ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

+8
பாலாஜி
மகா பிரபு
அருண்
krishnaamma
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
ரபீக்
முரளிராஜா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by முரளிராஜா Sat Jun 11, 2011 11:23 am

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 11-karuna31-300
சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை காரணம் அல்ல என்றும், சில பார்ப்பனர்களின் முயற்சிதான் காரணம் என்றும் அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசு, சிபிஐ அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஆயுதமாக இருக்கலாம், அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது.

கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போல குறிப்பிட்டீர்கள். ஆனால், இன்றைய உங்கள் தீர்மானத்தில் அது குறித்து ஏதும் குறிப்பிடவில்லையே?.

பதில்: திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.

கேள்வி: 'கூடா நட்பு'' என்று சொன்னீர்களே, அது யாரைக் குறிக்கிறது?.

பதில்: உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?

கேள்வி: காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினீர்கள். இப்போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னீர்கள். அதனால் மீண்டும் இப்போது காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுவீர்களா?.

பதில்: ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றி- அப்போதுள்ள நிலையைப் பொறுத்து கூற வேண்டிய சூழ்நிலையில் நான் அப்படி கூறியிருப்பேன். அதையே இப்போதும் நீங்கள் கூறுவீர்களா என்று கேட்க முடியாது.

கேள்வி: எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் பிரச்சனை இல்லை என்று கூறுவீர்களா?

பதில்: நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து அதை இங்கே வந்து கேள்வியாகக் கேட்கிறீர்கள். அப்படித் தானே?

கேள்வி: டெல்லியில் குலாம் நபி ஆசாத் உங்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 2ஜி வழக்கு நடப்பதால் தான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிட வேண்டுமென்று நாங்கள் என்றைக்கும் நினைப்பவர்களும் அல்ல, செயல்படுகிறவர்களும் அல்ல.

கேள்வி: ஜுலை மாதத்தில் நீங்கள் கூட்டும் பொதுக்குழுவில் திமுக, காங்கிரஸ் கட்சியோடு கொண்டுள்ள உறவு தொடருமா? தொடராதா? என்ற முடிவினை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

பதில்: நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று எழுதியிருக்கிறார்களே?

பதில்: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை பூதாகரமாக சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட காரணத்தால், அதை எடுத்து வைத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையிலே எழுதியிருப்பார்கள்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தேர்தல் தோல்விக்குக் காரணமா, இல்லையா?

பதில்: இல்லை. ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

கேள்வி: பாஜகவுடன் நீங்கள் கூட்டணி அமைக்கப் போவதாக டெல்லியில் சொல்கிறார்களே, அதற்கு ஒரு முயற்சி நடைபெறுவதாகவும் கூறுகிறார்களே?

பதில்: அதைப் பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்தேவ் சாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூடச் சொல்வீர்கள்.

கேள்வி: அடுத்து சிபிஐ தாக்கல் செய்ய உள்ள 3வது குற்றப் பத்திரிகையிலே தயாநிதி மாறனின் பெயர் இடம் பெறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: நீங்கள் முயற்சி செய்தால் அது நடக்கலாம். ஆனால் உண்மையா அல்லவா என்பதை சிபிஐ தான் சொல்ல வேண்டும். சிபிஐ இதை 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறது.

கேள்வி: எதிர்க்கட்சிகள் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டுமென்று சொல்கிறார்களே, ஒரு கட்சித் தலைவராக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: ராஜினாமா செய்ய வேண்டாமென்று எதிர்க்கட்சிகள் எப்போதாவது சொல்வார்களா?.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையிலே நீங்கள் ராசாவை ஆதரித்த அளவிற்கு தயாநிதி மாறனை ஆதரித்து கருத்துக் கூறவில்லையே, அவரே பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறீர்களே?.

பதில்: நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தயாநிதி மாறனே சொல்வார் என்ற அந்த எண்ணத்தோடு நான் பதில் சொன்னேனே தவிர, நீங்கள் கலகமூட்டுவதைப் போல தயாநிதி மாறனை நான் ஆதரிக்காமல் இல்லை.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் அவருக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.

கேள்வி: இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உங்கள் சுய மரியாதை காப்பாற்றப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்: எங்கள் சுயமரியாதையைப் பற்றி தெருவிலே போகிறவர்கள் எல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதையைப் பற்றி எனக்குத் தெரியும்.

கேள்வி: 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

பதில்: அப்படிப்பட்ட வருத்தம் எனக்குக் கிடையாது. எனக்கு வருத்தம் வரவேண்டுமென்று நீங்கள் தான் படாதபாடுபடுகிறீர்கள்.

கேள்வி: ராசாவும், கனிமொழியும் சிறையிலே இருக்கக் காரணம் காங்கிரஸ் கட்சி தான். அவர்கள் தான் இந்த விஷயத்தை வெளியிலே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று உங்கள் கட்சித் தொண்டர்களே வெளியே பேசுகிறார்களே?

பதில்: எந்தத் தொண்டர் அவ்வாறு பேசினார்?.

கேள்வி: டெல்லிக்கு எப்போது போகிறீர்கள்?

பதில்: போகும்போது சொல்லிக் கொண்டு போகிறேன்.

கேள்வி: போபர்ஸ் வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும், இப்போது 2ஜி வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

பதில்: ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது புதிதல்ல.

கேள்வி: உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்து விட்டார்களே?

பதில்: உயர் நீதிமன்றத்தில் இதைப்பற்றி கேட்கிறீர்களே, இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலே சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா அரசிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியிருக்கிறார்களே அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று யாராவது நினைத்தீர்களா?. அந்தத் தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?.

கேள்வி: உங்கள் தீர்மானத்தில் சிபிஐயை கண்டித்திருக்கிறீர்கள். சிபிஐ பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் பிரதமரையே தாங்கள் கண்டித்ததாக எடுத்துக் கொள்ளலாமா?.

பதில்: நீங்கள் அப்படித் தான் எழுதுவீர்கள். உங்கள் சுதந்திரம் அது.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களையெல்லாம் இந்த ஆட்சியினர் நிறுத்தியிருக்கிறார்கள். அதனால் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதே?

பதில்: மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. யார் சொன்னார்கள் மக்களுக்குப் பாதிப்பு என்று? பாதிப்பு வருமென்று தெரிந்திருந்தால் மக்கள் அவர்களை தேர்தலில் ஆதரித்திருப்பார்களா?.

கேள்வி: நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நிறுத்தி வைத்ததைக் கண்டித்து நீங்கள் ஏதாவது போராட்டம் நடத்துவதாக இருக்கிறீர்களா?

பதில்: நாங்கள் தற்போது கூட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருக்கிறோம். இந்தக் கூட்டங்கள் முடிந்த பிறகு பொதுக் குழுவைக் கூட்டுவோம். அந்தப் பொதுக்குழுவில் போராட்டம் பற்றி தீர்மானிப்போம்.

கேள்வி: நிருபமா ராவ், சிவசங்கர் மேனன் ஆகியோர் இலங்கை சென்றிருக்கிறார்கள். பல முறை அங்கே போய் விட்டு வந்து விட்டார்கள். எதுவும் நடக்கவில்லையே?

பதில்: இது செய்தி

இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.

திமுக தீர்மானத்தில் 'ராசா' இல்லை:

முன்னதாக சிபிஐயை கண்டித்து திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சிபிஐ குற்றவாளிகளாகச் சேர்த்திருப்பது முற்றிலும் தவறானது என்றும் அதைக் கண்டிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அதில் முன்னாள் அமைச்சர் ராசாவின் பெயர் இடம் பெறவில்லை.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by ரபீக் Sat Jun 11, 2011 11:26 am

முன்னதாக சிபிஐயை கண்டித்து திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சிபிஐ குற்றவாளிகளாகச் சேர்த்திருப்பது முற்றிலும் தவறானது என்றும் அதைக் கண்டிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அதில் முன்னாள் அமைச்சர் ராசாவின் பெயர் இடம் பெறவில்லை.

"ஒருவேளை அவர் குற்றவாளி என தலைவர் நினைத்திருக்கலாம் "

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by சிவா Sat Jun 11, 2011 11:28 am

எங்கும், எப்படியும், ஏதாவது ஒரு சூழலை உருவாக்கி அதில் ஜாதியைப் பேசி மக்களைத் தூண்டி விடுவதுதான் இந்த தமிழினத் துரோகிக்குக் கைவந்த கலை ஆயிற்றே!

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by ரபீக் Sat Jun 11, 2011 11:31 am

சிவா wrote:எங்கும், எப்படியும், ஏதாவது ஒரு சூழலை உருவாக்கி அதில் ஜாதியைப் பேசி மக்களைத் தூண்டி விடுவதுதான் இந்த தமிழினத் துரோகிக்குக் கைவந்த கலை ஆயிற்றே!

தற்போது அவர் சென்னையில் இருப்பதாக தகவல்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by சிவா Sat Jun 11, 2011 11:35 am

ரபீக் wrote:
சிவா wrote:எங்கும், எப்படியும், ஏதாவது ஒரு சூழலை உருவாக்கி அதில் ஜாதியைப் பேசி மக்களைத் தூண்டி விடுவதுதான் இந்த தமிழினத் துரோகிக்குக் கைவந்த கலை ஆயிற்றே!

தற்போது அவர் சென்னையில் இருப்பதாக தகவல்

அவ்வ்வ்வ்வ்வ்வ்..... சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 230655

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by தமிழ்ப்ரியன் விஜி Sat Jun 11, 2011 11:37 am

ரபீக் wrote:முன்னதாக சிபிஐயை கண்டித்து திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சிபிஐ குற்றவாளிகளாகச் சேர்த்திருப்பது முற்றிலும் தவறானது என்றும் அதைக் கண்டிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அதில் முன்னாள் அமைச்சர் ராசாவின் பெயர் இடம் பெறவில்லை.

"ஒருவேளை அவர் குற்றவாளி என தலைவர் நினைத்திருக்கலாம் "

இருக்கலாம் ..

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by krishnaamma Sat Jun 11, 2011 11:46 am

சிவா wrote:எங்கும், எப்படியும், ஏதாவது ஒரு சூழலை உருவாக்கி அதில் ஜாதியைப் பேசி மக்களைத் தூண்டி விடுவதுதான் இந்த தமிழினத் துரோகிக்குக் கைவந்த கலை ஆயிற்றே!
ஆமாம் சிவா சோகம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஈன பிழைப்பு பிழக்கப்போகிறார்? சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296 சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 44296
ஊழல் பண்ணறது இவங்க, கெட்ட பேர் மட்டும் அடுத்தவங்களுக்கா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by அருண் Sat Jun 11, 2011 12:37 pm

மக்கள் பாடம் புகட்டியும் இன்னுமா புத்தி வரலை! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by மகா பிரபு Sat Jun 11, 2011 12:40 pm

ரபீக் wrote:முன்னதாக சிபிஐயை கண்டித்து திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சிபிஐ குற்றவாளிகளாகச் சேர்த்திருப்பது முற்றிலும் தவறானது என்றும் அதைக் கண்டிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அதில் முன்னாள் அமைச்சர் ராசாவின் பெயர் இடம் பெறவில்லை.

"ஒருவேளை அவர் குற்றவாளி என தலைவர் நினைத்திருக்கலாம் "
சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி 224747944

Last edited by மகா பிரபு on Sat Jun 11, 2011 12:45 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by பாலாஜி Sat Jun 11, 2011 12:42 pm

தலைவரே , நீங்க உங்க நாக்கையும் , குடுபத்தையும் அடக்குங்க ,, அடுத்த தேர்தலிலாவது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சீட்டுகள் கிடைக்கும்...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி Empty Re: சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum