ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

+5
கலைவேந்தன்
அசுரன்
கண்ணன்3536
மஞ்சுபாஷிணி
கே. பாலா
9 posters

Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by கே. பாலா Mon May 23, 2011 7:51 pm

பெரியார் ஏன் தேர்தல் அரசியலைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கான வாழும் உதாரணமாக மாறியிருக்கிறது இன்றைய தி.மு..வும் அதன் இன்றைய தலைவர் மு.கருணாநிதியின் குடும்பமும். தேர்தல் அரசியலுக்கு வெளியே இருந்து, ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து தனது சமூக நோக்கங்களைத் திறம்படவே நிறைவேற்றிக்கொண்டிருந்தார் பெரியார் ஈ.வே.ராமசாமி. அவரின் அடிப்பொடிகளாக இருந்து, பதவி ஆசையால் ஏதேதோ காரணங்களைச் சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தவர்களின் வழித்தோன்றல்கள் "ஒரு குற்றமும் செய்யாத" கனிமொழிக்காக சி.பி.. நீதிமன்றத்தின் வாசலிலும் திகார் சிறையின் வாசலிலும் தவம் கிடக்கிறார்கள்.

மக்களுக்காக அரசியல் செய்ய வந்ததாகக் கூறியவர்கள் இன்று தம் மக்களுக்காக அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
செம்மைப்படுத்த வேண்டிய சமச்சீர் கல்வித் திட்டத்தைக்
குப்பையில் கடாசும் ஜெயலலிதாவின் முடிவினை எதிர்த்து அரசியல் செய்ய
வேண்டியவர்கள், கூடிய சீக்கிரமே எதிர்
முகாமுக்குத் தாவ நினைக்கும் காங்கிரசுக்கு எதிராக தேசிய அளவிலான
மூன்றாவது அணி பக்கம் நகர வேண்டியவர்கள் இன்று டார்ச் அடிக்கப்பட்ட முயலாக
வேட்டைக்காரர்களின் மடியில் போய் விழுந்து கிடக்கிறார்கள்.

1993ல் வைகோ வெளியேறியபோதுகூட இல்லாத அளவுக்கு மோசமான பூகம்பத்தின் மீது கட்சி நின்றுகொண்டிருக்கும் நிலையில், கட்சித் தலைவராக இருக்க வேண்டிய கருணாநிதி ஒரு அப்பாவாக நின்றுகொண்டிருக்கிறார். அவர் தனது மகள் கனிமொழிக்கு ஆதரவாக விடும் ஒவ்வொரு வாசகமும் கட்சித் தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்துவதோடு, தி.மு..வுக்கு வாக்களித்து வந்த பெருவாரியான வாக்காளர்களை அருவருப்படையச் செய்கிறது. ஆனால் கருணாநிதியால் வேறெதும் செய்ய முடியாது.

வாரிசுகள் வந்தாலே அரசியலில் பிரச்சினைதான் என்பதால் ஒரு மகளுடன் நிறுத்திக்கொண்ட ஷரத் பவாரே இன்று ஊழல் மகாராஜாவாக காட்சி தருகிறார். அவரின்
மகள் சுப்ரியா சுலே ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ஷாகித் பல்வாவுக்கு
நெருக்கமானவராகவும் லவாசா நில பேர ஊழலில் தொடர்புடையவராகவும்
அறியப்படுகிறார். ஒரு மகளுக்கே இந்தக் கதி என்றால், மூன்று மனைவிகள், ஆறு குழந்தைகள் கொண்ட கருணாநிதியின் கதி என்னவாகும் என்பதைத்தான் சந்தி சிரிக்கிறது. மண்ணின் மைந்தர்களாக அவதரித்து, பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு ஆரம்ப காலத்தில் குறிப்பிடத்தக்க சேவைகள் செய்து கடைசியில் மிக
மோசமான ஊழல் தலைவர்களாக மாறியதில் கருணாநிதிக்கும் ஷரத் பவாருக்கும்
ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. பவாரின் மகள் சுப்ரியாவும் கருணாநிதியின் மகள் கனிமொழியும் நெருக்கமான தோழிகள் என்பதை இங்கு கவனத்தில் கொள்க.

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Maya2ஜெயலலிதாவின் பலவீனம்தான் கருணாநிதியின் பலம் என்று தமிழக அரசியலைப் பற்றி சொல்வார்கள். ஏனெனில், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அ.தி.மு.க தலைவி செய்யும் காரியங்கள்தான் தி.மு..வின் எதிர்ப்பு அரசியலுக்கும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கும் உதவியிருக்கிறது. ஆட்சியில் அமர்ந்த குறுகிய காலத்திற்குள்ளேயே தனது பெயரைக் கெடுத்துக்கொள்வதிலும் தேவையற்ற சமூக விரோத, மக்கள் விரோத காரியங்களைச் செய்வதற்கும் பெயர் போனவர் ஜெயலலிதா. ஆனால் தி.மு.கவின் ஆட்சியில் முதல் முறையாக ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை இழக்காமல் மீண்டும் ஆட்சியில் அமரும் வாய்ப்புகள் 2006-2011ல் இருந்தன. ஒரு சிறுபான்மை அரசாகப் பதவியேற்றாலும் மத்தியில் தி.மு..வின் ஆதரவை நம்பியிருந்த காங்கிரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி மிருக பலத்துடன் தி.மு.. ஆட்சி செய்தது. மத்தியிலுள்ள
காங்கிரஸ் அரசைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டதால் நிதியாதாரம்
குறித்து பயமே இல்லாமல் தாங்கள் நினைத்த அத்தனை திட்டங்களையும்
நிறைவேற்றியது. உள்கட்டமைப்பு, மக்கள் நலத் திட்டங்கள், புதிய ஆசிரியர் நியமனம், நூலகத்திற்கு வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையில் உயர்வு என சமூகத்தின் பல மட்டங்களையும் எட்டும் திட்டங்களை நிறைவேற்றியது. கூடவே அதிகார மமதையும் ஏறிக்கொண்டது. இந்தியாவையே
கட்டுப்படுத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி ஒரு நாயைப் போல
வாலாட்டிக்கொண்டிருந்ததும் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாத ஜெயலலிதாவின்
சோம்பேறித்தனத்தால் ஏற்பட்ட அவலமும் சேர்ந்து தி.மு..வை சர்வாதிகாரிகள் போல் ஆட்சி செய்ய வைத்தது. தன்னை பழைய காலத்து மன்னர் போல் நினைத்துக்கொண்டு கருணாநிதி பொற்கிழிகள் வாரி இறைத்தார். பிடிக்காதவர்கள் போலீசால் அடித்து நொறுக்கப்பட்டார்கள். பட்டம் சூடாத இளவரசரும் அவர்களின் அடிப்பொடிகளும் மதுரையில் உயிர்களைக் கொன்று விளையாடினார்கள். மன்னராட்சியில் வஞ்சகமும் ஆட்சிக் கவிழ்ப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லவா? தி.மு..வினரால் 'சகுனி' என்று
அன்பாக அழைக்கப்பட்ட காலம்சென்ற அந்தத் தலைவரின் அன்பு மகன்கள் தாத்தாவை
கொடுஞ் சிறையில் தள்ளிவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தார்கள். சதி சரியான நேரத்தில் கண்டு பிடிப்பட்டு, சதிகாரர்கள் கட்சியிலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள். ஆனால் அரண் மனையின் அதிகாரச் சமநிலையில் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட கனிமொழி, மாறன்கள் செய்ய நினைத்ததை சுலபமாக செய்து முடித்தார்.

மன்னரின் காலடியில் வாலை ஆட்டிக்கொண்டிருந்த நாய் கழுத்தைப் பிடித்தது. மன்னரின் வாரிசுகளிடையே சண்டை மூளத் தொடங்கியது. மகளைக் கைகழுவச் சொல்லி மூத்த தாரத்து வழி இளவரசர்கள் கேட்கிறார்கள். மகளைக் கைகழுவுவதும் தனது அத்தனை அந்தரங்க ரகசியங்களையும் ஊரறிய தெரிவிப்பதும் ஒன்று என்று கருணாநிதிக்குத் தெரியும். அதனால் மகளைப் பலியிடுவதற்குப் பதில், சிறிது காலம் கட்சி பலியிடப்பட வேண்டியிருக்கும் என்ற "யதார்த்த" முடிவிற்கு வந்திருக்கிறார். ஆனால் மகளைக் காப்பாற்றிவிட்டுத் திரும்புகையில் கட்சி களவாடப்படாமல் இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. சர்க்காரியா கமிஷன் சவாலை எதிர்கொண்டதுபோல் கருணாநிதியின் பக்கம் வயது என்ற சாதகமும் இல்லை. அன்றைய தி.மு..வினர் எம்.ஜி.ஆரை எதிர்த்தது போல், இன்றைய தி.மு..வினர் ஜெயலலிதாவை உக்கிரமாக எதிர்க்கப் போவதும் இல்லை. கட்சி விசுவாசமே அன்று பிரதானமாக இருந்தது. பணமே இன்று பிரதானமாக மாறியிருக்கிறது. அதனால், தாங்கள் சேர்த்து வைத்துள்ள காசைக் காப்பாற்றவாவது தி.மு.கவினர் ஆளுங்கட்சியுடன் சமரசமாகப் போக வேண்டியிருக்கும். ரத்தத்தால் எழுதப்பட்ட தி.மு..வின் சரித்திரத்தை பணத்தால் எழுத முயன்ற இன்றைய தி.மு..வினர் சோரம் போகாமல் இருக்க எந்த நியாயமும் இல்லை.

தி.மு.. தனது தேர்தல் பயணத்தைத் தொடங்கி முதல் சொற்ப வருடங்கள் மட்டுமே அவர்கள் நினைத்தபடியான உருப்படியான திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Maya4பங்களிப்புகளைச் செய்தார்கள். அதன் பிறகு, ஓட்டுக்குப் பயந்து சில காரியங்களைச் செய்தாலும் அதிகமான கவனம் திருடுவதிலேயே இருந்துள்ளது. அதையும் மீறி ஒரு அப்பழுக்கற்ற கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்ததுதான் தி.மு..வை அ.தி.மு..விலிருந்து வேறுபடுத்தி வந்தது. அதுதான் மீண்டும் மீண்டும் அ.தி.மு..வைத் தோற்கடித்து ஆட்சியில் ஏற உதவியது. இன்று, ஸ்பெக்ட்ரம் ஊழலில் கையும் களவுமாகப் பிடிபட்ட பிறகு தனது இமேஜ் அரசியலை தி.மு.க தொடர முடியாது. .தி.மு.கவை வீழ்த்த வேறு ஆயுதங்கள் தேவை. ஏனெனில் தி.மு..வின் வியூகங்களை இப்போது ஜெயலலிதா கையில் எடுத்திருக்கிறார். 'டான்சி ராணி' என்று தி.மு..வினர்
ஒரு காலத்தில் அழைத்த ஜெயலலிதா இன்று ஊழலற்ற ஆட்சி அமைப்பதற்காகப்
புதுமுகங்களை அமைச்சராக்கியிருப்பதாக செய்தி வரச் செய்திருக்கிறார்.

முதல்வரின் வாகன அணிவகுப்பைக் குறைவான கெடுபிடிகளோடு செலுத்தி, மக்களோடு மக்களாக பயணித்து தனது பிம்பத்திலுள்ள களங்கங்களை நிரந்தரமாகத் துடைக்க முயற்சிக்கிறார் ஜெயலலிதா. அதற்கு நேர்மாறாக, தேர்தல் தோல்வியைக்கூட கண்ணியமாக ஏற்க முடியாத அகங்காரம் கொண்டவராக, ஊழல் வழக்கில் நீதித் துறையில் நடக்கும் விசாரணையை சட்ட விரோதமானது என கூறும் சர்வாதிகாரியாக, குற்றத்தை தன் பக்கம் வைத்துக்கொண்டு பிறரின் வஞ்சகம் பற்றிப் பேசும் கற்பனை உலகில் வசிப்பவராகவே கருணாநிதி அடையாளம் காணப்படுகிறார். கூட்டணிக் கட்சிகளை மதிக்கும் தலைவி என பெயரெடுத்து தனது அகங்கார பிம்பத்தை ஜெயலலிதா உடைக்க நினைக்கும் தருணத்தில், ஜெயலலிதாவை எதற்கெல்லாம் தி.மு..வினர்
திட்டினார்களோ அத்தனை குணாதிசயங்களையும் இப்போது தான் சொந்தமாக்கிக்
கொண்டுவிட்டதாக முச்சந்தியில் நின்று அறிவிக்கிறார் கருணாநிதி.

தேர்தல் பாதை திருடர் பாதை என்ற தீவிர இடதுசாரிகளின் ஒட்டுமொத்த புறக்கணிப்பிற்கும் தி.மு.. செய்தது போன்ற சாக்கடைப் பயணத்திற்கும் நடுவான பெரியாரது பாதையின் சிறப்பு இப்போது தெளிவாகப் புரிகிறது. அதிகாரத்தில் அமராத அதே சமயத்தில் அமைப்பிற்குள் இருந்துகொண்டு என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் பெரியார் செய்தார். யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களைத் தனது சமூக செயல் திட்டத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். தனது சமூக செயல்திட்டத்திற்கு சாதகமான சக்திகள் ஆட்சியில் அமர்வதற்கும் அவர்கள் ஆட்சியில் தொடர்வதற்கும் உதவினார். அதற்கு நேர்மாறாக, குடும்ப நல செயல்திட்டம் ஒன்றையே உடனடி நோக்கமாகக் கொண்டிருக்கும் கருணாநிதி, இந்த
முறை தனது இமேஜ் குறித்த கவனத்துடன் ஆட்சி செய்ய நினைக்கும்
ஜெயலலிதாவுக்கு தனது பழைய ஆட்சி முறைக்குத் திரும்புவதற்கான எதிர்ப்புகள்
அற்ற அரசியல் சூழலை உருவாக்குகிறார். சுமார் 100
ஆண்டு கால திராவிட அரசியலையும் அரை நூற்றாண்டைத் தாண்டிய திராவிட தேர்தல்
அரசியலையும் விஜயகாந்த் என்ற அரைவேக்காட்டு சக்தியில் விட்டுச் செல்வது
அவர்களின் இத்தனை ஆண்டுகால பங்களிப்புகளுக்கும் தொல்லைகளுக்கும் மாபெரும்
இழுக்கு.
நன்றி : உயிர்மை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty Re: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by மஞ்சுபாஷிணி Mon May 23, 2011 9:33 pm

யோசிக்க வேண்டிய விஷயமே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty Re: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by கண்ணன்3536 Mon May 23, 2011 9:47 pm

:silent: சுட்டுத்தள்ளூ!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty Re: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by அசுரன் Mon May 23, 2011 10:14 pm

மிகுந்த ஞானத்தோடு எழுதப்பட்ட கட்டுரை முழுக்க உண்மை.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty Re: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by கலைவேந்தன் Mon May 23, 2011 10:37 pm

சிறந்த திறனாய்வு..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty Re: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 23, 2011 10:49 pm

பதிவை படிக்க படிக்க ஒரு பரிதாபம் பிறக்கிறது பாவம் பாசத்தால் சிக்கி தவிக்கிறார் கலைஞர் பதிவில் உள்ள அவரது படமே இதற்கு சான்று...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty Re: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by தாமு Tue May 24, 2011 6:18 am

சூப்பருங்க அருமையிருக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty Re: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by ரபீக் Tue May 24, 2011 10:09 am

அவ்வளவு சீக்கிரம் திமுக விட்டுவிடாது என்பது என் கருத்து


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty Re: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by SK Tue May 24, 2011 10:50 am

விஜயகாந்த் என்ற அரைவேக்காட்டு சக்தியில் விட்டுச் செல்வது
அவர்களின் இத்தனை ஆண்டுகால பங்களிப்புகளுக்கும் தொல்லைகளுக்கும் மாபெரும்
இழுக்கு.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திராவிட அரசியலை  விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி Empty Re: திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum