ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோப்பை வென்றது இந்தியா!

Go down

கோப்பை வென்றது இந்தியா! Empty கோப்பை வென்றது இந்தியா!

Post by சிவா Tue Nov 11, 2008 1:50 pm

நாக்பூர்: பரபரப்பான நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை நான்கு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கைப்பற்றி சாதித்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்திய வந்த உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வெறுங்கையுடன் பரிதாபமாக நாடு திரும்புகிறது.


இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 441, ஆஸ்திரேலியா 355 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 295 ரன்கள் எடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு 382 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்திருந்தது. ஹைடன்(5), காடிச் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோப்பை வென்றது இந்தியா! Empty Re: கோப்பை வென்றது இந்தியா!

Post by சிவா Tue Nov 11, 2008 1:50 pm

இஷாந்த் அசத்தல்: நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய காடிச், 16 ரன்களுக்கு இஷாந்திடம் சரணடைந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாண்டிங்(8), மிஸ்ராவால் ரன் அவுட் செய்யப்பட்டார். மைக்கேல் கிளார்க்கும்(22), இஷாந்த் வேகத்துக்கு தாக்குப் பிடிக்கவில்லை.


ஹைடன் ஆறுதல்: ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் துவக்க வீரர் ஹைடன் டெஸ்ட் அரங்கில் தனது 29 வது அரை சதத்தை கடந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைடனுடன், ஹசி இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்க்க ஆரம்பித்தது.


சுழல் மிரட்டல்: இந்நிலையில் சுழற்பந்து வீச்சை கையில் எடுத்தார் கேப்டன் தோனி. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. மிஸ்ரா பந்து வீச்சில் ஹசியும்(19), ஹர்பஜன் சுழலில் ஹைடனும்(77) அடுத்தடுத்த ஓவரில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ஆல் ரவுண்டர் வாட்சனும்(9) இந்த முறை சோபிக்க வில்லை. தொடர்ந்து பந்து வீச்சில் மிரட்டிய மிஸ்ரா, ஹாடின்(4), கிரஜ்ஜா(4) இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.


சூப்பர் வெற்றி: டெயிலெண்டர்களான பிரட் லீ மற்றும் ஜான்சனை ஹர்பஜன் வெளியேற்ற, 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா இழந்து தோல்வி அடைந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஹர்பஜன் 4, மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்தினர். இவ்வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-0 கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோப்பை வென்றது இந்தியா! Empty Re: கோப்பை வென்றது இந்தியா!

Post by சிவா Tue Nov 11, 2008 1:51 pm

ஆட்டநாயகன்: இப்போட்டியில் மொத்தம் 12 விக்கெட் கைப்பற்றிய கிரஜ்ஜா, ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 15 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.


படுதோல்வி


* இத்தொடரில் 2-0 கணக்கில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, கடந்த 8 ஆண்டுகளில் 5 வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.


* கடந்த 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 டெஸ்ட் வெற்றிகளை பெற்ற ஒரே அணி இந்தியா.


* கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நான்காவது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதற்கு முன் இலங்கை(1999-2000), இந்தியா (2000-01), இங்கிலாந்து(2005) அணிகளிடம் டெஸ்ட் தொடரை இழந்திருந்தது.


தோனியின் பெருந்தன்மை: சீனியர் வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, தனது செயல்பாடுகள் மூலம் அருமையாக வெளிப்படுத்தினார் இந்திய கேப்டன் தோனி. வெற்றிக்கு அருகில் இந்திய அணி வந்த போது, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் சவுரவ் கங்குலிக்கு, கேப்டன் பொறுப்பை அளித்தார். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செயலாற்றினார் கங்குலி. இறுதியில் பரிசளிப்பு விழாவின் போது, பார்டர்-கவாஸ்கர் கோப்பையை பெற்றுக்கொள்ள தோனி அழைக்கப்பட்டார். அப்போது கும்ளேவையும் அழைத்து கவுரவப்படுத்தினார். இருவரும் சேர்ந்து கோப்பையை பெற்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோப்பை வென்றது இந்தியா! Empty Re: கோப்பை வென்றது இந்தியா!

Post by சிவா Tue Nov 11, 2008 1:51 pm

வரலாறு படைத்த இந்தியா: இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 1996 முதல் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 8 தொடர்களில் இந்தியா 4, ஆஸ்திரேலியா 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன. 2003-04 ல் தொடர் "டிரா'வில் முடிந்தது. கடந்த இரண்டு முறை(2004-05), (2007-08) இத்தொடர் ஆஸ்திரேலியா வசம் இருந்தது. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வென்று வரலாறு படைத்துள்ளது.


பெரும் இழப்பு: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியதன் மூலம், அசைக்க முடியாத கேப்டனாக வலம் வருகிறார் தோனி. இத்தொடரின் வெற்றி குறித்து தோனி கூறுகையில்,"" கடைசி நாளான நேற்று இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமைய வில்லை. இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய போது, வெற்றி இந்தியா வசம் வருவது உறுதியானது. இத்தொடரில் காம்பிர், சேவக் ஜோடி சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தது இந்தியாவுக்கு பலமாக அமைந்தது. கும்ளே, கங்குலி இருவரும் மிகச் சிறந்த வீரர்கள். அனைவரும் ஒரே டிரஸ்சிங் ரூமில் இருப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களது ஓய்வு, இந்திய அணிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு,'' என்றார்.


பாண்டிங்கிற்கு அபராதம்!: நாக்பூர் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தாமதமாக பந்து வீசியதற்காக கேப்டன் பாண்டிங்கிற்கு போட்டி சம்பளத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தவிர, அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


சச்சின் "100': நேற்றைய இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாடினை, கேட்ச் பிடித்து வெளியேற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் "100' கேட்ச் பிடித்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் சச்சின்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோப்பை வென்றது இந்தியா! Empty Re: கோப்பை வென்றது இந்தியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா
» தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு
» கோப்பை வென்றது இந்தியா * இன்னிங்ஸ், 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
» 15வது தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum