ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Mon Jun 06, 2011 8:43 am

பெண்களின் மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் கண்டுபிடிப்பு

மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பெண்களையே தாக்குகிறது. இந்தியாவில் மும்பை, சென்னை மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில் இப்புற்றுநோயின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு பெண்களில் முறையே 22ல் 1 மற்றும் 8ல் 1 என்ற விகிதத்தில் மார்பக புற்றுநோய் காணப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் வருடத்திற்கு 36 ஆயிரம் பேர் இவ்வியாதியால் பாதிப்பு அடைகின்றனர். தற்போது, லண்டனில் அமைந்துள்ள மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மனித மரபணு பற்றிய ஆய்வில் ஒரு குறிப்பிட்ட ஜீன் புற்று கட்டிகளை உருவாக்குகிறது என கண்டறிந்தனர். அந்த ஆய்வில், அவர்கள் கண்டறிந்த சி6ஓஆர்எப்96, சி6ஓஆர்எப்97 மற்றும் சி6ஓஆர்எப்211 ஆகிய ஜீன்களில் சி6ஓஆர்எப்211 என்ற ஜீன் புற்றுகட்டிகளை வளர செய்வதாக தெரிய வந்துள்ளது. சி6ஓஆர்எப்97 என்ற ஜீன் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் மீது மருந்தின் செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. மற்றொரு ஜீனான சி6ஓஆர்எப்96 என்ன செய்கிறதென ஆய்வாளர்களுக்கு தெரிய வரவில்லை. இது குறித்து ஆய்வின் தலைவர் மிட்ச் டவ்செட் என்பவர் கூறும்போது, தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த ஜீன் புற்றுநோய் கட்டிகளில் வேறு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் மூலம் மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்பாற்றும் வழிகள் கண்டறியப்படும் என்றார். தற்போது இந்த ஜீன் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெண்களின் முக்கியமான பிரச்சனையான மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு திறவுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.


மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Mon Jun 06, 2011 8:44 am

உடல் எடையை குறைக்கும் கோகோ நிறைந்த சாக்லேட்டுகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் லில்லி ஸ்டொஜநொவ்ஸ்கா என்பவர் சாக்லேட் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 75 முதல் 85 சதவீதம் கோகோ கலந்த அடர்ந்த கருப்பு நிறம் கொண்ட சாக்லேட்டுகள் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த சாக்லேட்டுகளில் எபிகாடெச்சின் என்ற ஆன்ட்டியாக்சிடண்ட் ரெட் வொய்னை விட இரு மடங்கிற்கும் மேல் அதிகமாக காணப்படுகிறது. அது உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைப்பதற்கு உதவுகிறது. மற்றும் கோகோவில் உள்ள தியோபுரோமின் என்ற பொருள் உடலுக்கு ஆற்றல் தருவதிலும், தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், இரத்த குழாய்களை விரிவடைய செய்வதிலும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பணி வகிக்கிறது. மிக முக்கியமாக கொலஸ்டிரால் அளவை குறைத்து ஸ்டிரோக் பாதிப்பையும் தடுக்கிறது. கோகோவில் இயற்கையாக காணப்படும் பொருள்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் மூளைக்கு தேவையான வேதிபொருள்களை உடலானது உற்பத்தி செய்ய துணைபுரிகிறது. குறிப்பாக உடல் எடை குறைப்பிலும், ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்கிறது. எனவே, சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என்ற வயது வித்தியாசமின்றி அனைவரும் கருப்பு நிற சாக்லேட்டுகளை விரும்பி சாப்பிடலாம் என லில்லி கருத்து தெரிவித்துள்ளார்.


மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Mon Jun 06, 2011 8:45 am

பால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்: ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது. பிரிட்டனில் வருடத்திற்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 1,313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் டி வைட்டமின் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் டி வைட்டமின் அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது தெரிய வந்தது. குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது. எனவே, பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும், மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பயன் தரும் என்பதும் முன்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Mon Jun 06, 2011 8:45 am

ஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை ஆரம்ப நிலையில் காணப்படும் மார்பக புற்றுநோயை தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் 'ஏ' வழியே பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம் ஆனது செல்களின் வளர்ச்சி, புதுப்பொலிவு மற்றும் செல் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தோல் வனப்புடன் இருப்பதற்கும் உதவுகிறது. மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜீன் ரெட்டினாய்க் அமிலத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும் பணியினை செய்கிறது. இதனால் ரெட்டினாய்க் அமிலம், ஆரம்ப நிலையில் காணப்படும் புற்றுநோய் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Mon Jun 06, 2011 8:46 am

நான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு

இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது. பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.


மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:46 am

அட அருமையான விஷயம்....

டார்க் சாக்லேட் நீங்களும் வாங்கி ஒரு கார்ட்டூன் குவைத்துக்கு அனுப்புங்க சிவா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Mon Jun 06, 2011 8:46 am


வயது தொடர்பான பார்வை குறைபாட்டை குறைக்கும் மீன் உணவு


வயதாகும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அதில் பார்வை குறைபாடும் அடங்கும். வயதாகும் காலத்தில், பார்ப்பதற்கு உதவும் ரெடினா எனப்படும் விழித்திரையின் ஒரு பகுதியான மெகுலாவின் பெரும்பான்மையான செல்கள் இறந்து போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் பார்வை குறைபாடு மருத்துவ உலகில் ஏ.எம்.டி. அதாவது ஏஜ் ரிலேடட் மெகுலார் டீஜெனரேசன் என அழைக்கப்படுகிறது. இக்குறைபாடு, பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டனில் இந்த வியாதியால் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஹார்வர்டு மெடிகல் ஸ்கூலில் மருத்துவராக உள்ள வில்லியம் கிறிஸ்டென் என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த ஆய்வில், வாரத்திற்கு இரு முறை என்ற அளவில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவை எடுத்து கொள்வது பலன் தரும் என தெரிய வந்துள்ளது.


மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Mon Jun 06, 2011 8:47 am

கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளும் உணவு முறை குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும்

கர்ப்பிணிகளின் உணவு பழக்கத்தின் அடிப்படையிலேயே அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் அமைகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ள வளர்சிதை மாற்ற அறிவியல் அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ஓசேன் என்பவர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அந்த ஆய்வில் புரதம், வைட்டமின் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளை கர்ப்ப காலத்தில் மிக குறைவாக எடுத்து கொள்ளும் கர்ப்பிணிகளின் உடலில் ஹெச்.என்.எப்.4.ஏ. என்ற மரபணுவின் செயல்திறன் குறைகிறது. இந்த மரபணு, கணையத்தில் இன்சுலின் உற்பத்திக்கு தேவையான செல்களின் வளர்ச்சி பணியினை மேற்பார்வையிடுகிறது. மேலும், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுகோஸ் அளவினை கணையம் ஆனது சரிசெய்யும் பணியினையும் இந்த மரபணு கண்காணித்து வருகிறது. ஆகையால், குறைவான ஊட்டச்சத்து எடுத்து கொள்வதால் ஏற்படும் மரபணு செயல்திறன் குறைபாடு, கர்ப்பத்தில் வளரும் சிசுவின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது. பிற்காலத்தில் குழந்தை வளரும் போது நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான வியாதிகள் ஏற்பட வழிவகுக்கிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை பயன்படுத்தியுள்ளனர். ஏறக்குறைய மனிதனுடன் ஒத்து போகும் மரபணு பண்புகளை கொண்டிருக்கும் எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவு மனிதனுக்கும் பொருந்தும் என அவர்கள் தெரிவித்தனர். எனினும், இதனால் நீரிழிவு வியாதி வந்தே தீரும் என்ற பொருளில்லை. ஆனால் வியாதி வருவதற்கான ஆபத்து அதிகமுள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. முறையான உணவு பழக்கம் மற்றும் புகை பிடித்தலை தவிர்த்தல் ஆகியவை இந்த வியாதி ஏற்படுவதற்கான காரணிகளை குறைக்கிறது என்று ஓசேன் கூறுகிறார்.


மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:47 am

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Mon Jun 06, 2011 8:47 am

புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய ஆய்வில் கண்டறியப்பட்ட மரபணு குறைபாடு

புற்றுநோய்களில் ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண்களுக்கு மட்டுமே வரும் வியாதி ஆகும். அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ள புரோஸ்டேட் சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகளே நாளடைவில் புற்றுநோய் ஆக மாறுகிறது. பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறி தெரிவதில்லை. இந்த வியாதி இங்கிலாந்தினரையே அதிகம் தாக்குகிறது. அவர்களில் வருடத்திற்கு சுமார் 35,000 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 10,000 பேர் வரை இறக்கின்றனர். தற்போது, அமெரிக்காவில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர். ஆய்வின் முதற்கட்டமாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட 7 பேர்களின் புற்றுகட்டிகளின் மரபணுவை முழுவதும் பகுப்பாய்வு செய்தனர். பின்னர் அவை ஆரோக்கியமான ஒருவரது மரபணுவுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. அப்பொழுது புற்றுநோய் பாதிப்பு கண்ட மரபணுவின் குறியீடுகளில் ஏறத்தாழ 5,900 எழுத்து பிழைகள் காணப்பட்டன. எனினும் இந்த பிழைகள் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவற்றில் காணப்படுவதை காட்டிலும் மிக குறைவே ஆகும். மேலும் மரபணுவின் பெரும்பான்மையான பகுதிகள் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. இது தொடர்பான ஆய்வுகள் புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரு எளிய தீர்வினை தரும் என கருதப்படுகிறது.


மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு Empty Re: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum