ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு

+3
அன்பு தளபதி
மகா பிரபு
முரளிராஜா
7 posters

Go down

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு Empty காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு

Post by முரளிராஜா Sat May 14, 2011 12:41 pm

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு 14-thangabalu-300
தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாறிப் போய் விட்டதைத் தொடர்ந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தங்கபாலு.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிரட்டி, உருட்டி, விரட்டி 63 தொகுதிகளை சப்ஜாடாக வாங்கிய காங்கிரஸ் கட்சி, உட்கட்சிப் பூசல், ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவது, போட்டி வேட்பாளர்கள், துரோகம், முதுகில் குத்துவது, ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. வெறும் 5 தொகுதிகளில் மட்டும் இக்கட்சி வெற்றி பெற்றது.

அதை விட கேவலமாக கட்சித் தலைவர் தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் படு தோல்வியைச் சந்தித்துள்ளார்.

கட்சி வேட்பாளர்கள் தேர்வில் தங்கபாலு செய்த மோசடித் தனம், வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களிடம் காசு வாங்கி விட்டதாக எழுந்த புகார்கள் போன்றவை காரணமாக தங்கபாலு மீது காங்கிரஸார் கடும் காட்டத்துடன் இருந்தனர்.

தற்போது காங்கிரஸ் கட்சி கேவலமாக தோற்றுப் போய் விட்டதால் தங்கபாலு டீசன்ட்டாக பதவி விலக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தேர்தலில் பெற்ற முடிவுகளுக்குப் பொறுப்பேற்று நான் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். விரைவில் எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பவுள்ளேன் என்றார்.

காங்கிரஸ் மேலிடம் தன் மீது கை வைப்பதற்கு முன்பு தானே விலகி விடுவது நல்லது என்று நினைத்தே தங்கபாலு இந்த முடிவை அறிவித்திருப்பதாக தெரிகிறது.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு Empty தமிழகத்தில் காங்., படுதோல்வி ; ராஜினாமா என்ற பெயரில் தங்கபாலு ஓட்டம் பிடித்தார்

Post by மகா பிரபு Sat May 14, 2011 1:24 pm

தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டதை அடுத்து இந்த பதவியில்
நீடிக்க விருப்பம் இல்லாமல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே
காங்., கட்சியில் இவர் தலைவராக நீடிக்க கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும்
எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.


ஒற்றுமையை நிலைநாட்ட தவறியவர்:
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் பெரும் சண்டையிட்டு பிணக்குடன்
63 சீட்களை பெற்றுது. இதில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது வரை
தி.மு.க.,வுடன் உரசல் இருந்தது. மேலும் போட்டியிட தங்கள் ஆதரவாளர்களுக்கு
சீட் வழங்கப்படவில்லை என்ற மனக்கசப்பு காரணமாக கட்சி தொண்டர்கள் தங்கபாலு
உருவ பொம்மையை எரித்தனர். மேலும் தமிழக காங்., தலைமை அலுவலகமாக
சத்தியமூர்த்தி பவனுக்குள் கோஷ்டி சண்டை அரங்கேறியதில் கண்ணாடிகள்
நொறுக்கப்பட்டன. இந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்ட
தவறியது டில்லியில் மேலிடத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும் கட்சி
விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இளைஞர் காங்., நிர்வாகிகளை கட்சியில்
இருந்து தங்பாலு நீக்குவதாக நடவடிக்கை எடுத்தார். இதுவும் ராகுல் வரை
கொண்டு போய்ச்சேர்க்கப்பட்டது .


இந்நிலையில் தேர்தல் முடிவுகள்
காங்., - தி.மு.க,. கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்
இருந்து நேரத்தில் பேரிடியாக அ.தி.மு.க., பெருவாரியான சீட்டுகளை
அள்ளிக்கொண்டு தனிப்பெரும்பாண்மை பெற்றது. போட்டியிட்ட 63 இடங்களில்
காங்கிரஸ் 5 இடங்களை மட்டும் பிடித்தது. இதனால் படுதோல்விக்கு காரணமாக
தார்மீக பொறுப்பேற்று தனது தமிழக காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக
தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை சோனியாவுக்கு அனுப்ப உள்ளதாக அவர்
கூறினார்.


குழப்பம் ஏற்பட்ட மயிலாப்பூர்:
மயிலாப்பூரில் காங்., வேட்பாளராக தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி,
அறிவிக்கப்பட்டார். இதற்கும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவரது வேட்பு மனு தள்ளுபடியானதை அடுத்து மாற்று வேட்பாளராக தயாராக பதிவு
செய்திருந்த தங்கபாலு வேட்பாளரானார். காங்., தலைவர் மனைவி வேட்பு மனு
தள்ளுபடியானது காங்கிரஸ் கட்சியின் கவனக்குறைவாக விமர்சிக்கப்பட்டாலும் ,
இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் கட்சியினர் பேசிக்கொண்டனர். இவர் 21 ஆயிரம்
ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.


தேர்தல் முடிவுக்கு
முன்னர் தி.மு.க., தலைவர் கருணாநிதியை அடிக்கடி சந்தித்து தி.மு.க.,
கூட்டணி வெற்றி பெறும் என்று கூறி வந்த நிலையில் தி.மு.க., - காங்.,
கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டதை அடுத்தும் கட்சிக்குள் கோஷ்டி பூசல்
காரணமாக எழுந்த நெருக்கடிக்கும் ஈடு கொடுக்க முடியாமல் தங்கபாலு தற்போது
ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளார்.

நன்றி தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு Empty Re: காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு

Post by அன்பு தளபதி Sat May 14, 2011 2:42 pm

காங்கிரஸ்சை அழிக்கவேண்டும் யென யாரும் முயலவேண்டாம் அவர்களாகவே ஆப்படித்து கொள்வார்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு Empty Re: காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு

Post by கலைவேந்தன் Sat May 14, 2011 3:43 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு Empty Re: காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு

Post by மஞ்சுபாஷிணி Sat May 14, 2011 3:58 pm

சரியான அடி தான் தங்கபாலுவுக்கு கிடைத்த இந்த வீழ்ச்சி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு Empty Re: காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு

Post by சுகுமார் Sat May 14, 2011 4:20 pm

இதற்க்கு அவர் மற்றவர்களை கட்சியில் இருந்து நீக்கினார் காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு 56667 காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு 56667 காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு 56667
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Back to top Go down

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு Empty Re: காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு

Post by பாலாஜி Sat May 14, 2011 4:45 pm

அடுத்த கோஷ்டி சண்டைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தயாராகிவிட்டது ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு Empty சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு-இளங்கோவன் ஆதரவாளர்கள் பயங்கர அடிதடி

Post by பாலாஜி Sat May 14, 2011 4:53 pm

சென்னை: காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு ஆதரவாளர்களுக்கும், இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் நடந்தது. அதில் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. வேட்டிகள் கிழிந்தன.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்தார்.

இது குறித்துக் கேள்விப்பட்டதும் இளங்கோவன் உள்ளிட்ட பிற கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பட்டாசுகளும் வெடித்தனர்.

இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்க இளங்கோவன் ஆதரவாளர்களான முன்னாள் கவுன்சிலர் மணிப்பால், கோபி, பூக்கடை வேலு ஆகியோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

ஆனால், அவர்களை உள்ளே விடாமல் தங்கபாலு ஆதரவாளர்களான சந்திரன் உள்ளிட்டோர் தடுத்தனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.

இளங்கோவன் ஆதரவாளர்கள் சந்திரனை அடித்து உதைத்தனர். இதையடுத்து தங்கபாலு ஆதரவாளர்கள் பதிலுக்கு திருப்பித் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர அடிதடி ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடித்து கீழே தள்ளி மிதித்துக் கொண்டனர்.

சிலர் தப்பி சத்தியமூர்த்தி பவனுக்குள் ஓட, அவர்களை உள்ளேயும் விரட்டிச் சென்று தாக்கினர். இதில் கட்சி அலுவலகத்தில் இருந்த நாற்காலி, மேஜைகளும் உடைக்கப்பட்டன.

இதையடுத்து பிற நிர்வாகிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சண்டை நடந்தபோது தங்கபாலு சத்திமூர்த்தி பவனுக்குள் தான் இருந்தார். அவர் வெளியே வரவில்லை.

தங்கபாலு ராஜினாமா செய்ததை கேள்விபட்டதும் அவரது எதிர் கோஷ்டியை சேர்ந்த காங்கிரசார் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர்.

தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு Empty Re: காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு நீக்கப்படுவது நிச்சயம்-எஸ்.வி.சேகர்
» தேர்தல் தோல்வி எதிரொலி-திமுக அமைச்சரவை ராஜினாமா
» காங். தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புகிறோம்-தங்கபாலு
» ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கிய தங்கபாலு-கைது செய்ய காங். கோரிக்கை
» அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum