ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

+2
sshanthi
தாமு
6 posters

Go down

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Empty நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

Post by தாமு Wed May 04, 2011 3:37 pm

இரவா, பகலா கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை… சிறுகச் சிறுக சேமித்த பணத்தை உங்கள் வீட்டுக்குள்ளே இருந்தபடியே வெளியே வீசாமல் இருக்க - குளிர்காலங்களில் நிறைய விடயங்கள் பற்றி யோசிக்க வேண்டும்.ENERGY SAVING என்பது பற்றி எமக்குத்தெரியாமல் அல்லது கவனிக்காமல் அல்லது அட இதில் என்ன இருக்கின்றது என் எண்ணிய இடங்களில் நாம் கோட்டை விடுகின்றோம்.

*

குளிர்காலம் என்பது மட்டும் அல்லாமல் சில வழிகளை எப்பவுமே கருத்திற் கொள்ளவேண்டியது முக்கிய அம்சமாகும்.அட அப்படி என்ன புதுமை இருக்கின்றது இதில் என்று ஆரம்பத்தில் எண்ணிய போதும் இதுபற்றி ஆளமாக பார்வையை கொண்டபின் அனுபவத்திலேயே என் Gas/Electric/water களின் Billகளில் கணிசமான அளவு சேமிப்பை பெறக்கூடியதாக இருந்தது.


*


பொதுவாக October மாதம் முதல் March மாதம் வரை வீட்டில் Heaterஐ உபயோகிக்க வேண்டி வரும். இந்தக்காலத்தில் வீட்டின் வெப்பத்தை வீணடிக்காமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமான விடயம்.வெப்பநிலையை 21°C ல் வைப்பதே பரிந்துரைக்கப்பட்ட அளவு. அதைவிட அதிகமாக கூட்டுவதை தவிர்க்க வேண்டும்.குளிர்காலத்திலும் ‘நான் வெறும் மேலுடன் தான் இருப்பேன், வெறும் காலுடன் தான் நடப்பேன்’ என்று அடம் பிடிக்க வேண்டாம். போதுமான உடைகளை வீட்டினுள்ளும் அணிந்திருங்கள்.


*

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Sigo_soks

சிராமிக் நிலத்திலோ, டைல்ஸ் நிலத்திலோ கால் படும்போது சிலவேளைகளில் குளிர்வதுபோல் தோன்றும். காலுக்கு soks அல்லது வீட்டினுள் குளிருக்கு அணியும் பாதணிகளை அணியல்லாம்.புகைபிடிப்பவர்கள் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போய் புகை பிடித்துவிட்டு வாருங்கள். wash room களின் உள் சென்று ventilation fanஐ போட்டுவிட்டு புகைப்பதை நிறுத்திவிடுங்கள். நீங்கள் போடும் ventilation fan உங்கள் வீட்டின் வெப்பக்காற்றை வெளையே விசிறி அடிக்கின்றது என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.

*

அதே வேளை புகைப்பதற்கு அடிக்கடி வெளியே போய்வருவதாலும் கதவினூடாக குளிர்காற்று உள்ளேயும், வெப்பக்காற்று வெளியேயும் செல்லும். இதனால் உங்கள் வீட்டின் வெப்பநிலை குறைந்து, வெப்பத்தை சரிசெய்ய மேலதிகமாக Heater ஓடவேண்டி இருக்கும். அப்படி வெளியே போய் புகைக்க குளிர் ஒத்துவராவிட்டால் குளிர்காலங்களில் ஆவது புகைப்பதை நிறுத்துங்கள். புகைப்பது மட்டும் என்ன உடம்புக்கு ஒத்துவரும் செயலா என்ன?
*
Ventilation fan என்பது தேவைக்கு மட்டும் உபயோகிக்கும் ஒரு சாதனம் என்பதை எப்பவும் நினைவில் கொள்ள வேண்டும். இது சமையல் கட்டில் இருக்கும் ventilation fanக்கும் மிகவும் பொருந்தும்.

***


வெங்காயம் வதக்குதல், அதிக செறிவுள்ள மசாலா உணவு சமைத்தல், மீன் பொரித்தல் போன்ற அதிக மணத்தை உடைய உணவை சமைக்கும் போது மாத்திரம் ventilation fanஐ உபயோகியுங்கள். குளிர்காலங்களில் வீட்டினுள் ‘கருவாடு சுட்டுத்தான் கறிவைப்பேன்’ என அடம் பிடிக்க வேண்டாம். தேவையானால் garage உள்ளே இந்தமாதிரி சமையல்களை நடத்துங்கள்.

*


மின்சாரத்தைப் பொறுத்தவரை அதிகமாக செலவளிப்பது சமையல் செய்யும் electric stove, உடுப்பு காயவைக்கும் drier, தொலைக்காட்சி என்பன பெரும் பங்கு வகிக்கின்றன.

*

சமைக்காமல் ஒன்றும் செய்யமுடியாதுதான். அதற்காக எந்த நேரமும் சமைக்க வேண்டும் என்பதல்ல. திட்டமிட்டு ஒரே நேரத்தில் குறைந்தது இரண்டு மூன்று நாளைக்கு சேர்த்து சமைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கல்லாம்.நேற்று சமைத்ததை இன்று சாப்பிடமாட்டேன் என்று குதர்க்கம் பேசுபவர்கள் ஒறை தெரிந்து கொள்ளவேண்டும். இன்றைய காலகட்டத்தில் 90% மான உணவுப்பொறுட்களை எமக்கு வந்து சேரும் முன்னமே பலநாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் இருந்துதான் வருகின்றது.

*

கோழி உயிர்வாழ்ந்ததை விட அது இறந்தபின் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த காலம் தான் அதிகம்! அதை வாங்கித்தானே நாங்கள் சமைக்கின்றோம்.


நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Crb289018

சிலர் குளிக்கும் போது ஊரில் குளிப்பது போல் வாளியில் நிரப்பிவிட்டுக்கொண்டு சும்மா ஜாலியா அள்ளி அள்ளி ஊத்துவார்கள். அவர்கள் ஊத்துவதில் 10%தான் அவர்களது உடலில் படும். மிகுதியெல்லாம் வீணாகும்.
நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Dl2515-hand-held-shower1
இதனால் தண்ணீர் மட்டுமல்ல சுடுதண்ணீரும் தான் வீணடிக்கப்படுகின்றது. (குளிர் தண்ணீரில் குளிக்க முடியாது) எனவே நீனை சூடுபண்ண gas/மின்சாரம் தேவையில்லாமல் செலவாகின்றது.இந்த Shower இலும் பார்க்க hand held shower மிகவும் சிறப்பு. தேவையாயின் இதை சாதாரன shower மாதிரியும் மேலே மாட்டல்லாம், இது நோக்கம் அறிந்து குளிக்க அல்லது கழுவ உதவும். இந்த hand held shower இனால் பெருமளவு நீர் விரயமாவது மிச்சப்படுகின்றது.*

சில வீடுகளில் காலை ஆரம்பித்தால் இரவு படுக்கும் வரை TV ஒடிக்கொண்டே இருக்கும். பல வேளைகளில் ஒருபக்கம் TV தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும், இன்னொரு பக்கம் மேலே Fan தன்பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருக்கும், இன்னொரு பக்கத்தில் அடுப்பு தன்பாட்டுக்கு கொதித்துக் கொண்டு இருக்கும்.மறு பக்கத்தில் இவர்கள் தொலைபேசியில் மணிக்கணக்கில் உரையாடிக்கொண்டு இருப்பார்கள்!சிறுவர்கள் ஆனாலும் TVஐ விட்டலலும் போது அதனை off பண்ணிவிட்டு செல்ல கண்டிப்பாக பழக்க வேண்டும்


***
மேலும் சில விடயங்களை சில தரவுகளுடன் பார்ப்போம்!

*

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Basment_cover
1. Basement முடித்திருந்தால் நல்லது. அல்லது Insulating ஆவது செய்திருக்க வேண்டும். Insulating செய்யப்பட்ட basement உம், attic wall உம் உங்கள் Energy bill ஐ 30% குறைக்கும்.

*

2. சரியான முறையில் பராமரிக்காத Furnace, Boiler களினால் 15% மான எனர்ஜி வீனாகின்றது.

*

3. வீட்டில் யாரும் இல்லாத போது Thermostar ஐ 15°C ல் வையுங்கள். இது தேவையான போது சூட்டை உயற்றுவதற்கு இலகுவாக இருக்கும்.

*

4. தேவை இல்லாமல் அதிக வெப்பத்தை Themostar ல் Set பண்ண வேண்டாம். 21°C குளிர்காலங்களில் பரிந்துரைக்கப்படுகின்றது.

*

5. ஒரு விடயத்தை நன்றாக ஞாபகம் வைத்திருக்கவேண்டும் – ஒவ்வொரு டிகிரி வெப்பத்தை Thermostarல் நீங்கள் கூட்டும் போதும், 3% உங்கள் Heating Billலும் உயரும்.

*

6. சரியான முறையில் அடைக்கப்படாத (sealed/caulked) கதவு, ஜன்னல்களினால் 20% – 25% மான வெப்பம் வெளியேறும்.

*

7. Air Ducts களினூடாக 20% மான வெப்பம் வீட்டின் வசிக்கும் இடம் தவிர்ந்த இடங்களுக்கு அதாவது வெளிச்சுவருக்கும் உள்சுவருக்கும் இடையில், Attic எனப்படும் கூரையின் கீழ்ப்பகுதியினுள்ளும் சென்றுவிட வாய்ப்புள்ளது. இதைத்தவிர்ப்பதற்கு Air Ducts களை சரியான முறையில் Seal செய்யவேண்டும்.



நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  House-leaks-with-text-780'வீட்டுடின் வெப்பம் வீனாகும் விதம்' பெரிதாக்கிப் பார்க்கவும்

*

8. சாதாரன Heating system 60% மான Efficient தன்மையை கொண்டதாகக் காணப்படும். அதாவது 100$ கள் உங்களுக்கு Heatingகிற்காக செலவாகின்ற்து என்றால், இதில் 60$ களைத்தான் உங்கள் வீடு உபயோகித்துக்கொண்டது. மிகுதி 40$ களை தேவையின்றி வீனடிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

*

9. Condensing furnacesகள் 90% – 97% மான efficient திறனை கொண்டுள்ளது (சாதாரண Heating system 60% Efficient தன்மை கொண்டதை ஒப்பிட்டுப்பார்க்கவும்)

*

10. சரியான அளவுள்ள Energy Star-qualified Furnace களை பொருத்தியிருந்தீர்கள் என்றால் 30% – 40% வரையான Heating Bills சேமிப்பீர்கள்.

*

11. இதே போல் Energy Star boilerகளும் 85% அல்லது அதற்கும் அதிகமான Energy efficient திறனை கொண்டுள்ளது. இவ்வாறான Boilerகளை பயன்படுத்துங்கள்.

***

இனி வீட்டு உபகர்னங்களில் பார்ப்போம்:

*

1. 20 வருடங்களுக்கு முன் இருந்த குளிர்சாதனப் பெட்டியைவிட (Refrigerators) இபோதுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் அரைவாசி மின்சாரத்தைத்தான் பயன்படுத்துகின்றன.

*

2. குளிர்சாதனப் பெட்டிகளில் அளவுக்கு அதிகமாக குளிரை கூட்டாதீர்கள். Ideal temperature ஐ விட நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு டிகிரி குளிருக்கும் 2% அதிகமாக energy தேவைப்படுகின்றது.

*

3. சாதாரண Ovenகளை விட Convection Ovenகள் அதிக efficient திறனை கொண்டவையாக காணப்படுகின்றது. Convection Oven களில் வெப்பமான காற்று சுளட்டப்படுவதால் உணவுகள் வெப்ப விரையம் இன்றி குறைந்த சூட்டிலேயே நன்றாக சமைக்கப்படுகின்றன.


*

4. இவைகளை விட ஒரு சின்ன விடையம், உணவுகளை சமைக்கும் போது மூடிச்சமைப்பதால் 20% மான energy சேமிக்கப்படுவதுடன் குறைந்த நேரத்திலும், உணவுகள் எல்லாம் சமமாக சமைபடவும் உதவும்.

*

5. பெரும்பாலும் Pressure Cooker களை பயன்படுத்துங்கள். இவை மிகச்சிறந்த energy சேமிக்கும் சாதனம்.

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  GR2007022000797
6. Dishwasher ஐ உபயோகிப்பது ஒரு energy சேமிப்பு முறையாகும். 5 நிமிடங்கள் சாதாரண Tap தண்ணீரில பாத்திரங்களை கழுவும் போது 115லீட்டர் தண்ணீர் செலவாகும். அதே பாத்திரங்களை Dishwasherல் கழுவ 30 லீட்டரிலும் குறைவான தண்ணீரே செலவாகும்.

*

7. சிலர் பொதுவாக Dishwasherகளில் பாத்திரங்களை போடும் போது வெளியே Tap தண்ணீரில் ஒருதரம் கழுவிவிட்டு பின்னரே மீண்டும் Dishwasherகளில் கழுவுகின்றனர். இது வேடிக்கையானதும், Dishwasherஐயே கேவலப்படுத்தும் செயலாகும். Dishwasher வடிவமைத்தது எம்மை விட சுத்தமாக பாத்திரங்களை கழுவித்தரவே. அதைவிட இப்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட Dishwasherகளில், பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் உணவுகளைக்கூட சேகரித்து அரைத்து கூழாக்கி தண்ணியுடன் சேர்த்து வெளையே அனுப்பிவிடும். ஆதனினால் அத்தகைய Dishwasherகளை உடையவர்கள் இனி உணவை வளித்துக்கூட போடத் தேவையில்லை. அப்படியே கழுவல்லாம்.

*

8. Washing machines களில் எந்த வகை குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்துகின்றதோ அதுவே High efficient திறனுள்ள வகை. உடைகளை தோய்ப்பதுக்கு குறைந்தளவு சுடுதண்ணீரை இவை எடுத்துக்கொள்ளும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

*

9. Front-loading அல்லது Horizontal axis Washing machineகள் Top-loading Washing machineகளைவிட 40% குறைவான தண்ணீரையும், 50% குறைவான energy ஐயும் பயன்படுத்துகின்றன. அத்துடன் உடைகளையும் வேகமாக சுற்றுகின்றன (Spin). இதனால் உடைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி, உடைகளை காய வைக்க குறைந்த நேரமே தேவைப்படுகின்றது.

*

10. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல். சிறிதாயினும் சிரத்தையுடன் கவனம் எடுக்கவும்.

*

by barthee. நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  678642


ஆழ்கடல் கலஞ்சியம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Empty Re: நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

Post by sshanthi Wed May 04, 2011 3:41 pm

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196 நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  677196


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Empty Re: நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

Post by பூஜிதா Wed May 04, 2011 3:43 pm

பயனுள்ள பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Empty Re: நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

Post by உதயசுதா Wed May 04, 2011 6:06 pm

அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி தாமு


நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Uநாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Dநாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Aநாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Yநாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Aநாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Sநாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Uநாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Dநாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Hநாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Empty Re: நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

Post by balakarthik Wed May 04, 2011 7:11 pm

அண்ணே இதுபோக நம்ம அரசாங்கமே மின்சாரத்தை சேமிக்க பல நல்ல திட்டங்களை கையாள்கிறதே அதுபோதாது சேமிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Empty Re: நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

Post by தாமு Thu May 05, 2011 5:13 am

உண்மைதான் கார்த்திக். இதுப்போலும் செய்யலாம் இல்லையா. எல்லாரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் தானா. நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  838572


இது என் மனைவி தளத்தில் இருந்து சுட்டது நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  755837 நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  755837 நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  755837

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Empty Re: நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

Post by krishnaamma Thu May 05, 2011 12:15 pm

பயனுள்ள பதிவு நன்றி தாமு நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  224747944


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Empty Re: நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

Post by தாமு Thu May 05, 2011 12:48 pm

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  678642 அம்மா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்  Empty Re: நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum