ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

+4
kitcha
கண்ணன்3536
jeylakesengg
realvampire
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by realvampire Sun Jun 05, 2011 4:04 pm

முன் அறிவிப்பு:
இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத்
தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை
ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப்
பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை
எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும்
பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின்
அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!

றவுகளே,
இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம், இவை தமிழக உறவுகள்
மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும்
விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப்பதற்கானவை அல்ல. உங்களுடன் எங்களின்
இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு
இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின்
மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.

ஈழத்
தமிழர்கள் எனும் இனம் புவியியலாளர்களின் கூற்றுப் படி, பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக் கண்டத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமித்
தாக்கத்தின் காரணமாக இலங்கையில் குடியேறியவர்கள் அல்லது இலங்கைக்கு இடம்
பெயர்ந்தவர்கள் என்பதனை யாரும் மறுத்துரைக்கவோ இல்லை மறக்கவோ முடியாது.
எங்களின் எச்சங்கள், எங்களின் மரபணுக்கள் யாவும் தென் இந்தியாவிலிருந்தே
தோற்றம் பெற்றிருந்தன.(இதனை விளக்கமாக ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம் எனும் பதிவில் கூறியிருக்கிறேன்)

இலங்கையில் வாழுகின்ற தமிழர் எனும் இனத்தினுள்

*ஈழத்தில் ஆரம்ப காலம் தொட்டு பூர்வீகமாக வாழும் தமிழர்கள்-
இந்தியாவிலிருந்து முதன் முதலாக குடியேறியவர்கள்(தற்போது இலங்கையில் வாழும்
தமிழர்கள்- வட கிழக்கு பூர்வீகத் தமிழர்கள்)

*மலையகத் தமிழர்கள்: ஆயிரத்து எண்ணூறுகளின் பிற் பகுதியில்
இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பட்டவர்களை மலையக மக்கள்
என்று கூறுவார்கள். இவர்களே கொழும்புத் தமிழர் எனவும்
அழைக்கப்படுகின்றார்கள்.

*தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்ற இஸ்லாமியர்களும் உள்ளடங்குவார்கள்.

எங்களின்
கடந்த காலங்களை, எங்களுக்கே உரிய தனித்துவமான எச்சங்களை, வேர்களினை,
மூதாதையர்களை(முன்னோர்களை) மறந்து விட்டு, இலங்கைத் தமிழர்களில் பெரும்
பாலானவர்கள் தாம் ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போலப் பாசாங்கு
செய்வது வருந்தத்தக்க விடயமே. ’’தமிழக உறவுகளே, உங்களோடு சொந்தம்
கொண்டாடும் போதும், பழகும் போதும், இந்த விடயங்களை மறைத்துப் பழக என் மனது
இடம் கொடுக்க மறுக்கிறது.
தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Enemy+To+Enemy

இன்று கருணாநிதி எங்களைக் காப்பாற்றத் தவறி விட்டார், சோனிய எங்களுக்கு
சொர்க்கத்தை திறந்து விட மறுத்து விட்டார் என சோகராகம் பாடும் நாங்கள்
கடந்த காலங்களில் தமிழக உறவுகள் மீதான எங்களின் பார்வைகளினை மறத்தல் அல்லது
மறந்து வாழ்தல் எவ் வகையில் நியாயமாகும்?

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளைத்(1987) தொடர்ந்து
தான் இலங்கையின் விடயத்தில் இந்தியா துரோகம் இழைக்கத் தொடங்கியது, இந்தியா
எங்களைக் காப்பாற்றவில்லையே, மத்திய அரசு எங்களை மதி கெட்டவர்களாக்கி
விட்டது என்று பல்லவி பாடும் நாங்கள் இந்தக் காலங்களிற்கு முன்பதாக இழைத்த
குற்றங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்,

*ஆயிரத்து எண்ணூறுகளின் பின்னர்; இந்தியாவிலிருந்து இலங்கையின்
மலை நாட்டிற்கு தேயிலைப் பயிர் செய்கைக்காக கொண்டு வரப்பட்ட மக்களை எவ்வாறு
எங்களது ஆதிக்கவாதம் செருக்கு குணம் கொண்ட தமிழர்கள் இன்று வரை
அழைக்கிறார்கள் தெரியுமா?

‘தோட்டக்காட்டார் அல்லது தோட்டக்காட்டான்.

இவ்
இடத்தில் ஒரு கணம் நிற்க. இதே இந்தியாவிலிருந்து கையில் அகப்பட்ட
பொருள்களோடு வியாபார நோக்கத்திற்காகத் தானே ஈழத்திற்கு எங்கள் மூதாதையர்கள்
வந்து குடியேறி, இலங்கைத் தமிழர் எனும் அடையாளத்தை எம்மிடத்தே தந்து
விட்டுச் சென்றார்கள். ஓ, நாமெல்லோரும் வரலாறுகளை மறந்து எமக்குப் பின்னே
வந்த மலையக உறவுகளை எள்ளி நகை செய்கிறோம், கிண்டலடிக்கிறோம். ஏன் எங்கள்
ஊர்களுக்கு அவர்கள் வந்தால் சரி நிகர் சமனாக உரையாட மறுக்கிறோம், எங்கள்
ஊர்களிற்கு வரும் மலைய சகோதர்களில் ஒரு சிலரை குறத்தி, குறவன் எனப் பேசிக்
கலைக்கிறோம். இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை ஏனையவரை அடிமை செய்யும்
குணத்தின் அடையாளங்களா?

*இந்திய
மத்திய அரசு தமிழர்கள் விடயத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து
எண்பத்தியேழுகளில் தவறிழைத்தது என்பது நிஜம். அது உண்மை, ஆனால் இந்தியா
இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறும் நாங்கள்
காலாதி காலமாக சொல்லும் பழமொழி என்ன தெரியுமா?
‘’வாடைக் காற்றினை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக் கூடாது’
(இலங்கைக்கு வட திசையில் எந்த நாட்டவர் இருக்கிறார் என்பதன் அடிப்படையில் இதனைப் பார்த்தால் நிறையப் பொருள் விளங்கும்)
இந்தப் மொழிக் கிண்டலோடு தானே எம்மூர்களிற்கு வரும் சகோதர்களோடு, எங்களின் சுயத்தை மறந்தவர்களாகப் பழகியிருக்கிறோம்.

எம்
வம்சத்தினை, எங்களின் வேர்க் கொடிகளை, தொப்புள் கொடியினரை இழிழு படுத்தும்
நாங்கள் எப்படி தமிழகமே எங்களைக் காப்பாற்று எனக் கூக்குரலிட முடியும்?

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழாம் ஆண்டினைத் தொடர்ந்து
எமக்கிருந்த இந்திய ஆதரவு சந்தர்ப்ப சூழ் நிலைகளால், அதுவும், இந்திய
இராணுவம் இலங்கையில் செய்த சதி, இந்திய மத்திய அரசினது நடவடிக்கைகள்,
இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா முதலியோரது நடவடிக்கைகளால் சீர் குலைந்தது
என்பதை இவ் இடத்தில் நிலை நிறுத்தி ஒரு வினாவினை முன் வைக்கிறேன்.

அந்தக்
காலம் முதல் இந்திய அரசிடம் பகிரங்கமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள்
மன்னிப்புக் கோரும் வரை(2002ம் ஆண்டு வரை) ‘இந்தியாவின் துணையின்றி தனித்தே
வெல்லுவோம்’ எனப் பல்லவி பாடிய நாங்கள் வன்னிப் பகுதி மீதான இராணுவ
நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் இந்தியா இன்றி ஈழத்தில் ஒரு துரும்பினையும்
அசைக்க முடியாது எனக் கூறி கெஞ்சி, மன்றாடியது எவ் வகையில் நியாயமாகும்?

கலைஞர்
தங்களைக் காப்பாற்றவில்லையே, கருணாநிதி தமிழர்களுக்குத் துரோகம் செய்து
விட்டார் எனக் கூறும் நாமெல்லோரும்; இருபத்திரண்டு தமிழ் மந்திரிகளைப்
பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தானே?
அந்த இருபத்திரண்டு பேரில்
யாராவது ஒருவராவது மலையகத் தமிழர்களுக்காக மனம் திறது சுய நலமற்றுப்
பேசினார்கள் என்று நிரூபிக்க முடியுமா? ஆனால் ஈழத் தமிழர்களுக்காக இன்று
வரை தன்னால் இயன்ற வரை குரல் கொடுக்கும் மனோ கணேசனை யாவரும்
அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஈழ
யுத்தம் தொடங்க முன்பதாக மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள்,
தொழிற்சங்கப் போராட்டங்கள், 1977ம் ஆண்டு போராட்டம் முதலிய பல சம்பவங்கள்
இடம் பெறுகையில் ஒரே நாட்டினுள் இருந்தும் கை கட்டி வாய் பொத்தி நின்று
வேடிக்கை பார்த்து விட்டு,
வன்னியில் எங்கள் தலைக்கு மேல் அவலம்
வந்த வேளையில் மட்டும் எந்த முகத்தைக் கொண்டு ‘கலைஞர் ஐயா காப்பாற்றுங்கோ’
எனக் கேட்க மனம் வந்தது?

சமாதான காலத்தில் ஈழத்திற்கு தமிழகத்திலிருந்து வியாபார
நோக்கோடு வந்திருந்த (2002ம் ஆண்டின் பின்னர்) ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை
முதலிய பல தமிழக ஊர்களைச் சேர்ந்த புடவை வியாபாரிகளை ‘இவர்கள் இந்திய
உளவுத் துறையான ‘ராவின்(Raw) உளவாளிகள்’ எனக் கூறி பட்டப் பகலில் வீதியில்
வைத்து அடித்து விரட்டிய நாங்கள் எந்த முகத்தினை வைத்துக் கொண்டு ‘தமிழகமே
எங்களை மன்னித்து, மோட்சம் அளி’ எனக் கதற முடியும்?

மேற் கூறப்பட்டுள்ள என் மனக் கருத்துக்களோடும், வினாக்களோடும் இந்த விவாத மேடை உங்களுக்காய் விரிகிறது.
இப் பதிவு தொடர்பான உங்களது கருத்துக்களை, விவாதங்களை, எதிர்க் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

டிஸ்கி: ஒரே நாட்டினுள் பல் வேறு பிரிவுகளாகப் பிரிந்து,
வேற்றுமைகளோடு வாழும் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய நல்ல செயல் என்ன
தெரியுமா? தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு கிடைக்கவில்லை. அப்படிக்
கிடைத்திருந்தால் அந்தத் தனி நாட்டிலிருந்தே பல சிறிய நாடுகள் வேற்றுமையின்
காரணமாக சுதந்திரம் வேண்டிப் போராடத் தொடங்கியிருக்கும். பின்னர் குட்டிக்
குட்டித் தமிழ்த் தேசங்கள் தோன்றியிருக்கும். யாருடைய நல்ல செயலோ
தெரியவில்லை இப்படியான ஒரு நிலமை தோன்றவில்லை.

‘’தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’’ எனச் சொல்லியவர் இந் நேரம் இருந்திருந்தால்.............???
(மிகுதியை நீங்கள் விரும்பியபடி முடித்துக் கொள்ளுங்கள்)

நன்றி:நாற்று
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by jeylakesengg Sun Jun 05, 2011 5:13 pm

ஈழத் தமிழனானும் தமிழ்நாடு தமிழனானும் , பங்களிக்க அடிச்சுக்கல்ம் புடிச்சுக்கலாம் . எங்களோட ஈழத்து பங்களிய மாற்றான் ஆழக்கும் போலுது நாங்கள் எபவும் எதிர்து குரல் கொடுப்போம் . நாம சண்டைய்ய அப்புறம் கவனிக்குளம் .

எங்கள் ஈழத்து பங்களிக்கு தமிழ்நாடு பங்காளி துணையே

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  676261 சியர்ஸ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by கண்ணன்3536 Sun Jun 05, 2011 6:13 pm

தம்பி ராசா இதுக்கு என்னோட பதில் எனது மகன் எனது கைப்பேசியினை உடைத்தால்? அதேநேரம் உங்கள் மகன் எனது கைப்பேசியினை உடைத்தால்? நான் என்ன செய்வேன் ? "நாங்கள் தமிழர்"
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by kitcha Sun Jun 05, 2011 6:36 pm

அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அடுத்தவன் உள்ளே வருவதை யாரும் விரும்பமாட்டார்கள்.நாம் தமிழர் பழைய திரைப்பட பாடல் ஒன்று என் ஞாபகத்திற்கு வருகிறது, காலம் ஒரு நாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும். அதனால் என்றாவது ஒரு நாள் விடிவு கிடைக்கும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by positivekarthick Sun Jun 05, 2011 9:04 pm

யோசிக்க வைத்த கட்டுரை!!!!!! சோகம்

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Pதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Oதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Sதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Iதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Tதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Iதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Vதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Eதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Emptyதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Kதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Aதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Rதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Tதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Hதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Iதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Cதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by மகா பிரபு Sun Jun 05, 2011 10:22 pm

இக்கட்டுரை ஈழத்தாருக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல இருக்கலாம்,!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by realvampire Mon Jun 06, 2011 12:03 am

"இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம், இவை தமிழக
உறவுகள்
மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும்

விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப்பதற்கானவை அல்ல. உங்களுடன்
எங்களின்
இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு

இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின்

மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு."

ஒரு சார்பு நிலை
இல்லாமல் பொதுகருத்து காரணமாக பகிர்ந்தது..
வீரமும் வேகமும் பயன் அளிக்காது..

விவேகத்துடன் கூடிய வேகமே சிறந்தது..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by kirikasan Mon Jun 06, 2011 4:29 am

நாற்று இணையத்தளதில் எழுதியவருக்கான எனது பதில்!(நாற்று இணையத்தளத்தில் இதை பின்னூட்டமிட்டுள்ளேன்)

நண்பரே தங்கள் உண்மையான நோக்கம் என்ன? பொதுவாக ஒரு வாதத்தை கொண்டுவரும் போது அதன் விளைவால் என்ன நேரும் என்பதை சிந்திப்பது புத்திசாலித்தனம்.

இன்று மூன்றுலட்சம் மக்கள் கொலைசெய்யப்ப்ட்டு ஒரு இனம் அழிந்துகொண்டிருக்கும் வேளையில் பேச வேண்டிய பேச்சா இது? எங்கேயோ வானத்தில் இருந்து இப்போதுதான் குதித்தமாதிரி புதிய கண்டுபிடிப்பு கொண்டுவந்திருக்கிறீர்கள்? தங்கள் பேச்சு எவ்வளவு பாதிப்பை உண்டுபண்ணும் என்று தெரிந்தே கூறுவதாகவும் கூறுகிறீர்கள். உங்கள் உள்நோக்கம் யாது?

என்ன பேசுகிறோம் என்பதை விட எந்தசமயத்தில் என்னபேசவேண்டுமென்பதே முக்கியம்?

நீங்கள் கூறுவது போன்ற பிரிவு உணர்வுகள் எல்லா இடங்களிலும் உண்டு. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்ற பிரிவு. வடபகுதிக்கும் வடமராச்சியார், தென்மராட்சியார் அதற்குள் இன்னும் குறிச்சி குறிச்சியாக பிரித்து நான் உயர்வு நீ உயர்வு என்பதெல்லாம் இருந்தது. இப்போது அதை சொல்வதற்கே தமிழன் இல்லாமல் போகும் நிலைமையில் அவசரம் வேண்டியது ஒற்றுமை ஒற்றுமையை கட்டி யெழுப்ப ஏதாவது செய்வீர்களானால் உங்களை கரம் கூப்பி வணங்குவேன்.

செத்துக் குற்றுயிராய் கிடப்பவனிடம் போய் உன்சிந்தனை சரியில்லை நீ திருந்தவேண்டும் என்று விவாதிப்பதைவிட அவனை முதலில் காப்பாற்ற வழிபார்த்துவீட்டு அவன் பிழைத்ததும் அவன் குணத்தைபற்றி வாதிடலாமே! இப்போதுவாதிடுவது அவனை கொன்றுவிடுவதற்குச் சமம்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by கண்ணன்3536 Mon Jun 06, 2011 5:00 pm

kirikasan wrote:நாற்று இணையத்தளதில் எழுதியவருக்கான எனது பதில்!(நாற்று இணையத்தளத்தில் இதை பின்னூட்டமிட்டுள்ளேன்)

நண்பரே தங்கள் உண்மையான நோக்கம் என்ன? பொதுவாக ஒரு வாதத்தை கொண்டுவரும் போது அதன் விளைவால் என்ன நேரும் என்பதை சிந்திப்பது புத்திசாலித்தனம்.

இன்று மூன்றுலட்சம் மக்கள் கொலைசெய்யப்ப்ட்டு ஒரு இனம் அழிந்துகொண்டிருக்கும் வேளையில் பேச வேண்டிய பேச்சா இது? எங்கேயோ வானத்தில் இருந்து இப்போதுதான் குதித்தமாதிரி புதிய கண்டுபிடிப்பு கொண்டுவந்திருக்கிறீர்கள்? தங்கள் பேச்சு எவ்வளவு பாதிப்பை உண்டுபண்ணும் என்று தெரிந்தே கூறுவதாகவும் கூறுகிறீர்கள். உங்கள் உள்நோக்கம் யாது?

என்ன பேசுகிறோம் என்பதை விட எந்தசமயத்தில் என்னபேசவேண்டுமென்பதே முக்கியம்?

நீங்கள் கூறுவது போன்ற பிரிவு உணர்வுகள் எல்லா இடங்களிலும் உண்டு. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்ற பிரிவு. வடபகுதிக்கும் வடமராச்சியார், தென்மராட்சியார் அதற்குள் இன்னும் குறிச்சி குறிச்சியாக பிரித்து நான் உயர்வு நீ உயர்வு என்பதெல்லாம் இருந்தது. இப்போது அதை சொல்வதற்கே தமிழன் இல்லாமல் போகும் நிலைமையில் அவசரம் வேண்டியது ஒற்றுமை ஒற்றுமையை கட்டி யெழுப்ப ஏதாவது செய்வீர்களானால் உங்களை கரம் கூப்பி வணங்குவேன்.

செத்துக் குற்றுயிராய் கிடப்பவனிடம் போய் உன்சிந்தனை சரியில்லை நீ திருந்தவேண்டும் என்று விவாதிப்பதைவிட அவனை முதலில் காப்பாற்ற வழிபார்த்துவீட்டு அவன் பிழைத்ததும் அவன் குணத்தைபற்றி வாதிடலாமே! இப்போதுவாதிடுவது அவனை கொன்றுவிடுவதற்குச் சமம்!
இதற்கு நல்ல பதில் தாங்கள் கொடுத்துள்ளமைக்கு நன்றி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by jeylakesengg Mon Jun 06, 2011 5:27 pm

kirikasan wrote:நாற்று இணையத்தளதில் எழுதியவருக்கான எனது பதில்!(நாற்று இணையத்தளத்தில் இதை பின்னூட்டமிட்டுள்ளேன்)

நண்பரே தங்கள் உண்மையான நோக்கம் என்ன? பொதுவாக ஒரு வாதத்தை கொண்டுவரும் போது அதன் விளைவால் என்ன நேரும் என்பதை சிந்திப்பது புத்திசாலித்தனம்.

இன்று மூன்றுலட்சம் மக்கள் கொலைசெய்யப்ப்ட்டு ஒரு இனம் அழிந்துகொண்டிருக்கும் வேளையில் பேச வேண்டிய பேச்சா இது? எங்கேயோ வானத்தில் இருந்து இப்போதுதான் குதித்தமாதிரி புதிய கண்டுபிடிப்பு கொண்டுவந்திருக்கிறீர்கள்? தங்கள் பேச்சு எவ்வளவு பாதிப்பை உண்டுபண்ணும் என்று தெரிந்தே கூறுவதாகவும் கூறுகிறீர்கள். உங்கள் உள்நோக்கம் யாது?

என்ன பேசுகிறோம் என்பதை விட எந்தசமயத்தில் என்னபேசவேண்டுமென்பதே முக்கியம்?

நீங்கள் கூறுவது போன்ற பிரிவு உணர்வுகள் எல்லா இடங்களிலும் உண்டு. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்ற பிரிவு. வடபகுதிக்கும் வடமராச்சியார், தென்மராட்சியார் அதற்குள் இன்னும் குறிச்சி குறிச்சியாக பிரித்து நான் உயர்வு நீ உயர்வு என்பதெல்லாம் இருந்தது. இப்போது அதை சொல்வதற்கே தமிழன் இல்லாமல் போகும் நிலைமையில் அவசரம் வேண்டியது ஒற்றுமை ஒற்றுமையை கட்டி யெழுப்ப ஏதாவது செய்வீர்களானால் உங்களை கரம் கூப்பி வணங்குவேன்.

செத்துக் குற்றுயிராய் கிடப்பவனிடம் போய் உன்சிந்தனை சரியில்லை நீ திருந்தவேண்டும் என்று விவாதிப்பதைவிட அவனை முதலில் காப்பாற்ற வழிபார்த்துவீட்டு அவன் பிழைத்ததும் அவன் குணத்தைபற்றி வாதிடலாமே! இப்போதுவாதிடுவது அவனை கொன்றுவிடுவதற்குச் சமம்!

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  677196 தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  677196 தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  677196 தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  677196 தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  677196 தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  677196 தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  224747944 தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  224747944 தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  224747944
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!  Empty Re: தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum