ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு!

2 posters

Go down

ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு! Empty ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு!

Post by ந.கார்த்தி Sun May 15, 2011 9:22 pm

சென்னை: ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து அவரை ஆட்சியமைக்குமாறு அழைத்துள்ளார் ஆளுநர்.

இதையடுத்து நாளை பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தலைமைச் செயலாளர் மாலதி அறிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சியமைக்கிறது அதிமுக.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. அதில் ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வராக) தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது, ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் பர்னாலா.

அவரிடம், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தன்னை சட்டமன்ற அதிமுக தலைவராக ஏகமனதாக தேர்வு செய்த தீர்மான கடிதத்தைக் கொடுத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு ஆளுநர் அழைப்பு:

இதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பொறுப்பேற்கவும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவும் முறைப்படி அழைப்பு விடுத்தார் ஆளுநர் பர்னாலா.

இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, நாளை முதல்வராக பதவி ஏற்கிறார். ஜெயலலிதாவுடன் 26 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பர் என்று தெரிகிறது. நாளை பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தலைமைச் செயலாளர் மாலதி அறிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அவருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர்.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு! Empty மின்வெட்டை சரிசெய்ய முன்னுரிமை: ஆளுநரைச் சந்தித்த பின் ஜெ பேட்டி!

Post by ந.கார்த்தி Sun May 15, 2011 9:23 pm

சென்னை: மின்வெட்டைச் சீரமைப்பதே அதிமுக ஆட்சியின் முதல் நடவடிக்கையாக இருக்கும், என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சியமைக்கிறது அதிமுக.

ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர, இன்று காலை ஆளுநர் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்தார் ஜெயலலிதா. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஜெயலலிதாவை சட்டமன்ற அதிமுக தலைவராக ஏகமனதாக தேர்வு செய்த தீர்மான கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார் ஜெயலலிதா.

இதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பொறுப்பேற்கவும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவும் முறைப்படி அழைப்பு விடுத்தார் ஆளுநர் பர்னாலா.

இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்.

இதைத் தொடர்ந்து நிருபர்களை ராஜ்பவனில் சந்தித்தார் ஜெயலலிதா.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுடம் அதற்கு ஜெயலலிதா தந்த பதில்களும்:

நீங்கள் ராஜ் பவனுக்கு வருகை தந்தது பற்றி...?

நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.

தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சப்பட தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.

நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?

ஏற்கனவே கடந்த 13-ந்தேதி இதுபற்றி விரிவாக சொல்லி உள்ளேன்.

சரி மீண்டும் கேட்கிறோம் சொல்லுங்கள்.... அதிமுக அரசின் முதல் நடவடிக்கை, முன்னுரிமைத் திட்டம் என்னவாக இருக்கும்?

மின்வெட்டைச் சீரமைப்பதே எனது அரசின் முதல் நடவடிக்கையாக இருக்கும். அதுமட்டுமல்ல, மாநிலம் முழுவதிலும் பல துறைகள் பின்னடைந்த நிலையில் உள்ளன. அவற்றைச் சீரமைத்து ஒழுங்குபடுத்துவதற்கும் முன்னுரிமை தரவிருக்கிறோம். தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது.

விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்துவோம்.

பதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா?

நிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர். அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.

உங்கள் அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் இடம்பெறுவார்கள்?

அதைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். பின்னர் சொல்கிறோம்.

சோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்கு அழைத்து இருக்கிறாரே செல்வீர்களா?

எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலை பேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு! Empty Re: ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு!

Post by மஞ்சுபாஷிணி Mon May 16, 2011 10:24 am

நல்ல விஷயமே.. மின்வெட்டு சீரமைப்பு இப்ப அவசியமானது கூட.. இந்த வெயிலில் அடிக்கடி மின்வெட்டால் மக்கள் அவதியுறுகிறார்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு! Empty Re: ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஜெயலலிதா-திங்கள்கிழமை பதவியேற்பு?
» ஜெ.வுக்கு சோனியா அழைப்பு எதிரொலி-அமைச்சரவையிலிருந்து விலகுகிறது திமுக
» குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum