ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை

+2
ரபீக்
சிவா
6 posters

Go down

உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை Empty உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை

Post by சிவா Mon Jun 06, 2011 5:36 pm

நீங்கள் வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரா?
கிரிடிட் கார்டு பயன்படுத்துபவரா?
பங்கு சந்தையில் முதலீடு செய்பவரா?
சொத்துக்கள் வாங்குபவரா?

அப்படியானால், நீங்கள் வருமான வரி துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வருவது நிச்சயம்.

கணக்கில் வராத பணபரிமாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வருமான வரி துறை உங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம்.

அதுசரி..., உங்களைப் பற்றிய ரகசியங்களை வருமான வரி துறைக்கு கசிய விடுவது யார்? என்ற சந்தேகம் வருகிறதா?

இதில் முதலில் வருவது உங்கள் பான் எண். பொதுவாக எந்த பணப்பரிமாற்றத்தின் போதும் பான் கார்டு எண் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. எனவே நீங்கள் எந்த பிரிவின் கீழ் பணப்பரிமாற்றம் செய்தாலும் அதன் விவரங்கள் உங்கள் பான் எண்ணுடன் தொகுக்கப்பட்டு விடும்.

மேலும், நீங்கள் பணப்பரிமாற்றம் செய்யும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகளில் செய்யும் முதலீட்டு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளியிடும் வர்த்தக நிறுவனங்கள், சொத்து விவரங்களை பதிவு செய்யும் பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் இவர்கள் தான் உங்கள் நிதி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வருமான வரித்துறைக்கு தெரிவிப்பவர்கள். தனித்தனியாக வரும் இந்த தகவல்கள் அனைத்தும் உங்கள் பான் எண் அடிப்படையில் தொகுக்கப்பட்டு உங்கள் நிதி பரிமாற்றங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

சரி, எப்போதெல்லாம் நீங்கள் இந்த கண்காணிப்பு வளையத்துக்குள் வருகிறீர்கள்? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?... இதோ அதன் விவரங்கள்:-

வங்கி சேமிப்பு கணக்கு:

உங்கள் வருமானத்துக்கு அதிகமாக வங்கி சேமிப்பு கணக்கில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்கிறீர்களா? அப்போது நிச்சயம் கண் காணிப்புக்கு ஆளாவீர்கள். இந்த பணத்தை மொத்தமாக டெபாசிட் செய்தாலும் சரி அல்லது ஒரு ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாக 10 லட்ச ரூபாய் வரை டெபாசிட் செய்தாலும் சரி.


அதே நேரம், ஆண்டொன்றுக்கு நீங்கள் டெபாசிட் செய்யும் தொகை ரூ 10 லட்சமாக இருந்து, எடுக்கும் தொகையும் ரூபாய் 10 லட்சமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கண்காணிப்பு வளையத்திற்கு வெளியே வந்து விடுவீர்கள்.

மேலும் உங்கள் வருமானம் எவ்வளவு?, அந்த வருமானத்துக்கு அதிகமான பணம் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ளதா? அப்படி பணம் இருந்தால் அந்த பணம் எவ்வாறு வந்தது? அந்த பணத்திற்கு உரிய கணக்கு உள்ளதா? அந்த பணத்தை எடுத்து நீங்கள் என்ன செலவு செய்கிறீர்கள்? என்று வருமான வரித்துறை விசாரிக்கலாம்.

எதற்கு இந்த பிரச்சனை? பேசாமல் பணத்தை கிராமங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் போட்டு வைத்தால் என்ன?, யாருக்கு தெரியப்போகிறது என்று எண்ணு கிறீர்களா? அப்போதும் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். அதாவது, வருமான வரி துறையின் விதிகளுக்கு கூட்டுறவு வங்கிகளும் விலக்கல்ல. அந்த வங்கிகளும் தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விதியாகும்.

கிரிடிட் கார்டு:

ஆண்டொன்றுக்கு ரூபாய் 2 லட்சத்திற்கும் அதிகமாக கிரிடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்கிறீர்களா?. அப்படி என்றால் உங்கள் கிரிடிட் கார்டு செலவு குறித்த தகவல்களை, உங்களுக்கு கார்டு வழங்கிய வங்கி அல்லது நிறுவனம் உங்களை பற்றிய தகவல்களை வருமான வரி துறைக்கு தெரிவித்துவிடும்.

இதன் மூலம் உங்களது கிரிடிட் கார்டு செலவு கள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத் துக்குள் வந்துவிடும். கிரிடிட் கார்டு மூலம் செலவு செய்த பணத்தை எவ்வாறு திருப்பி செலுத்துகிறீர்கள். இதற்கான பணம் எங்கிருந்து, எப்படி வந்தது என்ற தகவல்களை வருமான வரித்துறை கிளற ஆரம்பித்துவிடும்.

அசையா சொத்துக்களில் முதலீடு:

இது எதற்கு வம்பு, பேசாமல் கையில் உள்ள பணத்தை அசையா சொத்துக்களில் முதலீடு செய்தால் என்ன...? என்று நீங்கள் நினைக் கலாம்.

30 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை வாங்கினாலும், விற்றாலும் சம்பந்தப்பட்ட பதிவாளர் மூலமாக உங்கள் பணப்பரிமாற்ற விவரங்கள் வருமான வரி துறையை சென்றடைந்துவிடும்.

பங்கு சந்தை முதலீடு:

பங்குச்சந்தையில் பல்வேறு பிரிவுகளில் நாம் முதலீடு செய்ய முடியும். அதாவது நேரடி பங்கு முதலீடு, கடன் பத்திரங்களில் முதலீடு, குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் பாண்டுகளில் முதலீடு என்று ஒருவர் முதலீடு செய்யலாம்.

இதில், நேரடி முதலீட்டு பங்குகளிலோ அல்லது உரிமை பங்குகளிலோ முதலீடு செய்கிறீர்களா? அப்படியானால் ரூபாய் 1 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம்.

அதேபோல கடன் பத்திரங்கள், பாண்டுகளில் முதலீடா?... ரூபாய் 5 லட்சம் வரை தகவல் பரிமாற்ற பிரச்சனையிலிருந்து விடுதலை.

பங்கு சந்தை மூலமாக நடைபெறும் அனைத்து வர்த்தகமும் ஏற்கனவே இந்த வளையத்துக்குள் வந்துவிட்டது.

மியூச்சுவல் பண்டு

மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளில் முதலீடென்றால் ரூபாய் 2 லட்சம் வரை என்றால் தப்பித்தீர்கள்.

அதே நேரம், பங்கு சந்தை மூலமாக பரிவர்த்தனையாகும் மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளில் முதலீடு செய்தாலும் நீங்கள் கண்காணிப்பு வளையத்துக்கு வரமாட்டீர்கள்.

அடுத்து, ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன் பத்திரங்களில் ரூபாய் 5 லட்சம் வரை முதலீடு செய்தாலும் வருமான வரித்துறையின் ராடாருக்குள் சிக்க மாட்டீர்கள்.

இதை எல்லாம் படித்த பின்னர், எந்த முறையில் உங்கள் வருமானம் இருக்கிறது என்பதையும், அதை எப்படி, எந்த துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எது எப்படி இருந்தாலும், அரசின் விதிமுறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு நமது பணப்பரிமாற்றம் இருந்தால் நிம்மதியாய் இரவு உறக்கம் வரும்.

தினதந்தி


உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை Empty Re: உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை

Post by ரபீக் Mon Jun 06, 2011 5:44 pm

தகவலுக்கு நன்றி தல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை Empty Re: உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை

Post by jeylakesengg Mon Jun 06, 2011 5:59 pm

இந்த வழிமுறைகள் எல்லாம் நியமாக இருபவ்ற்கு மட்டும்.

கொள்ளை அட்டிபவ்ர்களை நங்கள் கண்டு கொள்ளள மாட்டோம்

(முக்கிய அறிவிப்பு : நாங்கள் கொள்ளை அடிப்பதை நீங்கள் கேட்டால் உங்கள் மீது விசாரனை நடத்த படும் )

இப்படிக்கு
உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை 745155
மத்திய ஊழல் அரசு


உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை 806360
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை Empty Re: உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை

Post by kitcha Mon Jun 06, 2011 6:29 pm

என்னை மாதிரி வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கும் இதே மாதிரி தானா. கொஞ்சம் சொல்லுங்கள் சிவா அண்ணா


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை Empty Re: உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 7:41 pm

பயனுள்ள தகவலுக்கு அன்பு நன்றிகள் சிவா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை Empty Re: உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை

Post by கே. பாலா Tue Jun 07, 2011 12:06 am

சூப்பருங்க நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை Empty Re: உங்களைக் கண்காணிக்கிறது... வருமான வரித்துறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum