ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_c10 
kavithasankar
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_c10 
mohamed nizamudeen
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_c10 
Barushree
சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_c10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_m10சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம்

3 posters

Go down

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Empty சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம்

Post by தாமு Wed May 04, 2011 3:09 pm

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Article-1050080-025DEDB300000578-945_468x303

ஆரோக்கியமான ஒரு நபரில் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதனை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

உட்கொள்ளும் உணவு குளுக்கோஸ் -ஆக மாறுகிறது. நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள். இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.






குளுகோஸ் செல்களுக்குள் செல்லுதல் - கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது.






செல்கள் குளுக்கோஸ்-ஐ சக்தியாக மாற்றுகிறது - குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.
சர்க்கரை நோய் இருக்கும் போது ஏற்படும் மாற்றங்களாவன.
குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.






உணவு குளுக்கோஸ்-ஆக மாறுகிறது - வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை ஏனெனில்

1.இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
2.இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை
3.எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.






செல்களினால் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாது - எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.


***

சர்க்கரை நோயின் அறிகுறிகள்- நோயின் அறிகுறி உள்ளவர்கள் பலவித்தியாசமான அறிகுறிகளை உணரலாம். அவற்றில் சில

1.அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவ நேரத்திலும்)
2.தோலில் அறிப்பு ஏற்படுதல்.
3.பார்வை மங்கலடைதல்.
4.சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்.
5.பாதம் மரத்துப்போதல்
6.அதிகமான தாகம்.
7.காயங்கள் மெதுவாக ஆறும் தன்மை.
8.எப்பொழுதும் பசியோடு இருத்தல்.
9.எடைகுறைதல்.
10.தோல் வியாதிகள் ஏற்படுதல்.


***


இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்

•இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்திறுத்தல் விஷமாகும்.

•அப்படி நீண்ட நாட்களாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்கு பின் இரத்தக்குழாய்கள், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் சிதைவு / பாதிப்பகளை ஏற்படுத்தி பல சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். கண், நரம்புகளில் நிரந்தர கோளாறுகளை ஏற்படுத்தும்.

•நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். இரத்தக்குழாய்களில் நோய் ஏற்பட்டு இதயக்கோளாறு, ஸ்ட்ரோக் மற்றும் இரத்தச்சுழற்சியில் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வைக்கிறது.

•கண்களில் ஏற்படும் கோளாறுகளான ரெடினோபதி (கண்களில் உள்ள இரத்தக் குழாய்கள் பாதித்தல்), க்ளுக்கோமா (கண்களுக்குள் இருக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகரித்தல்) மற்றும் கேட்டராக்ட் (கண்களின் கருவிழிப்படலத்தில் வெள்ளை நிற படலம் தோன்றி பார்வையை இழக்கச்செய்தல்) போன்றவை ஏற்படும்.

•சிறுநீரகங்கள் இரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாதபடி சிறுநீரக நோய் ஏற்படும்.

•ஹைப்பர்டென்ஷன் எனும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் சரியாக இரத்தத்தினை இறைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.


***


சர்க்கரை நோயினைக் கையாளுதல் :

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தனிப்பட்ட நபர் சுத்தம் சுகாதாரம் மற்றும் இன்சுலினை ஊசியாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ (மருத்துவரின் அறிவுரைப்படி) எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுத்து நிறுத்தும் சில எளிய வழிமுறைகள் ஆகும்.
உடற்பயிற்சி - உடற்பயிற்சி இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள செல்கள் குளுக்கோஸ்-யை உபயோகிப்பதனை அதிகப்படுத்துகிறது. 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யும் போது 135 கலோரிகள் சக்தியானது பயன்படுத்தப்படுகிறது. அதுவே 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது 200 கலோரிகள் சக்தியினை எரித்து பயன்படுத்தப்படுகிறது.


***


சர்க்கரை நோயின்போது தோலினை பராமரிக்கும் முறை :

சரக்கரை நோய் கண்ட நபர் தோலினை பராமரிப்பது அவசியம். இரத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது தோலில் அதிகளவு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சான்களின் பெருக்கம் அதிகரிக்கிறது. தோல் பகுதிக்கு செல்லும் நோய் எதிர்க்கும் செல்களின் அளவும் குறைந்து காணப்படுவதால், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாவை தடுத்து நிறுத்த முடிவதில்லை. அதிகளவு குளுக்கோஸ் இருக்கும் போது உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, தோல் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.


உடலை தவறாமல் ஒழுங்காக சோதித்து, கீழ்க்காண்பவை இருப்பின் மருத்துவரிடம் அறிவிக்க வேண்டும்.

•தோலின் வண்ணம், தன்மை மற்றும் தடிமனில் ஏற்படும் மாற்றங்கள்.

•தோலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகள் போன்றவை.

•பாக்டீரியா தொற்றுவின் ஆரம்ப நிலைகளான, தோலின் நிறம் சிவத்தல், வீங்குதல், கொப்புளக்கட்டிகள், தோலின் வெப்பம் அதிகரித்தல்

•ஆறாத காயங்கள்


***


சருமத்தைப் பராமரிக்கும் முறைகள்

தவறாமல் குளிப்பது மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது

•வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. அதிக சூடுள்ள நீரில் குளிப்பதை தவிர்க்கவும்

•குளித்த பின் உடல் பாகங்களை, குறிப்பாக இடுக்குகள் மற்றும் மடிப்புகளை நன்கு துடைத்தல்.

•வறண்ட சருமத்தை சொறிவதைத் தவிர்க்கவும். ஏனெனில், வறண்ட சருமத்தை சொறியும் போது ஏற்படும் காயத்தின் மூலம், பாக்டீரியாக்கள் நுழைந்து நோயினை ஏற்படுத்தும்

•சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்


***


காயங்களை பராமரிப்பது


சர்க்கரை நோய் கண்ட நபர்கள் உடலில் ஏற்படும் சிறு காயங்களையும் சரியாக பராமரிப்பது அவசியம்.

•சுத்தமான தண்ணீர் மற்றும் சோப் கொண்டு அடிப்பட்டவுடன் காயங்களைக் கழுவவும்


•ஆல்காஹால்/ஐயோடின் கொண்ட மருந்துகளை காயத்தின் மேல் பூச வேண்டாம். இத்தகைய மருந்துகள் எரிச்சலை உண்டாக்கும். மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளைப் பயன்படுத்தவும்.


•சுத்தமான பான்டேஜ் கொண்டு காயத்தை மூடி வைக்கவும்


***


பாதங்களைப் பராமரிப்பது

சர்க்கரை நோய் காணப்பட்டால், நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதத்தில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களைப் பராமரிக்க சில வழிமுறைகள்

•புண், வெட்டு காயங்கள், தடித்திருத்தல், கொப்புளங்கள், கீறல்கள் போன்றவை உள்ளனவா என்று பாதங்களை அவ்வப்போது பரிசோதித்து பாருங்கள்.


•கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

•நகங்களை அவ்வப்போது வெட்டவும்

முடிந்த வரை காலணிகளைப் பயன்படுத்தி, பாதங்களை பாதுகாக்கவும்


***

பற்களைப் பராமரித்தல்


முறையான பராமரிப்பின் மூலம் பற்களை நீண்ட நாட்கள் வலிமையோடு வைத்துக்கொள்ளலாம்.


பல் துலக்குதல் :


•மிருதுவான இழைகளைக் கொண்ட ப்ரஷ்களைப் பயன்படுத்தவும்.

•ஒரு நாளுக்கு, இரண்டு முறை பல் துலக்கவும்.

•பல் துலக்கும் போது, ப்ரஷ்-ன் இழைகளை, பல் மற்றும் ஈறுகளின் மத்தியில் வைத்து, லேசான அசைவினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதின் மூலம், இவ்விடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.

•நாக்கு, கன்னத்தின் உட்புறம் மற்றும் பற்களின் உணவு அறைக்கும் பகுதிகளை லேசான அசைவினால் சுத்தம் செய்யவும்.

•பல் துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஷ்-ன் இழை நுனியில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. சர்க்கரை நோயாளிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ப்ரஷ்-யை மாற்ற வேண்டும்.

•ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்னர் பற்களில் படியும் அழுக்கினை சுத்தம் செய்வது (பல் இடுக்குகளில்) பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

*

கீழ்க்காண்பவற்றை கண்டறிந்தால் பல்மருத்துவரை அணுகவும்.

•சாப்பிடும்போது அல்லது பல்துலக்கும் போது பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வந்தால்.

•பல் ஈறுகள் சிவப்பாக மாறினால், வீக்கம் கண்டால், அல்லது மிருதுவாக காணப்பட்டால்.

•பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்படும் போது .

•பல் ஈறுகளை தொடும்போது பல் ஈறுகளிலிருந்தும் பற்சந்துகளிலிருந்தும் சீழ் வெளிப்பட்டால்.

•பல் அமைப்பில் மாற்றம் எற்பட்டால்.

•துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால்.


***

கண்களைப் பராமரிப்பது


சர்க்கரை நோய் கண்ட நபருக்கு கேட்டராக்ட் மற்றும் குளுக்கோமா ஏற்படும் வாய்ப்பு மாற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் உண்டு.

நீண்டகாலமாக அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருந்தால், கண்களில் உள்ள சிறு இரத்தக்குழாய்களில் பாதிப்பினை ஏற்படுத்தி, ரெடினோபதி என்னும் நோயினை ஏற்படுத்தலாம்.

உண்மையில், இந்த ரெடினோபதி சர்க்கரை நோயாளிகளில் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் ஒவ்வொரு ஆண்டும் கண்களை முழுமையாக பரிசோதிப்பது அவசியம்.


*

கீழ்க்காண்பவைகளை கண்டறிந்தால் கண் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

•புள்ளிகள், அலசலான பார்வை, சிலந்தி வலை போன்று பார்வை சிதைவு, பார்வையின் போது கரும்புள்ளிகள், கண் வலித்தல் மற்றும் கண்கள் தொடர்ந்து சிவந்திருத்தல் போன்ற கண் பார்வை கோளாறுகள்.

•நன்கு அறிந்த பொருட்களை சரியாக பார்க்க முடியாத நிலை, சாலை சிக்னலை சரியாக பார்க்க முடியாத நிலை மற்றும் படிக்க முடியாமல் பிரச்சினை போன்றவை.



http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/blog-post_9579.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Empty Re: சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம்

Post by முரளிராஜா Wed May 04, 2011 3:13 pm

பயனுள்ள பகிர்வை தந்த தாமுவுக்கு நன்றி சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Empty Re: சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம்

Post by தாமு Wed May 04, 2011 6:27 pm

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Empty Re: சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம்

Post by positivekarthick Wed May 04, 2011 8:41 pm

தாமு நண்பா! சர்க்கரை ஒரு நோயே கிடையாது.ஆகாத கழிவுகளை நம் உடல் வெளியேற்றுகிறது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் நம் வீட்டில் ஆகாத குப்பைகள் நிறைய இருந்தால் என்ன செய்வீர்கள்? கூட்டி வெளியில் தள்ளுவீர்கள் அல்லவா . அதுபோல ஆகாத கழிவுகளை நம் உடல் வெளியேற்றுகிறது.கண்ணில் தூசி விழுந்தால் கண்ணில் நீர் ஏன் வருகிறது?கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

சர்க்கரை நோயை வைத்து மருத்துவ உலகம் கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஷயம் உங்களுக்கு தெரியுமா ? நம்புங்கள் தோழா!



சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Pசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Oசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Sசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Iசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Tசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Iசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Vசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Eசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Emptyசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Kசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Aசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Rசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Tசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Hசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Iசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Cசர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Empty Re: சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம்

Post by தாமு Thu May 05, 2011 5:18 am

நண்பா இதை அனைவரும் ஏற்றுக் கொண்டால் சந்தோஷ்ம் தான். சிரி

இருந்தாலும் நாம் வருமுன் காப்பது சிறந்தது இல்லையா சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம் Empty Re: சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum