ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

''இது அரவான் கோட்டம்!''

2 posters

Go down

''இது அரவான் கோட்டம்!'' Empty ''இது அரவான் கோட்டம்!''

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:12 pm

''மலைகளில், வனங்களில், கல்லாய், கதையாய் வாழ்ந்துகொண்டு இருப்பவன், எல்லா நூற்றாண்டுகளிலும் அதிகாரத்தின் கோரப் பிடியில் சிக்கி நசுங்கும் நியாயவான்கள் அத்தனை பேரும் அரவான்களே!''- லேப்டாப்பில் விரிந்த ஆதி, பசுபதியின் புகைப்படங்களைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்த என் வியப்பை ஓரக் கண்ணால் ரசித்தபடியே பேசுகிறார் இயக்குநர் வசந்தபாலன். 'வெயில், 'அங்காடித் தெரு’ படங்களின் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையைப் பேசியவர், 'அரவான்’ மூலம் 18-ம் நூற்றாண்டுக்குத் தமிழர்களைக் கடத்திச் செல்லும் முனைப்பில் இருக்கிறார்! ''ஸ்டில்ஸ் அட்டகாசம்... எங்கே பிடிச்சீங்க 'அரவானு’க்கான பொறியை?''

''இது அரவான் கோட்டம்!'' P44
'' 'வெயில்’, 'அங்காடித் தெரு’ ரெண்டுமே குட்டிக் கதைகள். சின்ன படங்கள். தெளிவான திட்டமிடலுடன் சின்னப் படம் எடுக்க முடிந்த உன்னால், பெரிய படங்களை உருவாக்க முடியாதா?’ன்னு எனக்குள்ளேயே ஏகப்பட்ட கேள்விகள். மிகப் பெரிய தாண்டல் வேண்டும்னு மனசுக் குள்ள பெரிய அலை. சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்’ நாவல் படிச்சுட்டு இருந்தேன். படிக்கப் படிக்க... மனம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணித்தது. அதில் ஒரு அத்தியாயத்தில் இருந்த சம்பவத்தை சினிமாவுக்கான கதை ஆக்கினால் என்னன்னு திடீர்னு ஒரு மின்னல். சு.வெங்கடேசனிடம் தகவல் சொன்னேன். 'இது உங்க கதை தலைவா. தாராளமா எடுத்துக்குங்க’னு உற்சாகமாப் பரிமாறிக்கிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் இருந்தே 'அரவான்’ வளரத் தொடங்கிவிட்டான். இது எங்களின் இமாலயத் தாண்டல். பட்ஜெட்டை மட்டும் மனதில்வைத்து இதைச் சொல்லலை. கதையின் விஸ்தீரணம், பிரமாண்டத்தின் நேரடி சாட்சி என்பதால் சொல்கிறேன்!''
'' 'காவல் கோட்டம்’ மிகப் பெரிய நாவலாச்சே.... அதை முழுமையா ஒரு சினிமாவுக்குள் அடக்க முடியுமா?''
''இது அரவான் கோட்டம்!'' P44d'' 'காவல் கோட்டம்’ ஆயிரக்கணக்கான கிளைக் கதைகளைக்கொண்ட மிகப் பெரிய வரலாற்று நாவல். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை மக்களின் வாழ்க்கையைப் பேசும் எழுத்துக் கடல். அதில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு துளிதான் 'அரவான்’. அந்தத் துளிக்கும் காவல் கோட்டத்தின் முன் பின்னுக் கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த நாவலைப் படித்தால், 'அரவான் துளி’ எங்கே இருந்து எடுக்கப்பட்டதுன்னுகூடக் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பெரிய நாவலை சினிமாவுக்குள் அடக்குவது என்பதும் சாத்தியம் இல்லாத சாகசம். ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில், அடுத்த கதைக்கான தேடலில் இருந் தோம். ஒருநாள் இயக்குநர் வெளியே கிளம்பும்போது நடிக்க சான்ஸ் கேட்டு ராம்-லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வந்தனர். அவங்களைப் பார்த்துட்டு ஏதோ யோசனையுடனே வந்தவர், 'நம் அடுத்த படம் ட்வின் பிரதர்ஸ் பற்றியது’ என்றார். அதுதான் 'ஜீன்ஸ்’. ரங்கநாதன் தெரு வைப் பார்த்த நொடியில் உருவானதுதான், 'அங்காடித் தெரு’. 'நாய்ச் சண்டை பற்றிய 'அமரோஸ் பெரோஸ்’னு ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன். அதைப்போல நம்ம ஊர்ல என்ன சண்டை இருக்குன்னு தேடினப்பதான் 'ஆடுகளம்’ உருவானது’ என்றார் நண்பர் வெற்றிமாறன். இரண்டரை மணி நேர சினிமா கதைக்கு அதிகபட்ச தேவை ஒரே ஒரு பொறிதான். அரவானுக்கான பொறி எனக்குக் காவல் கோட்டத்தில் கிடைத்தது. அவ்வளவுதான்!''

''இது அரவான் கோட்டம்!'' P44b
''இவ்வளவு அழுத்தத்தை ஆதி, பசுபதி தங்கள் தோள்களில் தாங்குவாங்கன்னு உங்களுக்கு எப்படி நம்பிக்கை வந்தது?''
''படத்தில் 'வரிப்புலி’, 'கொம்பூதி’ன்னு இரண்டு முக்கியமான கேரக்டர்கள். காடு, மலை, இரவு, பகல்னு சுத்திய 18-ம் நூற்றாண்டு மனிதர்கள். இப்போ செருப்பு இல்லாம வெறுங்காலில் பத்து அடிகூட நம்மால் நடக்க முடியலை. பழக்கப்பட்ட குடிநீர் மாறினால், உங்களுக்கும் எனக்கும் வைரல் ஃபீவர் வந்துடுது. ஆனா, அன்றைய மனிதர்களின் அசாத்திய ஃபிட்னெஸ் நினைச்சாலே மலைக்கவைக்குது.
' 'வரிப்புலி’க்கு யார் சரியா இருப்பாங்க’ன்னு யோசிச்சப்ப 'மிருகம்’, 'ஈரம்’ தந்த பிம்பம் ப்ளஸ் 6.2 அடி உயரம் ஆதியை என் மனதில் நிறுத்தியது. கதை பத்திப் பேசிட்டு '8 பேக்ஸ் வைங்க’ன்னு சொன்னேன். ரெண்டு மாசத்துக்குள்ளேயே ஃபைபர் உடம்போடு 'வரிப்புலி’யா வந்து நின்னார். மரம் ஏறி, மலை ஏறி, கோட்டையைத் தாண்டின்னு படத்தில் ஆதியின் உழைப்பு அசாத்தியமானது. பசுபதி எப்பவும் என் மனசுக்குப் பிடித்த மனிதர், சிறந்த நடிகர். 'கொம்பூதி’யாகவே கிழித்து எறிந்திருக்கிறார்.

''இது அரவான் கோட்டம்!'' P46
படப்பிடிப்பில் ஆதியும் பசுபதியும் ரத்தம் சிந்தாத நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உச்சி வெயிலில் செருப்பு அணியாமல், சட்டை போடாமல், வெற்றுடம்பில் ஒரே ஒரு அழுக்கு வேட்டியுடன், உடல் முழுக்க டாட்டூ வரைந்து என அவர்களுக்கு முதல் ஷாட் வைக்கவே 11 மணியாகிவிடும். அதுக்கு அவங்க அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கணும். எழுந்ததும் உடற்பயிற்சி, டாட்டூ, விக்னு தயாராகி, படப்பிடிப்பு முடிந்து வேடம் கலைத்துப் படுப்பதற்குள் நள்ளிரவு ஆகிவிடும். திரும்ப அதிகாலை 4 மணிக்கு அலாரம். ஒரு வார்த்தையில் சொல்லணும்னா, அவங்க உழைப்பு அபாரம்!''
''இப்படி ஒரு படத்துக்குப் பாடல்கள், பின்னணி இசைக்கு அனுபவம் அவசியம். ஆனால், பின்னணிப் பாடகர் கார்த்திக்கை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தி இருக்கீங்களே... ரிஸ்க் இல்லையா?''
''நினைத்ததைச் சொல்லலாம் என்பதைத் தவிர, வேற எந்த நோக்கமும் இல்லை. கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழி சினிமாவிலும் பரபரப்பாக இருக்கும் பாடகர் கார்த்திக். 'பண்றீங்களா?’ன்னு கேட்டதும் ஆர்வமுடன் வந்து 18-ம் நூற்றாண்டு இசைக் கருவிகளைத் தேடிப் பிடித்து, பாட்டு, பின்னணி இசைன்னு இரண்டிலும் பிரமாதப்படுத்தி இருக்கார். எனக் குப் பாடல்கள் என்பது கதையைச் சொல்ல உதவும் இன்னொரு கருவி. அதாவது, கதைப் பாடல்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் ஆறு கதைப் பாடல்கள்!''

''இது அரவான் கோட்டம்!'' P44c

மேலும் படங்களுக்கு.....
''ஹீரோயின்கள்பத்தியும் கொஞ்சம் சொல்லலாமே...''
''தன்ஷிகா, அர்ச்சனா கவி ரெண்டு பேரும் 'வரிப்புலி’ ஆதிக்கு ஜோடிகள். அபிநயக் கண்கள், ஆச்சர்ய உயரம் ரெண்டும் தன்ஷிகாவின் வசீகரம். மலையாளியாக இருந்தாலும் அர்ச்சனாவுக்கு அழகிய தமிழ் முகம். படத்துக்கு ரெண்டு பேரும் நல்ல மைலேஜ் கொடுப்பாங்க!''
''லொகேஷன், ஆபரணங்கள், உடைகள்னு எல்லாமே அசரவைக்குதே... எப்படி சாதிச்சீங்க?''
''நினைத்துப் பார்க்க முடியாத மிரட்சியான உழைப்பு. படப்பிடிப்புத் தளம் தேடி மட்டுமே இந்தியா முழுக்கப் பயணித்திருப்போம். கடைசியில், இங்கேயே பக்கத்தில், மதுரை அருகே 'ஓவா மலை’யைக் கண்டறிந்தோம். சமணக் குகைகள் நிறைந்த மலை. இன்னும் நவீன சிதைவுகள் எட்டாத எல்லையில் எங்களுக்கான தன்மையோடு இருந்தது.

''இது அரவான் கோட்டம்!'' P44e
அதேபோல் ஆர்ட் டைரக்டர்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அனுபவமும் விஜய முருகனின் துறுதுறு உழைப்பும் அரவானின் அசுரபலம். அப்போதைய ஸ்டைல் வேட்டிக் குக்கூட ஒரு வார உழைப்பு ''இது அரவான் கோட்டம்!'' P44aதேவைப்பட்டது. புதிதாக நெய்த வேட்டியை மண்ணுக்குள் புதைத்து பண்படுத்தித்தான் பயன்படுத்த முடியும். பளிச் பற்களுடன் வந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்குக் கறை படிந்த அழுக்கு பல் செட்டுகள் மாட்டினோம். நகம் வெட்ட தடா போட்டோம். குளிச்சாலும் மூணு நாட்களுக்கு அழியாமல் இருக்கும் ஸ்பெஷல் டாட்டூ மை உருவாக்கினோம். தெளிந்த வெள்ளைச் சேலை வாங்கி, ஆங்காங்கே கோத்த கொசுவத்தை நூலால் முடிச்சுப்போட்டு சாயத்தில் முக்கிக் காயப்போட்டு, பிறகு நூல் முடிச்சுகளை அவிழ்த்தால், ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகளுடன் 18-ம் நூற்றாண்டுச் சாயலில் சேலைகள் கிடைக்கும். இப்படி ஆராய்ச்சி ப்ளஸ் உழைப்புடன் அரவானுக்காக நாங்களே தயார் செய்த விஷயங்கள் ஏராளம். இதுபோக, படப்பிடிப்புக் கால சவால்கள் தனி அத்தியாயம்!''

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''இது அரவான் கோட்டம்!'' 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

''இது அரவான் கோட்டம்!'' Empty Re: ''இது அரவான் கோட்டம்!''

Post by ந.கார்த்தி Thu May 26, 2011 12:17 pm

பதிவுக்கு நன்றி அக்கா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


''இது அரவான் கோட்டம்!'' Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum