ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது

Go down

டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது Empty டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது

Post by சிவா Thu May 26, 2011 9:08 am

டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது Pcs

டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் கார்கள் நிறுத்தும் பகுதியில் நேற்று மதியம் குண்டு வெடித்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வக்கீல் ஒருவருடைய கார் சேதம் அடைந்தது.

குண்டு வெடித்தது


டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் 7-வது கேட் அருகே வாகனங்கள் நிறுத்தும் பகுதியில், ரஜாத் ஜெயின் என்ற வக்கீல் தனது காரை நிறுத்தி விட்டு கோர்ட்டு வளாகத்தில் உள்ள கேண்டீனுக்கு சென்று விட்டார்.

மதியம் 1.25 மணி அளவில் கார்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அந்த பகுதிக்கு கோர்ட்டுக்கு வந்திருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

அப்போது, கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வக்கீல் ரஜாத் ஜெயினுடைய காரின் அருகே பிளாஸ்டிக் பை ஒன்றில் கிடந்த வெடிபொருள் வெடித்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அவருடைய காரின் வலது பக்கம் சேதம் அடைந்தது. நல்ல வேளையாக அந்த கார் அருகே யாரும் இல்லாததால், எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

போலீசார் சோதனை

தகவல் அறிந்ததும், டெல்லி சிறப்பு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அந்த பகுதியில் கிடக்கிறதா என்று தீவிரமாக சோதனை நடத்தினார்கள். தீயணைப்பு படையினரும் 8 வாகனங்களில் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.

தடய ஆய்வினரும் தேசிய பாதுகாப்பு குழுவினரும் வந்து அந்த பகுதியில் கிடந்த வெள்ளை நிற பவுடர் மற்றும் பேட்டரி போன்ற பொருட்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் டைமர் போன்ற எந்தவிதமான பொருட்களும் அந்த பகுதியில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு காரணமாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், குறிப்பாக மார்க்கெட் போன்ற பகுதிகளில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் நாசவேலை?

இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``இது ஒரு சிறிய குண்டு வெடிப்பு சம்பவம். காரின் வலது பக்கத்தில் கிடந்த பிளாஸ்டிக் பையில் இருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. இதனால் அந்த காருக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை'' என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகளின் நாசவேலை காரணமா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, டெல்லி ஜமா மசூதி அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதற்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். அதன்பிறகு தற்போதுதான் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

தினதந்தி


டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum