ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சில் முன்னூறு விஷயம்

5 posters

Go down

மூச்சில் முன்னூறு விஷயம் Empty மூச்சில் முன்னூறு விஷயம்

Post by தாமு Fri May 20, 2011 11:53 am

- மூச்சு வாங்குது.
- மூச்சு திணறுது.
- மூச்சுவிட கஷ்டமா இருக்கு.
- மூச்சு நின்னுடுச்சு.
இப்படி மூச்சு, மூச்சு என்று அடிக்கடி எல்லோரும் சொல்வதை, நீங்களும் கேட்டிருப்பீர்கள். மூக்கு வழியாக காற்றை உள்ளிழுத்து, வெளியே விடுவதைத்தான் `மூச்சு’ என்று சொல்லிப் பழகிவிட்டோம். இதையே `சுவாசித்தல்’ என்றும் நாம் சொல்வதுண்டு.
நம்மை அறியாமலே, இயற்கையாக, தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை.
சுவாசித்தல், நுரையீரல் என்கிற உறுப்பு மூலமாகத்தான் நடைபெறுகிறது. நுரையீரல் நமது உடலில் மார்பின் இரண்டு பக்கமும் நிறைந்திருக்கிறது. நமது மார்பிலுள்ள இரண்டு நுரையீரல்களிலும், கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகமிகச் சிறிய பலூன் போன்ற காற்றுப்பைகள் சுமார் முப்பது கோடி எண்ணிக்கையில் இருக்கின்றன. வெளியிலிருந்து உள்ளே இழுக்கப்படும் காற்று, இந்த முப்பது கோடி காற்றுப் பைகளுக்குள்ளும் சென்றுதான், மாற்றமாகி, மறுபடியும் வெளியே வருகிறது.
உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்குத் தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. செடி, கொடிகள் அசையும்போது நாம் காற்று அடிக்கிறது என்று சொல்கிறோம். காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும்.
காற்றை நாம் சுவாசிப்பதனால்தான் உயிர் வாழ்கிறோம். சுவாசித்தல் நின்று விட்டால், உயிரும் நின்று விட்டதாக அர்த்தம். `தூங்கையிலே வாங்குகிற மூச்சு, சொல்லாமல் நின்னாலும் போச்சு’ “ராத்திரி படுத்து, காலையில் எழுந்தால்தான் உயிர் நிச்சயம்” என்று சுவாசித்தலைப் பற்றி கிராமத்திலுள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு.
காற்றில் கலந்திருக்கும் `பிராணவாயு’ என்ற `ஆக்ஸிஜன்’ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத காற்றில், ஆக்ஸிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாகக் கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்ஸிஜன் வாயுவும் இருக்கின்றன. மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான், 0.039 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீதேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓஸோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் பதினாறு விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன.
காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்ஸிஜன் வாயுதான், நம்மை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 21 சதவீத ஆக்ஸிஜன் வாயு, 1 சதவீதம் குறைந்தால் கூட, உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஐந்து சதவீதம் குறைந்தால் எல்லோர் உயிருக்கும் ஆபத்துதான்.
மூச்சில் முன்னூறு விஷயம் Yoga_2இந்த 21 சதவீத ஆக்ஸிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டால் சரிதான். காற்றின் அழுத்தமும், காற்றின் அடர்த்தியும் உயரம் போகப் போக குறைந்துகொண்டே போகும். சுமார் பத்தாயிரம் மீட்டருக்கு மேலே போகும்போது, காற்றில் உள்ள வாயுக்களின் சதவீதம் மாறும்.
நீருக்குள் காற்று இருக்கிறது, நீருக்குள்ளேயே வாழும் உயிரினங்கள் அனைத்துமே, தனக்குள்ள `கில்ஸ்` என்று சொல்லக்கூடிய விசேஷ நுரையீரலைப் பயன்படுத்தி, தண்ணீரிலுள்ள காற்றிலிருந்து, ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை மட்டும் பிரித்தெடுத்து சுவாசிக்கின்றன.
விண்வெளியில் ஆக்ஸிஜன் வாயு கிடையாது. ஆகவே விண்வெளி வீரர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உடன் எடுத்துச் சொல்கிறார்கள். வானத்தில் `ஓஸோன் திரை’ என்று சொல்லக்கூடிய இடம் வரைக்கும் தான் ஆக்ஸிஜன் வாயு உண்டு. அதற்கு மேல் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்று இருக்கும். ஆனால் ஆக்ஸிஜன் வாயு இருக்காது.
பூமிக்கடியில் அதிக ஆழத்திலுள்ள சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு, `வென்டிலேடிஸ் ஷாப்ட்’ என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ராட்சத குழாய், பூமியிலிருந்து சுரங்கத்திற்குள் நுழைக்கப்பட்டு, தரையிலுள்ள இயற்கைக்காற்று உள்ளே அனுப்பப்படுகிறது. இதன் மூலம்தான் சுரங்கத் தொழிலாளர்கள் சுவாசிக்கிறார்கள்.
தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களுக்கு, நுரையீரலில் காற்று இருப்பதற்குப் பதிலாக தண்ணீர் நிரம்பி விடுகிறது. இதனால்தான் இறக்கிறார்கள்.
`சூரிய ஒளிச்சேர்க்கை’ அதாவது `போட்டோ சிந்தெஸிஸ்’ (Photo Synthesis) என்று சொல்லக்கூடிய செயல்முறையில், தாவரங்கள் அனைத்தும், சூரிய ஒளிசக்தியை பயன்படுத்தி, ஆக்ஸிஜன் வாயுவை உண்டாக்குகிறது. இந்த ஆக்ஸிஜனை உயிரினங்கள் எடுத்துக் கொள்கின்றன. உயிரினங்கள் தான் உண்ணும் உணவை எரித்து, அதன் மூலம் கிடைக்கும் சக்தியை உடலுக்கு கொடுக்க, ஆக்ஸிஜன் வாயு மிகவும் உபயோகப்படுகிறது.
மனிதன் ஆக்ஸிஜன் வாயுவை சுவாசித்து, (அதாவது உள்ளே இழுத்து) கார்பன் டை ஆக்சைடு என்கிற வாயுவை வெளியே விடுகிறான். இதற்கு நேர்மாறாக, எல்லா செடி, கொடிகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து, ஆக்ஸிஜன் வாயுவை வெளியே விடுகிறது. சூரிய வெளிச்சம் இருந்தால்தான் இப்படி நடக்கும். சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் அதாவது இரவில், மனிதனைப் போல தாவரங்களும் ஆக்ஸிஜன் வாயுவை உள்ளே இழுத்து, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியே விடுகிறது.
ஆக்ஸிஜன் வாயு நமக்கு தேவை. கார்பன் டை ஆக்ஸைடு வாயு நமக்குத் தேவையில்லை. பகலில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடைக்கும். அதனால் பகலில் மரத்தடியில் படுக்கலாம். இரவில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடையாது. கார்பன் டை ஆக்ஸைடு தான் கிடைக்கும். இரவில் மரத்தடியில் படுக்கக்கூடாது என்று சொல்வதன் காரணம் இதுதான்.
என் நண்பர் ஒருவர் வாக்கிங் போகும்போதும், சும்மா இருக்கும்போதும், வழியிலிருக்கும் செடி, கொடிகளின் அருகில் போய் இலைகளுக்கு பக்கத்தில் மூக்கைக் கொண்டு போய், நன்றாக மூச்சை உள்ளே இழுத்துவிட்டு வருவார். “என்ன சார் இது, வழியெல்லாம் செடி, கொடிகளை மோப்பம் பிடித்துக்கொண்டே வருகிறீர்கள்” என்றேன்.
“எல்லாச் செடி கொடிகளும் பகலில் ஆக்ஸிஜனை வெளியே விடும். இவைகளிலிருந்து வெளியே வரும் இந்த சுத்தமான ஆக்ஸிஜன் நமக்குத் தேவை. அதனால்தான் இலைகளின் கிட்டே போய் அந்த சுத்தமான ஆக்ஸிஜனை, கலப்படமில்லாத ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து, உடம்பை தெம்பாக்கிக் கொள்கிறேன் டாக்டர்” என்றார் அந்த நண்பர். அவர் செய்வது சரிதான்.
அதிக மக்கள் கூட்டத்தில் நாம் இருக்கும்போது, ஆக்ஸிஜன் நமக்கு கிடைப்பது குறைந்து விடுகிறது. அதாவது பத்து பேர் இருக்க வேண்டிய இடத்தில் நூறு பேர் இருந்தால் நமக்கு ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும். அதே நேரத்தில், எல்லோரும் சுவாசித்து விட்டு, காற்றை வெளியே விடும்போது அந்த இடத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அதிகமாகி விடுகிறது. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று சொல்வது இதனால் தான்.

vayal



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மூச்சில் முன்னூறு விஷயம் Empty Re: மூச்சில் முன்னூறு விஷயம்

Post by முரளிராஜா Fri May 20, 2011 12:55 pm

பயனுள்ள பதிவு
நன்றி தாமு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மூச்சில் முன்னூறு விஷயம் Empty Re: மூச்சில் முன்னூறு விஷயம்

Post by அன்பு தளபதி Fri May 20, 2011 1:20 pm

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூச்சில் முன்னூறு விஷயம் Empty Re: மூச்சில் முன்னூறு விஷயம்

Post by Thiraviamurugan Fri May 20, 2011 2:27 pm

அறிவியல் கருத்துக்கள் இது போன்று எளிமையாக சொல்லபட வேண்டியது அவசியம் .
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

மூச்சில் முன்னூறு விஷயம் Empty Re: மூச்சில் முன்னூறு விஷயம்

Post by ayyasamy ram Fri Jul 15, 2016 7:46 pm


காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்ஸிஜன் வாயுதான்,
நம்மை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த 21 சதவீத ஆக்ஸிஜன் வாயு, 1 சதவீதம் குறைந்தால் கூட,
உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்.
-
-- மூச்சில் முன்னூறு விஷயம் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூச்சில் முன்னூறு விஷயம் Empty Re: மூச்சில் முன்னூறு விஷயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum