ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி

3 posters

Go down

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Empty ஜெயலலிதா பரபரப்பு பேட்டி

Post by dsudhanandan Tue Jun 14, 2011 5:59 pm

பிரதமர் மன்மோகன்சிங்கை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நண்பகலில் சந்தித்து பேசினார். முதல்வரை வரவேற்க பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
.
தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அப்போது அவர் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா 3வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நேற்று புதுடெல்லி வந்தார். அவருக்கு அதிமுக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுடெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பிஜேபி முக்கிய தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் நேற்று ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இன்று காலை அதிமுக நாடாளு மன்ற உறுப்பினர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இன்று நண்பகலில் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதல்வரை வரவேற்க பிரதமர் அலுவலகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. ஜெயலலிதா வருகையின் போது எத்தகைய சோதனை இல்லாத அளவுக்கு அவரை வரவேற்க வசதியாக சிறப்பு ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் செய்ததுடன் அவரை வரவேற்க பிரதமர் அலுவலக கார் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

பிரதமர் அலுவலகம் அனுப்பிய காரில் ஜெயலலிதா சரியாக 12 மணி அளவில் புதுடெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு வந்தõர். இதனால் அந்த கார் எந்த சோதனையும் இன்றி பிரதமர் இல்லத்துக்குள் அவர் வந்தபோது எந்தவித தடங்கலும், சோதனையுமின்றி சென்று பிரதமரை சந்தித்தார். பிரதமருக்கு மலர் கொத்தை வழங்கினார். தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்று இருப்பதற்கு பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் கொண்ட மனு ஒன்றை பிரதமரிடம் ஜெயலலிதா வழங்கினார். பிரதமரிடம்பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அவர் தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: பிரதமருடனான சந்திப்பு எப்படி அமைந்தது?

பதில்: மிக சிறப்பாக அமைந்தது.

கே: மத்திய அரசுடனான உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?

ப: எங்களுடைய தேர்தல் அறிக்கையில் அது பற்றி குறிப்பிட்டுள்ளோம். கவர்னர் உரையிலும் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். தமிழக மக்கள் நலன் கருதி மத்திய அரசுடன் இணக்கமான உறவு கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். மத்திய அரசுடன் மோதல் போக்கை கொள்ள நாங்கள் விரும்ப வில்லை.

கே: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி....

ப: உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளும் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதால் நான் இதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

கே: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்படும் புகார்கள் பற்றி....

ப: மத்திய அமைச்சர்தயாநிதி மாறன் தனது பதவியிலிருந்து விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அப்படி அவர் பதவி விலக மறுத்தால் அவரை அமைச்சரவையிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும்.

கே: பிரதமருடனான தங்களுடைய சந்திப்பால் திமுக கவலை அடைந்திருப்பதாகவும், அணி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறதே?

ப: திமுக கவலை அடைந்திருப்பதாக நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். அணி மாற்றம் ஏற்படும் என்று முன்கூட்டி கருத்து கூற இயலாது.

கே: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுகவினர் மீதான நடவடிக்கைகள் பற்றி....

ப: இந்த புகாரில் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது. திமுகவினர் பலர் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பலர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். சிலர் ஏற்கனவே சிறையில் உள்ளனர். இவர்கள் மீது நானோ, எங்கள் அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் குறித்து விசாரணை நடத்தி திமுக அங்கம் வகிக்கும் மத்தியஅரசுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

கே: அன்னாஹசாரேவின் போராட்டம் குறித்து....

ப: ஜனநாயகத்தில் போராடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது.

கே: இலங்கை தமிழர் பிரச்சனை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமருடன் விவாதித்தீர்களா?

ப: இலங்கை பிரச்சனை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து 2 முக்கிய தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளோம். மேலும் இலங்கை செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் என்னை சந்தித்து விட்டு செல்ல பிரதமர் வலியுறுத்தி இருந்தார். இன்று பிரதமரை சந்தித்து பேசியபோது அவரும் உடன் இருந்தார். இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடம் முக்கியமாக வலியுறுத்தினேன்.

இலங்கை தமிழர் பிரச்சனையை தொடர்ந்து அங்கு முகாம்களில் இருக்கும் தமிழர்கள் தொடர்பாக வெவ்வேறு விதமான புள்ளி விவரங்கள் கூறப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். தமிழர்கள் தங்களது இருப்பிடத்திற்கே சென்று வசிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.

மீனவர்கள் மீதான தாக்குதலை பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது இந்த பிரச்சனைக்கான முக்கிய காரணம் என்று பிரதமரிடம் தெரிவித்தேன்.

கே: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவேன் என்று சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தீர்களே....

ப: அப்போது இருந்த நிலையில் அவ்வாறு கூறியிருந்தேன். ஆனால் திமுக காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருகிறது. எனவே காங்கிரசுக்கு ஆதரவு தருவது பற்றிய கேள்வி எழவில்லை.

கே: சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?

ப: பல காரணங்கள் உள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஊழல், மோசமான நிர்வாகம், ஆட்சியின் அனைத்து பிரிவுகளிலும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம். கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற பல பிரச்சனைகளால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஹிட்லர் ஆட்சியில் இருந்தபோது உகாண்டாவின் இடிஅமின் ஆட்சியில் இருப்பதுபோல மக்கள் உணர்ந்தனர்.

-மாலை சுடர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Empty மோசடி செய்த சிதம்பரம்- தயாநிதி பதவி விலக வேண்டும் ”- டில்லியில் முதல்வர் ஜெ., பேட்டி

Post by dsudhanandan Tue Jun 14, 2011 6:03 pm

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் ( தேர்தல் முறைகேடு) , மற்றும் தயாநிதி ( ஸ்பெக்ட்ரம் ஊழல் ) ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வலியுறுத்தினார். முன்னதாக பிரதம‌ரை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக 30 பக்கம் கொண்ட கோரிக்கை மகஜரை அவர் வழங்கினார்.

சந்திப்பிற்கு பின்னர் நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு ‌ஜெ., அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2009 தேர்தலில் முறைகேடு செய்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். இத‌ைனை அ.தி.மு.க., ‌‌தொடர்‌ந்து கூறி வருகிறது. இவர் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். எங்களது கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றார். டேட்டா என்ட்ரி செய்யும் ஆப்ரேட்டர் மூலம் இதி்ல குளறுபடி செய்து விட்டார். அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த பிரச்னை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மோசடி செய்து வெற்றி பெற்று நாட்டை ஏமாற்றியிருக்கிறார் உள்துறை அமைச்சர் சிதம்பரம் . எனவே அவர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி அவரே பதவி விலகியிருக்க வேண்டும் அவர் பதவி விலகாததால் தயாநிதியை, பிரதமர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின்போது அவர்கள் தங்களுக்கு சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்தனர். குடும்ப ஆட்சியே அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எவ்வித கவலையும் அடையவில்லை என்றார். தி.மு.க.,வினர் மீது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது தி.மு.க.,மீது தாம் எதுவும் கிரிமினல் வழக்கு போட யாருக்‌கும் சிக்னல் கொடுக்கவில்லை என்றார்.

அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி :

ஜெ.,யின் குற்றச்சாட்டிற்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது கருத்து தெரிவிப்பது தவறு. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஜெ., எப்போதும் கோர்ட்டை மதிப்பதில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

- தினமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Empty Re: ஜெயலலிதா பரபரப்பு பேட்டி

Post by SK Tue Jun 14, 2011 6:16 pm

தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது

இவர் மட்டும் மந்திரி பதவியில் இருக்கலாமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Empty Re: ஜெயலலிதா பரபரப்பு பேட்டி

Post by dsudhanandan Tue Jun 14, 2011 6:32 pm

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் தயாநிதி ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வலியுறுத்தினார்.

ஜெ.-வின் இந்தத் துணிச்சல் கண்டு டில்லி மீடியாக்கள் திகைத்தன....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Empty Re: ஜெயலலிதா பரபரப்பு பேட்டி

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 14, 2011 6:44 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதா பரபரப்பு பேட்டி Empty Re: ஜெயலலிதா பரபரப்பு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum