம் வைத்திருந்த இருப்பும், மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையாலும்தான் இப்போதைய இருப்பு. இதுவும் கடைமடையில் மழை பெய்யாவிட்டால், 50 நாட்களில் காலியாகிவிடும். எனவே, இருப்பை நம்பாமல் கர்நாடகத்திடம் உரிமையோடு கேட்டு, தேவையான தண்ணீரைப் பெறவேண்டும். அதுபோல பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுக்காக்களில் உள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் வந்து 30 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. காரணம், வாய்க்கால் பராமரிப்புக்காக இருந்த லஸ்கர், மேஸ்திரி போன்றவர்கள் ஓய்வு பெற்றதால், பதிலாகப் புதியவர்கள் நியமனம் இல்லை! எனவே, கர்நாடகத்திடம் கேட்டு வாங்குவதும், முறையாகப் பராமரித்து அதைப் பிரித்துக் கொடுப்பதும் ரொம்பவே முக்கியம்!'' என்றார், பட்டுக்கோட்டை தாலுக்கா விவசாயிகள் சங்கச் செயலாளர் பழஞ்சூர் காளிமுத்து.

ஆங்காங்கே நடைபெறும் தூர்வாரும் வேலைகள் பற்றியும் விவசாயிகளிடம் ஆதங்கம் இருக்கிறது. ''இப்போது அவரசஅவசரமாக 16 கோடியை ஒதுக்கித் தூர் வாருகிறார்கள்... தண்ணீர் வந்துவிடும் என்பதால், சும்மா பேருக்குத்தான் செய்கிறார்கள். ஒப்பந்தக்காரர்களுக்குத்தான் கொண்டாட்டம். தண்ணீர் வந்தாலும்கூட, தண்ணீருக்குள் இருந்து தூர்வாரும் நவீனக் கருவிகளைக் கொண்டு முறையாகத் தூர் வாரவேண்டும்!'' என்கிறார், தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் சி.பக்கிரிசாமி.

''திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பெய்யும் மழை வெள்ளத்தை வெண்ணாற்றில் விடாமல் திசைதிருப்பி கொள்ளிடம் ஆற்றில் விடவேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டவேண்டும்!'' என்பதும் விவசாயிகளின் கோரிக்கை.

உரிய முறையில் புதிய அரசு கைகொடுத்தால், தமிழகம் விவசாயத்தில் தலைநிமிரும்!


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''கர்நாடகத் தண்ணீரும் வேண்டும்!''  டெல்டா விவசாயிகள் கோரிக்கை! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  3660 டன் அரிசி இறக்குமதி: ஆதங்கத்தில் டெல்டா விவசாயிகள்..!
» ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை
» மெரினா தான் வேண்டும்: ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை
» ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும் : பாஜகவுக்கு கோரிக்கை
»  உடுமலை குளங்களில் தாமரைச்செடிகளை பாதுகாக்க வேண்டும் - கிராமமக்கள் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum