ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

+4
ரா.ரமேஷ்குமார்
kitcha
ranhasan
realvampire
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by realvampire Wed Jun 01, 2011 1:48 pm

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் 72156387

தலைப்பைப் பார்த்தவுடனேயே என்னவோ போட்டி என நினைத்துவிட்டீர்களா? இது ஒன்றும் கோடிஸ்வரன் நிகழ்ச்சியோ அல்லது வேறு எதோ கோமாளி ஷோவோ இல்லை. காமெடிப் பண்ணுவதாய் நினைக்கவும் வேண்டாம். முன்னொரு முறை எங்களது பள்ளியில் இருவர் பேசிக் கொண்டார்கள், '' ஏண்டா இங்கிலாந்துக் காரன் வெள்ளையா இருக்கான், ஆப்பிரிக்காக் காரன் கறுப்பா இருக்கான், ஆனால் நம்ம இந்தியாக் காரன் மட்டும் எல்லாக் கலரிலும் இருக்கான் '' என்றான் ஒருவன், மற்றவன் சொன்னான் '' வெள்ளைக்காரன் குளிர்ப் பிரதேசத்தில் இருக்கான், அதான் வெளுத்துப் போய்ட்டான், ஆப்பிரிக்கா காரன் நாட்டில வெயில் ரொம்ப ஜாஸ்தி அதான் கருப்பா ஆகியிருப்பான், நம்ம நாட்டில வெயிலும் இருக்கு, குளிரும் இருக்கு அதான் மாநிறமா இருக்கோம்'' என்றான். அவர்கள் பேசியதைக் கேட்டுவிட்டு நான் ஒன்றும் கூறாமலேயே வந்துவிட்டேன். அதில் சில உண்மைகள் இருக்கலாம். ஆனால் நம் இந்திய நாட்டில் தான் வர்ண வேறுபாடுகள் அதிகம். வர்ணாசிரமத்தைச் சொல்லவில்லை. தோல் வர்ணத்தைச் சொன்னேன்.


இந்தியாவில் எந்தெவொரு நெடுஞ்சாலைக்கு செல்லுங்கள், அங்கு சற்று நேரம் அமர்ந்து சாலையில் போகிறவர்களை நன்கு கவனித்துப் பாருங்கள். அனைவரின் வர்ணமும் மிகுந்த வேறுபாடு உடையதாய் இருக்கும். ஒரு முறை கிண்டி சாலையில் வாகன சர்வே வேலை ஒன்றில் ஈடுப்பட்டப் போது அங்கு செல்லும் வாகனங்களை மட்டுமில்லாமல். மனிதர்களையும் கவனிக்க முடிந்தது. அனைவரின் நிறமும் ஒன்றே போல் இல்லை. சில நேரங்களில் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் கூட ஒரே நிறத்தில் இருப்பதில்லை. ஒரேக் குடும்பத்தில் ஒருவர் கறுப்பாகவும், ஒருவர் வெள்ளையாகவும், ஒருவர் மாநிறமாகவும் இருப்பதைக் காண முடியும். இந்த நிற வேறுபாடுகள் நாம் நினைப்பது போல காலநிலை மாறுதலால் வந்தவை அல்ல. மாறாக நமது பரம்பரையாக வந்தவை ஆகும். நம்மில் சிலர் வடநாட்டவர் வெண்மையாக இருப்பதாகவும், அவர்களில் சிலர் தென்னாட்டவர் கருமையாக இருப்பதாகவும் கருதுகின்றார்கள். ஆனால் உண்மையில் தென்னாட்டில் பலர் வெண்மையாகவும், வடநாட்டில் பலர் கருமையாகவும் இருப்பதையும் காணலாம். வடநாட்டு நடிகர் சாருக் கான், அஜய் தேவ்கான், கஜோல் உள்ளிட்ட பல நடிகர்களே கருமையான நிறம் உடையவர்கள். ஒரு முறை தில்லி சென்ற போது அங்கும் பலர் கருமையான தோல் நிறம் உடையவர்களைக் கண்டிருக்கின்றேன். ஆனால் அங்கு வெண்மையான நிறம் கொண்டவர்களும் அதிகம் இருக்கின்றனர் என்பதும் உண்மை.

அதாவது இந்திய நாடு முழுவதும் எங்கு சென்றாலும் கருமையானவர்களும், வெண்மையானவர்களும், மாநிறத்தவர்களும் இருக்கின்றனர் என்பது உண்மை. பொதுப்படையாகப் பார்த்தால் மாநிலம் தோறும் மக்களில் சில புறத்தோற்ற வேறுப்பாடுகள் இருக்கின்றன. அதே போல சாதி ரீதியாகவும் நிற வேறுபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் அனேகம் பேர் கருமையான நிறம் உடையவர்கள், அவர்களை அடுத்துப் பார்த்தால் மாநிறமானோரும் அதிகம், அதற்க்கடுத்தார் போல் வெண்மையானவர்களும் இருக்கிறார்கள். ஆந்திரம், கருநாடகம், கேரளம், விதர்பம், ஒடிசா, ஜார்கண்ட், வங்கம், விகார், உத்தரப் பிரதேசம், சத்திஸ்கர், குஜராத் ஆகிய இந்த மாநிலங்களில் வெண்மையானவர்களை விடவும், கருமையானவர்களும், மாநிறத்தவருமே அதிகமானோர். ஆனால் கஷ்மீரம், அரியானா, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் மாநிறத்தவரும், வெண்மையானவர்களும் அதிகமாக இருப்பதைப் போன்று தோன்றுகிறது.

ஆக இந்தியா முழுதுமே ஒரே மாதிரியான நிறம் கொண்டவர்களாய் இல்லை, அதே சமயம் கருமையும், வெண்மையும் கலப்பிடம் இல்லாத எந்தவொரு சாதி மக்களையும் காண முடியாது. என்னைப் பொறுத்தவரை அந்தாமானிய ஜரவாக்கள், ஓங்கோல்கள் தவிர்த்து ஏனைய இந்திய சாதிகள் அனைத்திலும் கலப்பிடம் இருக்கின்றது. குறிப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஸ்ரீரங்கத்தில், கும்பகோணத்தில் இருக்கும் பிரமாணர்களைப் பார்த்தால் அவர்களிலும் கருமையானவர்கள் இருக்கின்றார்கள். ஆற்காடு பகுதிகளில் இருக்கும் தலித்கள் பலரும் வெண்மையானவர்களாய் இருப்பதையும் பார்த்து இருக்கின்றேன். எனது பள்ளியில் கிரிஷ் என்னும் மாணவன் படித்தான். பல ஆண்டுகள் ஒரே வகுப்பில் படித்தாலும் பத்தாம் வகுப்பு வரை அவனை நான் பிராமணர் எனத் தான் நினைத்தேன். காரணம் அவ்வளவு வெள்ளை நிறமாக காட்சியளிப்பான். ஆனால் பத்தாம் வகுப்பில் தான் அவன் ஒரு அட்டவணைப் பிரிவு மாணவன் என்பதை அறிந்தேன். ஆக இந்த தேசத்தில் சாதிகள் அனைத்தும் தூய்மையான நிறத்தைக் கொண்டிருக்கவில்லை. அனைத்து சாதிகளிலும் நிற வேறுப்பாடுகள் உண்டு.

அப்படி இருக்க ஏன் ஒருவர் தமது சாதியைத் தூய்மையானதாகக் கருதுகின்றார். பிற சாதிகளோடு கலந்து வாழ மறுக்கின்றார்கள். தமிழ்நாட்டில் சாதியம் பிரமாணர்களில் மட்டுமில்லை. பிற சாதிகளிடமும் இருக்கின்றது. குறிப்பாக கிருத்தவ சமயத்தில் பலரும் ஒரே பிரிவாக இருந்தாலும், சாதியால் மணம் முடிப்பதில்லை. ஏன் இந்த வேறுபாடுகள் ? ஒருவரின் சாதி எந்தவகையில் மற்றொரு சாதியை விடவும் உயர்வானது. பணம் அதிகம் இருப்பதாலா?, நிற வேறுப்பாடுகள் இருப்பதாலா?, மதம், மொழி, உணவுப் பழக்க வழக்கங்களாலா? சரி - ஒரு தலித் நன்கு படித்து பெரும் உத்தியோகத்தில் இருந்து பெரும் செல்வந்தராய், நாகரிகமாக இருந்தால் அவருக்கு ஆதிக்கச் சாதியில் இருந்து பெண் கொடுக்க எத்தனை பேர் முன்வருவார்கள். கோயம்புத்தூர்ப் பக்கம் பல கவுண்டர்கள் மலையாளத்தில் பெண் எடுக்கின்றார்கள். ஏன் தமிழ்நாட்டிலேயே வேறு சாதிப் பெண்ணை விரும்புவதில்லை. நெல்லையில் இருக்கும் ஒரு யாதவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் ஒரு தெலுங்கு யாதவரை மணக்க முன்வருகின்றார், ஆனால் நெல்லையில் இருக்கும் நாடாரை மணக்க முன்வருவதில்லை ஏன்? ஏன் உருது பேசும் முஸ்லிம்கள் பலர் தமிழ் பேசும் முஸ்லிம்களோடு மணம் கொள்வதில்லை. இங்கு மக்களின் மனங்களின் காரணமே இல்லாமல் சாதியம் விதைக்கப்பட்டுள்ளது. பணம், மொழி, அந்தஸ்து, ஏன் மதங்கள் இவற்றையும் தாண்டி வெறுப்புணர்ச்சி விதைக்கப்பட்டுள்ளது. தான் பிறந்த சாதி சமூகத்தில் உயர்வாக இருக்கின்றது, அதனால் நானும் உயர்ந்தவன், தான் பிறக்காத பிற சாதி தாழ்வானது அதனால் அவர்களும் தாழ்ந்தவர்கள். காரணமே கேட்பதில்லை !

சில நேரங்களில் சாதியம் என்பது அதிகாரத்துக்காக என நினைப்பேன். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குறிப்பிட்ட மக்கள் நிறைய நிலங்கள் செல்வங்களை வைத்திருப்பார்கள், அப்பகுதிகளில் அதிகாரம் செலுத்துவார்கள். அதனால் பிற சாதிகளை அடிமைகளாக வைத்திருக்க எண்ணுவார்கள். ஆனால் ! அதே ஆதிக்கச்சாதி வாலிபன் ஒருவனும், அடக்கப்படும் சாதி பெண் ஒருத்தியும், தொலைத்தூர நகரம் ஒன்றிலோ, நாட்டில் ஒன்றிலோ மணம் முடிக்க மாட்டார்கள். ஏன் இந்த முரண்பாடு?

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Mr-and-mrs-iyer-wallpaper
சரி ! சாதி தொழில்ரீதியானது என்கின்றீர்கள்? விவசாயம் செய்தவன் வேளாளன் அதனால் மீன்ப் பிடிக்கும் மீனவரோடு மண உறவு வைத்திருக்கவில்லை. ஏன் ? மீன்ப் பிடிக்கும் பெண் ஒருத்தி வேளாளனை மணந்தால் அவள் வேளாண்மைக்கு உதவியாக இருக்க முடியாது என்பதால் என்றே வைத்துக் கொள்வோம். இன்று வேளாளர் அனைவரும் விவசாயமா செய்கின்றீர்கள். பல நாடுகளில் வேறு வேறு தொழில் தானே செய்கின்றார்கள். ஏன் கக்கூஸ் கூட கழுவுகிறார்கள். அப்படி இருக்க அவர்கள் குடும்பத்தில் வேறு சாதிப் பெண் மணமுடித்து வந்தால் என்ன? ஏன் நீங்கள் கக்கூஸ் கழுவக் கற்றுக் கொண்டதைப் போல அவளும் உங்களது குடும்பத்துப் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்வாள் தானே. ஆக ! சாதியம் என்பது தொழில்ரீதியாகவோ, பழக்க வழக்கங்கள் ரீதியானதோக் கூட இல்லை.

பிரமாணன் ஒருவன் இஞ்சினியராக மாறும் போது, தலித் ஏன் பிரமாணனாக மாறக் கூடாது. இதனைத் தான் அன்று பாரதி செய்தார், சொன்னார், பாடினார். இன்று பிரமாணரே பிரமாணத்தின் படி வாழத போது அடையாளத்துக்காக மட்டும் சாதியத்தைத் தூக்கிப் பிடிப்பது எதனால்? அனைவரும் படிக்கின்றோம், விரும்பிய தொழிலைச் செய்கின்றோம், விரும்பிய இடத்தில் நிலம் வாங்கி வீடுக் கட்டுகின்றோம். பிடித்த உடை அணிகின்றோம், பிடித்த ரெஸ்டாரண்டில் போய் சாப்பிடுகின்றோம். ஆனால் திருமணம் என்று வந்தால் மட்டும் ஒரே சாதியாக, ஒரே மொழியாக, ஒரே மதமாக, ஒரே நாடாக, ஏன் ஒரே நிறமாக இருக்க விரும்புவது ஏன்?

சாதிகள் ஒருக்காலத்தில் வசதிக்காகவும், தொழில் ரீதியாகவும் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அதுவே நிலைக் கொண்டு விட்டது. ஆனால் இன்று நாம் என்ன பரம்பரைத் தொழிலா செய்கின்றோம். கோவிலில் மணி அடித்தவர், கம்யூட்டரில் கீப்போர்ட் அடிக்கிறார். மீன் பிடித்தவர் அக்கவுண்ட் பைல் பிடிக்கின்றார். ஆகவே இன்றும் சாதியத்தைத் தூக்கிப் பிடிப்பது தேவையற்ற ஒன்றாகும். அப்படி தனது சாதி உயர்ந்தது என்று எவனாவதுக் கேட்டால் எந்த வகையில் உயர்ந்தது எனக் கேளுங்கள் ? நிறமா? கலப்பிடம் இல்லாத நிறத்தை நிரூபிக்கச் சொல்லுங்கள். எந்தவொரு இனமும் இந்த இந்திய துணைக்கண்டத்தில் கலப்பிடம் இல்லாமல் இல்லை. அப்படிப் பார்த்தால் அந்தமானிய பழங்குடிகள் மாத்திரமே தாம் உயர்வானவர்கள் என கருத வேண்டும். எம்மைப் பார்த்துக் கலப்பிடமானவர்கள் என கருத வேண்டும். மற்றவன் எல்லாம் மூடிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

இனியும் நமக்குச் சாதியம் அவசியமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே !!!

நன்றி:கொடுக்கி.நெட்
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by ranhasan Wed Jun 01, 2011 4:25 pm

உங்கள் பதிவு மிகவும் அர்த்தமுள்ள பதிவு, அதிக தகவல்களை உள்ளடக்கிய பதிவு. சாதி பாகுபாடு என்பது அர்த்தமற்றது. அறியாமை சார்ந்தது. உயர்ந்த சாதியினர் என்று பெருமை பேசிக்கொள்ளும் உங்களிடம் உள்ள எந்த ஒன்று தாழ்ந்த இனத்தவர் என நீங்கள் நிராகரிபோரிடம் இல்லை? உங்களால் செய்ய முடிந்த எந்த ஒன்றை அவர்களால் செய்ய இயலாது? அஹ்ரஹாரங்களில் மட்டுமே தனித்து வாழ்ந்த பிராமணர்கள் இன்று நகரங்களில் கிடைத்த இடத்தில் வாழ்கின்றனர், சேரியிலும், குடிசையிலும் தனித்து வாழ்ந்த தாழ்த்தப்பட்டோர் இன்று படித்து நல்ல வேளைகளில் உள்ளனர். நிறம், மொழி, தொழில், செல்வம், இடம் போன்ற வரையறைகளில் முன்னோர்கள் பிரித்த எல்லை கோடுகள் இன்று அழியத் துவங்கிவிட்டன. நகரங்களில் சாதிய வேறுபாடுகள் முழுமையாய் களையப்படாவிட்டாலும் ஓரளவு சாதியம் நசுக்கப்படுவது உண்மை. எனினும் படித்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சாதி கூறி கலவரம் செய்த கொடுமையும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது, இன்றும் பள்ளிகள் சிலவற்றில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் தனித்தே வகுப்பறையில் உட்கார வைக்கப்படுகிறார்கள். கடவுளை மறுப்போரும் சாதியை ஆதரிப்பது அவலம். இவை களையப்பட ஒரே வழி இளைய சமூகத்தினர் மற்றும் குழந்தைகள் மனதில் சாதி விதையை விதைக்காமல் தடுப்பதும் அவர்களை சிந்திக்க வைப்பதுமே ஆகும். உங்கள் பதிவிற்கு மறுமொழி மிகவும் குறைவாகத்தான் வரும். காரணம் சாதி இல்லை என்று வெளியில் கூறுவோரும் தன் சாதியை எவரிடமும் விட்டுக்கொடுப்பதில்லை. கடவுள் இல்லை என்று ஒரு பதிவினை பதிந்து பாருங்கள் உடனே அதற்கு எதிராய் பல மேற்கோள்கள் வரும். ஆனால் விழிப்புணர்வு சார்ந்த இது போன்ற பதிவுகளுக்கு மறுமொழி வருதல் அரிதே. சரி நண்பரே உங்கள் பணி இதே போன்று செம்மையாய் தொடர வாழ்த்துக்கள்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Hசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Aசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Sசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Aசாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by kitcha Wed Jun 01, 2011 6:22 pm

எண்ணுகிற எண்ணமும் செய்கிற செயலும் சரியாக இருந்தால் அவனே உயர்ந்த ஜாதி.

ஜாதி இல்லை என்று சொன்ன பாரதியே ஒரு இடத்தில் ஜாதியை முன் வைக்கிறார்.ஆதாரம் உண்டு.

அண்ணல் அம்பேத்கார் ஒரு தாழ்த்த பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்றால் , அவர் படித்த படிப்பை இன்றும் எந்த உயர்ந்த ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அதை முறியடித்தது உண்டா.

நல்லதை நினைப்பவனே நல்லதை செய்பவனே உயர்ந்தவன் . -
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 01, 2011 7:11 pm

மதங்கள் என்பது இல்லை என்றால் சாதியும் இல்லை என்று சொல்கிறேன் மதங்களின் உட்பிரிவு தானே சாதி...
மதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்பாட்டை கொண்டிருப்பதை போல ஒவ்வொரு சாதிகளுக்கும் தனி தனியான பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் உள்ளது மாணவர்களிடையே சாதியை அறிமுகம் செய்வதே அரசாங்கம் தானே கல்லூரி அல்லது பள்ளியில் சாதி சான்றிதழை கேட்பதன் மூலமாக தானே ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by uma rani Wed Jun 01, 2011 8:07 pm

ஜாதியை ஒழிக்க எங்கேயும் ஜாதி என்ற

சொல்லை அறவே தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும் .
uma rani
uma rani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 8:30 pm

முக்கியமாக பள்ளிகளில், அரசு வேலைகளில் எதிலும் ஜாதிக்கு முக்கியத்துவம் தராமல் திறமைக்கும் கல்விக்குமே முதலிடம் தரவேண்டும். ஜாதியை முழுமையாய் அழிக்கவேண்டும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by சதாசிவம் Wed Jun 01, 2011 8:31 pm

நண்பரே, இன்றும் பிற மாநிலங்களில் பேருக்கு பின் ஜாதி
போடுகிறார்கள். தமிழ்நாட்டில் இதை தந்தை பெரியார் நீக்கினார்.
இன்று ஐ‌டி துறை வந்த பிறகு, திருமணத்தை முடிவு செய்வது வேலையும், நம்முடிய வசதியும் தான். பெற்றோர்கள் இன்று காதல் திருமணத்தை அவ்வளவு எதிர்பதில்லை. கலப்பு திருமணம் மட்டுமே இதற்கு முடிவு செய்யும்.

பாரதி கூறியது
"ஆதலால் காதல் செய்வீர் உலகத்தோரே
அதுவன்றோ உலகத்தின் தலைமை இன்பம்"


சதாசிவம்
சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 01, 2011 8:35 pm

சாதி ஒழிக்க பட வேண்டிய ஒன்று தான் இல்லை என்று கூறவில்லை அதற்காக இதுவரை என்ன செய்து உள்ளோம்...
தன் பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் செய்ய எந்த பெற்றோர் ஆவது தயாரக உள்ளார்களா?
சாதி சான்றிதழ்கள் கொடுக்காமல் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கொள்வார்களா?
இதில் உள்ள சிக்கல்கள்:
1.உறவுகளை உதற தயாரக இருக்க வேண்டும்
2.கிராமமாக இருந்தால் அந்த குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு கூட அவமான பட நேரிடும்
3.இரண்டு பிள்ளைகள் இருந்தால் முதல் பிள்ளை கலப்பு திருமணம் செய்து கொண்டுவிட்டு வீட்டை விட்டு சென்று விட்டாலும் அதன் தாக்கம் அடுத்த பிள்ளையையும் பாதிக்கும்
சாதியால் ஒன்றும் சாதிக்க போவதில்லை
மேல் சாதி மேல்வர்க்கம் என்று சொல்கிறார்களே அதில் வெறும் பெயர் மட்டும் தான் மிஞ்சும்
அரசாங்க பணியாகட்டும் அல்லது கல்லூரியில் இடம் ஆகட்டும் இதில் யாருக்கு பயன்.அதிக மதிப்பெண் பெற்ற மேல் சாதி மாணவனுக்கு கிடைக்க வேண்டிய இடத்தை மற்றொரு மாணவனுக்கு சென்று விடும் இதில் அந்த மாணவன் என்ன செய்ய இயலும் எனவே சாதி என்பது கீழ்வர்கத்தை மட்டும் பாதிக்கிறது என்பது சரி அல்ல அனைவரையும் தான் பாதிக்கிறது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by realvampire Wed Jun 01, 2011 8:40 pm

by ranhasan
"கடவுள் இல்லை என்று ஒரு பதிவினை பதிந்து பாருங்கள் உடனே அதற்கு எதிராய் பல
மேற்கோள்கள் வரும். ஆனால் விழிப்புணர்வு சார்ந்த இது போன்ற பதிவுகளுக்கு
மறுமொழி வருதல் அரிதே."

உண்மை தான்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by T.N.Balasubramanian Thu Jun 02, 2011 8:00 am

ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை!
ஆண் ஜாதி , பெண் ஜாதி என்றே கொள்ளவேண்டும்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய் Empty Re: சாதியை நிரூபித்தால் கோடி ரூபாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum